திரும்பிப்பார்க்கின்றேன் - கறுப்பு ஜூலை 83 நினைவு தினக்கட்டுரை: இலக்கிய திறனாய்வாளர் கலா. பரமேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட தினம் இன்று
" ஞாயிற்றுக்கிழமை போய்விடுவேன் என்றார் - அவ்வாறே போய்விட்டார் இரண்டு நாள் இடைவெளியில் சஞ்சரித்த காலமு (னு) ம் கணங்களும் "

முப்பத்தியொரு ஆண்டுகளுக்கு முன்னர் இதே ஜூலை மாதம் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு யாழ்ப்பாணம் பலாலி வீதியில் பரமேஸ்வரா சந்தியில் வந்துகொண்டிருந்த இராணுவ ட்ரக் வண்டி மீது நிலக்கண்ணி வெடித்தாக்குதல் நடந்தது. அச்சம்பவத்தில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதன் எதிரொலியை தமிழர்கள் இன்றும் கறுப்பு ஜூலை என்று அனுட்டித்துக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையின் அரசியலிலும் அங்கு வாழ்ந்த பூர்வகுடி தமிழ் மக்களினதும் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திவிட்ட அந்த 1983 ஜூலை மாதத்தில் யாழ்ப்பாணம் பலாலிவீதியில் ஒரு இல்லத்தில் அந்த கறுப்புஜூலை ஆழமாகவே பதிந்துவிட்டது. அந்தவீட்டிலிருந்த முதியவர் மற்றும் குடும்பத்தலைவர் தவிர்ந்த ஏனையவர்களை வேரோடு பிடுங்கி எறிந்து தேசாந்தரிகளாக்கியது. அப்படியென்றால் - அந்த முதியவரும் குடும்பத் தலைவரும் என்ன ஆனார்கள்? அவர்களின் உடல்களை குண்டுகள் துளைத்து அவர்கள் பரலோகம் பயணித்தார்கள். எனது இனிய நண்பர் கலா. பரமேஸ்வரன் இன்று (24-07-1983) யாழ்ப்பாணம் பலாலிவீதியில் கொல்லப்பட்ட 31 ஆவது ஆண்டு நினைவு தினம். அந்தத்துயரமே இந்தக்கறுப்பு ஜூலையில் இன்றைய நாளில் எனது துயர்பகிர்வு. அன்று 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆடி ஆமாவாசை - போயாதினம். தென்னிலங்கையில் நாட்டின் ஜனாதிபதி உட்பட பௌத்தர்கள் அனைவரும் சில் அனுட்டித்துக்கொண்டிருந்தார்கள்.












இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் நீண்டகாலமாக அந்த அமைப்பின் செயலாளராகவும் பணியாற்றிய எழுத்தாளரும் ஊடகவியலாளருமான பிரேம்ஜி ஞானசுந்தரன் நேற்று மாலை கனடாவில் காலமானார். அச்சுவேலியில் 17-11-1930 ஆம் திகதி பிறந்த பிறந்த ஞானசுந்தரன் தமது ஆரம்பக்கல்வியை அச்சுவேலி கிறீஸ்தவ கல்லூரியிலும் பின்னர் யாழ். பரமேஸ்வராக் கல்லூரியிலும் கற்றார். 1947 இல் தமது 17 வயதிலேயே சுதந்திர இளைஞர் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். அன்றிலிருந்து ஞானசுந்தரன் தீவிரமான வாசிப்பிலும் எழுத்துத்துறையிலும் ஈடுபடத்தொடங்கினார். தமிழகம்சென்று மூத்த அறிஞர்கள் நாமக்கல் கவிஞர் -வி.க. வா.ரா- சுவாமிநாத சர்மா - குயிலன், - பேராசிரியர் ராமகிருஷ்ணன் - தமிழ் ஒளி முதலானோரின் தொடர்பினால் இடதுசாரிக்கருத்துக்களை உள்வாங்கி இடதுசாரியாகவும் முற்போக்கு எழுத்தாளராகவும் இயங்கிய ஞானசுந்தரன் அங்கு கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி இதழிலிலும் பணியாற்றினார். தயாகம் திரும்பிய பின்னார் கே.கணேஷ் மற்றும் கே. ராமநாதன் ஆகியோரின் தொடர்புகளினால் இலங்கை கம்யூனிஸ்ட கட்சியின் தேசாபிமானி - மற்றும் சுதந்திரன் முதலான இதழ்களிலும் ஆசிரியர் குழுவில் இணைந்தார்.
வல்லமை என்ற இணைய இதழ் நடத்திய சிறுகதைப்போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை காட்சிப்பிழை. அவுஸ்திரேலியாவில் வதியும் சுதாகரன் இலங்கை பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரி. முன்னர் நியூசிலாந்தில் வாழ்ந்துவிட்டு அவுஸ்திரேலியா மெல்பனுக்கு வந்தவர். பல வருடங்களாக சிறுகதை, கட்டுரை, பத்தி எழுத்துக்கள் எழுதுபவர். இலங்கையிலும் தமிழகத்திலும் மற்றும் வெளிநாடுகளிலும் நடந்த பல சிறுகதைப்போட்டிகளில் பரிசில்கள் பெற்றவர். அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தில் பல பதவிகளிலிருந்து சிறந்த பங்களிப்பு செய்துவருபவர். சq;கத்தின் 10 ஆவது எழுத்தாளர் விழாவை (2010) முன்னிட்டு நடத்தப்பட்ட சர்வதேச சிறுகதை, கவிதைப்போட்டிகளை திறம்பட நடத்தியிருப்பவர். தற்பொழுது சங்கத்தின் செயற்குழுவில் இதழாசிரியராக பணியாற்றுபவர். குறிப்பிட்ட வல்லமை இணைய இதழின் சிறுகதைப்போட்டிக்கு வந்த கதைகளை தேர்வு செய்தவர் தமிழகத்தின் பிரபல இலக்கியவிமர்சகர் வெங்கட்சாமிநாதன். குட்டுப்பட்டாலும் படவேண்டும் மோதிரக்கையினால் என்பார்கள். வசிட்டவர் வாயால் பிரம்மரிஷிப்பட்டம் என்பார்களே அதேபோன்றதுதான் வெங்கட்சாமிநாதனின் தேர்வு. சுதாகரனின் காட்சிப்பிழை வல்லமை தொகுத்த பரிசுக்கதைகளின் தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. பாலகிருஷ்ணனுக்கும் கனடாவில் வயது முதிர்ந்தவர்கள் தஞ்சமடையும் இல்லத்திலிருக்கும் தெமட்டகொட அங்கிளுக்கும் இடையே அப்படி என்னதான் பிரச்சினை?








பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









