எழுத்தாளர், ஆய்வாளர், நடிகர், ஒளிப்படக்கலைஞர் கலைவளன் சிசு. நாகேந்திரனுக்கு 95 வயது. முதிய வயதிலும் தமிழ் அகராதி எழுதியவர்
காலம் தரித்து நிற்பதில்லை. அதனால் வயதும் முன்னோக்கியே நகர்ந்து கொண்டிருக்கும். இறுதியில் முதுமை வரும்பொழுது உடன் வரும் நண்பர்கள் தனிமை, இயலாமை, நனவிடை தோயும் இயல்பு. எல்லாம் போதும் என்ற மனப்பான்மை. ஆயினும் - முதுமையிலும் ஒருவர் அயராமல் இயங்குவதென்பது கொடுப்பினை. அவ்வாறு மருத்துவனையில் தங்கியிருக்கும் வேளையிலும் தமிழ் அகராதியொன்றை தயாரிப்பதற்காக குறிப்புகளை பதிவு செய்துகொண்டிருக்கும் எம்மத்தியில் வாழும் ஒரு மூத்தவர் பற்றியதே இந்தப்பதிவு. அவர்தான் அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் பல்துறை ஆற்றல் மிக்க கலைவளன் சிசு. நாகேந்திரன். அவருக்கு 09-08-2015 ஆம் திகதி 95 வயது பிறந்தது. அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டே இந்தப்பதிவை தொடருகின்றேன்.
இந்த 95 வயதிலும் அயராமல் இயங்கி கலை, இலக்கிய மற்றும் சமூக நிகழ்வுகளுக்கு வருகைதரும் எழுத்தாளர் சிசு. நாகேந்திரன் அவர்கள், அவுஸ்திரேலியாவில் வருடந்தோறும் தமிழ் எழுத்தாளர் விழாவை நடத்திவரும் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் காப்பாளர். சில வருடங்களுக்கு முன்னர் இந்த அமைப்பின் தலைவராகவும் பணியாற்றியவர்.
தமிழ் எழுத்தாளர் ஒன்று கூடல் நிகழ்வுகளில் தவறாமல் கலந்துகொள்ளும் இவர், நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார். எழுத்தாளர் விழா மெல்பனில் - சிட்னியில் - கன்பராவில் நடந்தாலும் சாக்குப்போக்குச் சொல்லாமல், தமது உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் பங்கேற்று கருத்தரங்குகளில் கட்டுரையும் சமர்ப்பிப்பார்.



சமகாலத்தில் இலங்கையிலும் தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளிலும் தினமும் பேசப்படும் ஊராக விளங்கிவிட்டது புங்குடுதீவு. இந்தத்தீவுக்கு இதுவரை சென்றிராத தென்னிலங்கை சிங்கள மக்களும் மலையக மக்களும், இந்த ஊரின் பெயரை பதாதைகளில் தாங்கியவாறு வீதிக்கு வந்தனர். இலங்கைப்பாராளுமன்றத்திலும் இந்தத்தீவு எதிரொலித்தது. ஜனாதிபதியை வரவழைத்தது. இலங்கையில் மூவினத்து மாணவர் சமுதாயமும் உரத்துக்குரல் எழுப்பும் அளவுக்கு இந்தத்தீவு ஊடகங்களில் வெளிச்சமாகியது. இத்தனைக்கும் அங்கு ஒரு வெளிச்சவீடு நீண்ட நெடுங்காலமாக நிலைத்திருக்கிறது. பதினைந்துக்கும் மேற்பட்ட பாடசாலைகள், 20 இற்கும் மேற்பட்ட குளங்களின் பெயர்களுடன் இடங்கள். 20 இற்கும் மேற்பட்ட சனசமூகநிலையங்கள் ( வாசிகசாலைகள் உட்பட) பல கோயில்கள் எழுந்திருக்கும் புங்குடுதீவில், இதுவரையில் இல்லாதது ஒரு பொலிஸ் நிலையம்தான்.
ஒருவர் மற்றும் ஒருவருக்கு எழுதிய கடிதம், ஒருவரின் நாட்குறிப்பு ஆகியனவற்றை மற்றவர்கள் பார்ப்பது அநாகரீகம் எனச்சொல்பவர்களுக்கு மத்தியில், சிலரது கடிதங்களும் நாட்குறிப்புகளும் உலகப்பிரசித்தம் பெற்றவை என்பதையும் அறிந்து வைத்திருக்கின்றோம். காந்தியடிகளின் நாட்குறிப்பு, நேரு சிறையிலிருந்து தமது மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் என்பன உலகப்பிரசித்தம். தினமும் நிகழும் சம்பவங்களை குறித்து வைப்பதற்காக அறிமுகமான Diary ( Daily record of event) தமிழில் மட்டுமன்றி பிறமொழிகளிலும் அவ்வாறு அழைக்கப்படுகிறது. உலகப்பிரசித்தி பெற்றவர்களின் டயறிகள் பிற்காலத்தில் அதிக விலையில் ஏலம்போயிருப்பதையும் நூதன சாலைகளில் இடம்பெற்றிருப்பதையும் அறிவோம்.
இலக்கியப்பிரவேசம் செய்த காலப்பகுதியில் சென்னை வாசகர் வட்டம் வெளியிட்ட அறுசுவை என்ற ஆறு குறுநாவல்கள் இடம்பெற்ற நூலைப்படித்தேன். அதில் சார்வாகன் என்ற பெயரில் ஒருவர் அமரபண்டிதர் என்ற குறுநாவலை எழுதியிருந்தார். அவர் ஒரு மருத்துவநிபுணர் என்ற தகவல், நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்னர்தான் தெரியும். அவர் தொழுநோயாளர்களுக்கு சிறந்த சிகிச்சையளித்தமைக்காக இந்திய அரசினால் பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர். எங்கள் மூத்த தமிழ் அறிஞர் கி. இலக்ஷ்மண அய்யரின் துணைவியார் பாலம் அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர். மெல்பனுக்கு அவர் வந்தபொழுது எனக்கு அறிமுகப்படுத்தினார் திருமதி பாலம் லக்ஷ்மணன். சார்வாகன் அவரது இயற்பெயரல்ல. அந்தப் புனைபெயரின் பின்னாலிருந்த கதையை தமிழக சார்வாகனே சொன்னார். மகாபாரதத்தில் குருஷேத்திர களத்தில் கௌரவர்களை அழித்து வெற்றிவாகைசூடிய பாண்டவர்கள், தருமருக்கு பட்டாபிஷேகம் சூட்டும்விழாவில் அந்தச் சபையிலிருந்து எழுந்து அந்த வெற்றியின் பின்னாலிருக்கும் பேரழிவை சுட்டிக்காண்பித்து கடுமையாக விமர்சித்தவர் சார்வாகன் என்ற முனிவர். அவரது கூற்றால் வெகுண்டெழுந்த மக்கள் அவரை அடித்தே கொன்றுவிட்டார்களாம். சார்வாக மதம் என்ற புதிய கோட்பாடு உருவானது என்றும் பாஞ்சாலியும் அந்த மார்க்கத்தை பின்பற்றியதாக கதை இருப்பதாகவும் சார்வகன் என்ற புனைபெயரைக்கொண்டிருந்த மருத்துவர் ஸ்ரீனிவாசன் சொன்னபொழுது மகாபாரதத்தின் மற்றுமொரு பக்கத்தை தெரிந்துகொண்டேன். 
"அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே கேள்வி ஒன்று கேட்கலாமா உன்னைத்தானே.? " எனக்கேட்ட கமலினி செல்வராசன் அத்தானிடமே சென்றார். திருமதி கமலினி செல்வராசன் கொழும்பில் மறைந்தார் என்ற செய்தி இயல்பாகவே கவலையைத்தந்தாலும், அவர் கடந்த சில வருடங்களாக மரணத்துள் வாழ்ந்துகொண்டே இருந்தவர், தற்பொழுது அந்த மரணத்தைக்கடந்தும் சென்று மறைந்திருக்கிறார் என்றவகையில் அவரது ஆத்மா சாந்தியடையட்டும் எனப்பிரார்த்திப்போம்.

கடலும் கடல் சார்ந்த நிலமும் நெய்தல் என சங்க இலக்கியங்களில் சொல்லப்படுகின்றது. இலங்கையில் மேற்குக்கரையில் இந்து சமுத்திரத்தை அணைத்தவாறு விளங்கும் கடற்கரை நகரம் நீர்கொழும்பு. ஐதீகக்கதைகளும் வரலாற்றுச்சிறப்பும் மிக்க இந்நகரில் வாழ்ந்த மூத்தகுடியினர் தமிழர்கள். அவர்களினால் 1954 இல் விஜயதசமியின்பொழுது 32 குழந்தைகளுடன் தொடங்கப்பட்ட பாடசாலையே இன்று வடமேற்கில் கம்பஹா மாவட்டத்தில் ஒரே ஒரு இந்து தமிழ் மத்திய கல்லூரியாக விளங்கும் விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி. இதன் ஸ்தாபகர் எஸ்.கே. விஜயரத்தினம் நீர்கொழும்பில் நகரபிதாவாக (மேயர்) விருந்த தமிழராவார். தமிழ் மக்களின் பண்பாட்டுக்கோலங்களுடன், வரலாற்றுச்சுவடுகளுடன் வெளிநாட்டு உல்லாசப்பயணிகளையும் கவரும் இந்நகருக்கு அருகாமையிலேயே சர்வதேச விமான நிலையம் கட்டுநாயக்காவில் அமைந்துள்ளது. கல்லூரி 1954 இல் ஆரம்பப் பாடசாலை தரத்திலிருந்தபொழுது முதல் மாணவனாக இணைத்துக்கொள்ளப்பட்டவரும் தற்பொழுது அவுஸ்திரேலியாவில் வதியும் படைப்பிலக்கியவாதியும் ஊடகவியலாளரும் சமூகப்பணியாளருமான லெ. முருகபூபதி விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் 60 வருட நிறைவு வைரவிழாவை முன்னிட்டு தொகுத்து வெளியிட்டுள்ள நெய்தல் - நீர்கொழும்பு வாழ்வும் வளமும் நூல் நீர்கொழும்பில் அண்மையில் சிறப்பாக வெளியிடப்பட்டது.











பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









