கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் - எழுத்தாளர் அரங்கம் எட்டு!
ZOOM Meeting ID - 813 3804 3947 | Passcode - 2023
ZOOM Meeting ID - 813 3804 3947 | Passcode - 2023
ZOOM Meeting ID - 813 3804 3947 | Passcode - 2023
ZOOM Meeting ID - 813 3804 3947 | Passcode - 2023
போராட்ட அரசியலை அமைப்பையோ அல்லது பாராளுமன்ற அரசியல் அமைப்பையோ சேராத தாயொருவர் , மட்டக்களப்பு - அம்பாறை அன்னையர் முன்னணி என்னுமொரு சமூக அமைப்பைச் சேர்ந்த தாயொருவர், நாட்டில் நிகழ்ந்துகொண்டிருந்த போரை நிறுத்தி , பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டுமென்பதற்காகத் தன்னுயிரை அமைதி வழியில் உண்ணாவிரதமிருந்து தந்துள்ளார்.
அன்னையர் முன்னணியின் சார்பில் ஏற்கனவே உண்ணாவிரதமிருந்த அன்னம்மா டேவிட் என்பவரின் உண்ணாவிரதம் இடை நடுவில் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், 'தான் சுய நினைவுடனே இம்முடிவுக்கு வந்துள்ளதாகவும், தான் நினைவிழக்கும் பட்சத்தில் யாரும் தன் போராட்டத்தைத் தடுக்கக் கூடாது' என்ற முன் கூட்டியே அறிவித்து விட்டு உண்ணாவிரதமிருந்த அந்தத் தாயின் நெஞ்சுறுதி போற்றுதற்குரியது.
எழுத்தாளர் ரொய் ரட்னவேல் ( Roy Ratnavel) எழுதிய அவரது வாழ்க்கை அனுபவ நூலான Prisoner # 1056 (கைதி # 1056) என்னும் நூலை ஏப்ரில் 18, 2023 அன்று வெளியிடுகின்றது உலகப் புகழ்பெற்ற பதிப்பகங்களில் ஒன்றான பென்குயின் பதிப்பகத்தின் கனடாப் பிரிவான பென்குயின் ராண்டம் ஹவுஸ் (Penguin Random House Company) பதிப்பகம்.
இலங்கையில் போர்ச்சூழல் நிலவிய காலத்தில் நூற்றுக்கணக்கில் வடபகுதி இளைஞர்கள் கைது செய்யப்பட்டுப் பூசா முகாமில் அடைக்கப்பட்டார்கள். என் மாமா ஒருவரின் (அம்மாவின் தம்பி) புத்திரர்களும் அவ்விதம் பூசாவில் அடைக்கப்பட்டு, மாமாவின் முயற்சியினால் பூசாவிலிருந்து விடுவிக்கப்பட்டுக் கனடா வந்தவர்கள். ரொய் ரட்னவேலும் அவ்விதம் அடைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுக் கனடாவுக்குத் தனது பதினேழாவது வயதில் வந்தவர். சிறையில் கைதியாக இவர் அடைக்கப்பட்டபோது சித்திரவதை செய்யப்பட்டுத் துன்பத்தினை அனுபவித்திருக்கின்றார். அப்போது கைதியாக அவருக்குக் கொடுக்கப்பட்ட கைதி இலக்கம் 1056.
- முகநூற் பக்கங்களில் வெளியாகும் பயனுள்ள குறிப்புகள் அவற்றின் பயன் கருதிப் பதிவுகளின் இப்பக்கத்தில் வெளியாகும். - பதிவுகள்.காம் -
சித்திரைப்புத்தாண்டை அண்மையில் கொண்டாடினோம்., பலர் சோபகிருது புத்தாண்டு வாழ்த்துகள் என்று வாழ்த்தினார்கள். சோபகிருது என்னும் வடமொழி சித்திரைப்புத்தாண்டில் எவ்விதம் நுழைந்தது ? சித்திரைப்புத்தாண்டு தமிழ்ப்புத்தாண்டா என்பதை ஆராய்கிறது சூர்யா சேவியர் (Surya Xavier) எழுதிய இம்முகநூற் பதிவு. இப்பதிவில் தன் நிலைப்பாட்டை உணர்ச்சி வசப்படாது , தர்க்கபூர்வமாக , ஆதாரங்களுடன் எடுத்துரைக்கின்றார் பதிவாளர். இதனை எனக்கு அறியத்தந்த கவிஞர் தம்பாவுக்கு நன்றி. "சித்திரையை ஆண்டின் தொடக்கமாக கருதுபவர்கள் இதைக் கொண்டாடிவிட்டுப் போவதில் பிரச்சனையில்லை. உலகில் பலபகுதிகளில் பலவிதமான ஆண்டு தொடக்கங்கள் கொண்டாடப்பட்டே வருகிறது. இதை தமிழ் புத்தாண்டு என்று சொல்வதில் தான் பிரச்சனை எழுகிறது. '' என்று பதிவாளர் கூறுவதை ஏற்றுக்கொள்ளலாம். எம் பால்ய பருவத்திலிருந்து சித்திரைப்புத்தாண்டைக் கொண்டாடி வருகின்றோம். அப்படியே கொண்டாடி வருவதில் பிரச்னையில்லை. தமிழ்ப்புத்தாண்டு என்று கொண்டாடத் தேவையில்லை.
இப்பதிவில் பதிவாளார் "இளவேனில் என்பது சித்திரை- வைகாசி மாதங்களுக்கு உரிய காலம் என சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு." என்றும் கூறியிருப்பார். நான் அதனை முற்றிலும் தவறாகக் கருதவில்லை. நானும் இளவேனில் பங்குனி ,சித்திரை, வைகாசி என்றே கருதுகின்றேன். அப்பொழுதுதான் உயிரினங்கள் பலவற்றின் வசந்த காலம் அப்பொழுதுதான் ஆரம்பமாகின்றது. இலை உதிர்ந்த மரங்கள் அப்பொழுதுதான் தளைக்க ஆரம்பிக்கின்றன. மேலும் பதிவாளர் "முன்பனி (புரட்டாசி - ஐப்பசி), பின்பனி (கார்த்திகை - மார்கழி)" என்று கூறுவதையும் என்னால் ஏற்க முடியவில்லை. யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் பின்பனிக்காலம் 'தை - மாசி'தான். அதனால்தான் 'மாசிப்பனி மூசிப்பெய்யும்' என்று நாம் கூறுவதுண்டு என்றும் கருதுகின்றேன். உண்மையில் என் அனுபவத்தின்படி மாசிப்பனி மூசித்தான் பெய்யும். - வ.ந.கிரிதரன் -
கிருஷ்ணரும், நாரதரும் கூடிப்பெற்ற 60 பிள்ளைகளில் 37 வது பிள்ளையின் பெயர் சோபகிருது. - சூர்யா சேவியர் (Surya Xavier)
ஒருமுறை நாரதர், 'கடவுள்' கிருஷ்ணரைப் பார்த்து, "நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரக்கூடாதா?" என்று கேட்டாராம். அதற்குக் கிருஷ்ணர், "நான் உடன் இல்லாமல், வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள் என்றாராம். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தாராம். ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும் கிருஷ்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மோகம் கொண்டு அவரை நோக்கி "நான் உங்களிடமே பெண்ணாக இருந்து உடலுறவு கொள்ள விரும்புகிறேன்" என்றாராம்.
கிருஷ்ணர் நாரதரை "யமுனையில் குளித்தால் பெண்ணாய் மாறுவாய்" எனச் சொல்ல, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினாராம் . பின் 'கடவுள்' கிருஷ்ணருடன் அறுபது வருடம் உடலுறவு கொண்டு , அறுபது மகன்களைப் பெற்றாராம். அவர்கள் பிரபவ தொடங்கி அட்சய முடிய என பெயர் பெற்றார்களாம். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருடமாகும் வரம் பெற்றார்களாம். இதுதான் சித்திரையை புத்தாண்டு என்று சொல்வதற்கு சொல்லப்படும் புராணக்கதை. இக்கதைக்கு ஆதாரம் எது? சென்னை பச்சையப்பா கல்லூரியில் தமிழ் பண்டிதராகப் பணியாற்றிய ஆ.சிங்காரவேலு முதலியாரால் தொகுக்கப்பட்டு, இராமநாதபுரம் சேதுபதி பரம்பரையில் வந்த பாண்டித்துரை தேவர் உதவியால் 1910 வெளியிடப்பட்ட நூல் அபிதான சிந்தாமணி. அபிதான சிந்தாமணி நூலின் 1392 ம் பக்கத்தில் தான், வருடப்பிறப்பு குறித்த, மேற்கூறப்பட்ட இக்கதை எழுதப்பட்டுள்ளது. 60 பெயர்களில் பிரபவ தொடங்கி அட்சய வரை எதுவும் தமிழ் பெயர் இல்லை.
கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பிறந்தநாள் ஏப்ரில் 13. அவரது நினைவாக எனக்கு மிகவும் பிடித்த அவரது பாடலொன்று - 'தூங்காதே தம்பி தூங்காதே.'. 'நாடோடி மன்னன்' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள கருத்தாழம் மிக்க பாடல். 'நாடோடி மன்னன்' எம்ஜிஆரின் இயக்கத்தில் வெளியாகி வசூலில் சாதனை புரிந்த திரைப்படம். எம்ஜிஆரின் திரையுலகில் முக்கிய மைல் கல் 'நாடோடி மன்னன்'. இதில்தான் அவர் சரோஜாதேவியை முதன் முதலாகத் தன் திரையுலக நாயகியாக அறிமுகப்படுத்துகின்றார்.
கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் முற்போக்குக் கவிஞர். பொதுவுடமையைப் பாடிய கவிஞர். வர்க்க விடுதலையை நாடிய கவிஞர். அவரது இன்னுமொரு புகழ்பெற்ற பாடல் 'சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா'. 'நாடோடி மன்ன'னில் இடம் பெற்றுள்ள 'சும்மா இருந்த நிலத்தைக் கொத்தி' பாடலும் அவரது முக்கியப் பாடல்களிலொன்று.
- பதிவுகள் வாசகர்கள், ஆக்கப்பங்களிப்பளிக்கும் அனைவருக்கும் சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது. -
பிளவுகளால் பிரிந்திருக்கும் பூவுலகில்
புரிந்துணர்வு பூக்கட்டும்; மலரட்டும்.
வளமான வாழ்வுக்கு மானுடர்தம்
வாழ்வில் வேண்டாத பிரிவுகள்
வீணே! வீணே! வீணே!
பிறக்குமிப் புத்தாண்டில் இப்
புரிந்துணர்வு பிறக்கட்டும்.
கட்டடக்காட்டுக் கனவுகளில்
களிக்கும் ககனத்தின் கனவுகள்
கலையட்டும் - ககனம்
எட்டுத் திக்கெங்கும் சிறகடிக்கும்
சிட்டுக் குருவிகளின் கனவுகளில்
சிறக்கட்டும்.
முன்பனி பின்பனி மாறிய பின்னே
இளவேனில் துளிர்க்க சித்திரை மலரும்.
தைப் பொங்கலுண்டு தளர்வகலும் வேளை
புத்துணர் வூட்டச் சித்திரை கைகோர்க்கும்.
பெற்றோரும் மகிழ்வர் பிள்ளைகளும் மகிழ்வர்.
உற்றவரும் மகிழ்வர் உறவுகளும் மகிழ்வர்.
மணமேடை அமர மங்கலநாள் அமைய
சிறப்பான நாளை சித்திரையே திறக்கும்.
வருடத்தின் தொடக்கம் சித்திரையே என்போம்.
சித்திரையே தொடக்கமாய் பஞ்சாங்கம் காட்டும்.
பஞ்சாங்கம் பார்ப்போம் பலன்களையும் அறிவோம்.
நெஞ்சாரச் சித்திரையை வரவேற்று மகிழ்வோம்.
நரசிம்ம பல்லவராக எம்ஜிஆரும், நர்த்தகி சிவகாமியாகச் சரோஜாதேவியும் திரையில் வரும் இப்பாடல் இடம்பெற்றுள்ள திரைப்படம் 'கலங்கரை விளக்கம்'. இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. கேட்பதற்கு இனிமையான, மனத்துக்கு ஒத்தடம் தரும் பாடல்களிலொன்று இந்தப்பாடல். பாடல் வரிகள் ஒவ்வொன்றும், அவற்றைப் பாடிய டி.எம்.எஸ் & பி. சுசீலா குரல்களின் இனிமையும் , அபிமான நடிகர்களின் நடிப்பும் நெஞ்சைக் கொள்ளுவன. எப்பொழுது கேட்டாலும் கேட்பவர் உள்ளங்களை இன்பத்திலாழ்த்தும் பாடல். காதலின் சிறப்பைச் சிறப்பாக எழுத்தில் வடித்திருப்பார் கவிஞர். இப்பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசனல்லர். அவரிடம் உதவியாளராகவிருந்த பஞ்சு அருணாசலம். கண்ணதாசனின் கவி உதவியாளரும் கவிதை எழுதுவார் என்று எண்ண வைக்கும் பாடல்.
1
“ஏய் மிச்சி, அந்தக் கோட்டு எங்கே?
ஏத்தனவாட்டி சொல்றது?
ஆ… இந்தக் ‘கொறடுலெ’ வைனு..”
என்றவாறு பல்லை நறநறவென கடித்தான் மல்லன்.
அவனது இந்தப் புது நடத்தை வித்தியாசமாய்ப்பட்டது. இதய அறுவைசிகிச்சைக்குப் பிறகு பெரும்பாலும் மகள்வீடே கதியென்று ஆனநிலையில் அவர் வேறு வழியின்றி அந்தச் சூழலைச் சகித்துக் கொண்டிருந்தார்.
தனது ஒரே மகளை நெருங்கிய சொந்தத்திற்குதான் அளித்திருந்தார். ஆயிரமிருந்தாலும் அது மருமகன்வீடு. அங்கிருக்கும் போதெல்லாம் அவனின் நடத்தை பெருங்கவனம் போர்த்தியிருக்கும். அதிலும், குறிப்பாக வார்த்தையில். அவர் ‘கவுடராக’ இருந்தபோது எத்தனையோ தீர்ப்புகளைக் கூறிய அவரின் வாய் இன்று அடிக்கடி பல்லைக்கடித்து தன் வார்த்தைகளை அடக்கம் செய்துக்கொண்டிருந்தது.
“ஏய்…. இவளே.. பொறப்பட்டாச்சா…
மறக்காமா எல்லாத்தையு எடுத்துக்கோ…
அந்தக் கிழிந்த தலைப்பாகையை மறந்துடாதே…
ஏய்.. ஏய்… அந்தக் கொடெய…”
அவனின் செக்கச்சிவந்த முகம் மேலும் சிவந்தது. நேற்றிரவெல்லாம் தூக்கம் தொலைத்து செவ்வரியோடிய கண்கள் அங்குமிங்கும் அலைந்தன. மேல்வயிற்றின் இடப்பக்கம் விலாவிற்குக்கீழ் சற்று வீங்கியிருந்தது. அதை இடதுகையில் பொத்திக்கொண்டே பெருமூச்செறிந்தார்.
மிச்சியும் தன் கணவனின் இந்த விசித்திரமான செய்கையைக் கோபம் கலந்த பிரம்மிப்புடன் எதிர்நோக்கினாள். அவளும் தன் மகள் மாசியும் வைத்தக்கண் வாங்காமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
அரசியல் புனைவுகள் அதிகமாக வெளிவந்து கொண்டிருக்கும் காலகட்டம் இது. படைப்பாளிகள் கொந்தளிக்கும் சமகால நிகழ்வுகளைப் பேசு பொருளாக்கித் தமது படைப்புக்களின் ஊடாக உடனுக்குடனேயே தமது வாசகர்களுடன் உரையாடும் சூழலொன்று இன்று உருவாகி வந்துள்ளது. இந்த வகையில் கடந்த சில வருடங்களாக பலத்த சர்ச்சைகளையும் விவாதங்களையும் உருவாக்கியிருந்த இஸ்லாமியப் பெண்களின் ஆடைகள் குறித்தும் அந்த ஆடைகளுக்கு எதிரான குரல்கள் குறித்ததுமான சம்பவங்களை மையப்படுத்தி 'பர்தா' எனும் நாவல் 'எதிர்' வெளியீடாக வெளிவந்துள்ளது. இந்நாவலினை பாத்திமா மாஜிதா எழுதியுள்ளார். கிழக்கிலங்கையில் பிறந்து இப்போது இலண்டனில் வசித்து வரும் இவர் ஏற்கனவே பல சிறுகதைகளை எழுதியிருந்த போதிலும் இது இவர் எழுதிய முதலாவது நாவல் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கடந்த சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெற்ற காலப்பகுதியில் வெளிவந்த இந்நாவல் பல்வேறு ஆளுமைகளினாலும் எழுதாளர்களினாலும் சிறந்த ஐந்து புத்தகங்களில் ஒன்றாக பரிந்துரை செய்யப்பட்டதும், இதன் வெளியீட்டாளர் இதனை அதிக விற்பனையான புத்தகங்களில் ஒன்றாக அறிவித்ததும் நாம் அறிந்த செய்திகள்.
இந்நாவல் மூன்று தலைமுறைகளின் கதையினைப் பேசி நிற்கின்றது. கிழக்கிலங்கையில் உள்ள மாவடி என்ற கிராமத்தைக் களமாகக் கொண்டு கிளைக்கும் நாவல் கிழக்கு இலண்டன் பகுதி வரை நகர்கின்றது. மாவடி கிராமத்தில் அமைதியாகவும் எளிமையாகவும் வாழ்ந்து வரும் அந்த இஸ்லாமியப் பின்னணி கொண்ட சமூகத்தில் மதம் என்ற போர்வையின் கீழ் ஏதோ ஒரு தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு உள் நுழையும் பர்தா என்னுமோர் அந்நிய ஆடையானது ஏற்படுத்தும் களேபரங்களும் குழப்பங்களும் மாற்றங்களுமே இந்தக் கதையின் மையக்கரு.
1. நீங்கள் அதிசயமானவர்கள்!
நீங்கள் அதிசயமானவர்கள்
அதிவிரைவாக சம்பாதித்ததால்
நாங்கள் அலட்சியமானவர்கள்
உங்களை சம்பாதிக்க வைத்ததால்
சேமிக்கும் காசு கூட காணவில்லை
ஏதேதோ சொல்லி நீங்களே
எடுத்துக் கொண்டிர்கள்
நீங்கள் நாடாள,
நாங்கள் நடுத்தெருவில்,
நீங்கள் அதிசய மானவர்கள்
ஏழைகளே இல்லாத நாடு என்பீர்
ஏனோ உங்கள் கண்களுக்கு
நாங்கள் தென்படுவதேயில்லை
இறந்துக்கிடக்குது இங்கே சுதந்திர இந்தியா
நீங்கள் சொல்கிறீர்கள் பாரத் மாதா கீ ஜே
என்றும் நீங்கள் அதிசய மானவர்கள்
விண்ணில் ஓசையிட்டு செல்லும் விமானம்,
விரைந்து ஓடும் மாநகர இரயில்கள்,
சிக்னலில் தவித்துக் கொண்டிருக்கும்
இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள்,
அனுதினமும் பறக்கும் அவசர ஊர்திகள்,
பரபரப்பில் ஓடும் மருத்துவர்,
அவர்களுக்கு வழிவிடாமல் செல்லும்
மானிடக்கூட்டம்!
இன்று ( 12 ஆம் திகதி ) முற்பகல் நடைப்பயிற்சிக்கு சென்றுகொண்டிருந்தபோது, கனடாவில் வதியும் எழுத்தாளர், இலக்கிய நண்பர் ஜெகதீசனிடமிருந்து, எமது மூத்த ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் நேற்று நள்ளிரவு வவுனியாவில் மறைந்து விட்டார் என்ற துயரமான செய்தி எனது மின்னஞ்சலுக்கு வந்தது. அதனைப்படித்ததும் அதிர்ச்சியில் மனம் நிலைகுத்தியது. தாமதிக்காமல் “ என்ன நடந்தது..? “ எனக்கேட்டு எழுதினேன். சில நிமிடங்களில் பின்வரும் குறிப்பு வந்தது:
ஊடகவியலாளர் பாரதி ராஜநாயகத்தின் முகநூல் பதிவு 'நீண்ட காலமாக காலனுடன் போராடிக்கொண்டிருந்தவா். அவரது மனத்துணிவுதான் அவரை இயக்கிக்கொண்டிருந்தது. மருத்துவமனையில் இருக்கும் போதும் மடிக்கணினியில் வேலை செய்துகொண்டுதான் இருப்பாா். மூன்று தினங்களுக்கு முன்னா் - ஞாயிற்றுக்கிழமை அவரைப் பாா்ப்பதற்காக ராமும் நானும் சென்றிருந்தோம். அவரால் பேச முடியவில்லை. ஆனால், நாம் புறப்படும் போது "இருங்கோ இருங்கோ கதைப்பம்" என்றாா். அவரது உடல்நிலை மோசமாக இருப்பது தெரிந்தது. ஆனால், இவ்வளவு விரைவாக விடைபெறுவாா் என்பது எதிா்பாா்க்காதது. தன்னுடைய வாழ்நாள் சாதனையாக பல நுால்களையும் எழுதியிருக்கின்றாா். இன்னும் ஒரு நுால் தயாரிப்புக்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அதனையும் முடித்து வெளியிட வேண்டும் என்ற ஆதங்கம் அவருக்கு இருந்தது. கொஞ்சம் சுகமாக இருந்தாலும் கணினியைக் கொண்டுவரச் சொல்லி வேலையைத் தொடங்கிவிடுவாா் என்று அவரது மனைவி சொன்னா். வேலை மீதிருந்த பேராா்வமும் மனத்துணிவும்தான் அவரை இயக்கிக்கொண்டிருந்தது.'
நண்பர் இராஜநாயகம் பாரதியின் மேற்கண்ட பதிவுடன் எனது நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கின்றேன். வீரகேசரியில் நான் பணியாற்றிய காலத்தில் மாணிக்கவாசகம், வவுனியா பிரதேச நிருபராக இருந்தார். அவரது கையெழுத்துக்களை, முதலில் ஒப்புநோக்காளர் பிரிவிலிருந்தபோதும், அதன்பின்னர் 1984 தொடக்கம் 1987 தொடக்கம் வரையிலும் ஆசிரிய பீடத்திலிருந்தும் பார்த்து வந்திருக்கின்றேன்.
நான் ஆசிரிய பீடத்திலிருந்த சுமார் மூன்று ஆண்டுகள் எனது கடமை நாட்களில் தினம் தினம் தொலைபேசியில் பேசும் ஒருவராகவும் நண்பர் மாணிக்கவாசகம் திகழ்ந்தார்.
இன்று, ஏப்ரில் 10, சர்வதேச சகோதரர் நாள் ஆகும். எங்களுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியைச் சகோதரர்கள்தான் பங்கிட்டுக் கொள்கிறார்கள். நண்பர்களையோ, வேறெந்த உறவுகளையோ அறிவதற்கு முன் பெற்றோருக்கு அடுத்ததாக நாங்கள் பழகும் உறவும் அதுதான். எங்களின் ஆரம்பகால வருடங்களின் பெரும்நேரத்தைக் குடும்பமாக அவர்களுடன்தான் செலவிடுகிறோம். அவர்களுடன் சேர்ந்து நாங்களும் வளர்கிறோம். அந்தவகையில் சகோதரங்களுடான உறவு ஆரோக்கியமானதாக அமையவேண்டியது அத்தியாவசியமான தேவைகளில் ஒன்றெனலாம்.
சகோதர உறவின் மேன்மையைக் காட்டும் பல்வேறு திரைப்படங்களும் கதைகளும் வெளிவந்திருக்கின்றன. செம்புலப் பெயல்நீர் போல எனக் காதலுக்கு உறுதிகூறும் சங்ககாலத் தலைவனின் வரிகளை ஓட்டி,
“செம்மண்ணிலே தண்ணீரைப் போல் உண்டான சொந்தம் இது
சிந்தாமணி ஜோதியை போல் ஒன்றான பந்தம் இது”
எனக் கவிஞர் கண்ணதாசன் சகோதர உறவின் இறுக்கத்தையும் சிறப்பையும் மிக அழகாக வர்ணித்திருப்பார். இந்தப் பந்தத்துக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் 1995 முதல் கொண்டாடப்படும் சர்வதேச சகோதரர் நாள் வலுவிழந்த சகோதரர்களுக்கான நாளாக ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், சகோதர வாஞ்சையுடன் பழகும் இரத்த உறவற்ற உறவுகளும் கொண்டாடக்கூடிய ஒரு நாளாகவே இருந்து வருகிறது.
பகுதி–3
“மாறும் உலகின் முகம்”
இதுவே, இக்கட்டுரை தொடரில், சென்ற இருமுறையும் வாதிக்கப்பட்ட விடயங்களின் சாரமாகும். அதாவது, ஒருபுறம் மத்திய கிழக்கின் சவுதி முதல் சிரியா வரையிலான நாடுகள். மறுபுறம் ஆசியாவின் சீனா முதல் இந்தியா வரையிலான நாடுகள், மேலும் ஆப்ரிக்கா கண்டத்தின் அனேக நாடுகள், பின் பிறேசில் முதல் இந்தோனேசியா வரையிலான நாடுகள் - இவை அனைத்தினது முகங்களும் தீவிர மாறுகைக்கு உட்படும் போது, G-7 ன்ற அமைப்புக்கு நேரெதிராக, G-20 அல்லது ஒரு BRICS அல்லது SCO போன்ற அமைப்புக்கள் திரள்வதும், அவை ஓர் சவால் நிலையை கட்டவிழ்க்க நேர்வதும், தவிர்க்கமுடியாததாகின்றது. அதாவது G-7 என்ற நாடுகள்-உலகை வழி நடாத்திய காலம் முடிந்து, அது ஒரு கடந்த காலமாகி, அதற்குப் பதிலாக புதியதோர் ஒழுங்குமுறை கட்டவிழப் பார்க்கிறது.
இதற்கான சான்று அல்லது ஆதாரங்களை வெளிகாட்டி நிற்கும் தடயங்கள் இருவகைப்படுகின்றன. ஒரு புறம், அவற்றில் பெரும்பாலானவை, அமெரிக்காவின் உள்விவகாரங்களுக்கு உள்ளேயே, அடங்கி போகின்றன. (உலக நாடுகளில் இருந்து வெவ்வேறு விதத்தில் அமெரிக்கா கடன் பெற்று இயங்கும் ஒரு போக்கும், அதற்கான அதன் திட்டங்களும், இவ்வடிப்படையில் இருந்து எழும் அதன் கடன்பெறும் உச்ச வரம்பின் எல்லைப்பாடும், இதனுடன் சேர்ந்து ஒலிக்கும் கேள்விகளான டாலரின் ஆதிக்கம் ,காசடிக்கும் நடைறை அல்லது திறைசேரி முறிகளை விற்று பணம் பறிக்கும் முறை) போன்ற விவகாரங்களில், இதற்கான தடயங்கள் வெளிப்பட செய்கின்றன.
இதனுடன் இணைந்தாற்போல், அமெரிக்கா, அண்மையில் மேற்கொண்ட Hypersonic ஏவுகணையின் தோல்வி ARRW (13.02.2023) பின் இங்கிலாந்தின் VIRGIN ORBIT போன்ற விண்வெளி நிகழ்ச்சிகளின் தோல்வி (09.01.2023) பின் ஜப்பானிய முதல்தர விண்வெளி ராக்கெட்டின் ஏவுதலின் போதான தோல்வி (07.03.2023) -இவை அனைத்தும் மேற்கின் தொழில் நுட்ப அல்லது இராணுவத் துறையின் பின்னடைவுகளைச் சுட்டும் அதேவேளை இம்மூன்று பிரதான நிகழ்வுகளுமே, இவ்வருடத்தின் முதல் ஆரம்ப மாதங்களுக்குள் அடுத்தடுத்து இடம்பெற்ற தோல்விகளாகும் என்பதும் குறிப்பிடத்தக்கதே.
42 சிங்களக் கவிஞர்களின் கவிதைகளை எழுத்தாளர் இப்னு அஸுமத் மொழிபெயர்த்துள்ளார். பல்வேறு சஞ்சிகைகள், பத்திரிகைகளில் வெளியான கவிதைகள். வலம்புரி கவிதா வட்டத்தின் வகவம் பதிப்பக வெளியீடாக வெளியாகியுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட போர்ச்சூழலில் மரணித்த அனைத்து இன மக்களுக்கும் நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. நூலுக்குக் கவிஞர் மேமன்கவி சிறப்பானதோர் அணிந்துரையினை வழங்கியுள்ளார்.
எழுத்தாளர் ஜெயகாந்தனின் நினைவு தினம் ஏப்ரில் 8. என் வாசிப்பனுவத்தில் மறக்க முடியாத இலக்கிய ஆளுமை. அறுபதுகள், எழுபதுகள் ஜெயகாந்தனின் எழுத்துலகப் பொற்காலம். உண்மையில் வெகுசன இதழ்களான விகடன், கல்கி, தினமணிக்கதிர் ஆகியவை அவருக்குக் களமமைத்துக்கொடுத்தன என்பது வியப்புக்குரியது. விகடனில் அவரது 'ஒரு நடிகை நாடகம் பார்க்கின்றாள்' தொடராக வெளியானது. அத்துடன் அவரது மிகவும் புகழ்பெற்ற நாவலான 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' கோபுலுவின் உயிர்த்துடிப்பான சித்திரங்களுடன் தொடராக வெளியானது. கோபுலுவின் ஓவியங்களுடன் அந்நாவலைப் படிப்பது அற்புதமானதோர் வாசிப்பனுபவம். நாவலின் பாத்திரங்களை உள்வாங்கி, அவற்றின் உளவியலை உள் வாங்கி மிகவும் சிறப்பாக அவ்வோவியங்களைப் படைத்திருப்பார் கோபுலு.
- தமயந்தி (தமயந்தி சைமன்) கவிஞர், எழுத்தாளர், புகைப்படக்கலைஞர், காணொளிக் கலைஞர், சமூக, அரசியற் செயற்பாட்டாளர் எனப் பன்முக ஆளுமை மிக்கவர். ஏப்ரில் 8 அவரது பிறந்தநாள். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். சொல்லும், செயலும் ஒன்றாக இயங்கும் சமூக,அரசியல் செயற்பாட்டாளர்களில் எழுத்தாளர் தமயந்தியும் ஒருவர். முகநூலில் அவர் பதிவு செய்திருந்த இக்கவிதைகள் அவர்தம் ஆளுமையினை வெளிப்படுத்தும். கடலுடனான அவர்தம் பிணைப்பை வெளிப்படுத்தும். தமயந்தி கடலின் மைந்தன். நவீனத்தமிழ் இலக்கிய உலகில் கடலைப்பற்றிய இவரது கவிதைகள், கட்டுரைகள், கதைகள் முக்கியமானவை. - பதிவுகள்.காம் -
1. சாட்சிகள் செத்த இரவு
எதுவுமே தெரியாததுபோல்
காலையில்
எழுந்துவரும் சூரியனிடம்
எதைத்தான் எடுத்துரைக்கும்
முகமுடைந்த பனந்தீவுகள்?
இரவோடு இரவாக
எல்லாவற்றையும் அள்ளிச்சென்ற
புயலின் வழித்தடம் பற்றி
எஞ்சியிருக்கும் கோரைப்புற்களிடம்
சாட்சியம் சொல்ல ஏது வார்த்தைகள்?
நிலமெங்கும்
கடற்கரை மணலைப்போல
சிந்திக்கிடக்கும் நட்சத்திரங்களை
கடகத்தில்
அள்ளிச் செல்கிறது கடல்.
புயல் பிரித்தெறிந்த
ஏதாவதோர் குடிசையின் கீழ்
நிலவு
உடைந்து கிடக்கக்கூடுமென
எல்லா திசைகளிலும்
தேடி அலைகிறது கடல்.
காரான் சுழி உறிஞ்சி
கரையில் போடப்பட்ட மீன்களுக்கு
பால் கொடுத்துக்கொண்டிருந்த
நிலவைக் கண்டு
விம்மி அழுதது கடல்
நிலவும் கடலும்
ஒன்றையொன்று தழுவிக்கொண்டபோது
பாதிப்பகலை முடித்துக்கொண்டு
மீண்டும்
பனந்தீவுகளுக்குப் பின்னால்
மறைந்துகொண்டது சூரியன்.
நாளையிரவோ
அல்லது
இன்னொரு நாளின் இருளிலோ
மீண்டும் புயல் வரக்கூடும்.
அப்போதும் சூரியனுக்கு
எதுவுமே தெரியாதுபோம்.
சென்ற சனிக்கிழமை மார்ச் மாதம் 25 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு கனடாவில் இயங்கிவரும் சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத்தினரின் ஒன்றுகூடலும், இரவு விருந்துபசாரமும் இடம் பெற்றன. ரொறன்ரோ எக்லிங்டன் வீதியில் உள்ள ஈஸ்ட்ரவுன் விருந்தினர் மண்டபத்தில் மாலை 6:30 மணியளவில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. மன்றத்தின் தலைவர் திரு அஜந்தன் மகேந்திரனும் அவரின் துணைவியாரும் மங்கள விளக்கேற்றி விழாவை தொடக்கி வைத்தனர். தொடர்ந்து கனடா தேசிய கீதமும், தமிழ்தாய் வாழ்த்தும் இடம் பெற்றன. அதன்பின் சமீபத்தில் எம்மைவிட்டுப் பிரிந்தவர்களுக்காக ஒரு நிமிடம் அகவணக்கம் இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து பாமதி ராம்தாஸ் அவர்களின் வரவேற்புரை இடம் பெற்றது.
தொடர்ந்து மன்றத்தின் ‘கலைச்சங்கமம் - 2023’ என்ற ஆண்டு மலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. மருதநிலத்தின மாண்புகள் என்ற தலைப்பில் சண்டிலிப்பாயின் வரலாறு பற்றி எழுத்தாளர் குரு அரவிந்தன் எழுதிய கட்டுரை ஒன்றும் இதில் இடம் பெற்றிருந்தது. சண்டிலிப்பாய்க்குப் பெருமை சேர்க்கும் வழுக்கை ஆறு, கூவல் தெப்பக்குளம், கல்வளை அந்தாதி, கண்ணகி அம்மன் கோயில் போன்றவை பற்றிய விபரங்களும் இந்த மலரில் இடம் பெற்றிருக்கின்றன.
ஒளவை என்ற பெயரில் பல பெண்பாற் புலவர்கள் இருந்ததை நமது தமிழ் இலக்கிய வரலாற்றில் காண முடிகிறது. புகழுக்குரியாரது பெயரைப் பின்வரும் தலைமுறையினர் தம் பிள்ளைகளுக்கும்ச் சூட்டுவது இன்றும் நாம் காணும மரபுதான். எனவே சங்க காலத்தில் பீடுபெற்று விளங்கிய ஒளவையாரின பெயரைப் பின்னால் பலர் பெற்றுத் திகழந்ததில் வியப்பில்லை. மேலும் ஒளவை என்றாலே அறிவு என்பதாக அறிவுக்கேயுரிய பெயராக ஒளவை என்பது வழங்கலாயிற்று என்பதும் குறிப்பிடத்தக்கது. சங்ககால ஒளவையாரைப் பற்றிக் காண்போம்.