1. நீங்கள் அதிசயமானவர்கள்!
நீங்கள் அதிசயமானவர்கள்
அதிவிரைவாக சம்பாதித்ததால்
நாங்கள் அலட்சியமானவர்கள்
உங்களை சம்பாதிக்க வைத்ததால்
சேமிக்கும் காசு கூட காணவில்லை
ஏதேதோ சொல்லி நீங்களே
எடுத்துக் கொண்டிர்கள்
நீங்கள் நாடாள,
நாங்கள் நடுத்தெருவில்,
நீங்கள் அதிசய மானவர்கள்
ஏழைகளே இல்லாத நாடு என்பீர்
ஏனோ உங்கள் கண்களுக்கு
நாங்கள் தென்படுவதேயில்லை
இறந்துக்கிடக்குது இங்கே சுதந்திர இந்தியா
நீங்கள் சொல்கிறீர்கள் பாரத் மாதா கீ ஜே
என்றும் நீங்கள் அதிசய மானவர்கள்
2. ஓட்டுக்குப் பணம்
ஓ தனவான்களே.!
சற்றுப் பாருங்கள்
ஓட்டு போட்ட கைகளை;
சோற்றுக்காக கையேந்தும் கைகளை;
அரிசிக்கு அடித்துக்கொள்ளும் கைகளை;
வேலையை எதிர்ப்பாத்திருக்கும் கைகளை.
நீங்கள் கை கூப்பினீர்கள்.
நாங்கள் கை நீட்டினோம்.
தாராளமாக கொடுத்தீர்கள்
ஓட்டுக்குப் பணம்.
இன்று இல்லை
சோறாக்க வீட்டுக்குப் பணம்.
ஓ தனவான்களே!
சற்றுப் பாருங்கள்.
நாங்கள் சாவதற்கு முன்
சற்றுப் பாருங்கள்.
3. வேலையில்லா பட்டதாரி!
யாசித்து கற்றதெல்லாம்
மண்ணாய்ப் போக
யாசிக்கவும் வழியற்று
சுவாசமின்றி நிற்கின்றான்
என் வேலையில்லாப் பட்டதாரி!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.