நாடகக் கலைஞர் அண்ணாவியார் கணபதி உதயகுமார்! - வ.ந.கி -
இலங்கைத் தமிழர்கள் மத்தியில் சில ஊர்கள் கலைகளுக்குப் புகழ்பெற்றவை. அளவெட்டி இத்தகைய ஊர்களிலொன்று. இன்னுமொரு ஊர் கரவெட்டி. கலைஞர்கள் பலரை, சமூக,அரசியற் செயற்பாட்டாளர்களை, எழுத்தாளர்களை உருவாக்கிய ஊர் கரவெட்டி. மார்கசியக்கருத்துகளை உள்வாங்கிய அரசியல் ஆளுமைகள் பலரைத் தந்த ஊர் அது. இந்நாடகக் கலைஞர் அண்ணாவியார் கணபதி உதயகுமாரும் கரவெட்டிக்குப் புகழ் சேர்க்கும் கலைஞர்களில் ஒருவர்.
உண்மையில் இக்காணொளி மூலமே இவரைப்பற்றி அறிகின்றேன். இவருனான இந்நேர்காணல் முக்கியமானது. இக்கலைஞரின் உணர்வு பூர்வமான, உளப்பூர்வமான நாடகக் கலையின் மீதுள்ள ஈடுபாட்டை இக்காணொளி வெளிப்படுத்துகின்றது. கரவெட்டியில் 'கலைமதி' நாடக மன்றமொன்றினை நிறுவி , கலைப்பங்களிப்பைச் செய்து வரும் தகவலையும் இக்காணொளி மூலம் அறிந்துகொள்கின்றோம். மேலும் அரிச்சந்திரா, காத்தவராஜன் என்று கூத்துகள் பலவற்றில் நடித்திருக்கின், கலைஞர்கள் பலரை உருவாக்கியிருக்கின்ற தகவல்களையும் அறிந்துகொள்கின்றோம். இக்காணொளியில் அரிச்சந்திரா , காத்தவராயன் கூத்துகளிலிருந்து சில பாடல்களை இவர் பாடும் காட்சிகளையும் காண்கின்றோம்.