முன்னுரை

உலகத்தில் வாழ்ந்த, வாழ்கின்ற, வாழும் மக்கள் அனைவரும் ஏற்றும் அதனைப் பின்பற்றக் கூடிய வகையில் வாழ்வியல் கருத்துக்களைக் கூறும் நூலாகத் திருக்குறளைப் படைத்துள்ளார் வள்ளுவர். 'உலகப் பொதுமறை' எனப் போற்றற்குரிய திருக்குறளில் கூறாத கருத்துக்கள் ஒன்றுமில்லை என்று போற்றத்தகும் சிறப்பால். 'எல்லாப் பொருளும் இதன்பால் உள' என்றனர். இத்தகு சிறப்புகள் பலவும் உடைய திருக்குறளில் “இல்லறம்” என்பது குறித்துக் கூறப்பட்டுள்ள வாழ்வியல் கருத்துக்களைத் தொகுத்துரைப்பது இதன் நோக்கமாகும்.

இல்லற அமைப்பு

மனித சமுதாயத்தின் அடிப்படையாக அமைவது “குடும்பம்” அல்லது “இல்லறம்” என்பர். அக்குடும்ப அமைப்பு அதை நிர்வகிக்கும் பொறுப்பு பெண்ணை மையமாகக் கொண்டே அமையப் பெற்றது. இலக்கியங்களும் திருக்குறளும், குடும்பம் என்பதைக் குறிப்பனவாக, இல்லறம், குடி, மனை, அறம் என்ற சொற்களைப் பயன்படுத்தியுள்ளன. அவற்றுள் குடும்பம் என்ற சொல்லையும் காண முடிகின்றது. திருக்குறளில் காணப்படும் இல்லறவியலும், குடிமை, குடிசெயல்வகை என்ற அதிகாரங்களும், கற்பியலில் பலவும் குடும்பத்தை, குடும்ப வாழ்க்கையைக் குறித்த பல செய்திகளைக் கூறுவனவாகவுள்ளன.

குடும்பத்தில் இன்றியமையா உறுப்பினர்கள் கணவன், மனைவி, பிள்ளைகள் ஆவார். திருக்குறள், கணவனைத் தற்கொண்டான், கிழவன், இல்வாழ்வான், காதலர், நயந்தவர், கொண்கன், கண்ணன்னகேளிர் என்ற சொற்களாலும், மனைவியை இல்லாள், இல்லவள், மாண்புடையள், வாழ்க்கைத் துணை, பெண், பெண்டிர், மகளிர், கண்ணிறைந்த காரிகை என்ற சொற்களாலும் பிள்ளைகளை மக்கள், மகன் என்ற சொற்களாலும் சுட்டியுள்ளது.

இல்லறச்சிறப்பு

இல்லறவியலில் இடம் பெற்றுள்ள, இல்வாழ்க்கை முதலாகப் புகழ் ஈறாகவுள்ள இருபது அதிகாரங்கள், இருநூறு குறட்பாக்கள். குடும்பத்தில் கணவன், மனைவி, பிள்ளைகள் ஆகியோரிடம் இடம்பெற வேண்டிய பண்புகளையும், அவர்கள் ஆற்றவேண்டிய கடமைகளையும் ஆகியவற்றை விரிவாக எடுத்துரைக்கின்றன. திருக்குறள், குடும்ப வாழ்க்கையின் உயர்வினை,

"அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று" (குறள் – 49)

மனித இனம் பின்பற்ற வேண்டிய அறங்களில் தலையாயது இல்வாழ்க்கை என்னும் அறமாகும். அறம் என்றும் போற்றுவதற்குரியதாகும். அவ்வறம் பிறர் பழித்துக் கூறாவண்ணம் அமைதல் சிறப்பிற்குரியது. இல்லறமே நல்லறமாகப் போற்றப்படுகிறது.

ஈன்றோர் கடமை

தாய்க்குத் தன் புதல்வனை ஈன்றெப்படுதும் பாதுகாப்பதும் கடமையாகும். தந்தை தன் புதல்வனுக்கு கல்வி புகட்டுவதும், படைக்களப் பயிற்சி புகட்டுவதும் கடைமையாகும் என்பதை

"ஈன்று புறந்தருதல் என்றலைக் கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே" (புறம் -312 )

என்ற புறநானூற்றுப்பாடல் வழி அறியலாகிறது.

வாழ்க்கைத் துணை நலம்

இல்லறத்தில் கணவன், மனைவி இருவரது உறவும், உடம்போடு உயிர் எவ்வாறு இணைந்து செயல்படுகிறதோ இருவருக்கும் இடையே உள்ள நட்பு அமைதல் வேண்டும் என்கிறார். அன்பெனும் பிடியில் ஒருவரையொருவர் புரிந்து இல்லறம் சிறக்க வேண்டும் என்பதை

"உடம்போ டுயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொ டெம்மிடை நட்பு" (குறள் – 1122)

இல்வாழ்க்கையில் ஒழுக்கத்திற்குத் தலையாய இடமுண்டு. தனிமனித ஒழுக்கம் பேணப்படுவதுடன், இல்லறத்தில் ஒழுக்கம் போற்றப்படுதல் இன்றியமையாததாகும். இவ் இல்லற ஒழுக்கத்தைக் 'கற்பு' என்று கூறுவர். கற்பு என்பது ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானதாகும். கணவனது கற்பொழுக்கத்தைச் சுட்டும் பொழுது கற்பொழுக்கத்தைப் பேணுகின்றவனைச் சான்றோன் எனச் சிறப்பித்து, மேலும் இத்தகைய ஒழுக்கம் தான் பேராண்மை என்பதனை

"பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்
கறனொன்றோ ஆன்ற ஒழுக்கு" (குறள் – 148)

என்றும்,

மனைவி மாண்புடையவளாக அமைவது இல்லறத்தின் மங்கலம் என்றும், அதற்குச் சிறந்த அணிகலமாக அமைவது அறிவுள்ள மக்களைப் பெறுவது என்பதை

"மங்கலம் என்ப மனைமாட்சி் மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு. (குறள் – 60)

என்றும்,

பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மை யுண்டாகப் பெறின் (குறள் – 54)

மனையாளிடம் கற்பு என்று சொல்லப்படும் உறுதிப்பாடு இருக்குமாயின், அப்பெண்மையினும் மேலான செல்வம் எவையும் இல்லை என்று கற்பொழுக்கத்தைக் குடும்ப வாழ்க்கையில் பெரிதும் பேணுமாறு வலியுறுத்தியுள்ளது.

மக்கட்பேற்றின் மாண்பு

இல்லற வாழ்வின் வெற்றி மனைவியைப் பொறுத்தே அமையும் என்பது திருக்குறள் கூறும் வாழ்வியல் உண்மை. வாழ்க்கையில் பல்வேறு சிறப்புக்கள் ஒருவருக்கிருப்பினும், அவனது குடும்ப வாழ்க்கை சிறப்புற அமைய வில்லையெனின், பிற சிறப்புக்கள் அனைத்தும் பொருளற்றதாகப் போய்விடும். இவ்வுண்மையைப் புலப்படுத்தும் வகையில்,

“பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற” (குறள் – 61)

எனும் குறட்பாவில் குடும்பத்தில் மக்களைப் பெறுவது பேறுகள் அனைத்திலும் பெரியது, அவர்களால் ஏழு பிறப்பும் துன்பங்கள் வந்தது சேராது என்றும், அமிழ்தினும் இனியது தம் மக்கள் சிறுகையால் பிசைந்த உணவு என்றும். குழலினும் யாழினும் இனியது அவர்தம் மழலை. சொற்கள் என்று கூறுகிறார். அவையத்து முந்தியிருப்பச் செய்வது தந்தையின் கடன்,ஈன்ற பொழுதில் பெரிதுவப்பாள் தன் மகனைச் சான்றோன் எனப் பிறர் சொல்லக் கேட்கும் தாய், மகன் தந்தைக்கு இவனைப் பெறுவதற்கு என்ன தவம் செய்தனரோ என்ற சொல்லைப் பெற்றுத்தருதல் வேண்டும் என மக்களால் பெறும் இன்பத்தையும், பெற வேண்டிய இன்பத்தையும் சொல்லியுள்ளது.

குடியின் பெருமை

உயர் குடியில் பிறந்தோர்க்கு இயல்பாகவே பழி பாவங்களுக்கும் அஞ்சும் குணம் காணப்படும். ஒழுக்கமுடைமை, உண்மை கூறுதல்,நாணம் இவற்றைத் தவற விடமாட்டார்கள்.

"நகையீகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு" (குறள் – 953)

வறியவரைக் காணின் முகமலர்ச்சியும், கொடையும், இனியவை கூறலும் பிறரை இகழாமையும் ஆகிய நான்கு பண்புகளும் உயர்குடியில் பிறந்தோர்க்கு இயல்பாக அமையப்பெறும். குடும்பத்தைக் காக்கும் பொருட்டு ஒருவன் வினை செய்யத் தயங்கக் கூடாது. பொது நிலையில் உழைத்தல், வினை செய்தல் ஆணுக்குச் சொல்லப்பட்டதெனினும், பெண்டிருக்கும் அது பொருந்தும்.

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்" (குறள் – 1023)

கூறியுள்ளமை நினைவிற் கொள்ளத்தக்கன. இல்லறத்தைக் காத்துத் துயர்துடைத்து உயர்த்தும் ஒருவனுக்கு தெய்வம் துணையாக நிற்கும் என்பதை அறியமுடிகிறது.

இல்லறத்தின் இன்றியமையாப் பண்புகளாக, அன்புடைமை, பொறையுடைமை, அழுக்காறாமை, புறங்கூறாமை, பயனில சொல்லாமை, ஒப்புரவறிதல், ஈகை போன்ற பல பண்பு நலன்களையும் கூறியுள்ளது.

முடிவுரை

திருக்குறளில் இல்லறம் என்னும் பொருள் விரிந்து பரந்துபட்ட கருத்துக்களைக் கொண்டது. வாழ்க்கையனுபவங்களின் வெளிப்பாடாக இவை விளங்குகின்றன. வள்ளுவரின் இல்லறவியல் கருத்துக்களை நுண்ணிதின் உணர்ந்து, தெளிந்து ஏற்று வாழ்பவர் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவராவர். அவர்தாம் வானுறையும் தெய்வத்துள் வைத்து வணங்கும் பெருமைக்குரியவராவர்.

துணைநின்ற நூல்கள்

திருக்குறள் மூலமும் உரையும் - புலியூர்க் கேசிகன், சந்தியா பதிப்பகம்
புறநானூறு மூலமும் உரையும்  - புலியூர்க் கேசிகன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம்,

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.




Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R