இலக்கியவெளி நடத்தும் இணைய வழி கலந்துரையாடல் - அரங்கு 21: “தமிழ்த் திறனாய்வு உலகில் பஞ்சாங்கத்தின் இடம்” - தகவல்- அகில் -
நூல் வெளியீடு: எழுத்தாளர் அண்டனூர் சுராவின் 'தீவாந்தரம்' நாவல் வெளியீடு!
- * அழைப்பிதழைத் தெளிவாகப் பார்ப்பதற்கு கீழுள்ள படத்தை ஒருமுறை அழுத்தவும். -
தகவல்: ராஜமாணிக்கம் மாணிக்கம் - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பேராதனைத் தமிழ்த்துறையின் ஆறாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு! - தகவல்: எஸ்.சுதர்சன் -
- * தெளிவாகப் பார்க்க கீழுள்ள படத்தைக் 'கிளிக்' பண்ணவும் . -
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் ஆறாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 30, 31ஆம் திகதிகளில், “ஈழத்தில் அச்சுப் பண்பாடும் பதிப்பும்” எனும் கருப்பொருளில் இடம்பெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
“தமிழ்ச் சூழலில் அச்சுப் பண்பாட்டு இயக்கத்திலும் பதிப்புத்துறையிலும் ஈழத்தவர் பணிகள் மகத்தானவை. அச்சு, பதிப்பு ஆகியவற்றினூடு தமிழியல் வரலாற்றைக் கட்டமைப்பதிலும் பாதுகாப்பதிலும் நவீனப்படுதுவதிலும் ஈழத்தவரின் சாதனைகள் முன்னோடியானவை. அச்சியந்திரங்களைக் கொணர்ந்து அச்சியந்திர சாலைகளை நிறுவுதல், ஓலைச் சுவடிகளை அச்சேற்றி நூல்களுக்கு நிலையான ஆயுள் அளித்தல், அச்சிட்ட நூல்களைப் பரப்புவதனூடு அறிவுப் பரவலாக்கத்தை நிகழ்த்துதல் முதலாய செயற்பாடுகளை காலனிய காலத்தில் மேற்கொண்ட ஈழத்து அறிஞர்கள், தமிழ்ப் பதிப்புலகின் கேந்திர தேசமாக ஈழநாட்டை மிளிரச் செய்தனர். ‘சீர்பதித்த நற்பதிப்பு மூலவர்’ ஆறுமுக நாவலர், ‘பதிப்பு உலகின் தலைமைப் பேராசிரியர்’ சி.வை. தாமோதரம்பிள்ளை ஆகியோரதும் அவர்களைப் பின்பற்றி இத்துறைசார்ந்து ஈடுபட்டோரதும் பணிகளை ஆராய்ந்து பயன்கொள்வது நமது கடமையாகும்” என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிம் வாழ்வின் மூன்றாம் தொகுதி: -தமிழ் இலக்கிய உலகை, முன்னிறுத்தி (3) - ஜோதிகுமார் -
3
“உன்னை காதலிக்கின்றேன் - அனைத்தையுமே அப்படியே அறிந்து வைத்திருந்தும், ஒன்றுமே பேசாமல், மௌனம் காக்கின்றாயே – அதற்காய்…” உன்மைத்தான். இவ்வளவு அடக்கம் ஒருவனில் அடங்குமெனில், எந்தப் பெண்தான் காதல் வசப்படாமல் இருப்பாள்? கிளிம், மாஸ்கோவை விட்டகன்று, ரசிய மாகாணம் ஒன்றில் குடியேறிய பின், அவன், மூன்று முக்கிய மனிதர்களைச் சந்திக்கின்றான். அவர்களில் ஒருத்தி, கிளிம்மிடம் கூறும் கூற்றே, மேலே காணப்படுகின்றது. இவள் ஒரு பாடகி. ஏற்கனவே மாஸ்கோவில், கிளிம்முக்கு ஓரளவு அறிமுகமாகி இருந்தவள், அவர்களின் பரஸ்பர நண்பர்களின் சுற்று வட்டத்திற்கூடு. வித்தியாசமான ஒரு பெண்ணாக இவளை நாவலில் உலவ விட்டிருக்கின்றார், கார்க்கி.
“எனக்கு பிள்ளைகள் பெற்றுக் கொள்வதில் இஷ்ட்டமில்லை…”
“என்னைப் பொறுத்தவரை, மனிதன் என்பவன், அன்பு செலுத்தி கொண்டிருக்கும் வரைத்தான் வாழ்கின்றான். பிறிதொருவன் பொறுத்து அவனால் அன்பு செலுத்த முடியாது போய் விட்டால், அவன் இருப்பதன் அர்த்தம் தான் என்ன…?"
அவளது தர்க்கங்கள் இப்படியாகத்தான் இருக்கின்றது. கிளிம்மின் புலமை தோற்றத்தால் ஈர்க்கப்பட்டு, அவனது மௌனத்தால் வசீகரிக்கப்பட்டு விடும் இவள், கிட்டத்தட்ட, கிளிம்மின் அடிமைப் போன்றே இருப்பதில் பெருமை கொள்கின்றாள் - ஆரம்ப கட்டத்தில். போதாதற்கு தனது அந்தரங்கங்களை எல்லாம் கிளிம்மிடம் கொட்டி தீர்ப்பதில் வேறு ஆனந்தம் கொள்கின்றாள் - இவ் அபலை பெண்.
“என் தந்தை ஒரு சீட்டுப் பிரியர். அவர் தோற்கும் போதெல்லாம் என் தாயாரை அழைத்து, பாலில் தண்ணீரை கலக்கச் சொல்லுவார். எங்களிடம் இரண்டு பசுக்கள் இருந்தன. அம்மா பால் விற்பவர். நேர்மை. அனைவரும் அம்மாவை மனதார விரும்பினர். மரியாதை செலுத்தினர். அவள் தண்ணீரைக் கலக்கும் போது எப்படியாய் அழுதாள் தெரியுமா – என் அம்மா. எவ்வளவு, எவ்வளவு துன்புற்றுக் கலங்கினாள், என்பதை உங்களால் அறிய முடிந்தால்…”
அஞ்சலி: ஈழத்து இலக்கிய குடும்பத்தின் மூத்த சகோதரன் தெணியான் விடைபெற்றார்! வடபுலத்தின் அடிநிலை மக்களின் விடுதலைக்காகவும் பொற்சிறையில் வாடும் புனிதர்களுக்காகவும் குரல்கொடுத்தவர்! - முருகபூபதி -
- எழுத்தாளர் தெணியான் மறைந்து விட்டார். வர்க்க/வர்ண விடுதலைக்காக, சமூக அவலங்களுக்கெதிராக ஒலித்த போர்க்குரல் ஓய்ந்துவிட்டது. அவரது மறைவையொட்டி எழுத்தாளர் முருகபூபதியின் அஞ்சலிக் கட்டுரை. தெணியான் அவர்களின் மறைவால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அனைவருடனும் 'பதிவுக'ளும் பங்குகொள்கின்றது. - பதிவுகள்.காம் -
கந்தையா நடேசன் என்ற இயற்பெயர்கொண்டவரும், இலக்கிய ஊடகத்துறைகளில் தெணியான் என அழைக்கப்பட்டவருமான ஈழத்தின் மூத்த இலக்கிய ஆளுமை நேற்று 22 -05- 2022 ஆம் திகதி தமது 80 வயதில் வடமராட்சி கரவெட்டி கரணவாய் இல்லத்தில் மறைந்தார்.
06-01-1942 ஆம் திகதி வடமராட்சி பொலிகண்டியில் கந்தையா - சின்னம்மா தம்பதியருக்கு பிறந்த நடேசன் , இலக்கியஉலகில் பிரவேசித்ததும் தெணியான் என்ற பெயரில் எழுதத்தொடங்கி, அதுவே நிலைத்துவிட்டது. தான் கல்வி கற்ற கரவெட்டி தேவரையாளி இந்துக்கல்லூரியிலேயே நீண்டகாலம் ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். மற்றும் ஒரு மூத்த எழுத்தாளர் கே. டானியலின் வாரிசு எனவும் அவர் வர்ணிக்கப்பட்டவர். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் பல நாவல்களும் சில விமர்சனக்கட்டுரைத்தொகுதிகளையும் தமிழ் இலக்கியத்திற்கு வரவாக்கியிருக்கும் தெணியானின் பாதுகாப்பு என்ற சிறுகதை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஜீவநதியில் வெளிவந்தது. இச்சிறுகதை தற்போது இலங்கைப்பாடசாலைகளில் 11 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான தமிழ் பாட நூலிலும் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.
ஆய்வு: தமிழ் இலக்கியங்களில் கூா்தலறக் கோட்பாடு! - திருமதி கு.வளா்மதி, உதவிப் பேராசிாியா், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, தி ஸ்டாண்டா்டு ஃபயா்ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிா் கல்லூாி, சிவகாசி. -
தமிழ் இலக்கியங்களைச் சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரை பாகுபடுத்த இயலும். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய சங்க இலக்கியங்களை அடுத்து அற இலக்கியம், காப்பிய இலக்கியம், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியம், தற்கால இலக்கியம் என்று தமிழ் இலக்கியங்களின் பாிணாம வளா்ச்சியைக் காணமுடியும். தமிழ் இலக்கியங்களைப் பொறுத்தவரை ஒன்றிலிருந்து மற்றொன்றின் வளா்ச்சி எனும் நிலையில் இலக்கியங்களின் வளா்ச்சி உள்ளது. கூா்தலறக் கோட்பாடு என்பது, இலக்கியங்களின் பாிணாம வளா்ச்சியைக் குறிப்பிடுகின்றது. கூா்தலறக் கோட்பாட்டின் அடிப்படையில் தமிழ் இலக்கியங்களை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கூா்தலறக் கோட்பாடு – விளக்கம்
கூா்தலறம் என்பது பாிணாமம் (Evolution) ஆகும். “கூா்தல்” என்ற சொல் முன்பு உள்ளதொன்று மேன்மேலும் சிறப்பதைக் குறிக்கும். தொல்காப்பியா் கூா்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் என்பாா். உயிாினத் தோற்றம் என்ற தம் நூலில் தாா்வின் சாதாரணப் பொருள்களிலிருந்து ஊழிதோறும் வளா்ந்தும் வேறுபட்டும் மாறி மாறி உயிாினங்கள் தோன்றிப் பாிணமித்து வருகின்றன என்று கண்டு கூறினாா். அதன்பிறகு அவா் வகுத்த கூா்தலறக் கோட்பாடு சமுதாயம் மொழி போன்ற பிறதுறைகள் பலவற்றிலும் ஏற்றிப் பாா்க்கத்தக்க அடிப்படை அறிவியல் ஆயிற்று.
இயற்கையில் தாா்வினியக் கோட்பாடு (கூா்தலறக் கோட்பாடு)
கடற்பாசியில் இருந்து உயிாினம் தோன்றியது. மீனின் மூளையே மனித மூளையாக வளா்ச்சி பெற்றது. கோழி முட்டை குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட சூழலில் குஞ்சாக மாறிவிடுகிறது. இங்ஙனமே உலகில் பயிா் இனங்கள், உயிாினங்கள் எல்லாம் தோன்றி வளா்ந்து வருகின்றன என்பதே தாா்வினியக் கோட்பாடு (கூா்தலறக் கோட்பாடு) ஆகும்.
ஆய்வு: இந்துப்பண்பாட்டு வளர்ச்சியில் மேலைநாட்டவரான சேர் வில்லியம் ஜோன்ஸின் பங்களிப்பு! - ரவிதாஸ் ரஜிதா , இந்து நாகரிகத் துறை, கிழக்குப்பல்கலைக் கழகம், இலங்கை. -
இந்தியாவில் தோன்றியதும் இலங்கையிலும் சிறப்பான வளர்ச்சி அடைந்த சமயமாக இந்து சமயம் விளங்குகின்றது. இச் சமயமானது பல்வேறு நாடுகளில் பரவிச் சிறப்படைந்துள்ளதுடன் இந்துப் பண்பாடானது சிறந்த முறையில் பயில் நிலையில் இருந்து வருகிறது. ஆங்கிலேயரின் வருகை மற்றும் காலனித்துவத்தினால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்து நாகரிக ஆய்வுச் செயற்பாடுகளில் மேலைநாட்டவர்கள் ஆர்வம் கொண்டவர்களாகக் காணப்பட்டனர்.
மேலைத்தேசத்தவர்களுக்கு இந்து பண்பாடு குறித்த கரிசனைகள் அரசியல், சமூக, பொருளாதார செயற்பாடுகளால் ஏற்பட்ட ஒன்றாகும். இவ்வாறான சூழலிலே தோற்றம் பெற்ற ஒருவராக சேர்.வில்லியம் ஜோன்ஸ் விளங்கினார். இவர் ஆங்கிலேய தந்தைக்கும் வேல்ஸ் நாட்டு தாய்க்கும் 28.09.1746 ஆம் ஆண்டு; லண்டன் மாநகரில் பிறந்தார்.
இவர் தனது இளமைப் பருவத்திலே மொழியியலில் மிகுந்த நாட்டம் கொண்டவராக காணப்பட்டார். அந்த வகையில் ஆங்கிலம், வேல்ஸ், கிரேக்கம், இலத்தீன், பாரசீகம், அரபு, சீனமொழிகளிலே பாண்டித்தியம் பெற்றவராகக் காணப்பட்டார். இவர் 13மொழிகளை நன்கு அறிந்திருந்தார். மேலும் 28 மொழிகள் நியாயமான முறையில் நன்கு அறிந்திருந்தார். இவர் தனது பாடசாலைக் கல்வியை ஹாரோ பாடசாலையில் கற்றார்.
இதன் பயனாக ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி 1768 இல் பட்டம் பெற்றார். 1772 இல் றோயல் சொசைட்டியின் உறுப்பினராகவும் 1773 இல் டாக்டர் ஜான்சனின் புகழ்பெற்ற இலக்கியக் கழகத்தின் உறுப்பினராகவும் காணப்பட்டார். றோயல் சங்கத்தினால் நீதிச் சேவையாளராக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்தியாவிற்கு வந்த வில்லியம் ஜோன்ஸ்சை இந்தியப் பண்பாடானது பெரிதும் கவர்ந்திருந்தது. இந்தியப் பண்பாட்டினை அறிய வேண்டுமென்றால் சமஸ்கிருதத்தினை அறிய வேண்டியதன் அவசியத்தினை உணர்ந்த வில்லியம் ஜோன்ஸ் பல்வேறு முயற்சிகளின் பின் “பிராம்லோசின் கலாபூசன” என்ற வைத்திய குலத்தினை சேர்ந்தவரின் உதவியோடு சமஸ்கிருத மொழியினை கற்றுத்தேர்ந்தார். ஏற்கனவே அவர் அறிந்திருந்த பழம்பெரும் மொழிகளுடன் ஒப்பீட்டு ரீதியான ஆய்வினை மேற்கொள்வதற்கும் சமஸ்கிருதத்தில் அமைந்த பல நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதற்கும் சமஸ்கிருத மொழியின் அருஞ்சிறப்புக்களை மேலைத்தேச அறிஞர்களுக்கு அறிமுகஞ் செய்வதற்கும் இவருடைய பங்களிப்பு மிக அவசியமானதாகக் காணப்பட்டது. அவ் வகையில் 1789ஆம் ஆண்டு காளிதாசருடைய அவிக்ஞான சாகுந்தலம் என்ற நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இதனூடாக வெளிநாடுகளில் வாழ்ந்த ஆங்கில மற்றும் ஜேர்மன் மொழிகளைக் கற்றறிந்தவர் மத்தியில் வரவேற்பைப் பெற்றதோடு வேற்று மொழியைச் சேர்ந்தவர்களும் நன்மை அடைந்தனர்.
ஆய்வு: இந்துப் பண்பாட்டுக் கற்கைகளில் ஜேர்மனியப் பல்கலைக்கழகங்களும் ஆய்வாளர்களும் ! - சிவப்பிரியா சிவராஜா, நான்காம் வருடம் (இந்துநாகரிகத் துறை), கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை. -
மேலைத்தேசத்தவர்களுக்கு இந்துப்பண்பாடு குறித்த கரிசனையும், அது குறித்த அருட்டுணர்வும் தற்செயலாய் நிகழ்ந்ததொன்றல்ல. மூன்று நூற்றாண்டுகளாய் (கி.பி.17-19) தொடர்ந்த பல்வேறு அரசியல் பொருளாதார சமூக நிகழ்ச்சிநிரல்களின் விளைவாக அவர்களே நினையாப்பிரகாரமாய் நிகழ்ந்த ஒரு பக்கவிளைவாகவே இதனைக் கருத வேண்டும்.
குடியேற்றவாதம், வர்த்தகம், கிறிஸ்தவ மதத்தைப் பரப்புதல் என்ற மூன்று அடிப்படைக்காரணிகள் இந்தியாவிற்குள் மேலைத்தேசத்தவர்களின் வருகைக்கு ஏதுவாயின. அந்தவகையில் 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து கத்தோலிக்க கிறிஸ்தவ மிசனரிகள் தமது சமயத்தை இந்துக்கள் மத்தியில் பரப்புவதற்காக இந்துப்பண்பாட்டை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினர். இதே போன்றே 'இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பம்", 'ஆரியவாதம்" போன்ற எண்ணக்கருக்களால் உந்தப்பட்ட ஐரோப்பியப் புத்திஜீவிகள் பலர் குறிப்பாக ஜேர்மன் நாட்டவர்கள் வைதிக இலக்கியங்களையும், சம்ஸ்கிருத மொழியையும் ஆழமாக அறிந்து ஆய்வு செய்வதற்கு உந்தப்பட்டனர். இவ்வாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் தத்தமது சொந்த நிகழ்ச்சி நிரல்களை வெற்றிகரமாக முன்கொண்டு செல்வதற்காகவே இந்துப்பண்பாடு பற்றிய கற்கைகளில் மேலைத்தேயத்தவர்கள் ஆரம்பத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆயினும் அவர்களே நினையாப்பிரகாரமாய் இந்துப்பனுவல்களைக் கற்கக் கற்க இந்துப்பண்பாட்டின் மீதும் சம்ஸ்கிருத மொழிமீதும் அவர்களுக்கு ஈர்ப்பு உண்டாயிற்று. இதனால் சுவடிகளைச் சேகரித்துப் பதிப்பித்தல், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல், ஆங்கிலத்தில் உரைவிளக்கம் எழுதுதல், ஆய்வுநூல்கள், கட்டுரைகள் வெளியிடுதல், ஆய்வுச் சஞ்சிகைகளை வெளியிடுதல், ஆய்வுநிறுவனங்களை ஸ்தாபித்தல் ஆகிய இன்னோரன்ன முயற்சிகளில் மேலைத்தேச அறிஞர்கள் முனைப்போடு செயற்பட்டனர். இவ்வாறான செயற்பாடுகளில் இந்துப்பண்பாட்டுக் கற்கைகளில் ஜேர்மனியப் பல்கலைக்கழகங்களும் ஆய்வாளர்களும் பற்றி பின்வருமாரு நோக்குவோம்.
எழுத்தாளர் சிறீ சிறீஸ்கந்தராஜாவின் இலக்கியத் தராசு 'தராசு முனைகள்' - வ.ந.கிரிதரன் -
- அண்மையில் வெளியான எழுத்தாளர் சிறீ சிறீஸ்கந்தராஜாவின் 'தராசு முனைகள்' நூலுக்கு எழுதிய அணிந்துரை. - வ.ந.கி -
எழுத்தாளர் சிறீ சிறீஸ்கந்தராஜாவின் 'தராசு முனைகள்' என்னும் நூல் மதிப்புரைகளின் தொகுப்பினை வாசித்தேன். பதினைந்து எழுத்தாளர்களின் பல் வகைப்பட்ட நூல்களைப்பற்றிய மதிப்புரைகள். சுருக்கமான ஆனால் தெளிவான, கதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு போன்ற இலக்கியத்தின் பன்முக வெளிப்பாடுகள் பற்றிய ஆசிரியரின் தெளிவான புரிதல்களின் அடிப்படையில் உருவான மதிப்புரைகள். மதிப்புரைக்காக எடுத்துக்கொண்ட நூல்கள் ஆணாதிக்கம், பணம் ஏற்படுத்தும் அவலங்கள், தாயகத்தின் அவலங்களை, இருப்பின் தன்மை, முதிர்கன்னி, விதவைகள் துயர், தாய்மை, சீதனம், காதல், பிரிவு, தீண்டாமை. இனவாதம், இனங்களுக்கிடையிலான ஒற்றுமை, நல்லிணக்கம் எனப்பலவற்றைப்பற்றிப் பேசுகின்றன. இத்தொகுப்பு நூலை வாசித்தபோது நான் அவதானித்த முக்கியமான விடயங்களாகப் பின்வருவனவற்றைக் கூறுவேன்.
மன அழுத்த மேலாண்மை – 2 : மன அழுத்தத்தினால் ஏற்படும் உடலியல் மாற்றங்கள்! - டாக்டர். B. செல்வராஜ் Ph.D. (முதுநிலை உளவியல் விரிவுரையாளர், அரசு கலைக்கல்லூரி,கோவை) -
- பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். - ஆசிரியர்
நமது உடலின் செயல்பாடுகள் எல்லாவற்றையும் நரம்பு மண்டலமே கட்டுப்படுத்தி உடலின் சீரான செயல்பாட்டிற்கு காரணமாக விளங்குகிறது. நரம்பு மண்டலம் பல பிரிவுகளாக பிரிந்து உடலின் செயல்பாடுகளை கவனித்துக் கொள்கிறது. தானியங்கி நரம்பு மண்டலம் என்பது நரம்பு மண்டலத்தின் ஓர் முக்கிய பிரிவாகும். இந்த தானியங்கி நரம்பு மண்டலம் சிம்பதடிக் நரம்பு மண்டலம் மற்றும் பாரா – சிம்பதடிக் நரம்பு மண்டலம் என இரண்டு பிரிவாக பிரிந்து செயல்படுகிறதுநமது உடலின் செயல்பாடுகள் எல்லாவற்றையும் நரம்பு மண்டலமே கட்டுப்படுத்தி உடலின் சீரான செயல்பாட்டிற்கு காரணமாக விளங்குகிறது. நரம்பு மண்டலம் பல பிரிவுகளாக பிரிந்து உடலின் செயல்பாடுகளை கவனித்துக் கொள்கிறது. தானியங்கி நரம்பு மண்டலம் என்பது நரம்பு மண்டலத்தின் ஓர் முக்கிய பிரிவாகும். இந்த தானியங்கி நரம்பு மண்டலம் சிம்பதடிக் நரம்பு மண்டலம் மற்றும் பாரா – சிம்பதடிக் நரம்பு மண்டலம் என இரண்டு பிரிவாக பிரிந்து செயல்படுகிறது.
சூழ்நிலை சாதாரணமாக இருக்கும் போது தானியங்கி நரம்பு மண்டலத்தின் பாரா – சிம்பதடிக் நரம்பு மண்டலம் நமது உடலின் செயல்பாடுகளை கவனித்துக் கட்டுப்படுத்தி வரும். இச்சாதாரண சமயங்களில் நாம் மூச்சை ஆழமாக இழுத்து விடாமல் மேலோட்டமாக மூச்சு விடுவோம். இரத்த அழுத்தம் சரியான அளவில் இருக்கும். இதயத்துடிப்பும் இயல்பாக இருக்கும். உடல் வியர்க்காது. சுரப்பிகள் இயல்பாக செயல்பட்டு சரியான அளவில் ஹார்மோன்களை சுரந்து கொண்டிருக்கும்.
நாட்டில் சாதாரண் சமயங்களில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட போலீஸ் படை உள்ளது. திடீரெனெ ஏதாவது கலவரம், அடிதடி, ரகளை போன்றவை ஏற்பட்டு விட்டால் அவைகளை சமாளிக்க உள்ளது தான் அதிரடிப்படை. சாதாரண போலீஸ் படையால் சமாளிக்க முடியாத விஷயங்களை இந்த அதிரடிப்படை கட்டுப்படுத்தி விடும். இவர்களுக்கு என சிறப்பு பயிற்சிகளும், ஆயுதங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதைப் போலவே தானியங்கி நரம்பு மண்டலத்தின் அதிரடிப் பிரிவே சிம்பதடிக் நரம்பு மண்டலம் ஆகும். நமக்கு உணர்ச்சிகளும் மனவெழுச்சிகளும் சூழ்நிலையின் காரணமாக ஏற்படும் போது அச்சூழ்நிலையை சமாளிக்க ஏதுவாக பல உடலியல் மாற்றங்களை ஏற்படுத்துவது சிம்பதடிக் நரம்பு மண்டலமே ஆகும்.
வெற்றிச் சிகரத்தை நோக்கி: ஆளுமை ஆற்றலில் மனோபாவத்தின் பங்கு! (2) - கி. ஷங்கர் (பெங்களூர்) , Chartered Mechanical Engineer, MBA(Marketing) -
- பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். - ஆசிரியர்
செப்டம்பர் 2003 இதழ் 45
[ இந்தியாவில் தற்போது வசித்து வரும் திரு .கே.சங்கர் ஒரு இயந்திரவியற் பொறியியலாளர். சந்தைப் படுத்தலில் MBA பட்டம் பெற்றவர். இருபத்து மூன்று வருடங்களுக்கும் அதிகமான கூட்டுஸ்தாபன அனுபவம் பெற்றவர். தற்போது தொழில்நுட்பம், நிர்வாகம், மனித வள அபிவிருத்தி ஆகியவற்ற்¢ல் நிபுணராகப் பணியாற்றி வருபவர். அத்துடன் ஊடக எழுத்தாளராகவும் , பேச்சாளராகவும் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணியாற்றுபவர். அவர் வாழ்வின் வெற்றிக்கு அவசியமான ஆளுமை அபிவிருத்தி பற்றிய ஆக்கங்களைப் பதிவுகளில் தொடர்ந்து எழுதவிருக்கின்றார். - பதிவுகள் - ]
கல்வியில், வேலையில், வாழ்க்கையில் வெற்றி பெற ஒவ்வொரு மனிதனும் ஆளுமை பெற வேண்டும். ஆளுமை பெற வேண்டுமென்றால் பல ஆற்றல்களை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்று எனது துவக்க படைப்பில் கூறியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக இந்த இதழில் மனோபாவம் பற்றியும், சரியான மனோபாவத்தை வளர்த்துக் கொள்வதன் அவசியம் பற்றியும் கூறுகிறேன். சரியான மனோபாவம் (attitude) ஒருவருக்கு எவ்வளவு அவசியம் என்பதை பற்றி விளக்க அமெரிக்காவிலுள்ள புகழ் பெற்ற ஹார்வேர்ட்(Harvard) பல்கலைகழகம் நடத்திய ஒரு ஆராய்ச்சி பற்றி இந்த சந்தர்ப்பத்தில் நிச்சயமாக குறிப்பிட வேண்டும். ஒரு மனிதன் தன் கல்வியில், வேலையில், வாழ்க்கையில் வெற்றி பெற மிகவும் முக்கியமானது எது என்பதை பற்றி ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்ட ஹார்வேர்ட் பல்கலைகழகம், முடிவில் சரியான மனோபாவம்( Right Attitude) 85% பங்கு வகிக்கிறது என்றும், புத்திசாலித்தனம் மற்றும் இதர விஷயங்கள் வெறும் 15% தான் என்றும் எடுத்துரைத்தது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களில் சிங்கள மக்களும் இணைவு!
முள்ளிவாய்க்கால் நினைவேந்துவோம்! - வ.ந.கிரிதரன் -
மே 18 முள்ளிவாய்க்கால் நினைவாக...
முள்ளிவாய்க்கால் நினைவுகள்
மீண்டும் எமைத் துரத்துகின்றன.
அன்று மக்கள் எழுப்பிய ஓலங்கள்
இன்றும் காதுகளில் ஒலிக்கின்றன.
துயரங்களைக் காவி வரும்
யுத்தங்கள் அற்றவொரு உலகை
யாசித்து நிற்க
எம்மை அவை தூண்டுகின்றன.
எம்மை அவை எச்சரிக்கின்றன.
முள்ளிவாய்க்கால் நினைவுகளை ஏந்துவோம்!
முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்கான
முள்ளிவாய்க்கால் வலிகளுக்கான,
முள்ளிவாய்க்கால் நீதியினை வேண்டுவோம்!
பெயரடை மற்றும் தமிழின் புணர்ச்சி விதிகள்: சில சிந்தனைகள்! - மதுரன் தமிழவேள் (தவ சஜிதரன்) -
சின்னக் கலைவாணர் X சின்ன கலைவாணர்: எது சரி? சின்னத்தாய் வல்லொற்றொலி விடுத்துச் சின்னதாய் ஆவாளா? கவிஞர் மகுடேசுவரனின் கட்டுரையை முன்வைத்துச் சில இலக்கணச் சிந்தனைகள்!
அண்மையில் தினமலர் இதழில் கவிஞர் மகுடேசுவரன் ஓர் இலக்கண விளக்கக் கட்டுரை எழுதியிருந்தார். ‘சின்னக் கலைவாணர்’ போன்ற சொற்றொடர்களில் வல்லொற்று மிகல் ஆகாது; சின்ன கலைவாணர் என்றே எழுத வேண்டும் என்பது அச் சிறுகட்டுரையின் சாரம்.
அதனை முகநூலிலும் பகிர்ந்திருந்தார்.
மறைந்த நடிகர் விவேக் பெயரில் அவர் வாழ்ந்த தெருவுக்குத் தமிழக அரசு ‘சின்னக் கலைவாணர் விவேக் சாலை’ என்று பெயர் சூட்டியிருக்கிறது. இது பிழை என்பதைச் சுட்டிக்காட்டியே கவிஞர் கட்டுரை வரைந்திருந்தார்.
பொதுவெளியில் இடம்பெறும் தமிழ்ப்பிழைகளைச் சுட்டித் திருத்துவது; அவற்றின் இலக்கண வரம்புகளை எடுத்துரைப்பது என்றவாறு கவிஞர் செய்துவரும் அருந்தமிழ்த் தொண்டின் தொடர்ச்சியாக எழுதப்பட்ட கட்டுரை அது.
அதன்கண் அவர் விளக்கும் பெயரெச்சம் பற்றிய பொதுவான இலக்கண விதி பற்றி ஐயுற ஏதுமில்லை.
பெரிய, கரிய, சிறிய, அரிய, வறிய, நல்ல, வல்ல முதலான அகர ஈறு கொண்ட பெயரெச்சங்களை அடுத்து வருஞ்சொல், வல்லின எழுத்தில் தொடங்கும்போது ஒற்று மிகாது என்பதே அந்த விதி.
‘நல்ல தமிழ்’ என்றெழுதுவதே நல்ல தமிழ். அல்லாமல் நல்லத் தமிழ் என்றெழுதின் அது பொல்லாத்தமிழ். ஐயமில்லை.
ஆனால் இந்த விளக்கத்தின் முடிவாகச் ‘சின்னக் கலைவாணர்’ என்பதைச் ‘சின்ன கலைவாணர்’ என்றே எழுத வேண்டும் – ‘சின்ன’ என்ற பெயரெச்சத்தை அடுத்து ‘க்’ என்ற வல்லின ஒற்று அங்கு வரலாகாது – என்று அவர் சொல்கிறபோது இயல்பான மொழி பழகிய மனது ஏனோ தயக்கம் கொள்கிறது.
தமிழ் விக்கி பற்றி....
எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் அவரது விஷ்ணுபுரம் குழுவினர் இணைந்து உருவாக்கிய தமிழ் விக்கி தளத்தைப் பார்த்தேன். இதனையொரு தகவல் சார்ந்த இணைய இதழாகத்தான் பார்க்க முடியுமே தவிர விக்கிபீடியாவின் தமிழ் வடிவமாக ஒருபோதுமே பார்க்க முடியாது என்பதை இதனைப்பற்றிய அறிமுகக் குறிப்புகளிலிருந்து உணர முடிகின்றது.
இத்தளத்தில் 'வாசகர்களே திருத்தவும் பங்களிக்கவும் வாய்ப்புள்ள பொதுத்தளம் ஆயினும் மூத்த படைப்பாளிகளும் கல்வித்துறை ஆய்வாளர்களும் அடங்கிய ஆசிரியர் குழுவால் சரிபார்க்கப்பட்டு, ஆலோசனைக்குழுவின் ஒப்புதலுடன்தான் திருத்தங்களும் பதிவுகளும் வெளியிடப்படும்.' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒன்றே இத்தளத்தின் வளர்ச்சிக்கு எதிர்காலத்தில் தடைக்கல்லாக நிற்கப்போகின்றது.
தற்போது நடைமுறையிலிருக்கும் விக்கிபீடியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமே யாரும் தமக்குத் தெரிந்த வற்றை எழுதலாம், தவறுகளை யாரும் திருத்தலாம் என்னும் நடைமுறைதான். அதனால்தான் பலர் உலகின் பல பாகங்களிலிருந்தும் பங்களிக்கின்றார்கள். இவர்களின் நடைமுறையின்படி இவ்விதமான செயற்பாடு இருக்காது. இதழொன்றை நடத்துவதைப்போல் நடத்த எண்ணியிருக்கின்றார்கள். முதலில் ஆலோசனைக்குழுவில் உள்ளவர்கள் அனைத்தையும் அறிந்தவர்கள் அல்லர். தாம் அறிந்ததன் அடிப்படையில், தமக்குச் சார்பாக சரியென்று படுவதை மட்டுமே வெளியிடுவார்கள். இந்நிலையில் இக்குழு சார்பானவர்கள் அல்லது அவர்கள் ஏற்றுக்கொண்டவர்கள் பற்றிய தகவல்களே மிக அதிகமாக இடம் பெறும். விக்கிபீடியாவின் வெற்றிக்குக் காரணமான அதன் அடிப்படை அம்சங்களையெல்லாம் மறுக்கும் 'தமிழ் விக்கி' என்னும் தளத்தின் பெயரில் விக்கி என்னும் சொற்பதம் இருப்பதே பொருத்தமற்றது.
இரங்கலுரை: பெரும்புலவர் முகமட் ஹன்ஸீர்! - குரு அரவிந்தன், தலைவர், கனடா தமிழ் எழுத்தாளர் இணையம். -
பெரும் புலவர் முகமட் ஹன்ஸீர் அவர்கள் மே மாதம் 5 ஆம் திகதி 2022 ஆம் ஆண்டு கனடாவில் இறையடி சேர்ந்தார். கனடா தமிழ் இலக்கிய உலகிற்கு இவரது மறைவு பெரும் இழப்பாகும். சிறந்த கல்வியாளரான இவர் மதங்களைக் கடந்து கனடாவில் தமிழ் மொழி வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர். கனடாவில் இருந்து வெளிவந்த முரசொலி பத்திரிகை ஆசிரியராகக் கடமையாற்றிய போது, மரபுக் கவிதையை வளர்ப்பதற்காக அந்தப் பத்திரிகையில் அதற்காக ஒரு பக்கத்தை ஒதுக்கியிருந்தார். புலம்பெயர்ந்து கனடா வந்த இவர், கவிதை எழுதுவதில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார்.
சிறந்த எழுத்தாளராக, கவிஞராக, பேச்சாளராக இருந்த இவர் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம், கனடாத் தமிழ்க் கவிஞர் கழகம் ஆகியவற்றின் அங்கத்தவராகவும், கவிஞர் கழகத்தின் செயலாளராகவும் கடமையாறியவர். 'யமலோக நீதிமன்றம்,' 'திருவள்ளுவர் வரலாற்று ஆய்வும் திருவள்ளுவர் திருக் காவியமும்,' 'திரை இசை மெட்டில் புதிய பாடல்கள்' போன்ற பத்திற்கும் மேற்பட்ட பல நூல்களைக் கனடாவில் வெளியிட்டவர். கனடா எழுத்தாளர் இணையத்தின் சார்பாக அவருடைய இலக்கிய ஆளுமைக்காக அவரை நாங்கள் பல தடவைகள் கௌரவித்திருந்தோம்.
நீண்ட காலமாகவே எல்லாரோடும் நட்பாகப் பழகி வந்தார். 2016 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் இனிய நந்தவனம் கனடா சிறப்பிதழ் வெளியிட்ட போது, வெளியீட்டுரை நிகழ்த்திய இவரிடம் இருந்து முதற் பிரதியை நான் பெற்றுக் கொண்டேன். 2017 ஆம் ஆண்டு அகணி சுரேசின் ‘இன்பமுற வாழ்வதற்கு இலக்கியப் புதையல்கள்’ என்ற நுல் வெளியீட்டின் போது மிகவும் சிறப்பாக நயவுரை வழங்கி இருந்தார். எனது நூல்கள் வெளியிடப்பட்ட போதும் அதில் கலந்து சிறப்பித்தது மட்டுமல்ல, முரசொலியிலும் அதைப்பற்றி எழுதியிருந்தார்.
இரங்கலுரை: மகாஜனா தந்த மயிலங்கூடல் நடராஜன்! - குரு அரவிந்தன், தலைவர், கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்.-
பிள்ளையினார் நடராஜன் அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்குப் பேரிழப்பாகும். 1939 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் திகதி பிறந்த இவர், 2022 மே மாதம் 12 ஆம் திகதி எம்மைவிட்டுப் பிரிந்தார். இவர் யாழ்ப்பாணத்தில் கீரிமலைக்கு அருகே உள்ள மயிலங்கூடல் என்ற இடத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் பிள்ளையினார் தெய்வானைப்பிள்ளை ஆகியோரின் அன்பு மகனாவார். திருமணமானபின் நாயன்மார்காட்டில் வசித்து வந்தார். ஆரம்ப கல்வியை மெய்கண்டான் மகாவித்தியாலயத்தில் பெற்றார். மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவனாகவும், அதன்பின் விஞ்ஞான ஆசிரியராகப் பணிபுரிந்தாலும், இவர் எல்லோராலும் அறியப்பட்ட சிறந்த இலக்கிய ஆளுமை கொண்டவராக இருந்தார். காங்கேசன் என்ற புனைப் பெயரில் பல ஆக்கங்களை வெளியிட்டிருக்கின்றார். நான் தமிழ் மன்றச் செயலாளராக இருந்த போது மகாஜனன் இதழின் தொகுப்பாசிரியராக இவர் இருந்தார். கல்லூரியில் சின்னப்பா இல்லத்தின் பொறுப்பாசிரியராகவும் கடமையாற்றினார். அதன்பின் யாழ். இந்துக் கல்லூரிக்கு மாற்றலாகிச் சென்றிருந்தார்.
இலக்கியத் தொடர்பு காரணமாக இவர் நன்கு அறிமுகமானவராக இருந்தார். ‘ஈழத்தமிழர்’ என்ற தலைப்பில் நூல் ஒன்றை 2012 ஆம் ஆண்டு யூன் மாதம் மைலங்கூடல் பி. நடராஜன் என்ற பெயரில் இவர் வெளியிட்ட போது எனக்கும் அழைப்பிதழ் அனுப்பி இருந்தார். இந்த நூலுக்காகப் பழைய ஆவணங்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்து மிகவும் பெறுமதி மிக்க நூலாக உருவாக்கி இருந்தார். யாழ். பல்கலைக்கழகப் பேராசிரியர் சிவலிங்கராஜா இந்த நூலை வெளியிட்டு வைத்தார். அடுத்த தலைமுறையினருக்கான பல அரிய விடயங்கள் இந்த நூலில் அடங்கி இருக்கின்றன. பரணி பதிப்பகம் இந்த நூலைப் பதிப்பித்திருந்தது. பல்லாயிரம் மைல்கள் கடந்து போகமுடியாவிட்டாலும் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தேன்.
அதன் பின் மகாஜனக் கல்லூரி பழைய மாணவர்களின் சிறுவர் கவிதைகள் அடங்கிய ‘குழந்தைக் கவிதைகள்’ என்ற கவிதைத் தொகுப்பு ஒன்றையும் மகாஜனக் கல்லூரியின் சார்பில் தொகுத்து வெளியிட்டிருந்தார். அப்பொழுதும் என்னோடு தொடர்பு கொண்டு எனது சிறுவர் கவிதைகளைக் கேட்டு வாங்கி, அந்த நூலில் தொகுத்துப் பிரசுரித்திருந்தார். எனது 4 பாடல்களை அத்தொகுப்பில் இடம்பெறச் செய்தார். இவர் சிறுவர் பாடல்கள் அடங்கிய தனது இரண்டு நூல்களையும் வெளியிட்டிருக்கின்றார். பாவலர் துரையப்பாபிள்ளையின் சிந்தனைச் சோலையை மீள்பதிவு செய்தது மட்டுமல்ல, ‘பாவலர் துரையப்பாபிள்ளை நூற்றாண்டு மலர்’ சிறப்பாக வெளிவருவதற்கும் இவர் முக்கிய காரணமாக இருந்து செயற்பட்டார்.
செவ்வியலிசை - பாரதிகள் ஐவர்!
- இந்நிகழ்வு பற்றிய அறிவித்தலைத் தவற விட்டுவிட்டோம். வருந்துகின்றோம். ஓர் ஆவணப்பதிவாக இங்கு பதிவு செய்கின்றோம். - பதிவுகள்.காம் -
சிவகாமி, யாழினி இணைந்து எழுதிய `வாழ்வின் பின்நோக்கிய பயணமிது’ - கே.எஸ்.சுதாகர் -
இந்தப் புத்தகம் `மறுயுகம்’ வெளியீடாக (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.) 2019 ஆம் ஆண்டு வந்திருக்கின்றது. ஈழத்தமிழ் இனத்தின் விடுதலை வேண்டி, விடுதலைப் போராட்டக்களத்தில் இருந்த சிவகாமி, யாழினி ஆகிய இருவரும் சேர்ந்து எழுதிய புத்தகம் `வாழ்வின் பின்நோக்கிய பயணமிது’. எல்லாளன் ராஜசிங்கம்.(ரஞ்சித்), மக்கள்நல மருத்துவ சங்கத்தலைவர் இசிதோர் பெர்னாண்டோ (புதுக்குடியிருப்பு) ஆகிய இருவரும் நூலுக்கு முன்னரை எழுதியிருக்கின்றார்கள்.
1984 இல், இந்தியாவில், ரெலோவில் (TELO)---தமிழ் ஈழ விடுதலை இயக்கம்--- ஏற்பட்ட உட்கட்சிப்பிளவு காரணமாக 13 ஆண்களும் 30 பெண்களும் இயக்கத்திலிருந்து விலகிக் கொள்கின்றார்கள். அந்த நேரத்தில் எல்லாளன் ராஜசிங்கம், சிவகாமியைச் சந்திக்கின்றார். அது முதல் கொண்டு, சிவகாமியைப் பற்றிய தகவல்களை இங்கே பதிவு செய்கின்றார் அவர். தோழர் தோழிகளுக்கிடையேயான தொடர்புகள் தடைப்பட்டமையும், 2016 ஆம் ஆண்டில் எல்லாளன் எழுதிய `ஒரு தமிழீழப் போராளியின் நினைவுக்குறிப்புகள்’ புத்தகம் வெளிவந்த பின்னர் மீண்டும் தொடர்புகள் துளிர்விட்டதையும் எல்லாளன் தனது முன்னுரையில் பதிவு செய்கின்றார். சிவகாமி இயக்கத்திலிருந்து விடுபட்டதன் பிற்பாடு, அவரை இசிதோர் பெர்னாண்டோ அறிந்து கொள்கின்றார். 1983 இனக்கலவரத்தின் பிற்பாடு, மருந்து உட்பட அத்தியாவசியமான பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டபோது - இசிதோர் பெர்னாண்டோவும் வேறு சிலருமாகச் சேர்ந்து மருந்தகம் (பார்மஷி) ஒன்றைத் திறக்கின்றார்கள். இந்த மருந்தகத்தை நிர்வகிப்பதற்கு தெரிவு செய்யப்பட்டவர் தான் சிவகாமி என்கின்றார் இசிதோர் பெர்னாண்டோ . எமது இன விடுதலைப் போராட்டத்தில் பல பெண்கள் இணைந்து போராடியிருக்கின்றார்கள். ஆனால் அவர்களைப்பற்றிய பதிவுகள் பெரிதாக வந்ததில்லை. அவர்கள் தாங்களாக முன்வந்து எழுதினால் தான் உண்டு என்ற நிலைமை. இங்கே சிவகாமி, யாழினி இருவரும் – போராட்டம் பற்றியும், உட்கட்சிப் பூசலில் ஏற்பட்ட அநீதி அவலங்களைப் பற்றியும் சிலவற்றைச் சொல்லியிருக்கின்றார்கள். புத்தகத்தின் பெரும்பகுதியை சிவகாமிதான் எழுதியிருக்கின்றார்.