தி ரோலிங் ஸ்டோன்ஸ்ஸின் 'பூதம் அல்லது சாத்தான் மீதான இரக்கம்' (Sympathy For The Devil) - வ.ந.கிரிதரன் -
எனக்குப் பிடித்த மேனாட்டுப் பாடகர்களில் ஒருவர் மிக ஜகர் (Mike Jagger) . 'ரொக்' இசையில் புகழ்பெற்ற இசைக்குழுவான 'தி ரோலிங் ஸ்டோன்ஸ்' குழுவை உருவாக்கியர்களில் ஒருவர். அவரது தி ரோலிங் ஸ்டோன்ஸ் இசைக்குழுவின் முக்கிய பாடல்களில் ஒன்று 'Sympathy For The Devil' (சாத்தான் அல்லது பூதம் மீதான இரக்கம்). தி ரோலிங் ஸ்டோன்ஸின் ஆரம்ப காலப் பாடல்களில் ஒன்று இப்பாடல். 1968இல் லண்டனின் பார்வையாளர்களின் ஒலி/ஒளிப்பதிவு செய்யப்பட்ட பாடல்.
பாடகர் தன்னைச் சாத்தானாக உருவகித்துப் பாடும் பாடலின் வரிகளை உணர்ந்து இரசிக்கையில் பாடலும், பாடகரின் நடிப்பும், குரலும், நடன அசைவுகளும் சுவைக்கும். பாடலின் தொடக்கத்தில் 'Please allow me to introduce myself' (தயவுகூர்ந்து என்னை அறிமுகப்படுத்த விடு) என்று தன்னை அறிமுகப்படுத்தும் பூதம் (பாடகர் குரலினூடு) தொடர்ந்து வரும் தான் வேறுயாருமில்லை பூதமே என்பதைப் பார்வையாளர்களுக்கு உணர வைக்கின்றது.