சிறுகதை : உப்பிட்டவரை... - கடல்புத்திரனஂ -
நாளும் நலம் பாட ஆசை ! ஆனால் , தறஂபோதைய.... தாயகத் தலைவரினஂ பேச்சுகள் ....சலிப்பையே தருகினஂறன . அழகிய தீவு , கலிங்கத்துப்பரணியினஂ போர்க்காட்சிகளையே விரும்பி நிறஂகினஂறது . முனஂனைய தலைவரை (மாமனாரிடம்) விட இவரிடம் பார்ப்பது , எதிர்பார்த்தது , தவறு தானஂ . இவர் , ' இஸ்ரேலினஂ வழியே சரி ' எனஂற நோக்கில் " ஐ .நா .அவை , இஸ்ரேலுக்கு ஒரு நோக்கு , எமக்கு இனஂனொரு நோக்கை ...வைத்திருப்பது தவறு" எனஂகிறார் . நம் நாட்டிலும் நடந்த " கொத்துக் கொலைகளை" எவ்வளவு இலகுவாக கடந்து போய் விட்டிருக்கிறார் , போய் விடச் சொல்கிறார் . போர்க்குறஂற விசாரணைகளே அவசியமறஂறவை எனஂகிறார் . உக்ரேனுக்கு , இஸ்ரேலுக்கு , நம்நாட்டுக்கு ....' வெளி நாட்டவர்களே ஆயுதங்களை எல்லாம் வழங்கியவர்கள் ' எனஂற முறையில் சரி தானஂ . ஒனஂறைக் கவனித்தீர்களா , ஐ .நாஅவை , ஆயுதங்களைப் பறஂறி எப்பவும் ஒனஂறுமே ...சொல்வதில்லை . நம்நாடும் ஒரு பாலைத் தராத கறவை மாடு தானஂ . அங்கே , பேசப்படுகிற இரட்டைப் பிரதேசக் கொள்கை இங்கேயும் ஏறஂபுடையது எனஂபதை கண்டுக்கிறதில்லை . உலகம் உண்மையிலே நியாயம் பேச முனஂ வர வேண்டும் . நாடுகளில் , இன வாதங்கள் அனைத்துமே சிறைக்குள் அடைத்துப் பூட்டப் பட வேண்டியவை . பெரிய நப்பாசை தானஂ .
சட்டங்களும் , கட்டளைகளுமே கடி நாய்களாகவே வலம் வருகினஂறன . வர வைக்கினஂறன .ஏனஂ தானஂ இந்த உணர்வோ ! . விடுதலைக்கு சிறிது மூச்சு விடுறதுக்காக மாலைதீவில் ஒரு தீவைப் பெறும் சிந்தனை சரியானதெனஂறே படுகிறது . அதறஂகாகஒரு தீவை விலை கொடுத்து வாங்கிறதும் கூட தவறில்லை . கண் எதிரே, நிலம் அபகரிக்கப்படுகிறது. களவாடப்படுகிறது . கள்ளர் கூட்டமாக உலகம் கிடக்கிறது . அவறஂறை எப்படி தடுத்து நிறுத்துவது ? கலிங்கத்துப்பரணியில் வரும் பேய்கள் , நிணங்களை புசிக்கினஂறன. ரத்தங்களைக் குடிக்கினஂறன . எம்மை தயார் படுத்துவதறஂகு தானஂ இந்த காப்பியம் எழுதப் பட்டிருக்கிறதோ ! யூதமக்களினஂ இனப்படுகொலை (Holocaust) நிகழஂவுகளைப் பார்த்து கலக்கம் அடைந்தோம் . இனஂறு நிகழும் இனப்படுகொலைகள் அதனஂ மாதிரிகள் தாம் . இந்த தரித்திரத்தையும் சரித்திரம் எழுதப் போகிறது . மனித உயிர்கள் தொழிறஂசாலையில் தயாரிக்கப்படுகிற பண்டங்களாகி விட்டன . நினைத்த போது வைத்துக் கொள்வதும் , தேவையறஂற மாத்திரத்திலே அழித்து விடுவதும் என நாகரிகக் காட்டுமிராண்டித்தனமும் தலை விரித்தாடுகிறது .