கவிதை; இருப்பு - முல்லை அமுதன் -

நேற்று
மளிகைக்கடைக்குச் சென்றிருந்தேன்.
இன்று
மனைவியுடன் நோயாளர் பகுதிக்குச் சென்றுவந்தேன்.
நாளை
உடற்கூறுகளை கணினியில் கணிக்கும்
மருத்துவக்கூடத்துச் செல்லும்படியாகும்.
சலிப்பேதுமின்றி கூடவே வந்தாள் மனைவி.


நேற்று
மளிகைக்கடைக்குச் சென்றிருந்தேன்.
இன்று
மனைவியுடன் நோயாளர் பகுதிக்குச் சென்றுவந்தேன்.
நாளை
உடற்கூறுகளை கணினியில் கணிக்கும்
மருத்துவக்கூடத்துச் செல்லும்படியாகும்.
சலிப்பேதுமின்றி கூடவே வந்தாள் மனைவி.

நிலப் பாத்தியில் முளைத்த
வெங்காயங்கள் அணிவகுக்கும்
அதிகாலைக் கனவு...
ஒரு பீரங்கி போலவும்
ஒரு சப்பாத்துக்கால் போலவும்
ஒரு விமான வேடிக்கை போலவும்
என்னை மேலும் மேலும்
அச்சுறுத்துகிறது...
ஒரு சோற்றுப் பருக்கைதானும் வீழாத
சுருங்கி ஒட்டிய
என் பசி வயிற்றை
பீரங்கி வெங்காய முழக்கம்
எரித்துச் சாம்பலாக்குகிறது..!

இன்று....
வாழ்த்துகள் தெரிவித்தீர்கள்!
பதிலுக்காய்...
என்னதான் இருக்கிறது...!?
உங்களைப் பற்றிச் சொல்ல...?
கேள்விக் குறியானது
உங்கள் வாழ்வு!
நீங்களோ..
உங்களுக்கென
ஒரு ரொட்டியும் இல்லாத போதும்
வாழ்த்துச் சொல்லிப் போகிறீர்கள்...!
வானொலிகளும்
தொலைக்காட்சிகளும்
உங்களைப் படம் பிடிப்பதும்...
நீங்களே படம் காட்டுவதுமாய்...!?
முகப்புத் தளங்களும்...
பதிவுகளும்...
உங்களுக்காகப் பதிவிடுவதும்
நீங்களே பதிவிடுவதுமாய்...!?
சிரித்தவாறே கடக்கலாம் எனிலோ...
பசியின் ஏக்க மணத்தோடும்
வயிறொட்டிய நெடியோடும்
'இன்னும் ஒரு லைக்'
எனும் நப்பாசையோடும்
மஹாபொல கிடைக்காத
ஒரு மாணவனின் கேக் துண்டு,
'சுதந்திர நாள் வாழ்த்துகள்' என
வந்துபோகிறது....!
என் முகப் புத்தக வாயருகே..!

தைபிறந்து விட்டாலே தங்கமே தங்கம்
தளர்வகன்று போயிடும் தங்கமே தங்கம்
பொங்லென்று சொன்னாலே தங்கமே தங்கம்
புத்துணர்வு பிறந்திடுதே தங்கமே தங்கம்
நன்றி சொல்லும் பெருவிழாதான் பொங்கலாகுமே
நாளுதிக்கும் சூரியயனே நமக்கு ஆதாரம்
உழவதனை உளமிருத்தும் உயர்ந்த விழாவே
உயர்வான எங்களது பொங்கல் விழாவே
வாசலிலே கோலமிட்டு வாழை கட்டியே
மஞ்சளிஞ்சி கரும்புமதில் சேர்த்துக் கட்டியே
தோரணமாய் அலங்கரித்து வீட்டு வாசலில்
தொடங்கிடுவோம் பொங்கிவிட விளக்கு ஏற்றியே


நல்லன நடக்க வேண்டும்.
நாடெலாம் சிறக்க வேண்டும்.
வல்லமை பெருக வேண்டும்.
வாழ்வது உயர வேண்டும்.
தொல்லைகள் தொலைய வேண்டும்.
தோல்விகள் அகல வேண்டும்.
இல்லது என்னும் வார்த்தை
இன்மையாய் ஆதல் வேண்டும்.
போரெனும் வார்த்தை மண்ணில்
பொசுங்கியே போதல் வேண்டும்.
மாசுடை ஆட்சி மண்ணில்
மடிந்துமே ஆக வேண்டும்.
ஊழலும் ஒழிய வேண்டும்.
உண்மையே நிலைக்க வேண்டும்.
வாய்மையின் வழியில் மக்கள்
மண்ணிலே நடக்க வேண்டும்.
உழைபவர் உயர வேண்டும்.
நல்லூதியம் கிடைக்க வேண்டும்.
கொடுப்பவர் பெருக வேண்டும்.
குவலயம் சிறக்க வேண்டும்.
கல்வியில் உயர்வு வேண்டும்.
கசடுகள் அகல வேண்டும்.
கண்ணியம் என்றும் வாழ்வில்
கட்டாயம் அமர வேண்டும்.

அடிநாதக் குழலே..!
நிரம்பி வழிந்தோடும்
இப்புவியின் அழகில் தான்
எத்தனை எத்தனை விந்தைகள்!
உள்ளுக்குள் உக்கி
தனிமையின் விரகதாபமாய் விரதமிருந்து
எங்கெங்கோ தாவுகின்ற எண்ணங்களில்
இடறி தவறிப் பிழைத்து
எப்போதும் நினை மறவாத சிந்தையில்
நீயே…

பத்து மாதம் சுமந்தேன் - உன்;
மழலை மொழியில் துவண்டேன்
கூவிக்கொண்டு வந்த குண்டை
ஊதுகுழல் என்று நீ
குதூகலித்தே கை தட்ட
குறிபார்த்துக் கொன்றதோ என் செல்வமே
உன்னை...
ஐயோ!
என் உயிரே!
ரத்தக் கறை படிந்த உன்னை
சுட்டியணைத்து அழகு பார்க்கிறதே வெள்ளைத்துணி
குவிந்திருக்கும் குழந்தைச் செல்வங்களுள் - நீ என்
அழகுத் தேவதை அம்மா! - இங்கே உன்
சலனமற்ற உடலைத் தாலாட்டிவிட்டு
தனிமையில் நான்
எப்படி என் இடிமனை செல்வேன்?

[ ஈழத்துக் கவிஞர்களில் கவிஞர் புதுவை இரத்தினதுரைக்கு (வரதலிங்கம் இரத்தினதுரை) தமிழ் இலக்கியத்தில் முக்கியமானதோரிடமுண்டு. கவிதை, திறனாய்வு என அவரது இலக்கியப் பங்களிப்பு இருந்துள்ளது. அவரது எழுத்துப் பங்களிப்புக்கான காலகட்டத்தை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். வர்க்க விடுதலைப்போராட்டக் காலகட்டம். தேசிய விடுதலைப்போராட்டக் காலகட்டம். ஆரம்பத்தில் இடதுசாரிக் கருத்துகளால், மார்க்சியக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு வரதபாக்கியான் என்னும் பெயரில் கவிதைகள் படைத்தவர் புதுவை. பின்னர் ஈழத்தமிழர்களின் தேசிய விடுதலைப்போராட்டக் காலகட்டத்தில் விடுதலைப்புலிகளுடன் இணைந்து ஆயுதப்போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர்.
முள்ளிவாய்க்காலில் சரணடைந்து காணாமல் போனவர்களில் இவருமொருவர். முக்கியமான எழுத்தாளர் ஒருவர் சரணடைந்திருக்கின்றார். இந்நிலையில் அவரைப்பற்றி 2012இல் திவயின சிங்களப் பத்திரிகை புதுவை இரத்தினதுரை இலங்கை இராணுவத்தின் காவலிலுள்ளதாகச் செய்தி வெளியிட்டதாக விக்கிபீடியாக் குறிப்பு கூறுகின்றது. இது தவிர இதுவரை அவர் பற்றிய மேலதிகத் தகவல்கள் எவையுமில்லை - பதிவுகள்.காம் -]
அள்ளிடும் வாஞ்சை; அன்பை
ஆள்வதில் அரசு; நெஞ்சைத்
துள்ளவே வைக்கும் பாக்கள்
தூவிய நாக்கு; சின்னக்
கள்ளியில் கூட நேசம்;
கண்களில் கனவுத் தேசம்;
புள்ளி நீ எங்கே? எங்கள்
புதுவையே எழுபத்தைந்தா..!?
நிலமெலாம் திரிந்து பாட்டின்
நீளமாய் விரிந்தாய்; வீரர்
பலமெனப் படர்ந்து மண்ணின்
பாஷையாய் மலர்ந்தாய்; என்றும்
வலம்வரு காற்றில் குந்தி
வரிகளில் வாதை சொன்னாய்;
கலமெனப் பேனா ஏந்தி
களப்பணி வரித்து நின்றாய்!
விடுதலைப் பானை பொங்க...
வீறுகொள் அடுப்பை மூட்டும்
சுடுதணல் கவிகள் தந்தாய்!
சூழுமோர் பகையை உந்தன்
விடுகவி கொல்லும் என்றாய்!
விரிகதிர்ப் பொலிவை மண்ணில்
நடுமொளி வெல்லும் என்றாய்!
நாவிலே நாடு கொண்டாய்!

01.
மழையோடு,
மாமழைக் கண்ணீரும் பொழிய...
ஓராயிரம் படையலிட்டோம்...!
தீவட்டியோடு..
மெழுகுவர்த்தியும்,
சிட்டியும்
மின்னியெழ...
ஓராயிரம் ஒளியேற்றினோம்..!
சிறுமாலைச் சரத்தோடு,
பெருமாலையும் சூட்டி...
ஓராயிரம் மலர் தூவினோம்...!
நீர் பேசவில்லை...!
எங்குள்ளீர்... எங்குள்ளீர்... என
எம் கண்ணீரைத் தூவினோம்..!
உம்மைப் புதைத்த கல்லறைகளை
உடைத்தெறிந்த பின்போ
தரிசு நிலமாயிற்றுத் தாய் மண்
என நினைந்தார் பாவியர்!
ஆயினும்...!
இனி யாரும் அழிக்கா,
மனக் கனவு நிலத்தில்
உமை விதைத்தேன்!
நீரோ...
முகங்காட்டி எழுகின்றீர்..!
அங்கே
புன்னகைக்கும் உங்கள் உதடுகளில்
வாசிக்கிறேன்...
நிஜமும் நிழலும் கலந்தொட்டிய
தீ உருவங்களாய் உங்களை என்றேன்...
ஒரு கார்த்திகைப் பூ மலர்ந்தது...!

உல்லாசம் பொங்க உள்ளம் மகிழ்ந்திட
உறவுகள் கூட உணர்ச்சி பொங்கிட
ஒளியில் இல்லம் மூழ்கிச் சிறந்திட
வருகின்ற நாளே மனமுறை தீபாவளி
பட்டாசு மத்தாப்பு கைகளை நிறைக்க
பாங்குடன் சிறியவர் பெரியவர் மகிழ
வெடித்திடும் போதும் விரிந்திடும் போதும்
வேதனை துன்பம் காணாமல் போகுமே
சமயமும் சேரும் சமூகமும் சேரும்
சாத்திரம் சடங்கு சேர்ந்துமே நிற்கும்
இல்லமும் இணையும் இன்பமும் இணையும்
நல்லதை உணர்த்திடும் நம்தீபா வளியும்
மணமக்கள் வாழ்வில் மகிழ்வினை ஊட்ட
மாமனார் வீட்டை நாடியே நிற்க
விருந்துகள் நடக்க வெகுமதி கிடைக்க
நலந்திகள் தீபாவளி நல்வழி சமைக்கும்

ஈராக்கில்
ஓர் ஆயிரத்தொரு இரவுகளுக்குப் பின்னர்
யாரோ ஒருவர் பிறிதொருவருடன் பேசுவார்.
சந்தைகள் திறக்கும்
வழக்கமான வாடிக்கையாளர்களுக்காக.
பிஞ்சுப் பாதங்கள் கிச்சுக்கிச்சு மூட்டும்
ரிக்கிரிஸ் நகரின் இராட்சத பாதங்களில்.
கடற் பறவைகள் தம் இறக்கைகளை விரிக்கும்
அவற்றை எவரும் சுட்டு வீழ்த்தமாட்டார்கள்.
பெண்கள் வீதிகளில் நடந்து செல்வர்
அச்சத்தில் பின் திரும்பிப் பாராமல்.
ஆண்கள் தம் உண்மைப் பெயர்களைச் சொல்வர்
தமது வாழ்வை ஆபத்தில் தள்ளாமல்.

- இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் சொல்கிறார்: ‘We are fighting with human animals’. இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் சொல்கிறார்: ‘Israel is fighting with the enemies of civilization … this war is between forces of civilization and the forces of barbarism’ இக்கவிதை அதற்கு ஓர் எதிர்வினை. -
நீ சொல்கிறாய்
நாங்கள் விலங்குகளுடன் போரிடுகிறேம் என்று.
அவர்களை அப்படித்தான் நடத்தவேண்டும்
என்று சொல்கிறாய்.
நீ அப்படித்தான் சொல்வாய்.
உன் மூளை மரத்துவிட்டது.
உன் இதயம் காய்ந்துவிட்டது.
விலங்குகளை அவமதியாதே.
விலங்குகள் மனிதரின் தோழர்கள்.
விலங்குகள் இல்லாத உலகில்
நீயும் நானும் வாழமுடியாது.
விலங்குகளை அவமதியாதே.
விலங்குகள் ஆக்கிரமிப்பதில்லை.
விலங்குகள் குண்டுவீசி மனிதரைக் கொல்வதில்லை.
விலங்குகள் ஒரு தேசத்தை அபகரிப்பதில்லை.
விலங்குகள் மனிதரைத்
தங்கள் வீடுகளை விட்டுத் துரத்துவதில்லை.
கிராமங்களை நிர்மூலமாக்குவதில்லை.
விலங்குகள் மனிதரை அகதிகளாக்குவதில்லை.
விலங்குகளை அவமதியாதே.

- பேராதனைப் பல்கலைக்கழக, அரசறிவியல் துறையின் நிறைவு வருட மாணவி அமரர் N. நித்தியவதனி அவர்கள், நேற்று முன்தினம் சிறுநீரகங்கள் செயலிழப்பால், கண்டி போதனா வைத்தியசாலையில் காலமானார். அவர் உயிருக்காகப் போராடிய வேளையிலும், தமது கண்களை உவந்து தானம் செய்தார். மானுட வாஞ்சையை உணர்த்திய அவருக்கு இக்கவிதை சமர்ப்பணம். -
கண்களைக் கொடுத்து
ஒளியைப் பரிசளித்தாய்!
ஆகையால்...
கரைந்துபோன பின்பும்
நீயே காண்கிறாய்...!
அவனதோ அவளதோ
கண்களில் பூக்கையில்...
நீ
அவனதும் 'கண்மணி'
அவளதும் 'கண்மணி'

அல் சைமா அக்ரம் சைடம்!
அகதிமுகாமின் குழந்தை இவள்.
அதியுயர் புள்ளிகளை உயர் வகுப்பில்
அடைந்த அறிவுக் கொழுந்து!
எத்தனை கனவுகளுடன்
எத்தனை திட்டங்களுடன்
இருந்திருப்பாள்?

ஒருமுறை நின்று நிதானித்து விட்டு
பயணத்தை தொடருங்கள்,
தூரம் சென்றபின்
துயரப்படாமல் இருப்பதற்கு.
ஆழம் சென்றபின்
அழிந்து விடாமல் பார்பதற்கு.
நித்திரை நீண்டு விட்டால்
நீ இங்கு இல்லை.
அப்பன் பெயரை
சுமந்த அதிகாரம் முடிந்தது.
உன் பிள்ளையும்
சில காலம் உன் பெயரைச்
சுமந்து உருக்குலைந்து போவான்.
வாழ்க்கை கணக்குக்கு
சில வேளை வரவும் புரியாது.
செலவும் புரியாது.
நதியோடு கலந்துவிடு.
நாணத்தை விட்டுவிடு.
விதியோடு உறவு என்ற
விபரீதம் கடந்துவிடு.
கதியை மாற்றிவிடு.
காலத்தை கடந்துவிடு.
சதியோடு போராடி.
சாம்பலாய் ஆகாதே.
மதி கொண்டு
எழுந்துவிடு.
மமதையுடன் வாழ்ந்துவிடு.

1. என் பலஸ்தீனியப் பாலகனே!
ஒற்றைப் பாலகன்...
அர்த்தமில்லாத ரவைகள் துளைத்து,
அரவணைப்பே இல்லாது சரிந்த,
தன் தாயின் உடலைக் காண்கையில்...
உத்தம போராளியாகிறான்!
அவனை உலகம்
'தீவிரவாதி' என்றே தீர்த்துக்கட்டுகிறது!
அந்தப் பாலகனுக்கு...
"நீ தீவிரவாதி ஆகுக!" என்றே
என் ஆசியைப் பொழிவேன்!
ஆதிப் போர்க் கடவுளின் வடிவாய்
அவன் உருக்கொள்ளட்டும்!
ஆயிரம் காளியாய் அவன் உரு
அணி வகுக்கட்டும்!
பலஸ்தீனியப் பாலகனின்....
எதிர்முகம் வெற்றிகொள்ள
எனது நேர்த்திகள் இன்னும் அதிகமாகட்டும்!
அது அவனது மனதை
உக்கிரமாக்கி எழவைக்கும்!
அவனைச்
சமர்க்கள நாயகன் ஆக்கும்!

எல்லாவற்றையும் இழந்து நிற்கும்
மனித சடலத்திடமிருந்து
ஒரு முனகல் மட்டுமே வரும்..
அந்த முனகலும்
அவர்க்கு நெருக்கமானவர்க்கு
மட்டுமே தெரியும்..
கொடுமை எதுவென்றால்
அவரும் அதை
நிராகரிப்பார் ..
ஒரு பாலைவனத்தில்
கானல்நீர் பார்த்து
ஏமாந்து ஏமாந்து
பழக்கப்பட்ட
அந்த மனித சடலம்
இரத்தமும் சதையும்
நைந்துபோகும்வரை
அந்த நிராகரிப்பையும்
உண்மையென்று
எண்ணிக் கொள்ளும்.
![]()
வேட்கை
சிவப்புக்கம்பள விரிப்புகள்
உயரதிகாரிகளுக்கானவை.
மாப்பிள்ளை அழைப்பும் மகிழவே நிகழும்
மணவறை மலர்கள் மணம் சற்றே பரப்ப
இருமனங்கள் இணையும் தருணம்
பொருள் புரியா மந்திரங்கள் பாரதத்துக்கானவை.
கழுத்தில் மஞ்சள் மிளிரும் தாலியின் சரடு
வாழையிலை விருந்து குலதெய்வங்களை
விசாரித்து முடிகிறது.
நாவில் இனிப்பின் சுவை.
அதன்பின் அம்மாவின் முன்னோள்
பெரியம்மாவுடன் சந்திப்புக்குறிக்கப்பட்டிருந்தது.
கவிஞர். நா.முத்துக்குமார் நினைவு தினக் கவிதை..
கவிக்கு ஒரு கவி!
அவையே முத்துக் கவி!
ஆழ்கடலில் கண்டெடுத்த முத்தே!
தமிழ்த் திரைக்குக் கிடைத்த
சிறந்த சொத்தே,
உன் பாடலின் வரிகள்
மேகங்களைக் கலைக்கின்றன.
காதல் மழையைப் பொழிய வைக்கின்றன.
பொழிந்தது சாரல் மழையல்ல.
கவியின் கனிந்த, ஆழ்ந்த
காதல் வரிகள்,
நீ செதுக்கிய வார்த்தைகள்
என் மனத்தை உலுக்கும் சொல்லாடல்கள்.
நீ பாடிய பாட்டு,
என் மனதின் இன்பத்
தாலாட்டு,
பாரதியாரின் நினைவு தினம் செப்டமப்ர் 11.

பாரதியின் பாட்டாலே பலபேரும் விழித்தனரே.
வேருக்கு நீராக விரைந்துமே சென்றதுவே.
பாரதியின் கற்பனையில் பாரதமே இருந்திடினும்
ஊரையெலாம் உலுக்கும்படி உணர்வாக எழுந்ததுவே.
வறுமைதனில் வாடிடினும் வற்றாத கற்பனையால்
நிறைவுடைய கவிதைகளை நீள்புவிக்குத் தந்தானே.
வேதத்தை கற்றிடினும் விதம்விதமாய் யோசித்து
பாதகத்தை சாடியதால் பலபேரும் போற்றினரே.
பாப்பாவை பார்த்தவன் பாடிய பாட்டெல்லாம்
கேட்பார்க்கு எல்லாமே கீதையாய் இருக்கிறது.
மொழிபற்றி பாடியது முழுதுமே உண்மையென
மொழியறிஞர் பாராட்டு முண்டாசுக் கவிஞனுக்கே.
ஒவ்வொரு மாலைப்பொழுதும்
அவன் வீட்டிலேயே என் பொழுது கழியும்..
அவனின் பாட்டி தரும் தேநீர் சுவையாக இருக்கும்.
கொடியில் காய்ந்த உடைகளை
அவனின் தங்கை
ஒரு புன்னகையுடன் எடுத்துச் செல்வதுண்டு.
நிச்சயமாய் காதல் இல்லை.
நூலக நூல்களைப் பரிமாறுவதுடனான நட்பே.
அவளும் தன் அறையிலிருந்து கேட்கட்டுமே என்று
வானொலியின் ஒலிஅளவை அதிகரித்துவைப்பான்.
ஆறு மணியானால் பாட்டி பாக்குரலில்
இடிப்பது கேட்கும்.
எட்டு மணியானால் சுருட்டின் வாசம்
அவளிடமிருந்து காற்றில் வந்து
மூக்கைத் திணறவைக்கும்.
மழை அதிகரித்திருந்தது.
வீடு வர நேரம் போய்விட்டது.
அம்மா முறைத்தாள்.
அப்பாவின் இருமல் ஒலித்தது.

உன்
பட்டு மேனியைத்
தொட்டுத்தொட்டு ரசித்தேன்.
நாளும் உன் அழகை ரசித்தேன்.
நீராடி நீ வந்தால்
நீர்த்திவலைகள் உன் மேனியிலே
முத்து முத்தாய்ப் படிந்திருந்து
நர்த்தனமாடும்
அழகை ரசித்தேன்.
அதிலே
காலைக் கதிரவனும் மையல் கொண்டு
கண்சிமிட்டும் போதினிலே
நாணிச்சிவந்திருக்கும் உன் மேனியழகில்
என்னை மறந்தேன்.
1.
கதை சொல்லும்போது உம் உம் கொட்ட வேண்டும்.
சுவாரஸ்யம் அவருக்கு இருக்காது.
சிறு குறும்புகளெனினும் கைத்தடி
என் முதுகைப் பதம் பார்க்கும்
அக்கா வலிக்கு ஒத்தடம் கொடுப்பாள்.
அம்மா உள்ளுக்குள் அழுவாள்.
அப்பா தன் கண்டிப்பை விடுவதாயில்லை.
அக்காவுக்குத் திருமணம் ஆயிற்று.
கதை சொல்ல முடியவில்லை.
பேரன் கிடைத்தான்.
அவனும் சாதுர்யமாக உம் கொட்டிக் கொண்டே தூங்குவான்.
அப்பாவுக்கும் உள்ளூர மகிழவே...
ஒருநாள் பேரனிடமிருந்து உம் வரவில்லை.
அவனின் முதுகைப் பதம் பார்த்துவிட்டது கைத்தடி.
அக்கா கோபத்தில் வெளியேறிவிடடாள்.
அம்மா உள்ளுக்குள் அழுது தீர்த்தாள்.
கதைச்செல்ல அப்பாவுக்கு ஆள் கிடைக்கவில்லை.
சுவருடன்,மரங்களுடன்,
பூக்களுடன்
பேசி இறந்துபோனார்.
அப்பா உலகைப் பிரிந்த நாளதிலிருந்து
எழுதுகோல் தாளுடன் உறவாடவில்லை.
சூரியக்கதிர்கள் வெளியை மஞ்சளாக்க
நிலவின் கதிர்கள் நீலம் காட்ட
காலங்கள் கடந்தன.
குறுந்தாடிச் சகோதரனவன்
நிலவது வட்டம் தோற்கும் அழகின் முகம்
பெண் மொழி பேசுவான்.
பெண் மொழியச் சொல்வான்.
மலர் நிறை தடாகத்தில் துள்ளும் மீன்களது நீச்சலென
மொழி புனையும் பெண்ணெழுத்தைக் காதல்கொள்பவன்.