- எழுத்தாளர் லாங்ஸ்ரன் ஹியூஸ் -
- எழுத்தாளர் க.நவம் மொழிபெயர்த்து 'நான்காவது பரிமாணம்' வெளியீடாக வெளியான 'எனினும் நான் எழுகின்றேன்' தொகுப்பிலிருந்து பெறப்பட்ட கவிதைகள். -
சுதந்திரம்
- லாங்ஸ்ரன் ஹியூஸ் | தமிழில்: க. நவம் -
சுதந்திரம் வரப்போவதில்லை
இன்றோ, இவ்வருடமோ
இனி ஒரு போதுமே
சமரசத்தாலும் அச்சத்தாலும்
சுதந்திரம் வரப்போவதில்லை
அடுத்தவனுக்குள்ளது போலவே
எனக்கும் உரிமையுண்டு
என்னிரு கால்களில் நிற்கவும்
எனக்கென நிலத்தினைச் சொந்தமாக்கவும்
“அவை அவை போக்கில் போகட்டும்.
நாளை என்பது இன்னொரு நாளே”
மனிதர் சொல்லக் கேட்டு மிகவும்
மனம் களைத்துவிடுகிறேன்.
நான் மரணித்த வேளையில்
என் சுதந்திரம் எனக்கு வேண்டாம்.
நாளைய ரொட்டித் துண்டில்
இன்று நான்
உயிர்வாழ முடியாது
சுதந்திரம்
ஒரு வலுவான விதை!
மகத்தானதொரு தேவையின் பொருட்டு
விதைக்கப்பட்டது.
நானும் இங்குதான் வாழ்கிறேன்
எனது சுதந்திரம் எனக்கு வேண்டும்
உனது சுதந்திரம்
உன்னிடம் இருப்பது போலவே!
Freedom - Langston Hughes
Freedom will not come
Today, this year
Nor ever
Through compromise and fear.
I have as much right
As the other fellow has
To stand
On my two feet
And own the land.
I tire so of hearing people say,
Let things take their course.
Tomorrow is another day.
I do not need my freedom when I’m dead.
I cannot live on tomorrow’s bread.
Freedom
Is a strong seed
Planted
In a great need.
I live here, too.
I want my freedom
Just as you.
கலப்புயிரி
- லாங்ஸ்ரன் ஹியூஸ் | தமிழில்: க. நவம் -
என் முதிய தந்தை ஒரு வெள்ளைக் கிழவன்
என் முதிய அன்னை ஒரு கறுப்பி.
எனது வெள்ளைக் கிழவனை நான்
எப்போதாவது சபித்திருந்தால்,
இப்போது என் சாபங்களை
மீளப் பெறுகிறேன்.
என் முதிய கறுப்புத் தாயை
நரகத்துக்குப் போவாயென்று
எப்போதாவது நான் திட்டியிருந்தால்,
அக்கெட்ட திட்டுதலுக்காய் வருந்துகிறேன்
இப்போது அவளை வாயார வாழ்த்துகிறேன்.
என் முதிய தந்தை
ஒரு அழகிய பெரிய வீட்டில் இறந்தான்.
என் அன்னை
ஒரு குடிசையில் இறந்தாள்.
நான்
எங்கு உயிர் துறக்கப்போகிறேன்?
எனக்குள் எண்ணி ஏங்குகிறேன்,
வெள்ளையனுமல்லாமல்
கறுப்பனுமல்லாமல்
இருப்பதனால்!
Cross - Langston Hughes -
My old man’s a white old man
And my old mother’s black.
If ever I cursed my white old man
I take my curses back.
If ever I cursed my black old mother
And wished she were in hell,
I’m sorry for that evil wish
And now I wish her well.
My old man died in a fine big house.
My ma died in a shack.
I wonder where I’m gonna die,
Being neither white nor black?
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.