சிறுகதை -”-சுடுதண்ணிப் பாசா ”
தண்ணீர், தண்ணீர், தண்ணீர், என கண்களைச் சுழற்றிய எல்லா திசைகளிலிருந்தும்,தண்ணீரே உலக நாயகியாய் ஓங்கரிக்க, காற்று ஊழியாய் வீசியடித்தது. தண்ணென்ற ஜல சமுத்திரத்தில் விர்ரென்று போய்க்கொண்டிருந்தது கப்பல். சுருண்டு கிடந்தாள் நாணிக்குட்டி. கப்பல் பயணத்தில் இவளைப் போலவே பலருக்கும் தலைசுற்றலும் வாந்தியும் படுத்தி எடுத்துக் கொண்டுதான் இருந்தது.
என்றாலும் ஆண்களில் சிலர் அனுமதி வாங்கி கப்பலின் மேல்பரப்பில் போய் நின்று கொண்டு ஒருநோக்கு ஜலசமுத்திரத்தை பார்த்துவிட்டே வந்தார்கள். குஞ்ஞு குட்டன் மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருந்தான்..அப்படி உற்சாகமாக இருந்தது.பின் என்ன ? பச்சை நரம்பு புடைத்த வீர்யம் மிக்க தரவாட்டு நாயராக்கும். இல்லையென்றால் வேறொருவனுக்கு மணம் நிச்சயிக்கப்பட்ட நாணிக்குட்டியை, ராவோடு ராவாக இழுத்துக்கொண்டு ஓடிவரும் துணிச்சல் எவனுக்கு வரும் ? என்னமாய் பெண் இவள்.? குடும்பப் பகை காரணமாக , சிங்கப்பூர் மாப்பிள்ளை என்று தெரிந்தும்கூட ,பெண் கொடுக்க மறுத்த” பூவில’ தரவாட்டுக்கே மூக்கறுபட்ட அவமானத்தை கொடுக்கவும் நடு முதுகு நிமிர்வு வேண்டாமா ? இத்தனைக்கும் ”என்னோடு சிங்கப்பூரிக்கு வரியா,” என்று கேட்டது கூட ஒரு முரட்டு வேகத்தில் தான். மறுபேச்சில்லாமல் வெட்கப்பட்டுச் சிவந்தவள் அவன் நீட்டிய கையைப் பற்றிக்கொண்டாள். ஆச்சரியம் தான்! இவளுக்கும் என் மீது இவ்வளவு ஆசையிருந்ததா ?

- எழுத்தாளர் சீர்காழி தாஜ் அவர்களின் கவிதைகள், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள், பல்வேறு விடயங்கள் பற்றிய கருத்துகள் பலவற்றை உங்களில் பலர் இணையத்தில் வலைப்பூக்களில், இணைய இதழ்களில் (பதிவுகள் உட்பட), முகநூலில் படித்திருக்கலாம். எனக்கு அவரது எழுத்தில் பிடித்த விடயங்களிலொன்று அவரது நடை. ஒருவித நகைச்சுவை ததும்பும் எள்ளல் நடை. அடுத்தது அவரது சிந்தனைப்போக்கு. ஒரு விடயத்தைப் பற்றி பல்வேறு திக்குகளில் படிப்பவர் சிந்தனையைத் தூண்டும் வகையில் சிந்திப்பது. இன்னுமொரு முக்கியமான விடயத்திலும் அவரை எனக்குப் பிடிக்கும். பாசாங்குத்தனமற்ற, வெளிப்படையான , தற்பெருமையற்ற ஆளுமை. அவரது எழுத்தில் காணப்படும் இன்னுமொரு விடயம்: கூர்ந்து அவதானித்தல். தன்னைச் சுற்றிவரும் உலகில் நடைபெறும் செயல்களை, உறவுகளை. நிலவும் வாழ்வியற் போக்குகளை இவற்றையெல்லாம் மிகவும் கூர்ந்து அவதானிப்பது அவரது இன்னுமொரு திறமையான பண்பு. 'பால்ய விவாஹம்' என்ற அவரது இந்தச் சிறுகதையின் தலைப்பினைப் பார்ததும் 'பால்ய விவாகம்' பற்றிய விமர்சனமாக இருக்குமோ என்று எண்ணி வாசித்தால் இந்தச் சிறுகதையில் விரிந்த உலகு என்னைப் பிரமிக்க வைத்தது.
அவன் உரையாடலுக்குப் பிறகு கிளர்ச்சி உடலில் பரவியது.என் பற்கள் கீழ்உதட்டைக் கவ்விக்கொண்டன. பனிக்காற்று ஈர உடலுடன் ஊடுருவிய சுகம் அவனது சொற்கள்.எத்தனை முறை முயற்சித்தும் கிடைக்காத அந்தத் தருணம் இன்றோடு நிறை வேறிவிடும்.அவன் சொன்ன விதிகள் மனம் மறந்து தெளிவுற்றது. விரல்களால் கண்ணைப் பிசைந்து கொண்டு பக்கத்தில் பார்வைச் சிதறவிட்டேன். அவனது சரிரம் மறைந்து கொண்டும் கடிகாரம் சுறுசுறுப்புக் கொண்டும் இருந்தது.
நான் இந்தியக் காவலரனைக் கடந்து வேகமாக நடந்து சென்றேன். அது மத்தியான நேரம். எவரும் தென்படவில்லை. சிலவேளை அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கக் கூடும். அவ்வாறில்லையெனில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கக் கூடும். நடுப்பகலில் எந்தவொரு மனித ஜீவராசியும் தேசத்தின் எல்லையைக் கடந்து செல்வரென அவர்கள் நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். வியர்வை வழிய நான் புகையிரதமொன்றைப் போல வேகமாக ஓடினேன். எனது சகோதரனின் முகம் எனது கண்ணெதிரே தோன்றுகிறது. அவரது நிலைமை படுமோசமானதென தகவல் தந்தவர் கூறியிருந்தார். நீலம் ஆற்றங்கரையில் தனது இல்லத்தில் வசிக்கும் அவனுக்கு தனதென்று சொல்லக் கூடிய எவரும் அங்கில்லை. நான் ஆற்றங்கரையில் இந்தியாவுக்குச் சொந்தமான பகுதியில் வசித்து வந்தேன். எனது சகோதரன் ஆற்றின் எதிர்ப்புறத்தில் பாகிஸ்தானுக்குச் சொந்தமான கரையில் வசித்து வந்தான். 'அவர் சுயநினைவற்ற நிலையிலும் உங்கள் பெயரையே கூறிக் கொண்டிருக்கிறார்' என தகவல் தந்தவர் கூறியிருந்தார். அவ்வாறான தகவலொன்று கிடைத்த பின்னர் நான் அமைதியாக இருப்பது எவ்வாறு? எவ்வாறாயினும் ஒரே இரத்தத்தில் உண்டான பந்தம் இது.
“ஏய்... என்னப்பா நீ..? இன்னக்கி இருக்கிறவங்க நாளைக்கி இருப்போமானு எந்த “கேரண்டி”யும் இல்ல...! இதுல என்ன சண்டையும் ... உயிர் போற வரைக்கும் மூஞ்சில முழிக்க மாட்டேங்கற பகையும்...? எதையும்...மனசுலேயே வச்சிருந்தாத்தானே மன்னிப்புன்னு ஒரு சங்கதிய வேற நடுவுல இழுத்து விட்டுக்கிட்டு அலையனும்....அத... அத... அப்பப்ப மறந்திருவோமே..” எப்போதோ, யாரிடமோ, எந்த சந்தர்ப்பத்திலோ.. சொன்னது, இப்படி ஒரு ரூபம் கொண்டு, எதிர்வரும் என்று யார்தான் எதிர்பார்த்திருக்க முடியும். “எனக்கு நீங்க அண்ணன் மொறையா வேணும்..” எதிரே வந்து நின்று கொண்டு புன் முறுவல் பூக்கிறது அவன் விதி! “சொல்றது போல செய்யறது அவ்வளவு சுலபம் இல்லடா செல்லம்...” என்று அவன் மனதே எள்ளி நகையாட, வந்தவனை ஏறிட்டான்! இவனை வார்த்தெடுத்தபின், அதே அச்சில், பிரம்மன் அவனையும் வார்த்திருக்க வேண்டும்! எத்தனையோ ஆண்டுகளாக பார்த்துக்கொண்டிருக்கும் முகம்தான். புதியவன் ஒன்றும் இல்லை; பக்கத்து கம்பம்தான்! ஆனால், என்றுமில்லா திருநாளாக இன்று மட்டும் என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது? அதுவும் உறவு முறையெல்லாம் சொல்லிக்கொண்டு!
திரு.கே.வின் மனதில் பல விஷயங்கள் ஓடிக் கொண்டிருந்தன. காரின் ஜன்னலில் தன் பார்வையை பதித்துக் கொண்டு, தெருவில் வரிசையாக இருந்த வீடுகளை பார்த்துக் கொண்டே வந்தார். மக்கள், தனியாக செல்பவர்கள், தோழமை முக பாவத்துடன் இருப்பவர்கள், சிலர் சாலையில் நடந்து கொண்டு, சிலர் கார்களில், தன் கண்களின் முன்னால் நடந்து செல்பவர்களைப் போல் தன் வாழ்க்கையில் நடந்து விஷயங்கள் திரைபோல் ஓடின. நிம்மதியில்லாமல். தன்னுடைய சொகுசான காரில், மெதுமெதுப்பான இருக்கையில் சௌகரியமில்லாமல் முணு முணுத்தபடியே அமர்ந்திருந்தார். வாகன ஓட்டுனர், அவரை நன்கு புரிந்து கொண்டவர் போல் வண்டியின் வேகத்தை குறைத்து, 'என்ன, சார்?' எனக் கேட்டார். 'ஒன்றுமில்லை' என பதிலளித்த திரு.கே- மநதிரிசபையில் இரண்டரை ஆண்டுகளாக அமைச்சராக உள்ளார். 'பெண் நாய்' என திட்டினார். இஸபெல்லால் எப்படி இதை செய்யமுடிந்தது. என்னுடைய நிலைமை அவன் உணரவில்லையா? ஒருவேளை அதனால் நடந்தால் என்ன ஆகும்... கடவுளே நினைத்துக் கூட பார்க்க முடியாது! மணல் வெளியில் மென்மையாக அந்தக் கார் சென்று கொண்டிருக்கையில் திரு.கே பின்னோக்கி கடந்த காலத்தை நினைவு கூர்ந்தார். மதிக்கப்பட்ட தலைமையாசிரியராக அவர் பணியாற்றிய பள்ளி இருந்த கிராமத்தின் அந்தப் பகுதி எம்.எல்.ஏ 5வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் சமயத்தில் மட்டுமே நினைவு கூர்வார். திரு.கே- பக்கத்து கிராத்தைச் சேர்த்ததுடிப்பான மற்றும் கடின உழைப்பாளி, வலிமையான கைகளையும் எப்போதும் புன்னகையையும், கொண்ட இளைஞன்.
மின்சார விசைப்படகிலிருந்து ஒரு துள்ளு துள்ளிக்குதித்து கீழே இறங்கியபோது பீய்ச்சித்தெறித்த தண்ணீர்த்திவலையில் ,கால்முட்டிவரை நனைந்துவிட்டது. நேரம் இன்னும் புலரவில்லை.என்றாலும் ஈர பேண்டுடன் பிரயாணப்பையைத் துக்கிக்கொண்டு நடப்பது கொஞ்சம் சிரமாகத்தான் இருந்தது. இருள் பிரியாத இந்த நேரத்திலும், சில்வண்டுகளா இல்லை,ட்வீட்டிப் பறவைகளா ,என்று அனுமானிக்க முடியாத அந்த கிறீச்சிடல் ரீங்காரம் சிவநேசனை மிகவும் கவர்ந்தது. சுற்றிலும் கடல்சூழ் இந்த தீவில் தான் ஸ்வாமிஜியும், அவரது தொண்டரடிப் பரிவாரங்களும் வாழ்கிறார்கள் என்பது பற்றிய ஆச்சரியங்களையெல்லாம் கடந்துதான் சிவா இங்கு வந்திருக்கிறான். ஒவ்வொரு முறை ஸ்வாமிஜி மலேசியாவுக்கு வரும்போதும் தனி தரிசனத்துக்கு நிறையவே சிரமப்பட்டிருக்கிறான். பகீரதப்ரயத்னத்துக்குப் பிறகு அவரது பிரத்யேக தொண்டரடியிடம் ,ஸ்பெஷல் பாஸ் எனும் கரிசனத்தில் திருமுகம் காணச்சென்றபோதும் சிவநேசனால் ஒன்றுமே மனம் விட்டுப்பேச முடியவில்லை. அப்பொழுதும் சுற்றி அவரது நிழல்போல் அணுக்கத்தொண்டர்கள் நிரம்பியிருக்க சிவ நேசனுக்கு பேசுவதற்கு எதுவுமே இல்லாமல் இருந்தது. ஸ்வாமிஜி, என்று மட்டுமே நாத்தழுதழுக்க ஆசி பெற்றுக்கொண்டு திரும்பிவிடுவான். ஸ்வாமிஜி ஏழைகளுக்கு நிரம்ப உதவுபவர். பள்ளிக்கூடங்கள் கட்டியிருக்கிறார். மருத்துவமனை கட்டியிருக்கிறார்.இந்த உலகில் பிறந்த யாருமே அனாதையில்லை, என்பதாலேயே அனாதை இல்லம் என்ற பெயரைத்தவிர்த்து,”ஸ்வாமிஜி இல்லம்” என்ற பேரில் நிறைய குழந்தைகள் தங்கிப்படிக்க இலவச விடுதி, கல்விசாலை என, அவர் சேவை செய்யாத துறையே இல்லை. உலகின் பல நாடுகளில் அவரது கீர்த்தி பரவியிருந்தது.இதனாலேயே உலகம் முழுக்க பரிசுத்த தொண்டர்கள் இவருக்கு நிரம்பியிருந்தார்கள். அவர்களில் ஒருவராகத் தன்னை நினைப்பதே சிவநேசனுக்கு பெருமையாக இருந்தது.என்ன பேறு பெற்றிருந்தால் இவர் வாழுங்காலத்தில் தானும் ஜனித்திருக்கிறோம் என்பதே அவ்வப்போதைய அவனது பரவசமாக இருந்தது. ஆனால் அவனுக்கு வாழ்க்கைப்பட்ட மலர்விழியின் கேள்வி வேறாயிருந்தது.
கோடை வெயில் அனலாய்க் கொதித்துக்கொண்டிருந்தது. அவ்வப்போது விசிறி விட்டுப்போன காற்றில் மட்டும் லேசாய் ஈரப்பதம். வீட்டுக்குள் இருக்க அலுப்பாய் இருக்க இந்தப் பூங்காவில் வந்து அமர்ந்துகொண்டேன். எவ்வளவு நேரம்தான் அந்த நான்கு சுவர்களையும் பார்த்துக்கொண்டிருப்பது…..? கண்தொடும் தூரத்தில் பள்ளிச் சிறுவர்கள் ஊஞ்சலாடிக்கொண்டு இருக்கிறார்கள். சற்றுத் தூரத்தில் இரண்டு இளவட்டங்கள் நெருக்கமாய் அமர்ந்து, கைகளைப் பிணைத்தபடி உலகையே மறந்து இருக்கின்றனர். அந்த மரத்திற்குக் கீழ் அமர்ந்திருக்கும் சீனநாட்டுச் சோடி ஒவ்வொருநாளும் இதே நேரத்திற்கு இங்கே வந்து அமர்ந்து விடுகிறார்கள். அந்த வயது முதிர்ந்த ஆப்கான் கிழவனும், மொட்டாக்கணிந்த அவன் மனைவியும் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். என்ன சந்தோசமான வாழ்க்கை! திருப்தி எல்லா முகங்களிலும் பிரதிபலிக்கின்றன. எல்லோரும் சந்தோசமாய்…. நிம்மதியாய்….. மகிழ்ச்சியாய்…..நான் மட்டும்……?
தாழ்வு பகுதியிலே அமைந்திருந்த அப்பள்ளி மழைக்காலங்களில் வகுப்பறைகளில் தண்ணீர் ஏறிவிடுவது வழக்கமான ஒன்றுதான்.கடந்த இருபது வருடங்களாக அப்பள்ளி வெள்ளப் பிரச்னையால் நொந்து நூலாகிப் போனது! பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தலைவர் மணியமும் செயலாளர் ஜீவாவும் பள்ளிக்கு விரைகின்றனர். இவர்களுக்கு முன்னதாகவே தலைமையாசிரியர் இராமநாதன்,தன் அலுவலகத்தில் ஏறிப்போயிருந்த வெள்ள நீரை ‘பிளாஸ்டிக்’ வாளியில் அள்ளி வெளியில் ஊற்றிக்கொண்டு இருந்தார். பள்ளி ஆசிரியர்கள் சிலரும் அவருக்கு உதவுகின்றனர். பள்ளிப் பணியாளர்கள் மற்ற வகுப்புகளில் ஏறிப்போயிருந்த நீரைச் சிரமப்பட்டு இறைத்துக் கொண்டிருந்தனர்! பல மணி நேர போராட்டத்தின் எதிரொலியை களைத்துப்போன அவர்களின் முகங்கள் தெளிவுபடுத்திக்கொண்டிருந்தன!
வெளியே பனி கொட்டிக் கொண்டிருந்தது.உப்பளத்தில் விளைந்த உப்பைப் போல எங்கும் வெண்பஞ்சுப் பனிப்படுக்கை நிலத்தை மூடியிருந்தது.வீதியில் சளக்குப் புளக்கென ஒரே சகதித் தோற்றம்."ஒ!, "இந்த பனிப் புயலில் வாகனங்கள் நகர முடியாது.எங்கே உப்பு போட்டிருக்கப் போறார்கள்? பிறகென்ன, …சலிப்படைந்தான், வாகனத்தை சறுக்கிக் கொண்டு தான் ஓட்ட வேண்டும். தன் ஒரு வயசு மகளை தூக்கிய போது மனதில் மாற்றம் நிகழ்ந்தது. ' பனியை மனம் அழகாக கூட ரசிக்கிறது .
எழுபது கிலே மீற்றர் வேகத்தில் சென்ற நான் சைகைவிளக்கு சிகப்பு நிறத்திற்கு மாறவே வண்டியை நிறுத்தினேன். அதே வேகத்தில் வந்த அவள் எனது வண்டிக்கு அருகே தனது சிகப்புநிற வண்டியை நிறுத்திவிட்டு உதட்டுக்குச் சாயம் பூசிக்கொண்டிருந்தாள். இப்படியான முகஅலங்காரங்களை சாதாரணமாக சைகை விளக்குகளில் வண்டியை நிறுத்தும் போது பெண்கள் செய்வது வழக்கம். ஆனால் இவள் தலையை ஒரே சீராக வேகமாக அசைத்துக் கொண்டு உதட்டுக்கு அலங்காரம் செய்ததால் அவளது அந்தச் செய்கை என்னை அவளது பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. ஏதாவது பாட்டைப் போட்டுவிட்டு அதற்கேற்பத் தலையசைக்கின்றாள் என்பது புரிந்தது. இளமை ஒருபக்கம் அவளிடம் துள்ளி விளையாட, அவள் சுறுசுறுப்பாகவும், அழகாகவும் இருந்தில் என்னை அவள் கவர்ந்திருந்தாள். பச்சை விளக்கு எரியவே நான் வண்டியை முன்நோக்கி ஓட்டிச் சென்றேன். அடுத்த பச்சை விளக்கைத் தண்டும் போது சட்டென்று மஞ்சள் விளக்கு எரிந்தது. கடந்து மறுபக்கம் போய்விடலாம் என்றுதான் நினைத்தேன், ஆனால் முன்னால் சென்ற வண்டிகள் ஏதோகாரணத்தால் மெதுவாக நகரத் தொடங்கவே எனது வண்டி பாதுகாப்புக் கோட்டைக் கடக்கும்போது சிகப்பு விளக்கு எரியத் தொடங்கிவிட்டது. பொதுவாக வீதியைக் கடக்கும்போது இப்படியாக நடப்பதுண்டு என்பதால் ஏதோ கற்பனையில் இருந்த நான் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இரண்டு வாரங்கள் கழித்து எனக்கு சிகப்பு விளக்கில் தெருவைக் கடந்ததற்காகத் தண்டப்பணம் கொடுக்கும்படி தபாலில் அறிவிப்பு வந்தது.
ஹறூத்; என் அலுவலக அறைக்கு வந்தபொழுது மிகவும் மகிழ்ச்சியாகக் காணப்பட்டான். 'மிக நல்ல செய்தி சேர்..., கேள்விப்பட்டீர்களா...?' என்றான் பரபரப்புடன். அவசரமாக நடந்து வந்த களைப்பில் மேல்மூச்சுவாங்க, இணையத்தளத்தில் தான் வாசித்த தகவலைச் சொல்லி, அதற்குச் சாட்சியாக தனது 'ஐபாட்' அலைபேசியிலுள்ள 'இணைய' செய்தியையும் காண்பித்தான். 'இலட்சக் கணக்கான ஆர்மேனிய மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை இனப்படுகொலையென்றும் (Genocide) அதனை மறுப்பது குற்றச் செயல் என்றும் கூறும் சட்டமூலத்தை, அன்று காலை (22 டிசம்பர் 2011) பிரான்ஸ் நாடாளுமன்றம் அங்கிகரித்துள்ளது. இதற்கு தனது எதிர்ப்பினை பதிவு செய்ய, துருக்கி தன்னுடைய தூதுவரை பாரீஸிலிருந்து மீள அழைத்துக் கொண்டுள்ளது...' என அந்தச் செய்தி தொடர்ந்தது.
மனித மூளை என்றும் தீவிரமாக யோசித்துப் பழையன தவிர்த்துப் புதியன காணும் படலத்தில் ஓடிக்கொண்டிருப்பதை நாம் அறிவோம். அதிலும் தமிழர் தரம் ஒரு படி மேலேன்று கூறுவர். இந்த வகையில் ஒரு முக்கிய தீர்மானம் எடுப்பதற்காக புத்திசீவிகளான தமிழர் ஒன்று கூடி, அவைத் தலைவராக ஒருவரை நியமித்து, அவர் அத்தீர்மானத்தைச் சபையோர்முன் பின்வருமாறு சமர்பித்தார். “அன்பர்களே! தமிழர்களாகிய எங்கள் வாழ்வியலில் இன்றெல்லாம் பல சிக்கல்கள் நிறைந்துள்ளன. அதனால் நாம் நினைத்தவாறு ஒன்றும் செய்ய முடியாத நிலை எழுந்துள்ளது. நாம் போடும் திட்டமெல்லாம் நிறைவாக்கமுன் எம் இறப்பு முந்திவந்து யாவையும் குலைத்து விடுகின்றது. எங்கள் தேட்டம் எல்லாவற்றையும் சீராக ஒழுங்கு செய்வதற்கு அவகாசம் கிடைப்பதில்லை. எங்கள் பிள்ளைகள், மனைவியர் ஆகியவர்களுடன் நீடூழி வாழலாம் என்பது தவிடு பொடியாகி அவர்களையும் நடுத் தெருவில் விட்டுச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகின்றது. பிள்ளைகளுக்கும் திருமணம் நடாத்தாது தவிக்க விட்டுச் செல்கின்றோம். நாம் வட்டிக்குக் கொடுத்த பணமும் கைநழுவிப் போகின்றது. இவ்வண்ணம் பல உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். பலன் ஏதும் கிடையாது. இதற்கு ஒரேயொரு வழிதான் உண்டு. அதுதான் எங்கள் இறப்பு நாள், திகதி, மாதம், ஆண்டு ஆகியன எங்களுக்கு முன்கூட்டியே தெரியவேண்டும். இதற்காக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இயமராசனுக்கு மனுக்களை அனுப்பவேண்டும். இதற்குரிய உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள். வணக்கம.;” என்று கூறி அமர்ந்து விட்டார்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









