- டெஸ்மோண்ட் எல். கார்மான்பலாங் கவிஞர், நாட்டுப்புற கதைகளை எழுதுபவர் மற்றும் சிறுகதை எழுத்தாளர். அவர் காசி மற்றும் ஆங்கிலத்திலும் இரண்டு மொழியிலும் எழுதுகிறார். ஷில்லாங்கிங்,கின் வடகிழக்கு ஹில் பல்கலைக்கழகத்தின் வாழ்வியல் மற்றும் கலாச்சார படிப்பினையின் படிப்பவராக உள்ளார். -
திரு.கே.வின் மனதில் பல விஷயங்கள் ஓடிக் கொண்டிருந்தன. காரின் ஜன்னலில் தன் பார்வையை பதித்துக் கொண்டு, தெருவில் வரிசையாக இருந்த வீடுகளை பார்த்துக் கொண்டே வந்தார். மக்கள், தனியாக செல்பவர்கள், தோழமை முக பாவத்துடன் இருப்பவர்கள், சிலர் சாலையில் நடந்து கொண்டு, சிலர் கார்களில், தன் கண்களின் முன்னால் நடந்து செல்பவர்களைப் போல் தன் வாழ்க்கையில் நடந்து விஷயங்கள் திரைபோல் ஓடின. நிம்மதியில்லாமல். தன்னுடைய சொகுசான காரில், மெதுமெதுப்பான இருக்கையில் சௌகரியமில்லாமல் முணு முணுத்தபடியே அமர்ந்திருந்தார். வாகன ஓட்டுனர், அவரை நன்கு புரிந்து கொண்டவர் போல் வண்டியின் வேகத்தை குறைத்து, 'என்ன, சார்?' எனக் கேட்டார். 'ஒன்றுமில்லை' என பதிலளித்த திரு.கே- மநதிரிசபையில் இரண்டரை ஆண்டுகளாக அமைச்சராக உள்ளார். 'பெண் நாய்' என திட்டினார். இஸபெல்லால் எப்படி இதை செய்யமுடிந்தது. என்னுடைய நிலைமை அவன் உணரவில்லையா? ஒருவேளை அதனால் நடந்தால் என்ன ஆகும்... கடவுளே நினைத்துக் கூட பார்க்க முடியாது! மணல் வெளியில் மென்மையாக அந்தக் கார் சென்று கொண்டிருக்கையில் திரு.கே பின்னோக்கி கடந்த காலத்தை நினைவு கூர்ந்தார். மதிக்கப்பட்ட தலைமையாசிரியராக அவர் பணியாற்றிய பள்ளி இருந்த கிராமத்தின் அந்தப் பகுதி எம்.எல்.ஏ 5வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் சமயத்தில் மட்டுமே நினைவு கூர்வார். திரு.கே- பக்கத்து கிராத்தைச் சேர்த்ததுடிப்பான மற்றும் கடின உழைப்பாளி, வலிமையான கைகளையும் எப்போதும் புன்னகையையும், கொண்ட இளைஞன்.
அவரது தந்தை, அந்த கிராமத்தில் முதன்முதலில் கதோலிக்கத்தை தழுவியர், குடும்ப பாக்கு, மரம், கொட்டை வியாபாரத்தில் வாழ்க்கை நடத்துபவர். அவர்களுடைய ஓரே ஆசை தனது மகனை படித்தவனா பார்க்க வேண்டுமென்பது. அதற்காக அந்த ஆசையோடு, திரு.கே.வை ஷில்லோங்கிற்கு இத்தாலிய பாதிரியாரின் பொறுப்பில் விட்டார். அவர் திரு.கேவின் பால் உடனே விருப்பம் கொண்டார். ஏழைகளுக்கான தங்கம் விடுதியில் தங்கியிருந்து அந்த இத்தாலியில் பாதிரியார் சொல்லிக் கொடுத்த பாடங்களை உடனே உள்வாங்கி கற்றுக்கொண்டு தன்னுடைய புத்திசாலித்தனத்தை ஆறும்பத்திலிருந்தே காட்டினான். அவன் மத்திய மெட்ரிக் தேர்விக்காக தயார் செய்து கொண்டிருப்பதால் அவர் கிராங்களுக்கு இடையில் சந்திப்பஹ நிகழ்ந்த வேண்டியிருந்தது. எதிர்பார்த்தபடியே. அவர் தேர்வில் தேர்ச்சி பெற்று இரண்டாம் பிரிவில் நியமிக்கப்பட்டார்.
இந்த முறை, கிராமத்தில் அவரின் தங்கும் காலம் சற்று நீனமானது. ஓருநாள் இரவு உணவிற்குப்பின் மூங்கில் பரப்பில் அமர்ந்திருந்த போது, அருகிலிருந்த கிராமத்தில் இருந்து ஒரு பள்ளி ஆசிரியர் அவரை சந்திக்க வந்தார். திரு.கே இளைஞனாய் இருந்த போது அவரை வெற்றிக்கு அவரை வாழ்த்தி தனி பள்ளியில் வேலை செய்ய விருப்பமா எனக் கேட்டார். அவருக்கு வயதாகிக் கொண்டிருப்பதால் திரு.கேவின் உதவியை அவர் வரவேற்பவதாகச் சொன்னார். எந்தவொரு தயக்கமுமின்றி உடனே திரு.கே அவர்கள் ஏற்றுக் கொண்டு அந்த இளைஞனின் பெற்றோர் முன்பு விஷயம் முடிந்த விட்டது.
உடனே அவனின் வேலையை பள்ளியில் துவங்கினார்.மாணவர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொள்ள அவர் கடுடையாக உழைத்ததில் அவரின் புகழ் நிலைத்தது. அர்ப்பணப்பான வேலை, மற்றும் சமூகப்பணிகள், குழு விளையாட்டினை ஏற்பாடு செய்ததில் கிராமத்தினர் மற்றும் கிராமத்து இளம் பெண்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார். திருமணக் கொண்டாட்டங்கள் ஒரு வாரத்திற்கு திரு.கே.யின் குறைந்தத் தொகையையும், பெரும் தொகை கிராமத்தினரும் ஏற்க நடந்தது. திரு.கே.வுக்கு இரண்டு குழந்தைகள், மூத்தது மகன். இளையது பெண்.
அந்தநேரத்தில், திரு.கே.வின் செல்வாக்கு 'சிறந்த உழைப்பாளி' என்று கிராமம் கிராமமாக பரவி பிரபல்யமான பிராந்திய கட்ச்சியின் வேட்பாளராக வரும் சட்டமன்றத் தேர்தலில் நிற்க வற்புறுத்தினர். எதிர்பார்த்தபடி, திரு.கே. வெற்றி பெற்று அதிகார மைய வட்டத்தில் வந்தார். சீக்கிரம் காபிகை மந்திரிகளின் பட்டியலில் அவர் பெயர் அறிவிக்கப்பட்டு, அவர் தலைமைச் செயலகத்திற்கு அரசின் மந்திரியாக அவரின் பணியை கவனிக்கச் சென்றார்.
வெற்றியின் குதூகலம் முடிந்து விடுகையில், அவர் அவர் நகர வாழ்க்கைக்குள் சீக்கிரம் முடக்கப்பட்டார். ஆசிரியர் பதவியில் இருந்து ராஜினமா செய்து விட்டு, அவரின் மனைவியையும் குழந்தைகளையும் அரசு பங்களா ஒன்றுக்கு கூட்டி வந்து தங்கினார். இரண்டரை ஆண்டு ஆட்சியில், நல்ல வாழ்க்கை, மரியாதையும் விலையுயர்ந்த விஸ்கியும் அவருக்குக் கிடைத்தன. அவரின் தொகுதியை மறக்காமல் சமூக நல நடிவடிக்கைகளிலும் சுறுசுறுப்பாக இருந்தார். அவரைச் சந்திக்க வந்த பிரதிநிதிகளையும் எப்போதும் சந்தித்தார்.
கேட்டில் நுழைந்து கார் திரும்பி முன் வாசலில் மெல்ல நின்றது. காரோட்டி குதித்து வெளியே வந்து பின் கதவைத் திறந்தார். திரு.கே. காரோட்டியிடம் அவரது மகளைப் பள்ளியிலிருந்து கூட்டிவருவதை ஞாபகப்படுத்தி வெளியே வந்தார். திரு.கே. மெல்ல நடந்து, காவலாளிகளின் வணக்கங்களை நிராகரித்து லிப்ட்டிற்குள் நுழைந்தார். அவரது அறையில் அவனின் தனிச் செயலாளரை அழைத்து வருகையாளர்களை பனிரண்டு மணிக்கு மேல் சந்திப்பதாக அறிவுறுத்தினார்.
இசபெல்லா அன்று காலை சொன்னது அவரை மிகவும் உலுக்கியிருந்தது. சுழலும் நாற்காலியில் சுகாதாரணமான நிலை. அவளை நினைக்கையிலும், வயிற்றிலிருக்கும் குழந்தையை கலைந்து விடும்படி கேட்டது. அவளை வேதனைப்படுத்தியதை எண்ணியபோது மனதில் வலி உண்டானது. அந்தக் குழந்தைக்கு தகப்பன் இல்லாவிட்டாலும் அக்குழந்தையுடன் சந்தோசமாக இருக்க முடியும், அவர்களின் காதலின் விதையாகவும், ஆழமான உண்மையான உடல் தொடர்பானதன் அடையாளமாக இருக்கும் என்று வேதனையுடன் அழுதாள். அவரின் உதையால் அறையின் மூலைக்கு சென்று அடிவாங்கின நாய்க்குட்டிபோல முனகினாள். அவரின் செயலில் இருந்து மீண்டு வர, அவளை அணைத்தபடி மீண்டும் மீண்டும் மன்னிப்பு கோரியபோது அவரின் குரல் பலவீனமடைந்து, உடைந்து போயிற்று. திரும்புவதாகச் சொல்லி உறுதியளத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறினார். அந்த வீடு சிறியதாக, பாதுகாப்பானதாக நான்கு அறைகளுடன் வசதியானது. இசபெல்லாவுடனான உறவும் அன்பும், பகிர்வுக்கான இடமாக இருந்தது. அது எவ்வகையானது என்று உண்மையில் எப்போதும் அவரால் சொல்ல முடிந்ததில்லை. உணர்வுகளின் கலவை அது. சுழலும் கம்பியின் மீட்டல் போல அவரும் இசபெல்லாவும் இணைந்ததன் வழியான அன்பு, பொறுமை, குரூரம், நட்பு என்பதை வெளிப்படுத்துவது. விநோதமான, மறக்கமுடியாத ஒருவகையில் சோகமாயும் கூட.
இசபெல்லாவை ஒரு நண்பர், மோகப் பார்வையுடனும் கூச்சத்துடனும் அறிமுகப்படுத்தி கிடைத்தற்கரிய பரிசு என்று சொன்னதை அதை ஞாபகத்தில் கொண்டு வந்தார். நகரத்திற்கு வெளியேயான ஒரு ரகசிய விருந்தினர் மாளிகையில் ஒரு வார தங்களில் மறைந்திருந்த விதமாக இருந்தபோது எதிர்பாராத விதிவிக்காகவும் இதை உண்மையில் உணர்ந்தார். ஒருவருட கால அன்பு உறவு, இசபெல்லா கர்ப்பமாயிருக்கிறாள் என்பதை அறிந்தபோது திகிலடைந்திருந்தார். அவரின் பொதுவாழ்க்கை. களங்கப்படுவதாயும் அவரின் திருமண வாழ்க்கை சிதைந்து போவதும் வெளிப்படையாயிற்று. குழந்தையைத் தவிர்க்க அவளை கேட்டுக் கொள்ளவேண்டியிருந்தது. (அவரின் நெருங்கிய நண்பர்களை சந்தித்து) இந்த சிக்கலிலிருந்து மீள ( ) அன்று மாலை திரு.கே. பேசவிருந்தது அவருக்கு சற்றே ஆசுவாசம் தந்தது.
மாலையில் ஒரு ரகசிய இடத்தில் திரு.கே. அவரின் நெருங்கிய நண்பர்களைச் சந்தித்து அவரின் பிரச்சனையை சொல்ல முயற்சிகள் எடுத்துக் கொண்டார்.
திரு.கே. ஆரம்பித்தார்: "எதுவும் செய்வதற்கு வகையில்லாமல் அந்த பெண் எதுவும் தாமதமாவதற்கு முன் சொல்லவில்லை. உங்களுக்குத் தெரிந்தபடி பெரும்பாலும் நான் தில்லி, முன்பாய், கோவா என்று வெளியூர்களில் இருந்தேன். கடந்த சில மாதங்களாக என் தொகுதியில் விரிவாக அலைந்திருந்தேன். நான்கு மாதங்களுக்கு முன்பு சந்தித்தேன். அவள் எதுவும் சொல்லவில்லை. அவள் ரகசியமாக,... என்ன சொல்கிறேன் என்றால், ஒரு டைம் பாம்ப்.... ஆமாம் அதுதான்...இப்போது இது..."
"சார்" மத்திய தர அதிகாரியான அவரின் பிரியமானவர்களில் ஒருவர், "உங்களுக்கு குழந்தை வேண்டாம்" என்றார்.
"அப்பிடித்தான், கிறுக்கு பயலே"
குறுக்கிட்டான் திரு.கே" உனக்கு பைத்யமா"
"நான் சொன்னால்..." ஒரு பணக்கார வியாபாரி, "பணம் ஒரு பிரச்சனையல்ல இதை கவனிக்க உங்களுக்கு பணம் தேவைப்பட்டால் நான் தர உறுதிதருகிறேன்...." என்றார்.
"தேங்க்ஸ்," திரு.கே. புன்னகைத்து, "முதலில் நான் அவளை சந்தித்து மீண்டும் கலந்தாலோசிக்க வேண்டும்" என்றார்.
திரு.கே. மாலையில் இசபெல்லா வீட்டிற்குத் திரும்பிச் சென்றவரை வேலைக்காரப் பெண் வரவேற்றாள். "இசபெல்லா எங்கே" அவர் விசாரித்தார்." "படுக்கையறையில்" என்று அவள் பதிலளித்தாள். இசபெல்லா கையில் ஒரு பத்திரிக்கையுடன் படுக்கையில் படுத்திருந்தாள். அதை கீழே போட்டுவிட்டு, அவரைப் பார்த்து புன்னகைத்தாள். "டீ வேணுமா". தலையசைத்துவிட்டு இசபெல்லாவின் படுக்கைக்குச் சென்று உட்கார்ந்து கைகளைப் பிடிக்க ஒரு டம்ளரை எடுத்து சற்றே அதிக அளவு ஊற்றி "நான் குடிக்கிறேன்" என்றார். கொஞ்சம் மதுவை விழுங்கியபடி அவளைப்பார்த்து, "அதைப் பற்றி எண்ணிப் பார்த்தாயா. ஒரு தனியார் கிளினிக்கில். நண்பர்கள் மூலம் நான் தயார் செய்வேன். உண்மையில் அதில் ஒன்றுமில்லை. என்னோட நிலையை புரிந்து கொள். குழந்தை பெற அனுமதித்தால் அது பைத்யகாரத்தனமாக இருக்கும். உனக்குத் தேவையானதை வாங்கிக் கொள். நீ கேட்டதையெல்லாம் நான் கொடுக்கவில்லையா? சரியான முறையில் என்ன பற்றி யோசி.."
"உன்னை பற்றித்தான் நான் எப்போதும் நினைக்க வேண்டும். உங்கள் கௌரவம், உங்கள் நிலை.... ஒரு வேசி கூரை, அவளுக்கு என்ன தேவை என்பது பற்றி நினைக்க உரிமையில்லையா? எனக்குக் குழந்தை வேண்டும். காரணம் உங்களை நான் எப்போதும் அடைய முடியாது." இசபெல்லா கொஞ்சநேரத்தில் துயரத்தில் அழுதாள். திரு.கே. வெளுத்தும் நிலைகுலைந்தவறாக அவளின் தோள்களைப் பற்றிபடி, "நீ ஒரு முட்டாளைப் போல நடக்கிறாய். நான் ரொம்பவும் களைத்துப்போய்விட்டேன் இன்று. அது நடக்காது என்னை நம்பு. அது சாத்யமில்லாதது. ரொம்ப தாமதமாவதற்கு முன் நீ கண்டிப்பாக முடிவு செய்யணும்."
சட்டென இசபெல்லா மிகவும் களைத்தல் போகவளானாள். "ரத்த உறவு பற்றி நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்று இப்போது புரிகிறது. நாம் ஒன்றாக இருந்தது பற்றி ஒத்துக் கொள்ள மறுக்கிறீர்கள். இது நல்லதல்ல, புனிதமல்ல இப்போது நீங்கள் எல்லாவற்றையும் கெடுத்துவிட்டீர்கள். நீ என்னுடன் இருப்பது எதற்கு – என்னை பெண்டாளவா”
திரு.கே. அவரின் ஆறுதல் சிக்கலாய் பாதித்திருப்பதை நடித்துப் போக்க முயற்சித்தார். மெதுவாக மதுவை உறிஞ்சியவர் ,” உன்னை இதற்கு கட்டாயப்படுத்த எனக்கு சங்கடமே. என் நிலையை புரிந்து கொள்ள உன்னிடம் கெஞ்சி கேட்பது எனக்கும் தெரிகிறது. நீ வருத்தப்படாதே. நான் சொல்கிறேன். உன்னை பல வழிகளில் உயர்த்த முடியும். இப்போது இங்கே வா” என்றார்.
“வேண்டாம்” இசபெல்லா உடனே பதிலளித்தார். “என்னை விட்டு விடுங்கள். நான் தனியாக இருக்க வேண்டும். இன்று நீங்கள் போய்விட்டால் நான் பாராட்டுவேன்”
“செரி, நான் போகிறேன். நாளைக் காலை என் தொகுதிக்கு போகவிருப்பதால் இன்றிரவு நான் சீக்கிரம் போகணும். நான் கொஞ்சநாள் வெளியூரில் இருப்பேன். அவ்வப்போது உன்னைப்பார்த்துக் கொள்ள செம்பாங்கை அனுப்புவேன். அவன் நர்சிங் ஹோமில் எல்லாம் தயார் செய்வான். இப்போது நன்கு தூங்கு. குட் நைட்”. ஆனால் இசபெல்லா அதை கவனிக்காமல் ஜன்னல் வழியாக இரவின் கறுத்த இருட்டை பார்த்துக் கொண்டு வயிற்று சிசு ரகசியம் காரண்மாய் சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள்.
காலை திரு. கே. பக்கத்திலிருந்த பொது தொலைபேசிக்கு சென்று அவரின் நண்பரான வியாபாரிக்கு தொலைபேசி செய்தார். “ இப்போது கவனமாக கேளுங்கள். இசபெல்லா கிளினிக் செல்ல ஒத்துக் கொண்டாள். நீங்கள் போய் அவளை அங்கு போய் கூட்டிச் செல்லுங்கள். அதன்பின் அவளை அங்கு போய் எல்லா ஏற்பாடுகளையும் செய்யுங்கள். அதன்பின் அவளை அங்கு போய் கூட்டிச் செல்லுங்கள். அவளுக்கு எல்லாம் தந்திருக்கிறேன். நீங்கள் பிறகு என்னிடம் பேசவும். நன்றி பல நன்றிகள். நான் இதை மறக்க மாட்டேன்” என்று சொல்லி வைத்தார்.
சில வாரங்களுக்குப் பிறகு ஒரு மதிய வேளையில், திரு. கே தன் அறையில் அமர்ந்தபடி தன் தனிப்பட்ட உதவியாளரிடம் வேலை வாங்கிக் கொண்டிருந்தார். கதவு திறந்தது, போர் லாங், அவருடைய விருப்பமான தோழன் நின்று கொண்டிருந்தார்.
‘நாங்கள் சற்று வேலையாக இருக்கிறோம் போர்லாங்’ என்ற தொடங்கினார் திரு. கே -.
புரிகிறது, சார். ஆனால் இது முக்யமான விஷயம் என யோசிக்காமல் சொன்னார் திரு. போர்லாங்.
‘என்ன விஷயம்?’ எனக் கேட்டார் திரு கே – ஆனால் அந்த மனிதர் கோங் தேய் தனிப்பட்ட உதவியாளரைப் பார்த்தார். நிலைமையைப் புரிந்து கொண்டு உதவியாளர் அறையை விட்டு வெளியேறினார்.
‘இப்போது சொல்லுங்கள்.. என்ன விஷ்யம்’ கேட்டார் திரு. கே – ‘சார்..காங்..காங் இஸபெல்.. இன்று காலை பதினோரு மணிக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அவள் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். ஆனால் அந்த குழந்தை சீக்கிரம் இறந்துவிட்டது.
’ ‘’ஓ என் கடவுளே! முனகினார் திரு. கே- ‘ஓ, கடவுளே, எப்படி.. எப்படி.. எப்படி இது நிகழ்ந்தது?’
‘எனக்குத் தெரியாது, சார்,ஆனால் அந்த மருத்துவர் அதில் சில பிரச்சனைகள் இருப்பதாகக் தெரிவித்தார்! என போர்லாங் சொன்னார். ‘சேம் பான்ங் எங்கே? என மந்திரி கேட்டார் ‘ அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் உள்ளனர்’ என பதிலளித்தார் போர்லாங்.
‘அவர்கள்?’ எனக் கேட்டார் திரு.கே.
‘பா. சேம்பாங்கும் அவரின் இரு நண்பர்களும்’ என போர்லாங் சொன்னார். ‘அவர் சொன்னார். புதைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். “ஓ.ஜீசஸ்.. மந்திரி முணுமுணுத்தார். முன்நெற்றியையும், கண்களையும் அழுத்திவிட்டவர். அவர் மேஜையை நெடுநேரம் பார்த்துக் கொண்டிருந்தார். இறுதியாக நிமிர்ந்து பார்த்தவர்,
‘செம்பாங்கிடம் சொல்லி எல்லாவற்றையும் தயார் செய்யச் சொல், புரிந்ததா? எல்லாமும் அவருக்குத் தெரியும் என்ன செய்வாதென்று. இப்போது போ..”
ஒரு தனி படுக்கையில் இசபெல் படுத்துக் கிடந்தாள். முகட்டை வெறித்தபடி பக்கத்தில் நின்ற வெள்ளைகோட் அணிந்த டாக்டையும், ஓர் அட்டையில் எழுதிக் கொண்டிருந்த நர்சையும் அலட்சியபடுத்தியபடி இருந்தாள் . மெல்லிய காலடி ஓசைகளுக்குப் பிறகு ஒருவன் தொண்டையைச் செருமிக் கொண்டான். அது செம்பங்க். படுக்கைக்கு அருகில் வந்தவனின் தலையசைப்பு மருத்துவரையும் செவிலியையும் வெளியே காத்திருக்க ஜாடையில் தெரிவித்தான். செம்பங்க் அவன் கொண்டு வந்த தோல் பையினுள் இருந்து ஒரு காகிதப் பையை எடுத்தார். இசபெல்லின் தலைக்கு அருகில் தலையணைப் பக்கம் அதை வைத்தார். கொஞ்ச நேரம் மெளனமாக இருந்துவிட்டு ஒரு வார்த்தைகூட பேசாமல் வெளியே சென்றான். மருத்துவரைப் பார்க்க சிறிய முற்றத்தைக் கடந்து வேலை அறைக்குச் சென்று மருத்துவருடன் இயல்பாகப் பேசிக் கொண்டிருந்தான். சிறிது நேரத்திற்குப்பிறகு மருத்துவர் ஒரு ரிஜிஸ்டரை எடுத்து அதில் சில குறிப்புகளை எழுதினார். பூர்த்தி செய்து ஒரு சான்றிதழை செம்பாங்க் கைக்கு மாற்றினார். அந்த சிறிய காகித வேலையில் மருத்துவர் இருபதாயிரம் ரூபாய்க்கு பணக்காரரானார். மருத்துவர் ஒரு சிறிய அறைக்கு செம்பங்கை அழைத்துச் சென்றார். அந்த வியாபாரி வெள்ளைக் காகிகத்தாலும் துண்டாலும் சுற்றப்பட்ட ஒரு பண்டலுடன் வெளியேறினார்.
“யார் அது? யார்ரா தாயோழி..” தச்சன் குடிசையின் கதவு பெரிதாய் தட்டப்படுவதைக் கேட்டு பிரக்ஞையற்றது பொல இருந்த தூக்கத்திலிருந்து எழுந்து கத்தினான். “ கதவைத் திற” ஒரு குரல் கேட்டது.
“ நாளை வா.. நான் தூக்கத்திலிருக்கிறேன்” குடிகாரன் உளறினான்.
“வா. கதவைத்திற. உனக்காக நெறையப்பணம் இருக்கிறது” கெஞ்சியது குரல்.
குடிசைக்குள் மெதுவான காலடி ஓசைகளும், தயக்கமான முயற்சி முனகலும் தொடர்ந்தது. பொறுமையிழந்த வகையில் புகார் தொனியில் கதவு திறந்தது.
பாதி திறந்திருந்த கண்களுடன் பார்க்க முயன்ற தச்சன் “ என்ன அது” என்றான்.
செம்பங்கும் அவனின் இரு நெருங்கிய நண்பர்களு, குடிசையினுள் நுழைந்தார்கள். அவர்கள் தச்சனின் அழுக்கான உடம்பும், தேங்கிய வாசமும், மதுவாசமும் உணர்ந்தனர்.
“எங்களுக்கு ஒரு சிறிய சவப்பெட்டி தேவை.. இந்தப் பெட்டியை விட பெரிதாக இல்லாமல்.” செம்பங்க் கைகளை நீட்டிச் சுட்டிக் காட்டியபடி சொன்னார். விடிவதற்கு முன் அதை செய்து தர வேண்டும்” ஒரு கட்டு பணத்தைத் தச்சனிடம் திணித்தவர், “ இதை வாங்கிக் கொள். வேலை முடிந்தபின் இன்னும் தருவோம். வீதியோரத்தில் காரில் காத்திருப்போம். என் ஆள் இங்கு காத்திருப்பான்” என்றார்.
தச்சன் சுதாகரித்துக் கொண்டு மெழுகுவர்த்தியை பற்றவைத்து கருவி சாமான்களை சேகரித்து பலகையும், தட்டைகளையும் கொண்டு ஒரு பெட்டியை உருவாக்கினான். அடுத்த ஒரு மணி நேரத்துள் பெட்டி வேலை முடிந்தது. செம்பங்கியின் ஆள் காரில் இருக்கும் அவனின் முதலாளியை கூட்டிவரச் சென்றான். செம்பங்கும் அவனின் நண்பரும் குடிசைக்கு வந்தனர். அவனின் ஆட்கள் காருக்கு பெட்டியைக் கொண்டு சென்றனர். செம்பங்க் இன்னும் கொஞ்சம் பணத்தை தச்சனிடம் கொடுத்து, “கேள்.. யாருக்கும் சொல்லக் கூடாது. புரிந்ததா? இந்த ரகசியத்தை நீ உளறிக் கொட்டுவதைக் கேட்டால் நான் வந்து உனக்கு பாடம் கற்பிப்பேன். புரிந்ததா?” என்றார். தச்சன் பணத்தைப் பெற்றுக் கொண்டு தலையசைத்தான். அவனின் கைகளில் இருந்த பணத்தைப் பார்த்தான். இருட்டின் வழியே செல்லும் அந்த மூவரையும் கூர்ந்து பார்த்தான்.
இருட்டை மெல்ல விரட்டியபடி, விடியல் மெல்ல வந்தது. தூக்கத்தின் படிமங்களையும், அமைதியான கனவுகளையும் அது மனதிற்குள் கொண்டு செல்லும். ஆனாலும், மயானத்தில் வேகமாகவும், மெளனமாகவும் வேலை செய்த மனிதர்களின் மனங்களில் தூக்கமோ, கனவுகளோ இல்லை. குழி தோண்டிய பின் துரிதமாய் தயாரிக்கப்பட்ட பெட்டியில் அவசரமாய் துணியில் உள்ளே போர்த்தி சடங்குகளின் சாயம் இல்லாமல் குழியை மூட ஆரம்பித்தனர். மண்ணை நன்கு சமமாக்கி எந்தத் தடயமும் இல்லாமலாக்கினர். மெளனமாக காருக்குத் திரும்பிச் சென்று ஓட்டிச் சென்றனர். கிழக்கில் சூரியன் சற்றே உதிக்க ஆரம்பித்திருந்தார்.
காலையில் செம்பங்க், வியாபாரி, தலைமைச் செயலகத்தில் திரு. கே.யின் அறையில் காணப்பட்டான். நாற்காலியை மூலையில் சுட்டிக் காட்டியபடி மந்திரி கிராம பிரதிநிதிகளுடன் பள்ளி பழுது பார்க்கும் வேலைகுறித்து பேசி முடித்து வெகு சீக்கிரம் அதை கவனிப்பதாக சொல்லி முடித்தார். அவர்கள் வெளியேறியபின் வியாபாரி மந்திரி அருகில் நாற்காலியில் வந்து உட்கார்ந்தார்.
“ நல்லதா?” திரு. கே. விசாரித்தார்.
“முடிந்தது” நண்பன் பதிலளித்தான்.
இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, திரு. கே. முதுமையடைந்தவராக காணப்பட்டார், அவர் அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த அதே பள்ளியின் இளைய ஆசிரியர் ஒருவரிடம் தோற்றதால் அவருக்கு முதுமை வந்துவிட்டது. முற்றிலும் புதிய மந்திரி சபையில் வெற்றிபெற்று வேட்பாளர் மந்திரியானார். திரு.கே. அவரின் அதிகாரமுள்ள பழைய சகாக்களுடன் வெகு ஜாக்கிரதையுடன் ஒட்டிக் கொண்டார்.
ஒருநாள் சட்டமன்ற வளாகத்தில் நடைபெற்ற ஒரு மாநாட்டிற்கு திரு.கே. அவரும் ஒரு காலத்தில் உறுப்பினர் என்ற வகையில் அழைக்கப்பட்டார். அவர் அறிந்தவர் போலிருந்த ஒரு பெண்ணுடனான பேச்சினை கூர்ந்து கவனித்தார். பக்கத்தில் சென்றபோது அது இசபெல் என்பதைக் கண்டார். அவள் இளம் சட்டமன்ற உறுப்ப்பினரின் வெகு அருகாமையில் இருந்தாள். அதிர்ச்சியுடன், அவளை முதன்முதலாகச் சந்தித்தபோது அவளுக்கு பதினேழு வயது மட்டும் என்பதையும் நான்கு வருடங்கள் கழித்து இருபத்தொன்றோ. இருபத்தியிரண்டோதான் இருக்கும் என்பதை உணர்ந்தார். இளம் எம். எல்.ஏ கெளரவமாக அவரை அறிமுகம் செய்ய அவர்கள் சுமூகமாக கைகுலுக்கிக் கொண்டனர். அந்த சமயம் இளம் எம்.எல்.ஏயின் சகா ஒருவர் தனியே பேச அவரை இழுக்க, இசபெல்லும், திரு.கேவும் தனித்து விடப்பட்டனர். “ கொஞ்சநாட்களாகி விட்டன”. திரு.கே. தொடங்கினார். “நீங்கள் இன்னும் அரசியலில் மும்மரமாக இருக்கிறீர்கள், இளம் எம்.எல்.ஏவுடன்.”
”மூச்சை வெளியே விடாமல் மூச்சை உள்ளே இழுக்க முடியாது. நீங்கள் இறந்து விடுவீர்கள்” இசபெல்லா பதிலளித்தாள்.
“உங்கள் வியாபாரி நண்பர் இந்த இளம் ஹீரோவிடம் அறிமுகப்படுத்தியதற்கு உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். அப்புறம், பிரசார பணத்திற்காகவும் நன்றி சொல்ல வேண்டும். சாரி. அது உங்கள் பணமல்ல. உங்கள் பணமல்ல என்றாலும்,. எப்படியாயினும் குழந்தை உங்களுடையதாகவும் இருந்திருக்கும். நல்லது. நான் அதை என் துணியின் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தினேன், அவரை திருமணம் செய்து கொண்டதால், ஏன் செய்யக் கூடாது? நாங்களும் வாழ வேண்டுமல்லவா? அங்கே.. அவர் கூப்பிடுகிறார். நல்லது. இப்போதைக்கு குட்பை..” -
ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கதை; தமிழில்: சுப்ரபாரதிமனியன் , இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.