அவன் உரையாடலுக்குப் பிறகு கிளர்ச்சி உடலில் பரவியது.என் பற்கள் கீழ்உதட்டைக் கவ்விக்கொண்டன. பனிக்காற்று ஈர உடலுடன் ஊடுருவிய சுகம் அவனது சொற்கள்.எத்தனை முறை முயற்சித்தும் கிடைக்காத அந்தத் தருணம் இன்றோடு நிறை வேறிவிடும்.அவன் சொன்ன விதிகள் மனம் மறந்து தெளிவுற்றது. விரல்களால் கண்ணைப் பிசைந்து கொண்டு பக்கத்தில் பார்வைச் சிதறவிட்டேன். அவனது சரிரம் மறைந்து கொண்டும் கடிகாரம் சுறுசுறுப்புக் கொண்டும் இருந்தது.
இன்னும் அரைமணி நேரத்தில் கால்களுக்கு ஓய்வு வந்துவிடும்.பெரும் மூச்சை இழுத்து விட்டேன்.இரவு இன்பமாக முடிய வேண்டும்.மிஷினிலிருந்து பிளாஸ்டிக் புட்டிகள் வருகை அதிகரிக்க கைகளுக்கு வேலை அதிகமானது பேகட்டிங் டிப்பாட்மண்டும் நிறைந்தது.
வெறுச்சோடிய கம்பனியின் வெளிப்புறம்,வெளீர் நீலச்சட்டை கூட்டம் ஆங்காகே தோன்றி பிரசங்கித்தது.சாலை பிரயாணிக்கும் இவர்களின் வர்ணங்கள் வெள்ளிடைமலை.
அவனது வருகைக்காகச் சாலை மின் விளக்குத்தூணைத் துணையாகக் கொண்ட கால்கள் வலித்தன.காரணத்திற்காக(அகவையில் சிறியவன்) அவனிடம் பேசியதே இல்லை.
நல்லெண்ணை பூசிய தலை கணரகங்கள் செல்லும் வேகத்துக்கு வரும் காற்றுக்கு கலைந்து சென்று விட்டிருந்தது. முகத்தில் உருண்டோடிய ஒரு சில முடிகளை இடக்கையால் சுருட்டிக் காதுகளின் பின்பக்கமாய்ச் செருக்கிக் கொண்டேன். அந்தப் புழுதிக் காற்றில் முகத்தில் படிந்த தூசுகளைக் கைக்குட்டையால் தூய்மையாகினேன். அவளவும் போனதாக இல்லை.காலையிலிருந்து அது ஒன்றுமட்டும் தான் ன்சுத்தம். இப்போது வியர்வை வாடைக்குப் பஞ்சமில்லாமல் உருவகித்திருந்தது.
இன்று இவன் தான் எனக்கு கடவுள் மனம் நமட்டுச்சிரிப்புடன்.அவன் என்னை நெருங்கி வரும்முன்னே நான் அருகில் சென்றேன்.
“அண்ணே....காசே கணக்கா குடுத்திடனும்னே.அங்கே போய் என்னே கேவலப் படுத்திபுடா தீங்கே....”அவன் சொன்னான்.
“மாப்பிள...நீ அதெப்பத்திக் கவலப் படாதேலெ”நான் சொன்னேன்.
ஒரே ஊர்காரர்கள்.ஒரே சாதிக்காரர்கள். அதனால் என்னவோ நாங்கள் பேசும் மொழியைக்கேட்டு நின்ற வங்காளதேசிகளுக்கு விளங்க வில்லை.இதுவும் நல்லதுக்குத்தான் என் கௌரவம் தப்பித்தது.இருவரும் ஹாஸ்டலைக் நோக்கி நடந்தோம் தெருப்புழுதியைத் காலணியால் தேய்த்துக்கொண்டே.
சூரியனும் ஓய்வுக்குத் தயாராகிக்கொண்டு இருந்தான்.ஆங்காங்கே சிதறிக்கிடந்த வெண்முகில் தீயில் மெல்ல மெல்ல கருகிக்கொண்டு சாம்பலாயின.சாலை ஓரத்து ஆவாரம் பூக்களும் வெறுமென கண்களை மூடித் தூங்கின.சாலை மின் விளக்கின் ஒளியில் அவை தனி அழகைக் கொண்டிருந்தன.கைக்கடிகாரத்தைப் பார்த்து மனதில் வெம்பிவிட்டு,அவன் வந்ததும் மனம் சந்தோஷம் கண்டு இருவரும் டவுனுக்குப் போகிற கடைசிப் பேருந்தின் பின் வாசலில் ஏறிக்கொண்டோம், நீண்ட காத்திருத்தலின் பிறகு ..... நுழைந்ததும் அத்தர் வாடைக்குப் பஞ்சமில்லாமல் இருந்தது.எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள் இருப்பதாகத் தெரியவில்லை எல்லாம் ஆசிய நாட்டு இளங்சிங்கங்கள் எங்களையும் சேர்த்துதான். இருவருக்கும் இடம் இருபதாக தென்பட வில்லை.என்றோ தோய்தெடுக்கப்பட்ட அரக்கு நிற ஜீன்ஸ் பேண்ட்,முட்டிப்பகுதியில் சற்றுத் தேய்ந்து கிழிந்து டிரைவரை அடையாளப்படுத்தியது.ஒரு கறுப்புக் கோட்டு போன்ற உடையை அவன் சாத்திருந்தான்.இடத்தைக்கேட்டு நமட்டுசிரிப்பு சிரித்து டிக்கட்டை வலது கையால் தந்தான். போகட்டில் திணித்து விட்டு உள்ளே நகர்ந்து கைப்பிடியைப் பற்றிக்கொண்டேன் அவனும் தான்.பேருந்து நேராக நகரத்துக்குச் செல்கிறது.
“சார்....நாளைக்கு நம்ம ஆளுங்கள.......” மேனேஜர் முத்து.
“மிஸ்டர்.முத்து அதைப்பற்றி கவலை படாதே.....” முதலாளி ஜேம்ஸ் லெட்சுமணன்.
“தெங்கியு வெரி மச்...சர்....”மேனேஜர் முத்து.
“ஸோரி......,நீங்கே தேர்வு செய்த பாய்ஸெல்லம் கூட் ரிப்போட் உள்ளவங்க தானே.....?” முதலாளி ஜேம்ஸ் லெட்சுமணன்.
“யேஸ்...சார்....”மேனேஜர் முத்து.
“ம்ம்ம்ம்ம்.....ஐ...சீயு டுமோரொ....”முதலாளி ஜெம்ஸ் லெட்சுமணன்.
ரிசீவரை வைத்து விட்டு,அன்றைய நாளேட்டைப் பார்க்கிறார்.இந்திய இளைஞர்களின் குற்றச்செயலுக்கு மேலும் அழகு சேர்ப்பதற்காக ஒரு செய்தி.படித்து முடித்தவுடன் மனதில் வெவ்வேறான பதில் கொண்ட கேள்வி கேட்கிறது மனசாட்சி.இதற்கெல்லம் தனது பெருமூச்சேய் பதிலாகிறது.பத்திரிக்கை மூடப்பட்டு மேசையில் வைக்கப்படுகிறது.
“சைய்...முட்டாளாட்டம் பஸ்சை ஓட்டுறான்...கொஞ்சம் நேரத்து தூக்கிவாறி போட்டுச்சு..”என்றேன் .
“எண்ணண்னே...இதுக்குப்போய் வையிரீங்க...” அவன் சொன்னான்.
அவனது பேச்சிலே தெரிந்தது அவனது அனுபவம்.பேசுவதற்கு வாய் வரவில்லை.நேராக அவனின் சட்டையைப் பிடித்து முகத்தில் அறை விட வேண்டும் என்று மனம்.என்னுடைய இடமாக இருந்தால் பரவாயில்லை.அவர்களின் நாடு பிழைத்துப் போகட்டும்.இடமும் வந்தது.வரும் வழியெல்லம் யாரும் இல்லாத இடமாக அவதாரம்.ஆனால்,இங்கு மட்டும் இப்படியொரு கூட்டம் கூடியிருந்தது இன்ப அதிர்ச்சி.சீன அழகு விளக்கு தெருவோர அழங்காரம்.வெவ்வேறு முகங்கள் ஆங்காங்கே தெரிந்தன.நானும் அவனும் பல வர்ண விளக்குகள் தொங்கவிடப்பட்ட கட்டிடத்தின் மாடிப்படிக்கட்டில் ஏற ஆரமித்தோம்.
சென்ற தீபாவளிக்குதான் சுவருக்கு வெள்ளை பூசியிருக்க வேண்டும்.சுவரில் ஆங்காங்கே தீபாவளி வாழ்த்து அட்டைகள் தொங்க விடப்பட்டு வெழுத்து இருந்தன.ஏறியவுடனே முதல் மாடியில் வலதுப்புறம் ஒருசில பெண்கள் கைகளை அசைத்து வரவேற்றனர் தங்களின் உடலை வாடைக்கு விடும் தாசியர்கள்.மனதில் ஒரு கிளர்ச்சி உருவாகி உடலில் பரவி விளைவாய் புறங்கை முடிகளின் நிமிர்தல்.இருவரும் வெவ்வேறு வர்ணம் கொண்ட பெண்களை தேர்ந்தேடுத்துக்கொண்டு அறையை நோக்கி நடந்தோம்.செந்நிறம் பூசிய கூந்தல், சிவந்த முகம்,சாயம் பூசிய உதடு மனைவியை விட அழகானவளைக் கொண்டதற்கு மனம் மகிழ்ச்சியாக இருந்தது. அவளின் வாய் மொழி புரியவில்லை உடல் மொழியை தவிர, அறைக் கதவு அடைக்கப்பட்டது.
காலைப் பனிக் காற்று கரைந்து கதிரவனின் ஆதிக்கமாய் வானம். வழிதாங்க முடியவில்லை.இதுவரை இப்படி அனுபவித்ததில்லை. மிகவும் அருவருப்பாக ஒருவரை ஒருவர் கண்ட நிமிடம்.இந்தக்கோலத்தில் என் மனைவி பார்த்தால் மாரடைப்பில் உயிரையே விட்டுவிடுவாள்.லட்டியால் அடித்த இடங்கள் வீக்கம் கண்டு இருந்தன.அரை நிர்வாணமாக இருப்பதற்கு கூச்சம்.துணையாக அமர்ந்திருந்தவர்களைப் பார்த்தேன். இளரத்தங்களும் வயோதிகர்களும் இருந்தனர்.அவன் நான்கு மனிதர்களுக்குப் பிறகு இருந்தான்.
காவலதிகாரி ஒவ்வொருவரின் சுய விவரங்களைக் கட்டாயமாய்க் குறித்து கொண்டு இருந்தார்.நானும் சொன்னேன்.மற்றவர்களும் கேட்ட கேள்விக்குப் பதிலளித்தனர்.ஒரு சிலர் முரண்டுப் பிடித்து முகம் சிவந்த பிறகே பதிலளித்தனர்.
“ஹலோ...மூர்த்தியா...?”
“இல்ல சார்...அவரோட அப்பா ..சொல்லுங்க...”
“மணி எட்டாகுது அவனோட பிரண்ஸ் எல்லாம் வந்துட்டாங்க...ஆனா மூர்த்தி மட்டும் மிஸ்ஸிங்....”
“சாரி..சார்..மூர்த்தி இண்டர்வியுக்கு வரமுடியாது....”
“ஏன் உடம்பு செரியில்லையா சார்...?”.
“இல்ல...சார்.அவன போலிஸ் அரஸ்ட் பண்ணிட்டாங்க.....”
“என்ன சொல்றீங்கே....அவன் அப்படி பட்டவன் இல்லயே....எதனாலே....?”
“நேத்து இராத்திரி அவனோட குளோஸ் பிரண்டோட பிறந்தநாள கொண்டாட்டத்திற்காகப் போனவன்.ஏதோ விபச்சார விடுதிலே இருந்ததால போலிஸ்காரனுங்க புடிச்சிட்டானுங்க”
“ஒ..மை....காட்...”(சேய்... இவன நம்பி கூட் ரிப்போர் குடித்துடேனே....... போச்சு...கேவலமாப் பேசப்போரான் முதலாளி)
“சாரி சார் உங்களுக்குப் பெரிய சிரமத்தக் கொடுத்திட்டேன்”
“நோ...நோ...முத உண்மை என்னனு பாத்துட்டு வாங்க...என்னக்கு என்னமோ அவன் இப்படி செய்யறவர் இல்லை.”
“சாரி சார் இனி அவன் என் பிள்ள இல்ல”
“சார்...!”
“...................”
மேனேஜர் முத்துவுக்கு முகம் வியர்த்து விட்டது.சற்றும் எதிர்பாராததை எண்ணி. “ஒ...ஜீசெஸ்....என்ன இது.....? எப்போதான் திருந்துவாங்க இந்த டீனேஞ்ஜர்ஸ்...பாக்க என்னமோ படிச்சவனுங்க மாதிரி இருக்காங்கானுங்க....பட்…. இவனுங்கள பாக்குறதுக்கு இங்க உள்ளவுங்க மாதிரியே இல்லையே....என்ன பண்றது? கருப்பா இருந்தாலே இண்டியன்ஸ்னு சொல்றானுங்கள .....பாவம் பரிதாபம இருக்கெனு வேல போட்டு கொடுத்தா..இங்கவந்தும் திருந்தரானுங்ளா! .... முதல்ல இத ஸ்தாப் பண்ணனும் ..... இங்கவுள்ள நம்ம பையன்களுக்கு வேலத்தரனும்....இத பத்தி சங்கத்துல பேசனும்........தொலைக்காட்சிப் பெட்டியை ஆவ் செய்தார் முதலாளி ஜேம்ஸ் லட்சுமணன். கோப்பையில் இருந்த பச்சைத்தேநீரை பருகியவாறு இருக்கையில் சாய்கிறார்.இடது கையால் மேசையில் மேலிருந்த பெல்லை தட்டுகிறார். மேனேஜர் முத்துவின் கால்கள் முதலாளியின் அறைக்குச் செல்கின்றன!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.