நினைவுக் குளியல் 2 - வாசிப்பின் நெறிப்படுகை! - தேவகாந்தன் -

பெரும்பாலும் பத்து வயதளவில் பள்ளியில் படிப்பவர்களுக்கு பள்ளிப் புத்தகங்களல்லாத வாசிப்புக்கு ஈர்ப்பு ஏற்படுமென்று எண்ணுகிறேன். அந்த வயதளவில்தான் அது எனக்கும் ஏற்பட்டது.
வளர்ந்தவர்கள் வாசிப்பில் காட்டும் சிரத்தை, அதன் ஆழ்நிலைத் தியானம்போன்ற சலனமற்ற இருப்பு, அவர்களது வாசிப்பு ஸ்திதியின் கவர்ச்சிகளென எதுவும் அதற்கு விசை கொடுத்திருக்கலாம்.
அனேகமாக, ஒவ்வொரு நாள் மாலையிலும் எங்கள் பள்ளியில் பெரிய வகுப்பு படிக்கும் ஒரு அண்ணன் வயற்கரையை நோக்கி ஒரு பசுமாட்டைச் சாய்த்துக்கொண்டு, ஆறுதலான நடையில் புத்தகமொன்றை வாசித்தபடி ஒழுங்கையில் நடந்துபோவதை பலமுறையும் நான் கண்டிருக்கிறேன். அவர் வாசித்தபடி நடக்கும் வேகத்திற்கேற்ப பசுமாடு மேய்ந்துகொண்டு போகுமா, அல்லது, மாடு மேய்ந்தபடி செல்லும் வேகத்துக்குத் தக அந்த அண்ணன் நடப்பாராவென அறுதியாய்ச் சொல்ல என்னால் முடியாது. ஆனால் அது எனக்கு பெரும் வியப்பாக அப்போதெல்லாம் இருந்துகொண்டிருந்தது.
பக்கத்து வீட்டு மலரக்கா வெய்யில் சாய்ந்த வேளையில் புத்தகமொன்றோடு கிணற்றடியில் சாய்ந்து நின்ற கொய்யா மரக் கிளையில் ஏறியிருந்து, லேசாக மேலும் கீழுமாய் அசைந்தபடி வாசித்துக்கொண்டிருப்பார். அவ்வேளை தாயார் செய்யும் எந்த அழைப்புக் குரலும் அவர் செவியில் விழுந்ததேயில்லை. அதுவும் எனக்கு வியப்புத் தந்த இன்னொரு விஷயம்.
அவ்வாறு, அண்ணன்போல் நடந்துகொண்டும், மலரக்காபோல் மேலும் கீழுமாய் ஆடிக்கொண்டும் வாசிப்பதற்காகவே எனக்குள்ளும் வாசிக்கும் எண்ணம் தோன்றியிருக்கலாம்தான். ஆனாலும் புத்தகமொன்று என் வசமாகியபொழுது நடந்துகொண்டும், மேலும் கீழுமாய் ஆடிக்கொண்டும் வாசிக்க நானெடுத்த முயற்சிகளெதுவும் எனக்கு பொசிப்பாய் அமையவில்லை.



ஜனவரி 2024இல் ஊடறு பதிப்பாக இலங்கை மலையக பெண் படைப்பாளிகளின் சிறுகதைத் தொகுப்பொன்று ‘மலையகா’ என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. இலங்கையின் மத்திய பகுதியின் இலக்கியத்தை மலையக தமிழிலக்கியமென்பதா, இந்திய வம்சாவழியினரின் தமிழிலக்கியமென்பதாபோன்ற அரசியல் கருத்துநிலை சார்ந்த வினாக்களுக்கு தெளிவான விடைகள் அடையப்பெறாவிடினும், அதை மரபார்ந்த வழியில்; மலையகத் தமிழிலக்கியமெனல் தகும். தேயிலைப் பரப்பின் அழகும் வளமும் கருதி மலையகப் பெண்களின் இச் சிறுகதைத் தொகுப்பையும் ஒரு பெண் படிமமாக்கி ‘மலையகா’வெனப் பெயரிட்டிருக்கிறார்கள்.
1997இல் வெளிவந்த அருந்ததி ராயின் The God of Small Things நாவலுக்கு இருபது வருஷங்களுக்குப் பின்னால் அவரது இரண்டாவது நாவலான The Ministry of Utmost Happiness 2017இல் வெளிவந்தது. இதன் தமிழ் மொழிபெயர்ப்பு ‘பெருமகிழ்வின் பேரவை’ என்ற மகுடத்துடன் காலச்சுவடு பதிப்பாக ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பில் பெப். 2021இல் பிரசுரமானது. இவ்வாண்டின் ஆரம்பத்திலேயே இதை வாசித்திருந்தபோதும், ஏதோ சில தெளிவுகளுக்காக திரும்ப ‘சின்ன விஷயங்களின் கடவு’ளை வாசித்து, மறுபடி ‘பெருமகிழ்வின் பேரவை’க்குள் புகுந்து, மீண்ட பின்னாலும், நாவலின் ஆதாரக் கருத்துநிலை அவ்வளவு அச்சொட்டாய் பிடிபட்டிருக்கவில்லை. அதற்கான சிந்திப்பில் ஒரு நீண்ட காத்திருப்பு தொடர, ஒருபோது மங்கலாகவெனினும் கிடைத்த ஒரு வெளிப்பைத் தொடர்ந்து நூல்பற்றிய மதிப்பீட்டை இங்கு பதிவாக்க விழைகிறேன்.

வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர் தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது. 'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: 


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









