தொடர் நாவல்: கலிங்கு (2006 -5)
வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர் தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது. 'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com
5


அன்று குணாளன் வரும்போதே திரும்புவதற்கான வேகத்தையும் அவனது நடை கொண்டிருந்ததை சங்கவி கண்டாள். சம்பூரிலே ஆகஸ்டு 28, 2006இல் புலிகளுக்கும் அரச படைகளுக்குமிடையில் பயங்கரமான சண்டை தொடங்கியிருந்தது. புலிகளின் கையிலிருந்த சம்பூர் எப்போதுமே திருகோணமலை கடற்படைத் தளத்துக்கு எறிகணை வீச்சால் ஆபத்தை விளைக்கக்கூடிய வாகுவில் அமைந்திருந்ததை அவர்கள் கண்டிருந்தார்கள். மாவிலாறு வெற்றியின் பின் சம்பூரைக் கைப்பற்ற மும்முனைத் தாக்குதலில் இறங்கியிருந்தன இலங்கை அரச படைகள். யுத்தம் தொடங்கி ஆறுநாட்களாகியும் வெற்றி தோல்வியற்ற சமச்சீரில் போர் தொடர்ந்துகொண்டிருந்தது. ஒருபோது பாச்சனூரிலுள்ள புலிகளின் காப்பரணை அரச படைகள் தகர்த்துவிட்டதாக தகவல் வந்தது. இறுதியில் சம்பூரை செப்ரெம்பர் 4இல் கைப்பற்றி இலங்கை ராணுவம் அங்கே நிறுதிட்டமாய் முகாமமைத்தது.
வன்னியில் அதனாலான நிலைகுலைவு வெளியாய்த் தெரிந்தது. மேற்கொண்டு வாகரைமேலான தாக்குதலுக்கு ராணுவம் ஆயத்தம் செய்வதான செய்தியறிந்த மக்கள் குலைந்துபோயிருந்தனர். வன்னியில் அதன் தாக்கங்கள் எல்லைகளில் இயக்க எல்லைக் காவலர்களின் மரணங்களாக விளைந்துகொண்டிருந்தன. அம்பகாமம் காட்டுக்குள்ளாக வந்துகொண்டிருந்த ஆறு விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகள் சடுதியான தாக்குதலில் பிணங்களாக வீழ்த்தப்பட்டமை, மூன்று நான்கு நாட்களின் முன்னர் போராளிகள் செல்லிடம் வந்து சேராத தகவலில் தேடுதல் நடத்தியபோது தெரிய வந்தது. முதல்நாள்தான் அவர்களது வித்துடலின் விதைப்பு முறிப்பு மாவீரர் துயிலுமில்லத்தில் சகல இயக்க மரியாதைகளுடனும் நடைபெற்றது. இவ்வாறான நேரத்தில், குணாளன் மறுபடி கிளம்புவானாகில், கிளம்புகிற நேரத்தில் எதுவும் கேட்கப்படாதென அவன் சொல்லியிருந்தானெனினும், அவளால் விட்டுவிட முடியாது. முகம் கழுவி உடுப்பை மாற்றிக்கொண்டு அவன் அவசரமாகத் திரும்ப தயாரானான்.


வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர் தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி பதிப்பகத்துக்கும் நன்றி. நாவல் 'கலிங்'கை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: 


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









