நூல் அறிமுகம்: எஸ்.ரி.ஆர் - நினைத்ததை முடித்தவர்! - நவரத்தினம் கிரிதரன் -

2021இல் யாழ் ராஜா திரையரங்கு உரிமையாளர் எஸ்.தியாகராஜா மறைந்தபோது நான் முகநூலில் 'நாங்கள் அறிந்த 'சுப்பர் ஸ்டார்' - எஸ்.ரி.ஆர் . என்றொரு பதிவிட்டிருந்தேன். எம் பதின்ம வாழ்க்கையில் பின்னிப்பிணைந்த ஆளுமை எஸ்.ரி.ஆர். ஏனைய திரையரங்கு உரிமையாளர்களின் பெயர்களையெல்லாம் நினைவில் வைத்திருக்காத எம் நினைவில் நிற்பவர் எஸ்.ரி.ஆர். எஸ்.ரி.ஆர் என்றால் முதலில் நினைவுக்கு வருவது ராஜா திரையரங்கும், அதன் காவல்காரன் 'கட் அவுட்'டும்தாம்.
தற்போது எஸ்.ரி.ஆர் - நினைத்ததை முடித்தவர்' என்னும் தலைப்பில் அவரது வாழ்க்கையை , சாதனைகளை நினைவு கூரும் நூல் வெளியாகியுள்ளது. மேற்படி நூல் எனது மேற்படி கட்டுரையினையும் உள்ளடக்கி வெளியாகியுள்ளது. மகிழ்ச்சி.
நூல் இன்னும் எனக்குக் கிடைக்கவில்லை. கிடைத்ததும் அது பற்றிய என் கருத்துகளைப் பதிவு செய்வேன். நூல் சிறப்பான வடிவமைப்புடன் வெளியாகியிருப்பதைக் காண முடிகின்றது. இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் முக்கிய ஆளுமைகளில் ஒருவரான எஸ்.ரி.ஆர் பற்றிய இந்நூல் அவரை நினைவு கூரும் முக்கியமானதோர் ஆவணம். நூலை வெளியிட்ட அவரது குடும்பத்தினருக்கு வாழ்த்துகள்.
இவர் அரசியலில் பதவி நாட்டமில்லாதவரென்று நினைக்கின்றேன். இருந்திருந்தால் மிகவும் இலகுவாக பாராளுமன்ற உறுப்பினராக இவர் வந்திருக்க முடியும். முக்கிய தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவராக மிளிர்ந்திருக்க முடியும். அரசியலில் ஒளிர்வதற்கு இவரது வசீகர முகவாகும், ஆளுமையும் உதவியிருக்கும்.

மானுட மற்றும் சமூக விஞ்ஞானத்துறைகளில் நடைபெறவுள்ள இரு வாரப் பயிற்சிப்பட்டறை மற்றும் ஆய்வில் கலந்துகொள்வற்காக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகப் பணியாற்றும் 'ஆர். பென் டில்கரன்' (R.Ben Dilharan) ஐக்கிய இராச்சியத்திலுள்ள 'யுனிசர்சிடி ஒஃப் எக்ஸேடெர்' (University of Exeter) சென்றுள்ளார். இவர் யாழ் அராலி வடக்கைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்துசென்ற ஐம்பது ஆண்டு காலத்தில் ( 1972 - 2022 ) இலக்கிய உலகில் நான் சந்தித்துப்பேசி உறவாடிய இலக்கியவாதிகள் எண்ணிலடங்காதவர்கள். அவர்களில் குறிப்பிடத்தகுந்த பலர் இந்தியாவிலிருந்தவர்கள். இருப்பவர்கள். அவர்களின் பெயர்ப்பட்டியல் சற்று நீளமானது. அவர்கள் குறித்தெல்லாம் எனது அனுபவங்களை மனப்பதிவுகளை எழுதிவந்திருக்கின்றேன். அதன்மூலம் இலங்கை – இந்தியா – மற்றும் தமிழர் புகலிட சேத்து இலக்கியவாதிகளிடத்தில் ஆரோக்கியமான உறவுப்பாலமும் எனக்கு அமைந்தது. கொவிட் பெருந்தொற்று பரவியதையடுத்து, அந்தப்பாலம் மெய்நிகர் அரங்குகளின் ஊடாக மேலும் பலமடைந்திருப்பதாகக் கருதுகின்றேன். நேருக்கு நேர் சந்தித்துப் பேசிப்பழகியிராத பலரும் மெய்நிகர் அரங்கின் ஊடாக எனது இலக்கிய நண்பர்கள் வட்டத்தில் இணைந்துள்ளனர். அவர்களில் ஒருவர்தான் இந்திய இலக்கியப் பேராசிரியர் முனைவர் க. பஞ்சாங்கம் அவர்கள். சில தினங்களுக்கு முன்னர் பெங்களுரில் வதியும் படைப்பிலக்கியவாதி பாவண்ணனுடன் உரையாடிக்கொண்டிருக்கும்போது, பேராசிரியர் பஞ்சாங்கம் அவர்களுக்கு இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் பவளவிழாக்காலம் ஆரம்பமாகிறது என்ற தகவலைச் சொன்னதுடன், அவரைக்கொண்டாடுமுகமாக நடக்கவிருக்கும் நிகழ்ச்சியை எனக்குத் தெரிவித்தார்.


கலாச்சாரம், பண்பாடு,சமயக் கட்டுமானங்கள்,பொருளாதார நிலை,ஆணாதிக்கம் என்ற பல காரணிகளால் ஒடுக்கப் பட்டு வாழும் பெரும்பாலான பெண்களின் நிலையைத் தன் கிராமத்தில்; கண்ட கௌரி அவர்களைப்போல் தானும் வாழாமல், தங்கள் பாடசாலைக்குப் படிப்பிக்க வந்த புனிதமலர் ரீச்சர் மாதிரி, அறிவுடன், துணிவுடன், அன்பான உணர்வுடன் மற்றப் பெண்களின் மேப்பாட்டுக்கு உதவும் கல்வி கொடுக்கும் ஆசிரியையாக வாழச் சபதம் கொள்கிறாள். எப்படியும் தனது கல்வியைத் துணிவாகச் செயற்பட நினைக்கிறாள். 'தில்லையாற்றங் கரை'நாவலில் துணிவான இலங்கைத் தமிழ்ப் பெண் கௌரியின் கல்விக்கான 'போர்'அந்த'பெரிய பிள்ளையாகும்' விடயத்திற்தான் ஆரம்பமாகிறது. 







பேராசிரியர் பசுபதி அவர்களை கனடாவில் தான் முதன் முதலாகச் சந்தித்தேன். அமைதியான, சிரித்த முகத்தோடு எல்லோரோடும் அன்பாகப் பழக்ககூடிய ஆழ்ந்த இலக்கிய அறிவு கொண்ட மனிதராக அவரை என்னால் இனம் காணமுடிந்தது. அதன்பின் அவரை அடிக்கடி ரொறன்ரோ தமிழ் சங்கத்தில் சந்திப்பதுண்டு, அவரது உரைகளையும் கேட்டிருக்கின்றேன். அதுமட்டுமல்ல, அவரோடு ஒருநாள் உரையாடியபோது, அவர் தன்னை எனது வாசகன் என்று சொல்லி என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்திருந்தார்.
காதல் இல்லா வாழ்க்கை

லம்பெயர்ந்தோர் படைப்புகளில் அரசியல் சார்ந்த உள்ளடக்கத்தைக் கொண்டனவாக 80கள் முதலே பல புனைவுகள் வெளிவந்துள்ளன. இதற்கு ஈழத்திலும் தமிழகத்திலும் வெளிவந்த ஈழத்தவரின் முன்னோடிப் படைப்புகளை ஒருமுறை நினைவு கொள்ளலாம். மு. தளையசிங்கத்தின் ‘ஒரு தனிவீடு’ தொடக்கிவைத்த அரசியல் சார்ந்த வெளிப்பாட்டின் தொடர்ச்சியை அருளரின் ‘லங்காராணி’யில் காணமுடிந்தது. அதேபோல் கோவிந்தனின் ‘புதியதோர் உலகம்’, செழியனின் ‘ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து’ ஆகியவற்றுக்கூடாக போராட்ட இயக்கங்களின் உள்ளரசியல் பேசப்பட்டது. ஆனால் இவ்விரண்டு போக்குகளைக் கடந்தும் இணைந்தும் பல படைப்புக்கள் 2009 இற்கு முன்பின்னாக வெளிவந்துள்ளன. இவை யாவும் அரசியல் சார்ந்த புனைவுகள் என்ற ஒரு புள்ளியில் சந்திக்கக்கூடியவை.
இத்தொகுப்புக்குச் சொந்தக்காரர் ஈழத்து எழுத்துப்பரப்பில் கவிஞராக, மொழிபெயர்ப்பாளராக, மொழியிலாளராக நன்கறியப்பட்ட ஓய்வுநிலை தமிழ் பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்கள். இத்தொகுப்பு 2022 இல் காலச்சுவடு பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையைப் பின்புலமாகக் கொண்ட தமிழ்மொழியைப் பேசும், எழுதும் பலருக்கு நுஃமான் அவர்களின் படைப்புக்கள் பரீட்சயமானவை. இதுவரை இவற்றைப் படிப்பதற்கான வாய்ப்புக்கிடைக்காதவர்கள் அவருடைய கவிதைகள், கட்டுரைத்தொகுப்பு, மொழிபெயர்ப்புக்கவிதைகள் மற்றும் தமிழ் இலக்கணம் சார்ந்த நூல்களையும் எண்ணிமவடிவில் நூலகத்தில் வாசிக்கலாம்.





பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









