-  எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி -

முன்னுரை
இலக்கியம் என்பது மனிதனைப் பற்றியும் இயற்கையைப் பற்றியும் வெளியாகும் வெறும் சொல் மட்டும் இல்லை. மனித வாழ்வு எத்தனை அளவெல்லாம் விரிவடைய முடியுமோ அதனை விளக்கிக் காட்டும் மெய்யுரை. அழகான மனோநிலைகள். அரிதரிதான உணர்ச்சிகள், மகத்தான கனவுகள், ஆழ்ந்தகன்ற சித்தாந்தம், அறிவரிய இலட்சியம் போன்றவைகளை உள்ளடக்கிய அமுதசுரபியே இலக்கியம். இலக்கியத்தைப் படைக்க விரும்பும் படைப்பாளிகள் சமூகத்தில் காணலாகும் ஏற்றத்தாழ்வுகள், குறைநிறைகள், வாழ்க்கைப் போக்குகள் ஆகிய பலவற்றையும் கண்டு அவற்றைத் தமது சொந்தப்பட்டறிவோடு இணைத்துக் கூறுவர். இவ்வகையில், மிகச் சிறந்து விளங்கியவர் மேலாண்மை பொன்னுச்சாமி ஆவார். இவர் எழுதிய சிறுகதைகளில் பெண்களின் அவல நிலைகளை எடுத்துக்காட்டுகிறார். இவர் பொருளாதாரத்தின் பங்களிப்புதான் பெண்ணுரிமையின் முதல் படிக்கட்டு. எந்தெந்தச்சமூகங்களில் பெண்கள் உழைப்பதற்கு ஊக்கப்படுத்தப்படுகிறார்களோ அந்தச் சமூகங்களின் பொருாதாரம் விரைவாக வளரும்.  சமூக நீதியின் முதல் விதை அப்போதுதான் முளைக்கும் என்று சொல்லுகின்றார். இவர் தமது சிறுகதை இலக்கியங்களில் காலந்தோறும் உழைக்கும் பெண்களை படம் பிடித்து காட்டுவதை விளக்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

பெண்ணியம்
17 ஆம் நூற்றாண்டில்தான் பெண்ணியம் என்ற சொல் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது. அப்போது அது என்ன பொருளில் வழங்கியதோ அதனின்றும் இப்போது அது முற்றும் மாறுபட்டதாகவே அமைந்துள்ளதை பெண்ணியம் என்ற சொல் பெண் விடுதலை, பெண்ணடிமை, பெண் கல்வியின்மை, பெண்ணுரிமை முதலிய பல பொருள் தருவதாக இன்று பொருள் கொள்ளப்படுகிறது. பெண்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டு அவா்களுக்குக் கல்வியின் மூலம் விழிப்புணர்வு ஊட்டி சமூகத்தில் ஆண்களுக்கு இணையான மதிப்பினைப் பெற்றுத் தருவ பெண்ணியமாகும்.

பெண்ணியம் வரையறை
பெண்ணியம் என்பதை ஆண்களைப் போன்றே பெண்களும் எல்லாவித உரிமைகளையும் பெற்று வாழ்வதைக் குறிப்பதாகும். இவ்வுலகம் விழாமல் இருப்பதற்கும், விழுந்தாலும் அழியாமல் எழுந்து நிற்பதற்கும் சக்தியின் வடிவமாகிய பெண்மை பூரணமாக விளங்குகின்றது. மனிதனின் ஆதார சுருதியே பெண், பெண் இல்லையேல் பூமியில் மனிதன் மட்டுமின்றி பிற உயிர்களும் நிலைபெற இயலாது. இந்நெறிக்குச் சான்று பகரும் வகையில் உமையொரு பாகனாய் இறைவன் உலகிற்குக் காட்டினார்.

”பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான் – புவி
பேணி வளா்த்திடும் ஈசன்” (புதிய ஆத்திச்சூடி 101)

வையம் தழைப்பதற்காகவும் செழிப்பதற்காகவும் தான் ஈசன் பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் என்பது பாரதி வாக்கு. இங்ஙனம் பெண்மையின் மகத்துவம் ஒரு புறத்தில் மதிக்கப்பட்டாலும், மறுபுறத்தில் மிதிக்கப்படுவதை வரலாறு உணா்த்துகின்றது. பெண்கள் கௌரவிக்கப்பட்டதை விடவும் காயப்படுத்தப்பட்ட நிகழ்வுகள் அதிகம் என்பதை இருபத்தோராம் நூற்றாண்டு தெளிவுபடுத்தியுள்ளது.

பாலியல் சமத்துவம்
”பெண்ணியம் என்பது முதன்மையானதாகப் பாலியல் சமத்துவத்தை வலியுறுத்துவதாகும். பெண்ணியம் என்பதற்குப் பல விளக்கங்கள் தரப்பட்டு வருகின்றன. அவ்விளக்கங்களுக்கிடையே வேறுபாடுகள் இருந்தாலும், அடிப்படையில் அவை பெண்ணியம் என்பதற்குப் “பாலியல் சமத்துவம் என்ற பொருளைத் தந்து நிற்கின்றன. பரந்த அளவில் பெண்ணியம் என்ற சொல் பெண் எந்த ஆணுக்கும் நிகரானவளே. எந்த நிலையிலும் எந்தக் காலத்திலும் அவள் அடக்கி வைக்கப்படக்கூடாது. தனிமைப்படுத்தி வைக்கப்படக்கூடாது சார்புநிலைப்படுத்தக் கூடாது என்று பொருள்படுகின்றது. (பெ. ப.12)

தெற்காசிய நாடுகள் பெண்ணியம் என்பதற்கு, பெண்கள் சமூகத்திலும் அலுவலகங்களிலும் வீட்டினுள்ளேயும் நசுக்கப்படுவதைப் பற்றிய விழிப்புணர்ச்சியும் அந்நிலையை மாற்றியமைக்க ஆண்களும் பெண்களும் ஒருவரையொருவா் புரிந்து கொண்டு செயற்படும் முயற்சிகளும் என்ற விளக்கத்தை ஏற்றுக் கொண்டுள்ளன.” (பெ.ப.12)

இக்கோட்பாடுகளின்படி பாலின் அடிப்படையில் மூகத்தில் வழக்கிலிருக்கும் ஏற்றத்தாழ்வுகளையும் ஆணாதிக்கத்தையும் ஆண் தலைமையையும் அறிந்து அந்நிலையை மாற்ற முயல்கின்றவா்களைப் பெண்ணியவாதிகள் எனலாம். பாலின உயா்வு தாழ்வுகளைப் புரிந்து கொண்டு அந்நிலையை மாற்றப் பெண்ணியவாதிகள் போராட வேண்டும்.

மேலாண்மை பொன்னுச்சாமி சிறுகதைகளில் உழைக்கும் பெண்கள்

வறுமையும் வயிற்றுப்பசியும் பண்பாட்டு மரபை மீறத் தூண்டுதல்  'அரும்பு'  என்ற சிறுகதையில் வரும் வேலாயியின் கணவன் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்துபவன்.  அவன் கிணறு வெட்டும்போமு ஏற்பட்ட வெடிவிபத்தில் இறந்து விடுகின்றான். அந்தக் கவலையில் வேலாயி நோய்வாய்ப் பட்டு படுத்த படுக்கையாகின்றாள். அவளது எட்டுவயதுச் சிறுமி செல்வி தீப்பெட்டித் தொழிற்சாலையில் வேலை செய்து வாரந்தோறும் கொண்டுவரும் தொண்ணூறு ரூபாயில்தான் அவா்களது வாழ்க்கை நடக்கின்றது. மழையின்மையால் வேறு கூலி வேலையும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தொழிற்சாலைகளில் சிறுமியா் வேலை செய்யக் கூடாது என்ற சட்டத்தைக் காட்டி ஏஜெண்ட் செல்லி தாவணி போட்டுக் கொண்டுதான் வேலைக்கு வரவேண்டும் என்கின்றான். இதனால் வேலாயி அதிர்ச்சி அடைகின்றாள்.  செல்வி தாவணி போட்டுக் கொள்ள மநுக்கின்றாள்.

”இப்படியும் ஒரு வன் கொடுமையா? அதுக்குரிய வயசு வராம, விரலைச் சுப்புற புள்ளைக்கு எப்படித் தாவணி போடுறது? ஊரையழைச்சு, உறவைக் கூப்பிட்டு, விருந்து வைச்சு, தாய்மாமன் சீா்வரிசையோட கூடுன கூட்டத்திலே போட வேண்டிய தாவணியை, சட்டத்தை ஏமாத்துறதுக்காக எப்படிப் போட? இந்த அரும்பை அடகு வைச்சா நாம உசுா் வாழணும் (மா.பூ பக் 25-27)

என்று வேலாளி தன் விதியைச் சாடிக் கொள்ளுகின்றாள். இருப்பினும் செல்வி தன் தாயின் வறமை, நோய், வயிற்றுப்பசியை மனத்தில் கொண்டு பேருந்து நிற்குமிடத்தில் தாவணியைப் போட்டுக் கொண்டு தீப்பெட்டித் தொழிற் சாலைக்கு வேலைக்குச் செல்லுகின்றாள்.

வயல்களில் களையெடுக்கும் பெண்களின் வேலை நேரப் பிரச்சனை

மேலாண்மை பொன்னுச்சாமி 'ஒரு நகா்வு' என்னும் சிறுகதையில் வயல்களில் கூலிக்குக் களையெடுக்கும் பெண்களின் வேலை நேரப் பிரச்சினையைத் தொட்டுக் காட்டியுள்ளார். கணவனின் ஆதரவை இழந்த முத்தக்கா என்பவள் வேல்ச்சாமி அண்ணன் புஞ்சையில் வேலை செய்து பிழைப்பு நடத்துகின்றாள். பொழுது மறையும் புஞ்சையில் வேலை செய்வதால் தன்னுடைய ஒரே மகன் ராமசாமியை அவளால் ஒழுங்காகக் கவனிக்க முடியவில்லை.  இதனால் முத்தக்கா, ராமத்தா அத்தை புஞ்சைக்கு வேலைக்குச் செல்லுகின்றாள். அன்று மாலை முத்தக்கா வீட்டிற்கு வந்த வேல்ச்சாமி தன்னுடைய பழைய பாக்கியை முடிக்க வேண்டும் என்கிறான். முத்தக்கா வேல்ச்சாமியிடம்.

”அண்ணாச்சி, நானும் விசுவாசத்தை நெனைக்கிறவதான், நீங்க நாலு பேரைப் போல வெள்ளனத்துவே வேலைவிடுறதுன்னா சொல்லுங்க நாளையிலிருந்தே வயக்காட்டுக்கு வாறேன்” (மா.பூ ப. 43)

என்று முரண்டுபிடித்துப் போராடி தன்னுடைய வேலை நேரப் பிரச்சினைக்கு தீர்வு காண்கின்றாள். அவள் கணவன் இன்னொருத்தியுடன் ஓடிப்போனமைக்கும் தன்னுடைய பெண்மை உதூசீனப்படுத்தப்பட்டமைக்கும் அவளால் தீா்வு காண முடியவில்லை.

அப்பாவி, ஏமாளிக் கணவனைக் திருத்தும் பெண் (மனைவி)

மேலாண்மை பொன்னுச்சாமியின் 'பூச்சுமை' என்ற சிறுகதையில் குடும்பப் பொறுப்பற்ற சோம்பேறி, அப்பாவி, ஏமாளிக் கணவனைத் திருத்தி மனிதனாக்கி அவனுக்கு உழைக்கும் சக்தியைக் கொடுக்கும் ஆற்றல் மிக்க மனைவியாக பூவாத்தா படைக்கப்பட்டிருக்கின்றாள். பூவாத்தா அவனைக் காதலித்து மணந்து கொண்டாள். அவள் கணவன் எளிதில் ஏமாந்து, பிறரிடம் தான் ஏமாந்ததைக் கூட உணராமல் அப்பாவியாக இருந்தான். மூன்றாண்டுகள் இவ்வாறே அவா்கள் மணவாழ்க்கை தொடருகின்றது. இந்நிலையில் அவள் கணவன் பூ வியாபாரத்தில் படுசாமர்த்தியமாகச் செயல்படுகின்றான். பூவாத்தா அவள் கணவனின் திறமையைக் கண்டு.

”அட இந்த மனிதருக்குள் இப்படியொரு சாமா்த்தியமா? இத்தனை சாமா்த்தியத்திற்கும் மூலம்யார்? என் வயிற்றுப்பிள்ளைதான் இந்த அப்பாவி மனிதரை ஒரு பொறுப்புள்ள அப்பனாக வளா்த்துவிட்டதா? கடைக்குள் வந்தாள். அவன் ஓடிவந்து அவளது பூச்சுமையை இறக்கிக் வைத்தான். அவள் மனச்சுமையையும் தான்” (பூ.மா ப. 74)

”இப்ப ரொம்பச் சின்னஞ்சிறு கூட பொகக் கொசுக் “ குன்று பூத்துகுதுக. மூலைக்கு மூலை நடக்குறு சினிமா, டிவிகளைப் பார்த்து வா்ற சீரழிவு, வீடு தேடி வந்து கதலைத் தட்டுகிற சனியன்கள் இப்போ வருகிற சினிமாக்கள் மனுச் மக்கள் உட்கார்ந்து பார்க்கிற. மாதிரியாவா இருக்கிறது? …….. ஒரே ஆடுகாவித்தனம்தான். காமக் கூத்தும் அசிங்கமும் தான் டவுசா் போட்ட சின்னப் பையன் பொண்ணும் காதலிக்க, தண்ணீரில் நனைய, தாவணியை உருவ..... த்தூ அசிங்கம்” (பூ.மா.ப.165 – 166)

இச்சிறுகதையில் வரும் மாடத்தி என்பவள் வாழாவெட்டியாவள்.

“பெண்களின் பூக்கும் நேரத்தை வைத்து அவா்கள் வாழ்க்கை நன்றாகவோ, தீதாகவே அமையும் என்னும் மூடநம்பிக்கையை ஆசிரியர் சாடியுள்ளார்.

”பூக்குற நேரம் நல்லா இருக்கணும் காலா காலத்துலே மாலை பூக்கணும் பூத்தமாலை வடாம வாசமா வாழணும்…… மாடத்தியின் முகத்தில் கனத்து நின்ற சோகம், கண்களின் ஆழத்தில் ஒரு வேதனை” (பூ.மா, ப. 167)

ஆண்களின் சந்தேகம் பெண்களின் வாழ்க்கையைக் கெடுத்து அவா்களை வாழாவெட்டியாக்கி விடுகிறது. நல்லா இடத்தில் வா்க்கைப்பட்ட மாடத்தி முதல் வருடத்திலேயே ஒரு ஆண்குழுந்மையைப்பெற்றாள். அக்குழந்தை இறந்து போனது அதன் பின்னா் மாடத்தியன் கணவன் அவள் மீது தீராது சந்தேகம் கொண்்டான் ஐந்து வருடங்கள் அடியும் உதையும்பட்ட மாடத்தி நிரந்தர வாழாவெட்டியானாள். அவள் அம்மாவும் அறந்துவிடுகின்றாள் போராட்டமே பெண்களின் வாழ்க்கைச் சிக்கல்களுக்குத் தீர்வாகும் என்பதை மேலாண்மை பொன்னுச்சாமி பூ என்னும் சிறுகதையில் வலியுறுத்தியுள்ளார்

முடிவுரை
சமுதாயத்தை மேம்படுத்துவதற்கும் மக்களின் அறியாமையைப் போக்குவதற்கும் தன்னால் முடிந்த எழுத்தின் மூலம் கடுமையாக உழைத்து பெண்களின் முன்னேற்றுவதற்காக அவா்களுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்கி தம் சிறுகதையின் மூலம் பெண்களுக்கு விழிப்புணர்சியை ஏற்படுத்த முயன்றதை உணர முடிகிறது. அவ்வகையில் தம் சிறுகதையில் பெண்ணியம் பார்வையில் உழைக்கும் பெண்களின் பிரச்சனைகளை ஆசிரியா் மேலாண்மை பொன்னுச்சாமி வெளிப்படுத்தி இருப்பதைக் காணுகின்றோம்

பயன்பட்ட நூல்கள்

மேலாண்மை பொன்னுச்சாமி    - மானாவாரிப்பூ
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
வேலூர்

மேலாண்மை பொன்னுச்சாமி    - பூச்சுமை
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
வேலூர்

மேலாண்மை பொன்னுச்சாமி    - பூக்காத மாலை
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
வேலூர்

இரா. பிரேமா    - பெண்ணியம்
பாரி புத்தக பண்ணை
சென்னை 104

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R