முதலாவது நுட்பம் இதழ் 1968இல் வெளியானதை நுட்பம் 1970 இதழில் வெளியான கட்டுப்பெத்த தொழில்நுட்பக் கல்லூரியின் தமிழ் மன்றத்தலைவர் மாவை. நித்தியானந்தனின் 'தலைவரின் செய்தி'யிலிருந்து அறிய முடிகின்றது. மேலும் இரண்டாவது நுட்பம் 1969இல் வெளிவரவில்லையென்பதையும், 1970இல் வெளியான நுட்பம் இதழே இரண்டாவது இதழ் என்பதையும் மேற்படி தலைவரின் செய்தி தெரிவிக்கின்றது. 1971 வரை கட்டுப்பெத்தை தொழில் நுட்பக் கல்லூரியாக இயங்கிக்கொண்டிருந்த இக் கல்வி நிறுவனம் 1972 தொடக்கம் -1977 வரை இலங்கைப் பல்கலைக்கழகத்தின் வளாகமாக இயங்குகின்றது. 1978இலிருந்து மொறட்டுவைப் பல்கலைக்கழகமாகச் சுயாதீனமாக இயங்கத்தொடங்குகின்றது. 1972 வரை தமிழ் மன்றம் என்னும் பெயரில் இயங்கிய தமிழ் மாணவர்களின் சங்கம் 1973இலிருந்து தமிழ்ச் சங்கம் என்னும் பெயரில் இயங்கத்தொடங்கியது.
நுட்பம் சஞ்சிகை வெறும் கல்வி நிறுவனமொன்றின் வழக்கமான சிறப்பு மலர் அல்ல. கலை, இலக்கிய ஆக்கங்களுடன் கூடிய சஞ்சிகை. இதனை நூலகம் தளம் சஞ்சிகைகள் பகுதியில் சேமித்து வைப்பது மிகவும் பயனுள்ளது என்பது என் கருத்து. சஞ்சிகைகளில் நுட்பம் இருப்பது அது கலை, இலக்கிய வாசகர்கள், ஆய்வாளர்களை இலகுவாகச் சென்றடைய வழி வகுக்கும். தற்போது நூலகம் நிறுவனத்தினர் சிறப்பு மலர்கள் பகுதியில் சேமித்து வைத்துள்ளனர். ஒவ்வொரு முறையும் அங்கு சென்று தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.
நுட்பம் 1970 - இதழாசிரியர் குழுத்தலைவர் - இரா.ஜெயகாந்திநாதன் - தமிழ் மன்றம், இலங்கை உயர் தொழில்நுட்பவியற் கலாசாலை, கட்டுப்பெத்தை - https://noolaham.net/project/08/707/707.pdf
நுட்பம் 1971 - இதழாசிரியர் குழுத்தலைவர் - வே.திருநாவுக்கரசு - தமிழ் மன்றம், இலங்கைப் பல்கலைக்கழகம், கட்டுப்பெத்தை நியமம் - 'தீபம்' ஆசிரியர் எழுத்தாளர் நா.பார்த்தசாரதியின் ஆசிச் செய்தியுடன் வெளியாகியுள்ளது. - https://noolaham.net/project/08/707/707.pdf
நுட்பம் 1973 - இதழாசிரியர் குழுத்தலைவர் - க.பாலேந்திரா - தமிழ்ச் சங்கம், இலங்கைப் பல்கலைக்கழகம், கட்டுப்பெத்த வளாகம் - https://noolaham.net/project/633/63278/63278.pdf
நுட்பம் 1975 - இதழாசிரியர் குழுத்தலைவர் - யோ.க.மதுரநாயகம் - தமிழ்ச் சங்கம், இலங்கைப் பல்கலைக்கழகம், கட்டுப்பெத்த வளாகம் - https://noolaham.net/project/119/11840/11840.pdf
நுட்பம் 1977 - இதழாசிரியர் குழுத்தலைவர் - ச.யோகராஜன் - தமிழ்ச் சங்கம், இலங்கைப் பல்கலைக்கழகம், கட்டுப்பெத்த வளாகம். அட்டைப்படம் - சி.குணசிங்கம் - https://noolaham.net/project/762/76178/76178.pdf
நுட்பம் 1979/1980 - இதழாசிரியர் குழுத்தலைவர் - ஆர்.சாந்தினி - தமிழ்ச் சங்கம், மொறட்டுவைப் பல்கலைகக் கழகம். அட்டைப்படம் - சி.குணசிங்கம் - https://noolaham.net/project/88/8736/8736.pdf
நுட்பம் 1980/1981 - இதழாசிரியர் குழுத்தலைவர் - வ.ந.கிரிதரன் - தமிழ்ச் சங்கம், மொறட்டுவைப் பல்கலைகக் கழகம். அட்டைப்படம் - சி.குணசிங்கம் - https://noolaham.net/project/1049/104833/104833.pdf
நுட்பம் 1981/1982 - இதழாசிரியர் குழுத்தலைவர் - க.பிறேமச்சந்திரா - தமிழ்ச் சங்கம், மொறட்டுவைப் பல்கலைகக் கழகம். அட்டைப்படம் - யோகராஜா. இதழ் கிடைக்கவில்லை. இதில் எனது பாரதியார் கருத்துமுதல்வாதியா, பொருள் முதல்வாதியா கட்டுரையும், 'நடிப்புச் சுதேசிகள்' கவிதையும் இடம் பெற்றுள்ளன. தேடிக்கொண்டிருக்கின்றேன். இன்னும் கிடைக்கவில்லை. யாரிடமாவது இதன் பிரதி இருந்தால் அறியத்தாருங்கள்.
நுட்பம் 1982/1983 - இதழாசிரியர் குழுத்தலைவர் - ப.வைரமணி - தமிழ்ச் சங்கம், மொறட்டுவைப் பல்கலைகக் கழகம். அட்டைப்படம் - சிவப்பிரகாசம் - https://noolaham.net/project/762/76194/76194.pdf