நாசா விண்வெளி ஆய்வகம்.குளிர்ந்த அறையின் கதவுகளை மிக வேகமாக திறந்து உள்ளே வந்தார் டாக்டர் ரொனால்ட்.
“மீண்டுமா..?”
டாக்டர் ஜேரிக்கு ஒன்றும் புரியவில்லை.
“எப்படி?”
“இதோ பாருங்கள்....”
கையில் இருந்த டேப்பில் காட்டுகிறார் உதவி ஆய்வாளர் டாக்டர் ரொனால்ட்.
FRB இல் தொடர்ந்து வரும் சமிக்ஞையின் குறியீடுகள்.
“வாவ்...இதை எதிர்ப்பாக்கவில்லை”
பத்து ஆண்டுகளில் இதுவே முதல் முறை. இத்தனை காலம் காத்திருந்தது வீண் போகல...! ரொனால்ட் .
கடந்த சில மாதங்கள் முன்பு , வானியலாளர்கள் அதிவிரைவு விண்வெளி சமிக்ஞை வானொலியில் (FRB) வழக்கத்திற்க்கு மாறாக சில சமிக்ஞையை கண்டுள்ளனர், அவை ஆரம்பத்தில் ஒரு முறை தோன்றிய சாதாரனமான வானொலி சமிக்ஞையாக காணப்பட்டன. FRB களில் தொடர்ந்து ஏற்படும் மாற்றம் விண்வெளி ஆய்வகத்துகே ஒரு பிரமிப்பைக் கொடுத்தது.
இந்தமுறை சமிக்ஞை நம்ம பால்வெளியில் உள்ள ஒரு மெக்னதார் ( Magnetar ) இருந்து கிடைத்துள்ளது.இதுநாள் வரை சமிக்ஞை எங்கு இருந்து வருகிறது என்றே தெரியாது. பல முறை விண்வெளியில் கிடைக்கும் சமிக்ஞையின் இடத்தை துல்லியமாக கண்டுப்பிடிப்பதில் தொல்வித்தான் மிஞ்சியது.
டாக்டர் ஜேரி ,இந்த மெக்னதாருக்கு நம்ம வச்சிருக்கிற பெயர் SGR 1935 + 2154 என்றார் டாக்டர் ரொனால்ட்.
சரியானது. இதை முதலில் நம் தலைமை விஞ்ஞானி டாக்டர் ஷோஸ்டாக் அவர்களிடம் தெரிவிக்கனும்.
“இந்த மெக்னதார தொடர்ந்து கவனிக்கனும்.நிச்சயம் நமக்கு நிறைய கேள்விகளுக்கு விடை கிடைக்கும் டாக்டர் ஜேரி.”
“ஆனால், இன்றைய சூழ்நிலையில் வேற்றுக்கிரகவாசிகளின் சமிக்ஞையைப் பற்றி தெரிந்துக்கொள்வதில் வானியலாளர்களை விட பொதுமக்கள் தான் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள்.இதைப்பற்றி நமது ஸ்பேஸ்பொர்ட்டில் எழுதப்போகிறேன்."
"அதை வாசிக்க நானும் தயராகவே உள்ளேன் டாக்டர் ஷோஸ்டாக்."
"எனக்கு தெரிஞ்சு "அந்த “ சிமீ “ தொலைநோக்கி பற்றிய தகவல் வெளியிட்டப் பிறகுதான் மக்களுக்கு வேற்றுக்கிரகவாசிகளின் பற்றிய ஆர்வம் அதிகரிக்க தொடங்கியது.உலகம் முழுக்க பல நபர்களிடமிருந்து நான் மாதத்திற்கு ஒரு முறையாவது வேற்றுக்கிரவாசிகள் பற்றிய மின்னஞ்சல்களைப் பெறுகிறேன்."
"ஆனால் டாக்டர் ஷோஸ்டாக் இந்த மகிழ்ச்சி எவளோ நாளுக்குதான் தெரியல"
"என்ன சொல்றீங்க டாக்டர்?"
"சார்….நீங்கள் சொன்னபடி அவர்கள் பூமிக்கு வருவதாகவும் நமக்கு அவர்கள் ஒரு ஆயுதத்தை கொடுக்கப்போவதாகச் சொன்னீங்களே."
"ஆமாம் சொன்னேன்."
"ஆனா...இன்று வரை அந்த தகவல் எப்படி வந்ததுனு நீங்க சொல்லலியே...?"
"நான் ஏற்கனவே சொன்னேன் இதப்பற்றி கேள்வி கேற்காதிங்கனு...."
"இல்ல சார்....ஒரு வேலை அவர்கள் வந்தால்....?"
"சரி...வரட்டும்...வேற்றுக்கிரகவாசிகள் பார்த்தா உங்களுக்கு பயமா என்ன..?"
"அதை எப்படி கையாளபோகிறோம்."
"பத்து வருசத்துக்கு முன்னாடியே அவங்க பேசுற மொழியவே கண்டு பிடிச்ச நீங்களே தடுமாறுனா எப்படி ஜெரி..?"
"இருந்தாலும்...?"
"அவங்க கூட பேசத்தெரிஞ்சவங்க இந்த பூமிலே நம்ம ரெண்டு பேருதான்.அவங்க கொடுக்கற ஆயுதத்தை நம் நாட்டு நலத்துக்கு பயண்படுத்த வேண்டியதுதான் ஜேரி..!"
"ஒருவேளை….அதுவே நம்ம பூமிக்கு பிரச்சனையா ஆயிடுச்சினா..?"
"முதல்ல கவலப்படுறத நிறுத்துங்க ஜேரி."
"உங்களுக்கு ஏற்கனவே சொன்னேன் அந்த ஏலியன்ஸ் மனித குலத்த காப்பாற்றுவதற்கும் மனிதர்களின் எதிர்காலத்திற்கான ஒரு பரிசையும் கொடுப்பதாக ஒரு தகவல் இருக்குனுதான் சொன்னேன் அவ்வளவுதான்."
"ஆனால்..."
"ஒருவேளை அவர்கள் நம்மை தாக்கி விட்டால்."
"நீங்க நிறைய படம் பார்க்க ஆரமிச்சுடீங்களா ஜேரி..?"
"இல்ல சார்...அது வந்து..."
"ஜேரி...கொஞ்சம் ரிலெக்ஸ் ஆகுங்க...ஏலியன் சொன்னபடி முதல்ல அது வரட்டும்...பிறகு பார்க்கலாம்..அப்படி ஒரு வேளை ஏதாவது நடந்தா ....அதற்க்குதானே நம் இரானுவம் இருக்கு.ஆனால், மனிதர்கள் போல அவர்கள் நமக்கு துரோகம் செய்ய மாட்டார்கள். நீங்கள் கவலைப்படாமல் இந்த வெற்றியை கொண்டாடுங்க.நிச்சயம் நல்லதே நடக்கும். இதோ இந்த ஸ்காட்ச் குடிங்க."
இருவரும் அந்த அறையில் தங்களது நீண்ட நாட்களின் கனவு நினைவாகும் தருணம் நெருங்குகிறது என்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.
மறுவாரம் டாக்டர் ஷோச்டாக்கின் கட்டுரைகளே உலகளவில் பேச்சுப்பொருளாகவும் ஒரு சிலர் கேலிக்கூறியதாகவும் பார்க்கப்படுகின்றன.
ஒரிரு நாட்களில் நாசாவின் தலைமை விண்வெளி ஆய்வாளர் ஷோச்டாக் ஒரு தனியார் தொலைக்காட்சியில் பேட்டி அளிக்கிறார்.
"வாழ்த்துகள் டக்டர் ஷோஸ்டாக்…! உங்களின் கூற்று மக்களிடையே வேற்றுகிரகவாசிகள் பற்றியப் புரிதலை அதிகரிக்கச் செய்திருக்கிறது . நீங்கள் வேற்றுகிரகவாசிகள் பற்றிய பல பதிவுகள் எழுதியுள்ளீர்கள். அவற்றில் பல வியப்பும் சற்று அச்சமும் மக்களிடையெ தருகிறது.இப்போது அவர்கள் பூமிக்கு தகவல் அனுப்பி உள்ளனர் என்பதை மட்டும் தானே சொல்கிறீர்கள்....ஆனால், அந்த செய்தியைப்பற்றி எங்கும் சொல்லவில்லையே.....வேண்டும் என்றால் எங்கள் தொலைக்காட்சிக்கு மட்டுமாவது சொல்கிறீர்களா...? " என நமட்டுப் சிரிப்புடன் அந்த தொகுப்பாளினி கேட்டாள்.
"அந்தச் செய்தி என்ன என்பதை நாங்கள் கண்டுபிடித்ததாக மக்கள் நினைக்கிறார்கள் நீங்கள் உட்பட," என்று ஷோஸ்டாக் மேலும் கூறுகிறார்.
"ஆமாம்..ஆமாம்..பின்ன இல்லையா..?"
"உண்மையைச் சொன்னால்....எங்களுக்கு தகவல் கிடைக்கப்பட்டுள்ளதே தவிர அது என்ன என்பதை எங்களால் கண்டுப்பிடிக்க முடியவில்லை."
"என்ன நாசாவால் அந்த தகவலை கண்டுப்பிடிக்க முடியாதா...?"
"தற்போது நம்மிடையே இருக்கும் அதிநவீன கணினிகள் மூலம் அவர்களின் தகவலை அறிய முடியவில்லை. ஆனால், எங்களின் விண்வெளி ஆய்வகம் தொடர்ந்து தீவிரமாக ஆராய்ந்து அவர்களின் தகவலை இந்த உலகத்திற்க்கு நிச்சயம் சொல்வோம்."
"நம் அதிநவீன கணினிகள் மூலமே பதில் அறிய முடியவில்லை என்றால் அவர்களின் தொழிட்நுட்பம் மிகவும் பழமையானதா ?"
"திருத்தம்.... அவர்களின் தகவலைத்தான் நாம் அறிய முடியவில்லை. நமது தகவல்களை பற்றி நன்கு அறிந்தவர்கள்தான்... அப்படியானால் அவர்களின் தொடர்புத்துறை எப்படிப்பட்டது என்று யூகித்துகொள்ளுங்கள். ஒருவேளை நாங்கள் சரியான தகவலைப் பெற்று விட்டால் அதுதான் வேற்றுகிரகவாசிகளிடமிருந்து மனிதகுலத்தின் முதல் செய்தியாக இருக்கும்."
'கிரேட் டாக்டர்...!"
"இவ்வேளையில் டாக்டர் ஜேரியின் இழப்புக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல். டாக்டர் ஜேரியுடன் நீங்கள் இருவது ஆண்டுகள் ஒரே ஆய்வகத்தில் பணிபுரிந்து உள்ளீர்கள் தானே டாக்டர்...?"
'இதற்கு என்னால் ஒன்றும் பேச முடியில்லை.தலையை மற்றும் அசைத்துக்கொண்டேன். மனதில், அன்று நடந்ததைச் சொல்ல வேண்டும் போல இருந்தது.எனவே, மனதிலே சொல்லிக்கொண்டேன். ஜேரியின் இறுதி அத்தியாயத்தை நானே எழுதுவேன் என்று நினைக்கவில்லை. இந்நாட்டு ஆய்வகம் இப்போதுதான் மெக்னதாரையே கண்டுப்பிடித்துள்ளது.இன்னும் ஏப்ரல் 28 இல் ஏலியனின் வருகையைப்பற்றி தெரிந்தால் அவ்வளவுதான். நான் இருக்கும் வரை இந்நாட்டுக்கு எதுவும் தெரியாது. இதைத்தான் எதிரி நாட்டுக்கு இந்த வேற்றுகிரகவாசிகள் ஆயுதம் வழங்க இருப்பதை தெரிவித்தால் இன்னும் மூன்றே ஆண்டுகளில் பணி ஓய்வுப்பெரும் நமக்கு ‘பெரும்’ நன்மையாக இருக்கும் என்றுதான் அவனிடம் சொன்னேன், ஏதோ நான் பெரும் குற்றத்தை செய்வதாக என்னைப்பற்றி மேலிடத்துக்கு ரிப்போட் எழுத துணிந்தான்... அதுக்காகத்தான் அவனுக்கு சயனைடு ஸ்காட்ச்சை குடிக்கவைதேன்.'
'டாக்டர் இறுதியாக ஒரு கேள்வி ? அவர்கள் என்னத்தான் சொல்லி இருப்பார்கள்..?"
"யாருக்கு தெரியும்?"
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.