எல்.ஜோதிகுமாரின் 'அசோகமித்திரனின் 18ஆவது அட்சக்கோடு: ஒர் கலை தரிசனம்? இன்னும் சில எழுத்துக்கள்' பற்றி.. - வ.ந.கிரிதரன் -
நூலை பெற்றுக்கொள்வதற்கு: சவுத் விஷன் புக்ஸ், 491-B, G2 - ஓமேகா, பிளாட்ஸ், தரைத்தளம், நான்காம் இணைப்புச் சாலை, சதாசிவ நகர், மடிப்பாக்கம் , சென்னை - 600 091 மின்னஞ்சல் முகவரி - southvisionbooks@!gmail.com | தொலைபேசி இலக்கம் - 94453 18520

எழுத்தாளர் எல்.ஜோதிகுமாரின் எழுத்துகள் பதிவுகள் வாசகர்களுக்கு அந்நியமானவை அல்ல. பதிவுகள் இணைய இதழில் இவரது கலை,இலக்கிய மற்றும் அரசியற் கட்டுரைகள் தொடர்ச்சியாக வெளிவருகின்றன. இலங்கை, உபகண்ட மற்றும் சர்வதேச அரசியலை மையமாகக் கொண்ட கட்டுரைகள், இலக்கிய ஆளுமைகளைப் பற்றிய கட்டுரைகள், மலையக மக்களின் வரலாறு , இலக்கியம் பற்றிய கட்டுரைகள் இவரது பன்முக ஆளுமையின் பிரதிபலிப்புகள்.
ஜோதிகுமார் மலையகத்திலிருந்து வெளியான 'தீர்த்தக்கரை' ஆசிரியர் குழுவில் இருந்தவர். பின்னர் வெளியான 'நந்தலாலா' சஞ்சிகையின் ஆசிரியராகவும் இருந்தவர். இவ்விரு சஞ்சிகைகளும் மலையகத்தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமல்ல, இலங்கைத் தமிழ் இலக்கியத்திற்கு , உலகத்தமிழ் இலக்கியத்திற்கு மிகுந்த பங்களிப்பைச் செய்த சஞ்சிகைகள்.
தற்போது ஜோதிகுமார் பதிவுகளில் எழுதிய கட்டுரைகளின் ஒரு தொகுதி சவுத் விசன் புக்ஸ் மற்றும் நந்தலாலா பதிப்பக வெளியீடாக 'அசோகமித்திரனின் 18ஆவது அட்சக்கோடு: ஒர் கலை தரிசனம்? இன்னும் சில எழுத்துக்கள்' என்னும் தலைப்பில் நூலுருப்பெற்றுள்ளன.
இக்கட்டுரைத்தொகுப்பில் பேராசிரியர் கா.சிவத்தம்பி, மலையகத்தமிழ் எழுத்தாளர் சி.வி.வெலுப்பிள்ளை போன்ற ஆளுமைகள் பற்றிய கட்டுரைகளுடன் ஜெயமோகன், அசோகமித்திரனின் நாவல்கள் (ரப்பர், 18ஆவது அட்சக்கோடு) பற்றிய இலக்கியத் திறனாய்வுகளும் இடம் பெற்றுள்ளன.




நிலாவெளியின் கடற்கரைமணல்கள் அலைகள் தழுவிய ஈரங்களை உறிஞ்சி,எவர் பாதங்களும் படாமல் சிவந்துபோயுள்ளன. "அவற்றின் அழகு குலையாமல் அப்படியே இருக்கட்டும்" என்றபடி அந்த நீருக்கும், மண்ணுக்குமான அந்தக்காதல் ஸ்பரிசங்களைக்குழப்பாமல் எம் விழிகளை அந்தப்பரந்த வெளிக்குள் பறக்கவிட்டு அந்த உலகை, அந்த வாழ்வை, அந்த உயிர்மூச்சுக்களின் அடிநாதங்களை முகர்ந்தபடி நாமும் அந்த மணல்களின் மடிக்குள் கட்டுண்டு புரண்டு, மறுபடி உயிர்த்து அந்தக்கடலைக்கண் வெட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தபோது ஒருவர் அவரது மாடுகளை மேய்த்துக்கொண்டு இந்தக்கடற்கரை வழியாக பட்டி திரும்புகின்றார். சிவந்திருந்த ஈரமண்ணில் மாடுகளின் கால்கள் பதிகின்றன. சோடிகட்டி வருகின்ற அந்தப்பாதங்கள் தொட்ட அடையாளங்களும், அந்திவந்து விழுந்த அந்தக்காட்சியும், "இன்னும் இந்த மணலிலேயே இருந்துவிடு" என்றது.
துஞ்சுதல் என்ற சொல்வழக்கு ஒன்று எம்மிடத்தில் புழக்கத்தில் இருக்கின்றது. இது அதிகம் உப உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளிடம் புழக்கத்தில் உண்டு. அதுவும் மழைக் காலத்தில் அதிகம் பாவிப்பர் இந்த சொல்லாடலை. கன மழை பெய்து பயிர் உள்ள தரையில்(தோட்டத்தில்) ஒரு நாளிற்கு மேலாக நீர் தேங்கினால் தரையில் உள்ள பயிரின் வேர்கள் அழுகி பயிர் செத்துவிடும். இது அதிகம் வெங்காயம் மிளகாய் இன்ன பிற உப உணவுச் செய்கையில் அதிகம் பாதிப்புகளை ஏற்படுத்தும். முழுப் பயிரும் நாசமாகிவிடும். ஆனால் யாழ்ப்பாணத்து மண் அதிலும் சிறப்பாகச் சிவப்பு மண் சில இடங்களில் உள்ள இருவாட்டி மண்ணில் இருக்கும் பயிர்கள் இவ்வாறு கன மழையினால் அதிகம் துஞ்சுதல் என்றதாக பயிர்கள் செத்துப் போவது இல்லை. காரணம் பயிரின் வேர் பகுதி 24 மணி நேரம் என்றாக நீரால் சூழப்பட்டு இருப்பதற்கான வாய்ப்புகள் இங்கு இல்லாததே காரணம். இதனால்தான் இந்த வகை மண்ணில் விவசாயம் செய்பவர்கள் அதிகம் கன மழை போன்றவற்றினால் பயிர்கள் நாசமாகி பொருளாதார இழப்புகளை சந்திப்பதில்லை. பொருளாதார நலிவிற்குள் உள்ளாகுவதில்லை.
உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனையும் ‘மானுடம்’ என்ற பொதுப்பண்பில் அடக்கலாம். இருப்பினும் மனிதனின் ஒவ்வொரு செயல்பாடுகளான உண்ணுதல், நடத்தல், பார்த்தல், சிரித்தல், சிந்தித்தல், கற்றல், கவனித்தல் போன்றவற்றை ஆய்ந்து கவனித்தால் ஒவ்வொருவரிடமும் பல்வேறு நடத்தை முறைகளும் இயல்புகளும் வேறுபட்டு காணப்படுகின்றன என்பதை உணர முடியும். மனிதன் ஒருவர் மற்றவரிடமும், ஒவ்வொரு சூழலிலும் நடந்து கொள்ளும் விதம் அல்லது முறை ‘நடத்தை’எனப்படும். மனிதப் பண்புகள் அம்மனிதரின் நடத்தை முறைகளை ஆராயும் துறையே உளவியலாகும். அவ்வகையில் சங்க இலக்கிய நூலான கலித்தொகையில் தானே தனது மனநிலையை வெளிப்படுத்துதல், மற்றவர்களின் மூலம் தன் மனநிலையை வெளிப்படுத்துதல் என்ற இருவகையில் தலைவியின் உளவியலை ஆராய முடியும். பிற பெண் மாந்தர்களான தோழி, செவிலி ஆகியோரின் கூற்று பாடல்கள் வழி தலைவியின் எண்ணங்களையும் செயல்பாடுகளையும் உளவியல் அடிப்படையில் எடுத்தியம்புவதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது.
உலகில் வாழும் உயிரினங்களிலிருந்து மனிதனை வேறுபடுத்துவது ஆறாம் அறிவாகிய பகுத்தறிவுதான். அந்தப் பகுத்தறிவைப் பிரயோகிப்பதற்கு எமக்குச் சாத்தியமான வழியாக அமைந்ததுதான் கல்வி. அறிவுசார்ந்தோர் சமூக முன்னேற்றத்திற்காகச் சேர்த்துவைத்த தேட்டம்தான் அது. கல்வியின் மூலமே ஒரு மனிதன் உலகை அறிந்து கொள்கிறான். உலகத்து மாந்தர்களையும் வாழவேண்டிய வழிவகைகளையும் அறிகிறான். கல்வியும் பகுத்தறிவுச் சிந்தனையும் இல்லையென்றால் இத்தனை வேகமாக மனிதன் முன்னேறியிருக்க முடியாது. கல்வி மிகப்பெரிய ஒரு பாய்ச்சலை மனித சமூகத்தில் நிகழ்த்தியிருக்கிறது.



1964 இல் எம்.டி.வாசுதேவன் நாயரால் எழுதப்பெற்ற இந்த மலையாள நாவல் அப்போது ஒரு இலட்சம் பிரதிகள் விற்பனையைக் கண்டது. தமிழில் பல மொழிபெயர்ப்புகளைக் கண்டபோதிலும், கடைசியாக 2017 இல் காலச்சுவடு பதிப்பாக ரீனா ஷாலினி அவர்களால் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளது. ரீனா ஷாலினி மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டவர்.

தமிழ்ச் சமூகத்தில் அறம் சார்ந்த கருத்துக்கள் நெடுங்காலமாகவே இருந்து வரும் ஒன்று. பண்பட்ட வாழ்வியலைத் தொடங்கிய காலந்தொட்டு அறத்திற்கும் அறம் சார்ந்த வாழ்வியல் முறைக்கும் தமிழ்ச்சமூகம் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளன . அத்தகைய முன்னெடுப்புகளின் தொடர்ச்சியைத் திருக்குறளில் நாம் காண்கிறோம். குறிப்பாக, அறத்தின் மையமாக இருக்கும் இல்லறம், அந்த இல்லறத்தின் செயல்பாடு எவ்வாறு அமைந்திருக்க வேண்டும்? இல்லறத்தினுடைய மேன்மைகள் எவை? இல்லறத்தின் தேவை என்ன? என்பன போன்ற சிந்தனைகள் இன்றைய காலத்திற்கும் பொருந்தும் விதமாக அன்றே திருக்குறளில் சொல்லப்பட்டுள்ளன. அவற்றைக் குறித்த ஒரு பார்வையை இந்தக் கட்டுரை முன்வைக்கிறது
வழமைபோல இந்த வருடமும் பனி கொட்டத் தொடங்கிவிட்டது. தரை எல்லாம் பனி வயலாகக் காட்சி தருகின்றது. மரங்கள் எல்லாம் இலை உதிர்த்து வெண்பனியால் போர்வை போர்த்திருக்கின்றன. புலம்பெயர்ந்த பின் இப்படியான காட்சிகளை ஒவ்வொரு வருடமும் பார்த்ததால்தான், புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் வாழும் நிலச்சூழலையை வைத்து ‘ஆறாம் நிலத்திணை’ பனியும் பனி சூழ்ந்த பகுதியும் என்ற ஆய்வுக் கட்டுரையை நான் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டுக்காக எழுதினேன். சங்க இலக்கியத்தில் வரும் ஐந்து நிலத்திணைகளுடன் ஆறாம் நிலத்திணையாக சான்றோர் இதை ஏற்றுக் கொண்டார்கள்.

என்னுடைய முதலாவது மின்னஞ்சல் கணக்கை ஆரம்பித்த நாள் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அப்போது, எனக்கு ஐந்து வயது, கூகிளுக்கு ஏழு வயது, என்னுடைய மூத்த அக்கா பல்கலைக்கழகத்துக்காக வீட்டைவிட்டு வெளியேறத் தயாராகிக் கொண்டிருந்தா. அதற்கு முதல் வருடம்தான் இந்தப் புதிய மின்னஞ்சல் சேவையை கூகிள் அறிமுகப்படுத்தியிருந்தது. எனக்குப் பிடித்த அக்காவுடன் நான் தொடர்பில் இருப்பதற்கு மின்னஞ்சலொன்றை உருவாக்குவது நல்லதென நாங்கள் நினைத்தோம். இது, என்னுடைய நண்பர்களில் பலர் அவர்களுடைய சொந்த மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்குவதற்குப் பல வருடங்களுக்கு முன்னையதானது, இணைய உலகுக்கான என்னுடைய நுழைவு 2005ஆம் ஆண்டு இலையுதிர்காலத்திலேயே ஆரம்பித்துவிட்டது.

நல்லன நடக்க வேண்டும்
அந்த புடாபெஸ்ட் ஹொட்டேல் அறையில் நடு நிசியில் படுக்கையிலிருந்து எழுந்தபோது பசியில் வயிறு குடைந்தது. அவசரமாக எழுந்து குளித்துவிட்டு நாங்கள் வெளியே வந்தபோது மூடிய உணவுக் கடைகள் எங்களை வரவேற்றன. கடந்த ஆறு மாதங்களாக மெல்போனில், இஸ்ரேல் பாலஸ்தீன் போரினால் நான் புறக்கணித்திருந்த மெக்டொனாலாட் மட்டுமே இரவில் எங்களுக்கு அமுதசுரபியாகியது. நடு இரவு கடந்துவிட்டது என்பதை தொலைபேசி காட்டியபோதும் மின்சார வெளிச்சத்தில் அந்த நகர்ப்பகுதி அமோகமாக குளித்ததால் இரவு பகலாகத் தெரிந்தது. எங்கள் மேலோட்டமான பார்வைக்கு ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட் பாதுகாப்பான நகராகவும் தெரிந்தது.
உலகத்தில் வாழ்ந்த, வாழ்கின்ற, வாழும் மக்கள் அனைவரும் ஏற்றும் அதனைப் பின்பற்றக் கூடிய வகையில் வாழ்வியல் கருத்துக்களைக் கூறும் நூலாகத் திருக்குறளைப் படைத்துள்ளார் வள்ளுவர். 'உலகப் பொதுமறை' எனப் போற்றற்குரிய திருக்குறளில் கூறாத கருத்துக்கள் ஒன்றுமில்லை என்று போற்றத்தகும் சிறப்பால். 'எல்லாப் பொருளும் இதன்பால் உள' என்றனர். இத்தகு சிறப்புகள் பலவும் உடைய திருக்குறளில் “இல்லறம்” என்பது குறித்துக் கூறப்பட்டுள்ள வாழ்வியல் கருத்துக்களைத் தொகுத்துரைப்பது இதன் நோக்கமாகும்.
பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









