சனாதன தர்மம் பற்றிச் செயற்கை நுண்ணறிவுடன் நீண்டதோர் உரையாடல்! உரையாடியவர் வ.ந.கிரிதரன்

“கறிமுசா’: (ஓடை – iii) - ஜோதிகுமார் -

“தங்க வேலாயுதபுரம்” – “அங்குதான் காணி வாங்கி இருக்கின்றேன். காட்டு தொங்கல். யானைகள் அலைந்து திரியும் காட்டு தொங்கல்”.
கிட்டத்தட்ட ஐந்து வருட காலத்தின் பின் இவனுடன் மீண்டும் பயணிக்கின்றேன்.
இந்த நான்கைந்து வருடங்களில் இவனில் எவ்வித மாற்றத்தையும் கண்டேனில்லை. அண்மையில் கூட முல்லை நினைவேந்தல் நிகழ்வுக்கு சென்று கண்ணீர் வடித்து விட்டு வந்திருந்தான்: “இடத்தை விட்டு வெளியே வரவே மிகுந்த கஷ்டப்பட்டு போனேன். இரண்டு மணி நேரம் குடும்பத்தாருடன் ஆட்டோவில்… அவ்வளவு சனம் அப்பிப்போய் இருந்தது”. கேட்டிருந்தேன்: “மற்ற நினைவேந்தல் தினங்களுக்கு நீங்கள் செல்வதில்லையா?
“இல்லை. மாவீரர் நாள்தான் என்னை உலுக்கி பிடிக்கும் தினம். எனது அருமை தோழர்கள் - இதயத்தை வருடும் எனது நண்பர்கள் - தங்கள் இன் உயிரை வந்த இந்த பெருநாள் - அடடா எப்படிப்பட்ட தோழர்கள்! எப்படிப்பட்ட வாழ்க்கை அது…”.
ஆனால் ‘காணிக்குச் சென்று வருவோமா’ என்பதே அவனது முதல் கோரிக்கையானது. ஒருவேளை தான் மிக அண்மையில் வாங்கி போட்டிருந்த அந்தக் காணியை எனக்குக் காட்ட அவன் ஆசைப்பட்டிருக்க கூடும் - அல்லது அவனுக்கே அங்கே செல்ல வேண்டிய ஒரு தேவையும் எழுந்திருக்கலாம். இருந்தும் இவை அனைத்தும் நான் சம்பந்தப்படாதது. ஆனால் உடனடியாக ஒப்புக் கொண்டேன். ‘காட்டு தொங்கல்’ என்ற பதத்தால் நான் பெரிதும் கவரப்பட்டேன்.
‘கடல் குளிப்பு’ என்று ஏற்கனவே நிச்சயித்திருந்த அன்றைய தினத்தை மாற்றி இவனுடன் புறப்பட்டேன்.
எஸ்.ஜானகி - தன் கூவலை நிறுத்திய இசைக்குயில்!

அடுத்தடுத்துத் தமிழ்த்திரையுலகின் ஆளுமைகளை இழந்து கொண்டிருக்கின்றோம். இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்கியராஜா என்று இன்று தென்னிந்தியாவின் இசையரசி என்றழைக்கப்படும் பாடகி எஸ்.ஜானகியை இழந்திருக்கின்றோம். இவர் பிரிவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவர்தம் துயரை நானும் பங்குபோட்டுக்கொள்கின்றேன். ஆழ்ந்த இரங்கல்.
இசை, நடிப்பு, எழுத்து, பாட்டு, பேச்சு எனப் பல் துறைகளில் எம் இன்பதுன்பங்களில் பங்கு பற்றும் கலைஞர்கள் தம் கலைப்படைப்புகள் மூலம் எம் வாழ்வில் பின்னிப்பிணைந்தவர்கள். எம் இருப்பில் அவர்களுக்கு முக்கியமானதோர் இடமுண்டு. இவர்கள் மறைந்தாலும் இவர்கள் வழங்கிய கலைப்படைப்புகளுக்கு அழிவில்லை. அவை நிரந்தரமானவை. அவ்வகையில் தாம் சிறந்து விளங்கிய கலைகளூடு இவர்கள் மானுட சமுதாயத்தின் வரலாற்றில் தொடர்ந்தும் பயணிப்பார்கள்.
ஜானகி அவர்கள் பாடிய பாடல்களில் அடிக்கடி நான் கேட்கும், உடனே நினைவுக்கு வரும் பாடல்கள் சிலவற்றைக்கீழே தந்திருக்கின்றேன். இவை போன்ற பாடல்கள் இன்னும் பல உள்ளன. இவை உடனடியாக எம் நினைவுக்கு வந்த பாடல்கள். கலைஞர்களுக்குச் செய்யும் சிறப்பான அஞ்சலி அவர்களின் படைப்புகளூடு அவர்களை நினைவு கூர்வதுதான். ஜானகி அவர்களியும் அவர்கள்தம் பாடல்களூடு நினைவு கூர்வோம். [டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி ]
அன்னக்கிளி உன்னைத்தேடுதே - https://www.youtube.com/watch?v=MeJ-Av4kMmk
சிங்கார வேலனே வேலா - https://www.youtube.com/watch?v=kPKtm5zLgbo
செந்தூரப் பூவே - https://www.youtube.com/watch?v=G2QfrDZSNIM
இஞ்சி இடுப்பழகா - https://www.youtube.com/watch?v=Y7kaMRHCD6A
எந்தன் பருவத்தின் கேள்விக்குப் பதில் என்ன சொல்லடி ராதா - https://www.youtube.com/watch?v=-w2dqvKUJNM
இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன் - https://www.youtube.com/watch?v=MTYKV1plryA
ஊரு சனம் தூங்கிடுச்சு - https://www.youtube.com/watch?v=WrBIA5WPDDU
ராசாவே உன்னை நம்பி - https://www.youtube.com/watch?v=eXP2G8ocziU
உலகம் அழகுக் கலைகளின் சுரங்கம் - https://www.youtube.com/watch?v=Es2ya-V7qC8
ஜல் ஜல் என்னும் சலங்கையிலே - https://www.youtube.com/watch?v=X2O7APS-l5g
பூஜைக்கு வந்த மலரே வா! - https://www.youtube.com/watch?v=bpb2XiTAexo
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் - https://www.youtube.com/watch?v=04nCCY7XBZA
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் - https://www.youtube.com/watch?v=vpArdLrhOIE
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும் - https://www.youtube.com/watch?v=hagjLSzRizM
'இசையரசி' எஸ்.ஜானகி பற்றி விக்கிபீடியா:
எஸ். ஜானகி (S. Janaki, 23 ஏப்ரல் 1938 – 11 சூலை 2026) இந்தியாவின், புகழ்பெற்ற திரைப்படப் பாடகியாவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்படப் பல இந்திய மொழிகளில் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர். பல பாடல்களைத் தாமே எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார். நான்கு முறை தேசிய விருது பெற்றவர். இவர் "ஜானகியம்மா" என்று மரியாதையுடன் குறிப்பிடப்படுகிறார், மேலும் இந்தியாவின் மிகச் சிறந்த, பிரபலமான பின்னணிப் பாடகர்களில் ஒருவர். இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ், இந்தி, ஒடியா, பெங்காலி, உள்ளிட்ட 17 மொழிகளில் தனிப்பாடல்கள் பாடியுள்ளார். திரைப்படங்கள், ஆவணப்படங்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி என 50,000 பாடல்களைப் பதிவு செய்துள்ளார். மராத்தி, துளு, உருது, குஜராத்தி, பஞ்சாபி, கொங்கனி, அசாமி, சிந்தி, ஆங்கிலம், ஜப்பானிய, அரபு, ஜெர்மன், சிங்களம் போன்ற மொழிகளிலும் பாடியுள்ளார். இருப்பினும் இவரது வாழ்க்கையில் அதிக எண்ணிக்கையிலான பாடல்கள் கன்னடத்தில் இடம்பெற்றிருந்தன. 1957-ஆம் ஆண்டில் விதியின் விளையாட்டு என்ற தமிழ்த் திரைப்படத்துடன் துவங்கி, இவரது இசை வாழ்க்கை ஆறு தலைமுறைகளைக் கண்டுள்ளது.
தென்னிந்தியாவின் "இசையரசி" என்று அழைக்கப்படும் ஜானகி, நான்கு தேசிய திரைப்பட விருதுகளையும் 33 வெவ்வேறு மாநில திரைப்பட விருதுகளையும் வென்றுள்ளார். மைசூர் பல்கலைக்கழகத்திடமிருந்து, முனைவர் பட்டமும், தமிழ்நாடு அரசிடமிருந்து கலைமாமணி விருதும், கர்நாடக அரசிடமிருந்து கர்நாடக ராஜயுத்சவா விருதும் பெற்றுள்ளார். 2013 ஆம் ஆண்டில், இந்திய அரசு அறிவித்த பத்ம பூஷன் விருதை ஏற்க மறுத்துவிட்டார். மிகவும் தாமதமாக வந்ததென்றும் தென்னிந்திய கலைஞர்களுக்கு தகுந்த அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
பல்துறை பாடகர்களில் ஒருவரான எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோருடனான இவரது கூட்டணி அதிகம் பேசப்படுகிறது. 1960, 1970, 1980களில் பி. பி. ஸ்ரீனிவாஸ், எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. ஜே. யேசுதாஸ், பி. ஜெயச்சந்திரன் மற்றும் ராஜ்குமார் ஆகியோருடன் அதிக எண்ணிக்கையில் திரைப்பாடல்கள் பாடினார். இவர் கிட்டத்தட்ட அனைத்து வகை பாடல்களிலும் பாடியுள்ளார். அக்டோபர் 2016-இல் திரைப்படங்கள் மற்றும் மேடைக் கச்சேரிகளில் பாடுவதிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இருப்பினும், திரைப்படத் துறையினர் அன்பிற்கிணங்க இவர் 2018 ஆம் ஆண்டில் பண்ணாடி என்ற தமிழ் படத்திற்காக மீண்டும் பாட வந்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
ஜானகி தெலுங்குக் குடும்பத்தில் பிறந்தவர். ஆந்திராவின், குண்டூர் மாவட்டத்தில் பள்ளபட்லா என்ற ஊரில் ராமமூர்த்தி - சத்யவதி தம்பதிகளுக்கு பிறந்தார். சிறு வயதிலேயே பாடத்தொடங்கி விட்டார். நாதசுர மேதை பைடிசாமி என்பவரிடம் முறையாக இசைப் பயிற்சியைப் பெற்றார். சென்னைக்கு இடம்பெயர்ந்த ஜானகி ஏவிஎம் ஸ்டூடியோவில் இணைந்து திரைப்படத்துறையில் நுழைந்தார். 1957 ஆம் ஆண்டில் வெளிவந்த விதியின் விளையாட்டு என்ற படத்தில் இடம்பெற்ற பெண் என் ஆசை பாழானது ஏனோ என்ற பாடல் இவரது முதல் பாடல் ஆகும். அடுத்த நாளே அவருக்கு தெலுங்குப் படத்தில் பாடும் வாய்ப்புக் கிடைத்தது. "எம்எல்ஏ" என்ற பட்டத்தில் நீயாசா அடியார் என்ற பாடலை கண்டசாலாவுடன் இணைந்து பாடினார்.
இதைத் தொடர்ந்து பல படங்களில் பாடும் வாய்ப்புக் கிட்டியது. 25 ஆண்டுகளில் தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல், கொங்கணி, துளு, சௌராஷ்டிரம், இந்தி, வங்காளம், சமஸ்கிருதம், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடினார்.
1992 ஆம் ஆண்டில் இலங்கை சென்றிருந்தபோது இவருக்கு ஞான கான சரஸ்வதி என்ற பட்டம் வழங்கப்பட்டது. தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பக்திப் பாடல்களைத் தாமே எழுதி இசையமைத்துப் பாடியுள்ளார். மௌனப் போராட்டம் என்ற தெலுங்குப் படத்திற்கு முதன் முதலில் இசையமைத்திருக்கிறார்.
குடும்பம்
இவரின் கணவர் ராம் பிரசாத். தனது மகன் முரளி கிருஷ்ணாவுடன் சென்னையில் வாழ்ந்து வருகிறார். முரளி கிருஷ்ணா சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.[5][6] ஜானகி 1959 இல் வி. ராம்பிரசாத்தை மணந்தார். அவர் தனது இசை வாழ்க்கையை ஊக்குவித்தார். மேலும் இவரது பெரும்பாலான பாடல் பதிவுகளின் போது அவர் உடன் சென்றார். இதய நிறுத்தம் காரணமாக 1997 இல் அவர் இறந்தார் . இவர்களது ஒரே மகன் முரளி கிருஷ்ணா ஹைதராபாத்தில் வசிக்கிறார். அவரது மனைவி உமா முரளிகிருஷ்ணா, சென்னையிலுள்ள ஒரு பரதநாட்டிய, குச்சிப்புடி, நடனக் கலைஞர் ஆவார். இவர்களுக்கு வர்ஷா மற்றும் அப்சரா என்ற 2 மகள்கள் உள்ளனர்.
ஜானகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 இந்திய மொழிகளில் சரளமாக உரையாடவும் எழுதவும் தெரிந்தவர்.
விருதுகள்
தேசிய விருதுகள் 4
கேரள மாநில அரசு திரைப்பட விருதுகள் 11
நந்தி விருதுகள் 10
தமிழக திரைப்பட விருதுகள் 6
ஒடிசா மாநில திரைப்பட விருதுகள் 1
மொத்தம் 32
1986 இல் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது
2002 இல் கேரளா மாநில சிறப்பு விருது
நான்கு தடவைகள் சிறந்த பாடகிக்கான தேசிய விருது
1980 இல் மலையாளப் படம் ஒன்றிற்கும், 1984 இல் தெலுங்குப் படம் ஒன்றிற்கும் தேசிய விருது
பதினான்கு முறை கேரள மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருது
ஏழு தடவைகள் தமிழ்நாடு அரசின் சிறந்த பாடகிக்கான விருது
பத்து தடவைகள் ஆந்திர மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருது
பத்மபூஷண் விருது மறுப்பு -[ ௭ஸ் ஜானகி 2013 ஆம் ஆண்டு தனக்கு கிடைக்கவிருந்த பத்ம பூஷண் விருதை ஏற்க மறுத்து விட்டார். இவ்விருது தனது 55 ஆண்டுகால அனுபவத்திற்கு தாமதமாக வந்துள்ளது ௭ன கூறிவிட்டார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் அறிக்கை மற்றும் பாலியல்ரீதியிலான அழுத்தங்கள், வன்முறைகள் பற்றியும்...
அண்மைக்காலமாகப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களால் புரியப்படும் பாலியல் வன்முறைகள் பற்றிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துச் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவிக்கொண்டிருக்கின்றன. இதில் எவ்வளவு தூரம் உண்மை, பொய் என்பது பூரண விசாரணைகளின் பின்புதான் தெரிய வரும். அண்மையில் கூடப் பேராதனைப் பல்கலைககழகத்தில் பேராசிரியர் ஒருவர் இவ்விடயத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்டுத் தண்டிக்கப்பட்ட செய்திகளை அறிந்திருக்கின்றோம்.
பல்கலைக்கழகங்களில் மட்டுமல்ல அதிகாரம் தலைவிரித்தாடும் அனைத்துத் துறைகளிலும் இந்நிலை இருப்பதை அறிந்திருக்கின்றோம். அரச உதவிகளில் தங்கியிருக்கும் பெண்கள் குறிப்பாக விதவைகள் மீது அவ்வுதவிகளை வழங்குவதற்குப் பொறுப்பான அரசியல் அதிகாரிகளால் பாலியல் ரீதியிலான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதைச் செய்திகள் வாயிலாக அறிந்திருக்கின்றோம். அரசியல்வாதிகளால் இவ்வித அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாகச் செய்திகள் வந்ததை அறிந்திருக்கின்றோம். இப்பொழுது அதிகமாகப் பல்கலைக்கழகங்களில் இவ்விதமான அழுத்தங்கள் மாணவிகள் மீது பிரயோகிக்கப்படுவதாகச் செய்திகள் வருகின்றன.
வ.ந.கிரிதரன் பாடல் - சக்தியும் , பொருளும்! வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5.

[வ.ந.கிரிதரன் பாடல் - சக்தியும் , பொருளும்! வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5. ஓவியம்: சாட்ஜிபிடி வழி வநகி. இப்பாடலை யு டியூப்பில் 'வ.ந.கிரிதரன் பாடல்கள்' சானலில் கேட்டு மகிழலாம். அதற்கான இணைய இணைப்பு - https://www.youtube.com/watch?v=EmO3UvN7Cl4 ' வ.ந.கிரிதரன் பாடல்கள் ' சானலை 'Subscribe' செய்வதன் மூலம் உங்கள் வாசலுக்குப் புதிய பாடல்கள் விரைவாக வந்து சேரும். உங்கள் ஆதரவு 'சான'லின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவிருக்கும்.]
சக்தியும் , பொருளும்!
கண்ணம்மா, என் கண்ணில் உன்தோற்றம்
எண்ணத்தின் விளைவா? இல்லையா கண்ணே!
பொருளென்று ஒன்றும் இல்லை என்றுகூறும்
பவுதிகத்தின் வழிநின்று பார்த்தால் கண்ணே!
அடிப்படைத் துணிக்கைகளும் சக்தியன்றோ கண்ணம்மா!
சக்தியின் நாட்டியமா நம்மிருப்பும் கண்ணம்மா!
கண்ணம்மா, என் கண்ணில் உன்தோற்றம்
எண்ணத்தின் விளைவா? இல்லையா கண்ணே!
ம.ஆச்சின் கவிதைகள் (முன்னாள் தமிழ் நாடு தொல்லியல் துறை மாணவர்) -

1. தொல்லியல் அறிஞர் எஸ். ராஜகோபால்: மண்ணின் மடியில் மறைந்த சரித்திரத்தைக் கண்ணின் ஒளியால் கிளறி எடுத்தவர்!
மண்ணின் மடியில் மறைந்த சரித்திரத்தைக்
கண்ணின் ஒளியால் கிளறி எடுத்தவரே!
திண்ணிய பாறைத் திருவுடம்பில் தூங்கியநற்
பண்ணிய கதைகளைப் பாரறியச் செய்தவரே!
தமிழி எனும்மூத்த தாயவளின் தொன்சுவட்டைப்
அமிழ்தனைய கையால் அசைத்துப் படித்தவரே!
புதையுண்ட காசுகளின் பொன்னான மாண்பையெல்லாம்
சபையேறி அன்று சாற்றி உரைத்தவரே!
வீர நடுகல்லில் விம்மியெழுந்த வீரர்களைச்
சீரான நெஞ்சோடு இங்கு எழுப்பி நிறுத்தியவரே!
'ஆவண' ஏடெல்லாம் உம்முடைய முத்திரையே!
யாவருளர் ஐயா இனிமேல் உம்மைப்போல்?
கல்லெழுத்தைத் தேடிக் களம்நோக்கி ஓடியநற்
காலடிகள் ஓயக் காரணம்தான் ஏனோ?
எல்லோர்க்கும் அச்செழுத்தைக் கற்றுத் தந்துவிட்டுச்
சொல்லாமல் கொள்ளாமல் சோகமாய் மறைந்ததென்ன?
மௌனப் பழமையின் மாமொழியைப் பெயர்த்தவரே!
இன்றுநீரே ஏனோ மௌனமாய் ஆகிவிட்டீர்?
தொன்மை வரலாற்றைத் தொட்டுப் படித்தவரே!
இன்று வரலாறாய் நீரே மாறிவிட்டீர்!
பாறை எழுத்துக்கள் தேய்ந்து அழியலாம்...
பாரில் உம்புகழ் என்றும் அழியாதே!
கண்ணீரில் மூழ்கிக் கசிந்துருகி நிற்கின்றோம்...
நெஞ்சில் நிலைத்தெழுந்த கல்வெட்டே நீரே!
இத்தாலியப் பயணம்! - நடேசன் -

எல்லாப் பாதைகளும் ரோமாபுரியை நோக்கிச் செல்கின்றன என்ற வாசகம், அக்காலத்து ரோம ராச்சியத்தின் முக்கியத்துவத்தை விளக்குவதற்காகச் சொல்லப்படுகிறது. அதைப் போலவே, நாங்கள் ஏற்கனவே கட்டார் வழியாகச் செல்ல திட்டமிட்டிருந்த எங்களது இத்தாலியப் பயணம் திசை மாறியது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது மேற்கொண்டிருந்த போரின் காரணமாக மத்திய கிழக்கு வழியாகச் செல்லும் எங்களது பயணம் ரத்து செய்யப்பட்டதாகவே நினைத்திருந்தோம். ஆனால், இறுதி இரண்டு நாட்களுக்கு முன்பு, மத்திய கிழக்கைத் தவிர்த்து மாற்றுப் பாதையில் விமானப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தகவல் வந்தது: “புறப்படுங்கள்” என்ற அறிவிப்பு.
அவர்களின் திட்டமிடலின்படி, எங்கள் பயணம் மெல்போர்னிலிருந்து தென் பசிபிக் சமுத்திரத்தைத் தாண்டி, சிலி நாட்டின் தலைநகரமான சாண்டியாகோ சென்றது. அங்கிருந்து தென் அமெரிக்கக் கண்டத்தைக் குறுக்காகக் கடந்து, அத்திலாந்திக் சமுத்திரத்தின் மேலாக பறந்து ஸ்பெயின் தலைநகரமான மாட்ரிட் சென்று, பின்னர் ரோம் சென்றடைந்தோம்.
சில நிமிடங்களில் பயணம் குறித்து முடிவு எடுக்க வேண்டிய நிலையில் நாங்கள் தள்ளப்பட்டோம். ஒரு வருடத்திற்கு முன்பே பணம் செலுத்தி பதிவு செய்த பயணத் திட்டம் என்பதால் குழப்பம் அதிகமாக இருந்தது. அந்த நேரத்தில் வரலாற்று நாயகர்களான ஜு லியஸ் சீசர்(Julius Caesar) மற்றும் மார்க் அந்தனி(Mark Antony) நினைவுக்கு வந்ததுடன் அவர்கள் எனது கையை பிடித்து அழைத்தது போன்ற நினைப்பு என்னிடம் எழுந்தது. சியாமளாவின் சம்மதமும் கிடைத்ததால், பயணத்தைத் தொடர முடிவு செய்தோம்.
படித்தோம் சொல்கின்றோம்: மாவை நித்தியானந்தனின் இரண்டு நாடகங்கள்! - முருகபூபதி -

மனிதர்களின் கலை, இலக்கிய ஆர்வம் இயல்பிலேயே ஊற்றெடுப்பது. அந்த ஊற்றை நேர்த்தியாக சமூகத்திற்கு பயன்படும் விதத்தில் நதியாக்குவதில்தான் அவர்களின் ஆளுமைப்பண்பு வெளிப்படுகிறது. அத்தகைய வற்றாத ஓடும் நதிதான் எங்கள் மாவை நித்தியானந்தன். இவ்வாறு சில வருடங்களுக்கு முன்னர், மெல்பனில் நண்பர் மாவை நித்தியானந்தனின் பவள விழா நடைபெற்ற வேளையில் எழுதிய ஆக்கத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
மாவை நித்தியானந்தன், மட்டக்களப்பில் இயங்கிவரும் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருதும், கம்பன் கழகத்தின் மாருதி விருதும் பெற்றிருப்பவர். அண்மையில் மாவை நித்தியானந்தன் வெளியிட்டிருக்கும் இரண்டு நாடக நூல்களப்பற்றி எழுதும் போது இந்த வரிகள் நினைவுக்கு வருகின்றது.
இனிச்சரிவராது, ஐயா லெக்சன் கேட்கிறார் ஆகிய இரண்டு நூல்களும் மாவை நித்தியின் புதிய வரவுகள். ஏற்கனவே மேடையேற்றப்பட்ட நாடகங்கள்தான் இவை இரண்டும். நடிப்பதற்காக எழுதப்படும் நாடகங்கள், படிப்பதற்காக எழுதப்படும் நாடகங்கள் என இரண்டு வகை இருப்பதாக அறிஞர் மு. வரதராசன் ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டுள்ளார். மாவை நித்தியின் நாடகங்களும் அத்தகையன.
ஐயா லெக்சன் கேட்கிறார்
ஐயா லெக்சன் கேட்கிறார் நாடகம் 1973 ஆம் ஆண்டு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில், கட்டுப்பெத்தை பல்கலைக்கழகத்தின் தமிழ் மன்றத்தின் விழா நடந்தவேளையில் அங்கு மேடையேறியது. அன்று அங்கே பார்த்த இந்த நாடகத்தை பலவருடங்களுக்குப்பின்னர் மெல்பனிலும் பார்த்திருக்கின்றேன்.
ஒரே நாடகப்பிரதியில் இரண்டு நாடுகளிலும் வேறு வேறு கலைஞர்கள் பங்கேற்ற நாடகம் இது.
சிறுகதை: மாறவேண்டியது யார்? - பாலமுருகன். லோ -

படுக்கையறையின் மெல்லிய வெளிச்சத்தில் ரேகா தன் மகன் விஷால் பக்கம் திரும்பிப் படுத்திருந்தாள். திடீரென அவளது தூக்கம் சற்றே கலைந்தது. விழித்தவள் தன் மகனைப் பார்த்தாள்; அவளுக்குள் பதட்டம் எழுந்தது. விஷால் தன் உள்ளங்கையை உயர்த்தி, வலது ஆள்காட்டி விரலால் தொடர்ந்து மேல்நோக்கித் தள்ளிக்கொண்டே இருந்தான். இதைக் கவனித்த ரேகா, அவனது முகத்தை உற்றுப் பார்த்தாள். விஷால் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு, அதை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டிருந்தான்.
பதறிப் போன ரேகா அவனை உலுக்கினாள்.
“கண்ணா விஷால், எழுந்திரு.”
“என்ன ஆச்சு உனக்கு?”
“டேய், கண்ணை முழி,” என்று அவனிடம் இரண்டு மூன்று முறை கூப்பிட்ட பிறகு, விஷால் மெதுவாகக் கண்களைத் திறந்தான்.
“என்னம்மா… என்ன ஆச்சு? ஏன் என்னை எழுப்பினீங்க?” என்றான்.
“கண்ணு, நீ தூக்கத்துல என்ன பண்றேன்னு தெரிஞ்சுதா?”
“ஏம்மா, தூக்கத்துல அப்படி என்ன பண்ணியிருப்பேன்? நல்லா தூங்கியிருப்பேன்,” என்றான்.
“இல்லடா விஷால், நீ தூங்கியிருந்தா நான் ஏன் உன்னை எழுப்பப் போறேன்? நீ தூங்கு, காலையில பேசிக்கலாம். உங்க அப்பாவும் ஊருக்கு போனவரு; காலையில வந்துடுவாரு. நீ தண்ணி குடிச்சிட்டு படு,” என்றாள் ரேகா.
FeTNA இன் 39ஆவது மாநாடு! - ஶ்ரீரஞ்சனி -

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையினரின் (FeTNA) மாநாடு, ரொறன்ரோவில் நிகழ்ந்திருந்தபோது, அதில் பங்குபற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தது. அதற்காக மொழிபெயர்ப்பு வேலைக்கூடாக என் சினேகிதிகளில் ஒருவராக மாறியிருந்த வசந்திக்குத்தான் நன்றி கூறவேண்டும். அது நிகழ்ந்து, 13 வருடங்களுக்குப் பின்னர், இப்போது நியூஜேர்சியில் நிகழ்ந்திருந்த அவர்களின் 39வது மாநாட்டில் கலந்துகொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்திருந்தது. வழமைபோல இந்த மாநாடும் ஜூலை இரண்டாம், மூன்றாம், நான்காம் திகதிகளில் நிகழ்ந்திருந்தது.
மறைமலை அடிகள் அவர்களையும், இராஜராஜ சோழனையும் முதன்மைப்படுத்தியிருந்த நிகழ்ந்த இம்மாநாட்டில், ‘சமகாலத் தமிழ் இலக்கியம் - துவக்கமும், திசைகளும், போக்குகளும்’ என்ற நிகழ்ச்சியுடன் என் முதல் நாள் ஆரம்பமானது. (துவக்கமா, தொடக்கமா என்ற ஆய்வுக்குள் செல்வதற்கு நான் விரும்பவில்லை.) நிகழ்ச்சியை ஆரம்பித்துப் பேசிய சுபா காரைக்குடி அவர்களினதும், தொகுத்தளித்திருந்த அருள்ஜோதி சுப்பிரமணியம் அவர்களினதும் தமிழும், சொற்கோர்வைகளும் மிகவும் அழகானவையாக இருந்தன. புதுமைப் பித்தனின் கதைகளைப் பற்றிப் பேசிய பெருந்தேவி அவர்களின் பேச்சு, அந்தக் கதைகளை மீளவும் வாசிக்கவேண்டுமென்ற தூண்டலைத் தரும் சிறப்பான பேச்சாக அமைந்திருந்தது. நகைச்சுவை பற்றிப் பேசிய சாம்ராஜ் அவர்கள் குறிப்பிட்டிருந்த உதாரணங்கள் நகைச்சுவையானவையாக எனக்கிருக்காததால், இலக்கியத் தோட்ட நிகழ்வொன்றில் அவர் பேசிய பேச்சை ரசித்ததுபோல, அதை என்னால் ரசிக்க முடியவில்லை. ஈழத்து எழுத்தாளர்கள் ஏன் போரைப்பற்றி மீளமீள எழுதுகிறார்கள் என்பது பற்றி தமிழ்நதி அவர்கள் உணர்ச்சிகரமாகப் பேசினார். (நான் அங்கிருந்ததாலோ அல்லது என் எழுத்துகளை வாசிக்காததாலோ அப்படி எழுதுபவர்களின் பெயர்களில் என் பெயரையும் சேர்த்துக்கொண்டார். போரின் கொடுமையை நேரில் பார்க்காதபடியாலும், வேறு சில காரணங்களாலும் நான் போரைப் பற்றி எழுதுவதில்லை என்பதையும் இதில் சொல்லவேண்டும்.) அத்துடன் புலம்பெயர் எழுத்தாளர்களின் படைப்புகள் என்ற பிரிவில், ஈழத்திலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்திருப்பவர்களின் படைப்புகளும் அடங்குவதே சரியானது என்றார். ரொறன்ரோவில் பெற்றுக்கொள்ள முடியாமலிருந்த தமிழ்நதியின் இரு நூல்களை நியூஜேர்சியில் வைத்துப் பெற்றுக்கொண்டதில் மகிழ்ச்சியாக இருந்தது.
சிறுகதை: யானைகளும் மனிதர்களும் - ஜோதிகுமார் -

பாலத்தை கடந்து, கார், குன்று போல் அமைந்திருந்த, மேட்டு நிலத்தில் ஏற தொடங்கிய போது, சூட்டு முள் அசாதாரணமாக உச்சத்தை தொட்டிருந்தது. திடுக்கிட்டேன். காரை வலப்புறமாய் ஒடித்துத் திருப்பினேன். இரு புறமும் காடுகள். வலப்புறமாய், மற்றொரு கார் வாயை பிளந்து கொண்டு நின்றிருந்தது. எனது காரைப் போல சூடேறி இந்த வனாந்தர பிரதேசத்தில் ஆள் அரவமற்று அகப்பட்டுக் கொண்டிருக்கிறதா என்ன? அந்த காரின ட்ரைவர் கதவுகளின் ஜன்னல் வழியாக யாருடனோ கதைத்தப்படி நின்றிருந்தான்.
இனி, செய்வதற்கு ஒன்றுமில்லை. இறங்கிய போது, மற்ற காரின் சொந்தக்காரன் என்னிடம் மெதுவாக வந்து என்ன பிரச்சினை என்றான். தண்ணீர் இல்லை என்றேன். பரவாயில்லை. இதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று தனது காரில் இருந்து ஒரு பிளாஸ்டிக் போத்தலை இழுத்தெடுத்தான். இந்த ஒரு லீட்டரால் ஆக போவது ஒன்றும் இல்லை என்பதை உணர்ந்தேன். குறைந்தபட்சம் எனது காருக்கு ஆறு லீட்டர் ஊற்றியாக வேண்டும். அன்புடன் நீட்டிய அவனது உதவிக்கரத்தை மறுத்து, காரில் பின் சீட்டில் இருந்த ஐந்து லீட்டர் கேனை எடுத்து கொண்டு பாலத்தை நோக்கி, வந்த வழியே, அந்த நடுக்காட்டில் நடக்க ஆரம்பித்து விட்டேன்.
வெப்ப அலை வீசும் முன்னரே, விடிய தொடங்கியதும் அக்கரைப்பற்றில் இருந்து, புறப்பட்டு வந்திருந்தேன். அந்த இளங் காலையில் சுகமான காற்று வேறு. ஆனால் இப்போது? வாகனம் எப்போது சூடு பெறத் தொடங்கி இருக்கும்? பாதையின் இருபுறமும் அடர்ந்த காட்டு மரங்கள் அமைதியாக நின்றிருந்தன, அமைதியுடன் பார்த்தப்படி. காற்று வேறு இல்லை. பாலத்தின் அடியே மிக அகலமான, மஞ்சள் நதி ஓடிக் கொண்டிருந்தது. மேல் பிரதேசத்தில், பெய்யும் மழையில், இப்படி கலங்கல் அடைந்து ஓடுவதாக இருக்கலாம். இம் முனையில் ஹ{ம்…ஹ{ம்… இறங்க முடியாது. ஒருவேளை பாதையின் மறுமுனையில் இறங்க கூடிய பாதை ஏதாவது இருக்கலாம். ஆனால் அங்கேயும் இதே கதைத்தான். அப்படி, என்றால் இனி வந்த வழியே நடந்து, பாலத்தின் மறுமுனையை மீண்டும் அடைந்து, காட்டின் வழியாக இறங்கி, காட்டுக்குள் சென்று நதியை அடைந்தாக வேண்டும். ஆம், அங்கே இறங்குவதற்கு வசதிதான். ஆனால், நதியை நோக்கி, காட்டு பிரதேசத்தினுள்ளேயே நடக்க வேண்டும் - அது தண்ணையாக இருந்த போதிலும். பாலத்தின் நடுப்பகுதியை நான் மீண்டும் கடந்து கொண்டிருந்த போது, ஒரு கெப் வாகனம் என்னை கடந்து சென்றது. பின்னால் ஐந்தாறு இளைஞர்கள், நீல நிற, அழுக்கடைந்த யூனிபோர்மில் இருந்தார்கள்.
இணையத்தில் இருந்து: ஆர்வமுள்ள மனதை வளர்த்தல் - டேவிட் அட்டன்பரோவின் 100 ஆண்டுகள் - டிஜி -

[இணையத்தில் வெளியாகும் முக்கியமான படைப்புகளை , அவை பிறமொழிகளில் இருப்பின் அவற்றின் மொழிபெயர்ப்புகளை இப்பகுதியில் தருவதில் பதிவுகள் பெருமையுறுகின்றது. அவ்வகையில் 'நேச்சர்ஸ் நோட்பாட்' (NaturesNotepad) என்னும் ஆங்கில வலைப்பதிவிலிருந்து இக்கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு பகிரப்படுகின்றது. தமிழ் மொழிபெயர்ப்பு - கூகுள் செயற்கை நுண்ணறிவு. சரி, பிழை திருத்தம் - வநகி.]
சூழலியலாளர் டேவிட் அட்டன்பரோ இந்த ஆண்டு தனது 100வது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில், அவர் செய்த புரட்சிகரமான பணிகளின் மூலம் என்னை எவ்வாறு ஊக்கப்படுத்தினார் என்பதைப் பற்றி கொஞ்சம் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். நான் அவரது ஆவணப்படங்களைப் பார்த்து, அவரது தனித்துவமான குரலைக் கேட்டு வளர்ந்தேன். அது நான் வளர வளரச் சுற்றுச்சூழல் மீதான எனது ஆர்வத்தை மேலும் தூண்டியது. தொலைக்காட்சியில் அவரைப் பார்க்கும் போதெல்லாம், அவர் மேற்கொண்ட , இயற்கையின் அதிசயங்களை மிக அருகில் இருந்து பார்க்கும், அற்புதமான சாகசப் பயணங்களைக் கண்டு, நான் எப்போதும் வியந்து போவேன்.
நனவிடை தோய்தல்: அந்தக்காலத்து அரிக்கன் லாம்பு! - இந்து லிங்கேஸ் -

மாலை நேரத்தில் சூரியன் மறைந்து,வெளிச்சம் மெதுவாகக் குறைந்து இருள் படரத் தொடங்கியது.அந்த மாலைக் கருக்கலில் கிணற்றடியில் துலாவில் அள்ளி அள்ளி தண்ணீரை தொட்டிக்குள்ளும், பெரிய வாளிக்குள்ளும் இறைத்துக்கொண்டிருந்தேன்.
அம்மா உடுப்புக்களை தோய்த்துக்கொண்டிருந்தார்.
அம்மாவுக்கு இப்படியாக ஒத்தாசை செய்வது மட்டுமன்றி,தோய்த்து அலம்பிய துவாய்களைப் பிழிவதென்றாலும்,அங்கே என் கைகளின் பலம் வேண்டும் அம்மாவுக்கு! அம்மாவுக்கும் எனக்குமான அமைதியான சம்பாஷணைகள் இங்குதான் அநேகமாக அரங்கேறும்.அதற்குள் சோகங்களும்,கூடவே சுகங்களும்கலந்திருக்கும். மாறாக எதிர்காலத் திட்டங்களையும் இந்தக் கிணத்தடியில்தான் அம்மா ஆரம்பித்துவைத்தார் என்றும் சொல்லலாம்.இல்லத்திற்குள் மட்டும்தானா நம் சுகவாழ்விருந்தது? இல்லையே! வாழ்ந்த காணி, ஆட்டுப்பட்டி, மாட்டுத்தொழுவம், கோடி, மூலை முடக்கென வளவிற்குள் சுற்றிவர இருந்த நம் பாதம் பதித்த எல்லா இடங்களிலும் எமக்கொரு கதையிருந்ததே! மாமரத்தின் நிழலில்,.வேம்பின் கீழே போட்டிருந்த கட்டிலில். வாழை மரங்களிற்காய் வாய்க்கால் வெட்டி, பாத்திகட்டி தண்ணீரை ஓடவிட்டுப்பாத்திருந்த அந்தப்படிகளில்.கிணற்றடியில் நின்ற கமுகு மரங்கள்.எங்கள் வேலிக்கும் அடுத்த வீட்டுப் பூரணம் அக்கா வீட்டுக்குமான குறுக்குவழிப்பொந்து.
நீலகிரி படகர்களின் தொல்மரபில் சங்கக் கூறுகள் - ‘மதிலு’ – ‘அக்க பக்க’ – ‘ஏகித்து கட்டோது’! - முனைவர்.கோ.சுனில்ஜோகி -

கட்டுரையாளர்: முனைவர்.கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை.
நீலகிரி படகர்கள் குறிஞ்சி வாழ்வியலை இடையாறாது பின்பற்றி வருபவர்கள். அவர்களை நீலகிரியில் வாழ்கின்ற குறிஞ்சி ஆயர்கள் எனலாம். ‘நாக்கு பெட்டா’ என்று வரையறுத்து வாழ்கின்ற நீலகிரியின் இவர்தம் புழங்குவெளி சிறப்பான கட்டமைப்பினை உடையது. இயற்கை சான்றது. தகவமைப்பின் நுட்பங்களை உட்செறித்தது. காலநிலைக்கேற்பக் காப்பு நிலையைத் தரித்தது. கடும் குளிரினையும், அடர் பனியினையும், அடை மழையினையும் கொண்ட நீலகிரியில் வாழ்வதற்குப் புறப் பாதுகாப்பினைத் தாண்டி, உணர்வுநிலை நீடும் அகப் பாதுகாப்பும் அவசியம். இது, சுற்றத்தால் அமைவது. அவ்வகையில் ‘மதிலு’, ‘அக்க பக்கா’ எனும் படகர்களின் புறம் சார்ந்த தொல்கூறுகளையும், ‘ஏகித்து கட்டோது’ எனும் அகம்சார்ந்த கூறினையும் இக்கட்டுரை ஆய்கிறது. இவை மூன்றும் சங்கக் கூறுகளோடு நெருங்கிய தொடர்புடையது நோக்கத்தகுந்தவை.
மதிலு கொரோச்சோது
தொல்காப்பியர் “இகல் மதில் குடுமி கொண்ட மண்ணுமங்கலமும்” (தொல்காப்பியம், புறத்திணையியல், 69) என்ற உழிஞைத்திணையை வரையறுக்கும்போது குறிப்பிடும் வரிகளில் இடம்பெறும் மதில் எனும் சொல்லாச்சி படகர்களிடம் பண்பாட்டுச் சொல்லாக இன்றும் வழக்கிலுள்ளது. கோட்டைச்சுவற்றினை மதில் எனும் வழக்கம் இன்றும் படகர்களிடம் உண்டு. வீட்டின் நடு அறைகளின் இடைவாயிலை இவர்கள் ‘மதிலு’ என்று அழைக்கின்றனர். இது இரண்டு அறைகளுக்கான இடைத்தடுப்பாக இருப்பதோடு வீட்டின் அகல் விளக்கினை வைக்கும் இடமாகவும் திகழ்கிறது. இந்த மரபார்ந்த வழக்காறு இவர்களின் மரபறிவையும் பறைசாற்றுவது நோக்கத்தக்கது.
நீலகிரி படகர்கள் எனும் ஆயர்கள்! - முனைவர்.கோ.சுனில்ஜோகி -

கட்டுரையாளர்: முனைவர்.கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை.
மானுட சமூகத்தின் இயங்கியல் வழக்காறுகளில் உறைகிறது எனலாம். வாழ்வியல் ஒழுகலாறுகளை அடியொற்றிய தகவமைப்பு, பண்பாடு மற்றும் மரபுநிலை போன்ற கூறுகளாலான வழக்காறுகள் மரபறிவின் திரட்சியாகும். ஒருவகையில், வழக்காறுகள் வரலாறுகளுக்கு அடிப்படையாகத் திகழ்வதையும், வரலாற்றைவிட மேலோங்கி நிற்பதையும் மறுப்பதற்கில்லை. நாட்டுப்புறவியல், மானுடவியல் போன்ற அனைத்து நிலையிலான ஆய்வுகளுக்கும், குறிப்பாக, மானுடவியல் ஆய்வுகளுக்கு அடிச்சரடாகத் திகழும் இவை பண்பாட்டின் தொகைநிலையெனலாம். அவ்வகையில், ஆயர்வாழ்வியலின் களஞ்சியமாகத் திகழும் திருப்பாவையில் இன்றும் வழக்கிலுள்ள சில ஆயர் வழக்காறுகளை இக்கட்டுரை ஆய்கிறது.
திருப்பாவையின் களம் ஆயர்பாடியாகும். அதில் ஆயர்களின் பல்வேறு வழக்காறுகள் செறிந்துள்ளன. ஆயர்ச் சமூகத்தைக் கூர்ந்த கள ஆய்வின் விளைவாக எழுந்த இலக்கியமாக இதைத் துணியலாம். அதோடு, இதில் இடம்பெறும் சில ஆயர் வழக்காறுகள் சங்கம்தொட்டு வழக்கிலிருப்பவை. அதனைச் சங்க, ஆயர்ச் சமூகத்தின் தொடர்ச்சியாகவும் அச்சமூகத்தின் நெடிய பண்பாட்டினை, மரபினை வெளிப்படுத்தும் நிலைக்களன்களாகவும் கொள்ளலாம். அவ்வகையில், ஆய்வின் எல்லைகருதி, திருப்பாவையில் இடம்பெறும் ‘சிறுவீடு’, ‘காசும் பிறப்பும்’ ஆகிய தொன்மையான ஆயர் வழக்காறுகளை நீலகிரியில் வாழ்கின்ற ஆயர்களான ‘படகர்’ இனமக்களின் வழக்காறுகளுடன் இணைத்து இக்கட்டுரை ஆய்கிறது.
படகர்கள் எனும் ஆயர்கள்
நீலகிரியில் வாழ்கின்ற படகர்கள் ஆயர்கள் என்பதை அவர்களின் ‘படகா’ எனும் பெயரே சான்றுபகர்கின்றது. ஆயர் என்பதும் ஆயர்பாடி என்பது எவ்வாறு ஆநிரை வாழ்வினைச் சுட்டுகின்றதோ அதேபோல, ‘பண்டுகா’ எனும் சொல்லிலிருந்து உருவான ‘படகா’ எனும் சொல்லும் ஆயர் வாழ்வியலை உணர்த்துகின்றது. படகர்களின் மொழியான ‘படுகு’ மொழியில் ‘பண்டா’ எனும் சொல் மந்தைகளை, குறிப்பாக எருமை மந்தைகளைக் குறிக்கிறது. எருமை மந்தைகளைப் பேணுபவர்கள், எருமை மந்தைகளை உடையவர்கள் எனும் அடிப்படையில் இவர்களின் வாழ்வியலை இப்பெயர் குறித்து நிற்கின்றது. அதற்கேற்பவே, அவர்களின் வாழ்வியலிலும் எண்ணற்ற எருமைகள் சார்ந்த வழக்காறுகள் விரவியுள்ளன. சான்றாக அவர்களின் வாழ்வியலை வரையறுக்கும் “பண்டா பதுக்கு” எனும் இணைச்சொல்லினைக் கருதலாம். இதில் ‘பதுக்கு’ எனும் சொல்லிற்கு வாழ்வு என்றும் ‘பண்டா’ என்பதற்கு ஏற்கனவே கண்டதுபோல எருமை மந்தையென்றும் பொருள். அதாவது, எருமை மந்தைகளே வாழ்வு என்பதை இது சுட்டுகின்றது.
அரங்க முகாமைத்துவம் : நாடக தயாரிப்பு திட்டங்கள் அடிப்படையில் மாணவரை நிர்வகித்தல்! - பா.பிரதாரிணி -

அறிமுகம்
மலையக தமிழ் சமூகத்தில் நாடகமும் அரங்கியலும் கற்றல் கற்பித்தல் செயற்பாடானது சில பாடசாலைகளில் மட்டுமே கற்பிக்கப்படுகின்றது. இந்நிலையில் மாணவர்களிடம் நாடக தயாரிப்பு நெறிமுறைகளும் முகாமைத்துவ நடவடிக்கைகளும் மிகக் குறைவாகவே உள்ளது. நாடகத்தில் தயாப்பு முகாமைத்துவ விடயங்களை உட்புகுத்தி காத்திரமான நாடகத்தினூடாக சிறந்த அரங்க நிர்வாகிகளை வெளிக்கொணர முடியும்.
அதாவது, நாடகமானது மனித நேயத்தைப் போல மிக பழைமையானது. நீண்ட கால கலாச்சார மரபு மற்றும் அணுகுமுறைகளால் பாதிக்கப்பட்ட அன்றாட நடவடிக்கைகளிலிருந்து அனைத்து நாடக நடவடிக்கைகளும் உருவாகின. கலாச்சாரத்தின் மறுநிகழ்வு கலை என்பதை நாடகம் உணர்த்துகின்றது. அரங்கானது மனித வாழ்வியலை கற்பிக்கும் ஒரு பாடமாகும். அரங்கானது சமூக சிந்தனைக்கும் சமூக ஒருங்கு சேரலுக்கு அமையவும் வளர்ச்சியடைகின்றது. சமூக பண்பாட்டில் இன்றியமையாத நிறுவனங்களில் ஒன்று நடிப்பும் பார்வையும் என்று நோக்கி வந்த முறைமைக்கு மாறாக நாடகம் இன்று புதிய அர்த்தங்களை வேண்டி நிற்கின்றது. நாடகம் மனிதனை, மனித உணர்வுகளை, முரண்பாடுகளை, சிக்கல்களை, போராட்டங்களை விளங்கிக் கொள்வதற்கான ஒரு முகாமைத்துவ வகையாகவும் விளங்குகின்றது.
எழுத்தாளர் தாமரைச்செல்வியின் படைப்புலகம் பற்றிய எனது பார்வை! - பவானி சற்குணசெல்வம் ( நெதர்லாந்து) -

[ எழுத்தாளர் தாமரைச்செல்வி]
ஈழத்து வன்னிப் பிரதேச எழுத்தாளர்களுள் தனித்துவமான படைப்பாளுமையாகத் திகழ்பவர் தாமரைச்செல்வி. சிறுகதை, நாவல் ஆகிய இரு இலக்கிய வடிவங்களிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ள அவர், ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றில் அழியாத தடம் பதித்தவராக விளங்குகிறார். அவரது படைப்புகள் வெறும் கற்பனைச் சித்திரங்களாக அல்லாது, காலத்தின் சமூகச் சுவடுகளையும் மக்களின் வாழ்வியலையும் பதிவு செய்த ஆவணங்களாக அமைந்துள்ளன.
தாமரைச்செல்வியின் படைப்புலகின் மையத்தில் மனிதனே நிற்கிறான். குறிப்பாக, தன்னுடன் வாழ்ந்தவர்கள், தன் கண்முன் துன்பங்களைச் சுமந்தவர்கள், போராலும் இடம்பெயர்வாலும் வாழ்வியல் சிக்கல்களாலும் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரின் வாழ்க்கை அனுபவங்களே அவரது எழுத்தின் உயிர்நாடியாக அமைந்துள்ளன. இதனால் அவரது கதைகள் வாசகர்களுக்கு மிக நெருக்கமானதாகவும் இயல்பானதாகவும் தோன்றுகின்றன. அவர் காட்டும் உலகிற்குள் வாசகன் எளிதில் நுழைந்து, கதாபாத்திரங்களோடு பயணித்து, அவர்களின் துயரங்களையும் மகிழ்ச்சிகளையும் பகிர்ந்து கொள்கிறான்.
அவரது கதைகளை வாசித்து முடிக்கும் போது மனம் கனக்காமல் இருப்பது அரிது. கண்ணீரை வரவழைக்கும் வலிமை அவரது எழுத்தின் தனிச்சிறப்பாகும். ஆனால் அந்தக் கண்ணீர் வெறும் துயரத்தின் வெளிப்பாடு அல்ல; அது மனித நேயத்தின் சாட்சியும் கூட. இது அவரது படைப்பாற்றலின் முக்கியமான அடையாளமும் ஆகும்.
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக இலக்கியப் பணியில் ஈடுபட்டு வரும் தாமரைச்செல்வி, தொடக்கக் காலத்தில் காணப்பட்ட அதே உற்சாகத்துடனும் படைப்புத் திறனுடனும் இன்றும் இயங்கி வருகிறார். காலம் மாறினாலும் அவரது எழுத்தின் இளமை மாறவில்லை. வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை உணர்ந்து அவற்றை இலக்கிய வடிவமாக்கும் ஆற்றல் இன்னும் அவரிடம் உயிர்ப்புடன் உள்ளது.
டிஜிட்டல் காலனியத்துவமும் 'தரவுமயமாக்கலுக்கு' எதிரான உடலும்: மஹ்மூத் தர்வீஷின் கவிதை வெளிவழியே ஓர் அல்காரித எதிர்ப்பு மெய்யியல் ஆய்வு! - ஏ.எச்.எம் நவாஷ் (ஈழக்கவி) -

சுருக்கம் (Abstract)
இக்கட்டுரை, மஹ்மூத் தர்வீஷின் ‘அடையாள அட்டை’ (1964) கவிதையை, சமகால டிஜிட்டல் காலனியத்துவம் மற்றும் தரவு ஏகாதிபத்தியக் (Data Imperialism) கோட்பாடுகளின் வழி ஒரு தீர்க்கதரிசனப் பிரதியாக (Prophetic Text) மறுவாசிப்பு செய்கிறது. நவீன ஆக்கிரமிப்பு அரசுகள், ஒடுக்கப்பட்ட குடிகளை வெறும் புள்ளிவிவரங்களாகவும், பயோ-மெட்ரிக் தரவுகளாகவும் சுருக்கி ஆளும் 'அல்காரிதக் கண்காணிப்பை' (Algorithmic Surveillance) இக்கவிதை எவ்வாறு அறுபது ஆண்டுகளுக்கு முன்பே மொழிரீதியாக எதிர்கொண்டது என்பதை இக்கட்டுரை ஆராய்கிறது. ஷோஷனா ஜூபோஃப்பின் ‘கண்காணிப்பு முதலாளித்துவம்’ (Surveillance Capitalism), அகிலெ எம்பெம்பேயின் ‘மரண அரசியல்’ (Necropolitics), மற்றும் ஜார்ஜியோ அகம்பனின் ‘வெற்று உயிர்’ (Bare Life) ஆகிய கோட்பாடுகளின் துணையோடு, தர்வீஷின் ‘அடையாள அட்டை எண் ஐம்பதாயிரம்’ என்ற வரிகள், மனித உடலைத் தரவுமயமாக்கலுக்கு (Datafication) உட்படுத்தும் நவீனத் தொழில்நுட்ப வன்முறைக்கு எதிரான ஓர் இருத்தலியல் தற்காப்புப் பிரகடனம் என்பது இங்கு நிறுவப்படுகிறது.
மஹ்மூத் தர்வீஷின் கவிதைகள் பற்றி உலகளாவிய கல்வித்துறையில் இதுவரை விரிவாக ஆராயப்படாத, தமிழ் மற்றும் சர்வதேசச் சூழலுக்கு முற்றிலும் புதிய நான்கு அதிநவீனக் கருத்தியல் கோட்பாடுகளை (Emerging Research Paradigms) இங்கு முன்வைக்கிறேன்.
இவை தர்வீஷின் பிரதிகளுக்கு முற்றிலும் புதிய தத்துவார்த்த ஒளியை வழங்கும்:
I. நரம்பியல்-அழகியலும் அதிர்ச்சி நினைவகமும் (Neuro-Aesthetics and Trauma Memory)
இதுவரை தர்வீஷின் கவிதைகள் அரசியல் அல்லது சமூகவியல் நோக்கில் மட்டுமே பார்க்கப்பட்டன. ஆனால், ‘அதிர்ச்சி சார் ஆய்வுகள்’ (Trauma Studies) மற்றும் மூளை-அழகியல் (Neuro-Aesthetics) வழி இதனை அணுகலாம்.
பெண்ணுரிமைப் புரட்சி: பாரதியாரும் பாரதிதாசனும்! - முனைவர் அ. கார்வண்ணன்

கட்டுரையாளர்: முனைவர் அ. கார்வண்ணன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, சென்னை – 600061.
முன்னுரை
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் சமூகம் அடைந்த மறுமலர்ச்சியில் பெண்ணுரிமையும் சமூக விடுதலையும் பிரிக்க முடியாத இரு பெரும் கூறுகளாக விளங்கின. காலங்காலமாக ஆணாதிக்கச் சமூக அமைப்பிலும் வைதிகச் சடங்குகளிலும் கட்டுண்டு கிடந்த பெண்ணினத்தை விடுவிப்பதில், மகாகவி சுப்பிரமணிய பாரதியும் அவரது வழியைப் பின்பற்றிப் புரட்சிகரக் கருத்துகளை படைத்த பாவேந்தர் பாரதிதாசனும் ஆற்றிய பங்களிப்பு ஒப்பற்றது. பாரதி தேசிய மற்றும் ஆன்மீகச் சிந்தனைகளின் பின்னணியில் பெண்ணுரிமையைப் பாடினார். அவரைத் தொடர்ந்து, பாரதிதாசன் தந்தை பெரியாரின் சுயமரியாதை மற்றும் பகுத்தறிவு இயக்கத்தின் பின்னணியில் ஜாதி ஒழிப்பையும் பெண்ணுரிமையையும் இணைத்துப் புரட்சிக் கருத்துகளை முன்வைத்தார். எனவே, இவ்விரு ஆளுமைகளின் பெண்ணுரிமைச் சிந்தனைகள் மற்றும் சமூக விடுதலைப் பங்களிப்புகள் குறித்தும் அவற்றுள் நிலவிய கோட்பாட்டு முரண்பாடுகள் குறித்தும் ஆரய்வது இக்கட்டுரையின் நோக்கமாகிறது. பாரதி கண்ட புதுமைப் பெண்
சமூக, அரசியல், பொருளாதார விடுதலைகளுக்கு இணையாகப் பெண் விடுதலைக்கும் பாரதியார் முதன்மை இடமளித்தார். பெண்களை வெறும் இல்லறப் பொருளாக மட்டுமே பார்த்த சமூகப் பார்வையை மாற்றி, அவர்களைச் 'சக்தி' வடிவமாகவும், தேசத்தின் உன்னதமான மனிதர்களாகவும் நிலைநிறுத்துவதற்கான முயற்சியை அவர் தனது படைப்புக்களின் வழி வெளிப்படுத்தினார்.
நான் உன்னிமேனனின் குரலுக்கு அடிமை! - ஊர்க்குருவி -

நான் உன்னிமேனனின் குரலுக்கு அடிமை என்று கூறிக்கொள்வதில் எனக்கு எவ்விதத் தயக்கமும் எனக்கு இல்லை.
இதயத்தை வருடிச் செல்லும் அவரது குரல் கேட்பவர் மனத்தைச் சாந்தப்படுத்தும், இதமாக்கும் சக்தி மிக்கது.
'வருசமெல்லாம் வசந்தம்' என்னும் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இப்பாடலை ஒரு தடவை கண்களை மூடிக்கொண்டு கேட்டுப்பாருங்கள். நான் கூறுவதன் அர்த்தம் புரியும்.
நடிகர் மனோஜ்ஜின் ஒரேயொரு ஹிட் திரைப்படம் 'வருசமெல்லாம் வசந்தம்'. அவர் இன்னும் நீண்ட காலம் இருந்திருக்கலாம் என்று இப்பாடலைக் கேட்கும் சமயங்களில் எண்ணுவதுண்டு. அவரது அமைதியான நடிப்பும், அப்பாவித்தனமான சிரிப்பும் என்னைக் கவர்ந்தவை.
இசை - சிர்பி. பாடல் வரிகள் - ஆர்.ரவிசங்கர். பாடலாசிரியரும் அமரராகி விட்டார்.
சிங்கத்தின் கண்கள்! - ஜோதிகுமார் -

சிங்கங்கள் தொடர்பான பல்வேறு வர்ணனைகள் உண்டு. ஆபிரிக்க காட்டு சிங்கங்கள் கருத்தை கவருவன. அவற்றின் கண்கள், போத்தல்களின் கண்ணாடி துண்டுகள் பதிக்கப்பட்டவை போன்றவை. பாவமற்றவை. சிங்கங்களை எதிர்கொள்ள நேர்ந்தால், அவற்றின் கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்துவிட வேண்டும் என்ற அறிவுரையும் காணப்படுகின்றது. ஆனால், மிருகங்களில் கண்களை கொண்டே, மனிதன், அவற்றின் அடுத்த கட்ட நகர்வுகளைக் கணிக்க சாபம் கொண்டுள்ளான். எனவேதான், சிங்கங்களின் கண்களைப் பார்ப்பதைத் தவிர்ப்பது என்பது முடியாத காரியமாகிறது.
இதுபோலவே, என் வாழ்நாளில், நான் சந்தித்த ஒருவன் உள்ளான் எனலாம். ஆம். அவனது கண்களும் கண்ணாடித் துண்டுகள் பதிக்கப்பட்டவை போன்று பாவமற்றுக் கிடப்பன. இக் கண்களின் பின்னால் யாது நடக்கின்றது? இவனது சிந்தனை எப்படிப்பட்டது? எதுவுமே தெரியாது. ஆனால், இறுதிக் கணிப்பில் தனக்கேற்ற சரியான இரையை இவன் கவ்வி, தேர்ந்து கொள்ளுகின்றார்னே என்பது முடிந்த முடிபாகின்றது. விட்டுத் தராதவர்கள் இவனைப் போன்றவர்கள். தமது இரையின் சரியான பெறுமானத்தை மிக சரியாக கணித்து கொள்கின்றார்கள். இதற்காக இவர்கள், மயிர் கூச்செறியும் வகையில் போராடச் செய்கின்றார்கள். இவை அனைத்தும் இந்தச் சிங்க கண்களின் ஒரு பக்கம்.
மற்ற பக்கம் விரிகின்றது. இப்படிப்பட்ட சிங்கங்களை பாதுகாப்பது எமது கடமையில்லையா? கடமைத்தான். ஆனால், இந்த கடமையும் ஒரு வரையரைக்கு உட்பட்டதுதான். வானத்தை அண்ணாந்து பார்வையிடும் சிங்கங்களின் சிந்தனையில், எந்த தருணத்தில் பாயலாம் - யாரின் குரல்வளையை நெறித்து, பற்களால் குதறி ரத்தத்தை உறிஞ்சலாம் போன்ற சிந்தனைகள் அடங்கக் கூடும். கணநேரத்தில், இவர்களின் சாது தோற்றங்களின் நடந்தேறும் இந்த ரசாயன மாற்றம், பிரமிக்கத்தக்கதே.
கனடாவில் ஊடகவியலாளர் நந்தன வீரரத்னவின் 'கறுப்பு ஜூலை' நூல் வெளியீடு! - வ.ந.கிரிதரன் -

[ஊடகவியலாளர் நந்தன வீரரத்ன]
அண்மையில் ஸ்கார்பரோ,கனடாவில் ஊடகவியலாளர் நந்தன வீரரத்னவின் 'கறுப்பு ஜூலை' என்னும் சிங்கள நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு (சமூக, அரசியற் செயற்பாட்டாளரும், அரசியல் ஆய்வாளருமான செல்லையா மனோரஞ்சனால் செய்யப்பட்டது) பற்றிய கலந்துரையாடல் 'கனேடிய இலங்கை மன்ற'த்திm ஏற்பாட்டில் நடைபெற்றது. சமூக, அரசியற் செயற்பாட்டாளர் லோ.மதியழகன் நெறிப்படுத்தலில் நடைபெற்ற நிகழ்வில் பேச்சாளர்களாக சமூக,ம் அரசியற் செயற்பாட்டாளர் சிவா முருகுப்பிள்ளை, ஊடகவியலாளர் வடிவேல் தேவராஜ், அரசியல் ஆய்வாளர் மனோரஞ்சன் செல்லையா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வுக்குச் செல்ல விரும்பியிருந்தேன். இறுதியில் தவிர்க்க முடியாத காரணத்தினால் செல்ல முடியவில்லை.ஆனால் அந்தக் குறையினைத் 'தடயத்தார்' கிருபா கந்தையா தீர்த்து வைத்தார். அந்நிகழ்வைக் காணொளியாகப் பதிவு செய்து, தனது 'தடயத்தார்' யு டியூப் சானலில் பகிருந்திருந்தார். அவருக்கு என் நன்றி. இவ்விதம் இங்கு நடைபெறும் சமூக,கலை, இலக்கிய & அரசியல் நிகழ்வுகளை ஆவணப்படுத்தி வரும் அவர்தம் பணி போற்றுதற்குரியது.
அந்நிகழ்வின் ஆரம்பத்தில் நூலாசிரியர் நந்தன வீரரத்ன மெய்நிகர் வழியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் உரையினைத் தமிழில் வழங்கினார் மனோரஞ்சன் செல்லையா. நந்தன வீரரத்தினவின் உரை பற்றிய எனது கருத்துகளே இப்பதிவு.
பறத்தலை நிறுத்திய வானம்பாடி: கவிஞர் புவியரசு மறைந்தார்!

வானம்பாடி கவிதை இயக்கத்தின் பிதாமகன் என அழைக்கப்படுபவரும், கவிஞரும், சிறந்த மொழிபெயர்ப்பாளருமான கவிஞர் புவியரசு அவர்கள் தனது தொண்ணூற்றாறாவது வயதில் மறைந்த செய்தியினை அறிந்தேன். மூப்பின் காரணமாக மறைந்த மார்க்சியவாதியான கவிஞர் புவியரசுவின் மறைவு தவிர்க்க முடியாதது என்றாலும் பேரிழப்பே. அவர் மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்.
அவர் நினைவாக , முகநூலில் கலை,இலக்கிய விமர்சகரும், கவிஞருமான இந்திரன் அவர்கள் பகிர்ந்திருந்த கவியரசர் புவியரசு பற்றிய ஆவணத்திரைப்படத்துக்கான இணைய இணைப்பை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன் - https://youtu.be/voUc3CTs4lI
அத்துடன் கவிஞரின் மொழிபெயர்ப்பில் வெளியான கரமசோவ் சகோதரர்கள் பற்றி நான் முன்பு எழுதியிருந்த குறிப்பினையும். அவர் பற்றிய விக்கிபீடியாக் குறிப்பினையும் பகிர்ந்து கொள்கின்றோம்.
பாரதிராஜா! - ஜோதிகுமார் -

பாரதிராஜா என்று தமிழ் திரைப்பட உலகில் சாதனை படைத்தவன் மறைந்து விட்டான். கிட்டத்தட்ட 49 வருடங்களின் முன்னர், 1977இல் “16 வயதினிலே” என்ற படத்திற்கூடாக தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்த பாரதிராஜா தனது காலப் பகுதியில் சில பிரமாண்டங்களை தராமல் இருக்கவில்லை. இதற்கான ஒரு காரணம் அன்று இருந்திருக்கக்கூடிய காலச் சூழல் என்பதும் நீதியரசர் பகவதி கூட பொது நல வழக்கு (Public Interest Litigation) என்ற கருத்தாக்கத்தை இக்காலத்திலேயே அறிமுகம் செய்தார் என்பதும் குறிக்கத்தக்கது. ஆதலால் இது தற்செயல் அல்ல என புரிவது பொதுவில் சிறப்பானது.
“அலைகள் ஓய்வதில்லை” (1981) தனது முக்கிய படம் என பாரதிராஜா வரையறுப்பார். தேசிய விருது பெற்ற “முதல் மரியாதை''யைத் தாண்டி (1985) அவர் இப்படத்தை தேர்வது இவரது சிறப்பம்சம். “அலைகள் ஓய்வதில்லை” படத்தின் தயாரிப்புகளில் ஈடுபட்டிருந்தபோது அவரை சந்திக்க வந்த முக்கிய அமைச்சர்களில் ஒருவர் இவர் மனக்கண்களில் வடித்து வைத்திருக்கும் முஸ்லீம் பெண் கதாப்பாத்திரத்தை மட்டும் எடுத்துவிடக் கோருவார். “முஸ்லிம்- இந்து விவகாரத்தை நீங்கள் தொடாதீர்கள்… என்பது அவர் விடுத்த வேண்டுகோள்” எனக் கூறுவார் பாரதிராஜா.
தனது 16 வயதினிலேக்கு பிறகு தனது கால்களை ஓரளவு உறுதியாக தமிழ் திரைப்பட உலகில் பதித்துக் கொண்ட பாரதிராஜா “அலைகள் ஓய்வதில்லை” என்ற படத்தின் மூலமே புரையோடி போயிருந்த முஸ்லிம்-இந்து உறவுகளை சீர்படுத்தும் விதத்தில் செயல்படலானார். முஸ்லிம்-இந்து என்ற இரண்டு வெவ்வேறு மதங்களை சார்ந்த இரு பதின் வயது இளசுகளிடையே தோன்றும் காதல் குறித்தும் இறுதியில் இவ்விளசுகள் இருவருமே தத்தமது மத அடையாளங்களை தூக்கி எறியும் காட்சிகளையும் பிரதானமாக படம் பிடிக்க திட்டமிட்டு இருந்ததாகக் கூறுவார்:
“இறுதியில் அந்த முஸ்லிம் பெண் தனது பர்தாவை அப்படியே கழற்றி தூக்கி எறிவதாக நான் கற்பனை செய்து வைத்திருந்தேன். அதை கற்பனையிலேயே வடிவமைத்தும் இருந்தேன். ஆனால் அமைச்சரின் இந்த கோரிக்கைகயை என்னால் தட்டிக் கழிக்க முடியவில்லை… படம் வெளிவந்தாக வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்ததேன்…இறுதியில் இந்த முரணை ஒரு இந்து-கிறிஸ்தவ முரணாக மாற்றிக் கொண்டேன்…”
இது அவரது காலம் முழுவதும் தொடர்ந்த ஒரு கதையாகின்றது. அதாவது ஆதிக்க சக்திகள் கலைஞன் ஒருவனை வாங்குவதும் சிதைப்பதும், உருவகப்படுத்தி தமக்கேற்ற வகையில் உருவாக்குவதும் இச்சமூகம் கூறும் விடயமாகின்றது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட நடுகற்களும் கற்குவையும்! - முனைவர் ஆ. சந்திரன் -

* கட்டுரையாளர்: முனைவர் ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலையில் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் ஆ.சந்திரன் ஆய்வாளர் திரு. உதயமூர்த்தி களாய்வு மேற்கொண்டனர். அப்போது நெல்லிவாசல் நாட்டு வனப்பகுதியில் இரு நடுகற்கள் மற்றும் ஒரு கல்குவையை அரை கிலோமீட்டர் இடைவெளியில் அடையாளம் கண்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை நெல்லிவாசல் நாட்டு வனப்பகுதியில் கிழக்குப் பார்த்தவாறு இரு நடுகற்கள் உள்ளன. அவை நெல்லிவாசல் நாட்டு வனப்பகுதி எல்லையில் இருந்து இரண்டு கிலோமிட்டர் தொலைவிலும் சிங்காரப்பேட்டையில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ளன. அவற்றில் இடப்பக்கம் உள்ள நடுகல் மூன்றடி உயரமும் இரண்டே முக்கால் அடி அகலமும் கொண்டதாக உள்ளது. அந்த நடுகல்லில் ஒரு வீரன் நேராக நின்றவாறு இருக்கிறான். அவனது இடதுகால் முன்னோக்கி நிலத்தில் ஊன்றி நிற்கிறது. வலது கால் இடதுகாலை நோக்கியவாறு உள்ளது. வலது கையில் கூர்மையான வாளை வைத்துள்ளான். இடையில் இடைக்கச்சையும் கழுத்தில் அணிகளும் காணப்படுகின்றன. நடுகல்லின் மேல் மற்றும் இடது பகுதி உடைந்துள்ளதால் அவனது இடது கையில் என்ன வைத்திருந்தான் என்று தெரியவில்லை. அவ்வீரனுக்கு வலப்புறமாக ஒரு காட்டு மாட்டின் உருவம் ஒன்று சிறிய அளவில் உள்ளது. அது அவ்வீரனைத் தாக்குவதாக உள்ளது.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









