'நந்தலாலா' எல்.ஜோதிகுமாரின் 'இருபத்து நான்காம் வயதில் பாரதி' பற்றி.. (பகுதி 4 - இறுதிப்பகுதி) - வ.ந.கிரிதரன் -

அடுத்த இரண்டு பகுதிகளும் ('திலகரின் அரசியலை, பாரதி அறிமுகப்படுத்தும் முறைமை' , 'சுருக்கம்' & அணுகுமுறை) இருபத்து நான்கு வயது இளைஞனான பாரதி வரலாற்றில் எந்தப் புள்ளியில் நிறகின்றான் என்பதை ஆராய்வதுடன், அவனது சரியான ஆளுமையை முடிவு செய்வதுமாகும். அவன் மதவாதியா, தீவிரவாதியா, ஆங்கிலேயருக்கெதிரான் தேசிய விடுதலைப்போரில் அவனது நிலைப்பாடும், செயற்பாடும் எவையெவை என்பவை பற்றித் தர்க்கபூர்வமாக ஆராய்வதாகும்.
அவற்றை ஆராய்வதற்கு முதல் ஜோதிகுமார் பாரதியாரின் எழுத்தின் நோக்கம், எழுத்தின் தன்மை பற்றிச் சிறிது கவனம் செலுத்துகின்றார்.
பாரதியின் எழுத்தின் நோக்கமும், தன்மையும்
பாரதியாரின் எழுத்தின் முக்கிய பண்பாக அவதானிக்கக்கூடியது அவரது ஆழமும், எளிமையும் கூடிய மொழி நடை. உதாரணத்துக்கு 'நிற்பதுவே நடப்பதுவே' கவிதையைக் கூறலாம். பொருள் முதல்வாதம், கருத்து முத்ல்வாதம் பற்றிய தர்க்கமே அதன் அடிநாதம். ஆனால் அதனைக்கண்டடைவது முறையான, தர்க்கமொன்றின் மூலமே சாத்தியம். ஆனால் அவர் அக்கவிதையில் பாவித்துள்ள மொழி நடை என்பது மிகவும் எளிமையானது. எல்லாருக்கும் மிக இலகுவாகப் புரிந்து கொள்ளக்கூடியது. அதனால் விளையும் முக்கிய நன்மைக்களிலொன்று - வாசிப்பின் பல்வேறு படி நிலைகளிலுள்ள வாசகர்களாலும் இக்கவிதையை எளிதாக வாசிகக் முடியும். ஆனால் , புரிதல்தான் அவரவர் வாசிக்கும், சிந்திக்கும் திறன் மற்றும் அனுபவத்திற்கேற்ப வேறுபடும்.
இவ்விதமாக பாரதியார் தன் எழுத்து நடையைப் பாவித்ததற்கு ஒரு நோக்கம் இருந்ததா என்பது பற்றித் தன் கவனத்தைச் செலுத்துகின்றார் ஆய்வாளர் ஜோதிகுமார். பாரதியாரின் 'பாரதகுமாரிகள்' கட்டுரையையே இதற்கும் ஆதாரமாகக்கொண்டு அவர் பின்வருமாறு கூறுவார்:
“நமது தேசத்தின் ஆதார சக்திகளாகிய மாதர்களின் ஹிருதயமும், அவர்களது ஆன்மாவும் இருளடைந்துபோக விட்டுவிடுவதைக் காட்டிலும் பாதகச் செயல் வேறில்லை. ஞானக் கிரணங்கள் அவர்களது ஆன்மாவில் தாக்குமாறு செய்தாலன்றி நமக்கு வேறு விமோசனம் கிடையாது "
இது பற்றி மேலும் கூறுகையில் "எழுத்தின் நோக்கத்தை, இதைவிட நேர்த்தியாகச் சொல்வது கடினம். இவ் இளவயதில், இவ் இளைஞன் தனது எழுத்தின் நோக்கத்திற்கான மேற்படி தாரக மந்திரத்தை இப்படியாக வரையறுத்துக் கொள்வது மாத்திரம் இல்லாமல், மேற்படி எழுத்தானது மக்களை அதிலும் குறிப்பாக, மாதரைச் சென்றடைய வேண்டிய தேவைப்பாட்டினையும் இவன் நன்கு உணர்வதினை, மேற்படி வரிகள் எமக்கு எடுத்தியம்புவதாக உள்ளன" என்று கூறுவார்.


“தன் தந்தை கொல்லப்பட்டதைத் தனயன் மறந்துபோவான். ஆனால், தன் பூட்டனின் சொத்துக்கள் சூறையாடப்பட்டதை, அவன் ஒருபோதும் மறந்துபோகமாட்டான்.” - மாக்கியவல்லி.





கம்பர் இயற்றிய இராமாயணத்தில் கூறப்படும் கதாப்பாத்திரங்களுள் முக்கியமானவர்களுள் ஒருவர் ஜனகர். இவர் மிதிலாபுரியின் மன்னர். சீதையைக் கண்டு எடுத்து வளர்த்தவராவார். மாவீரர். குடிமக்களைப் பத்திரமாகப் பாதுகாத்து வந்தார்.பெரு வேள்விகள் செய்தவர். கம்பராமாயணத்தில் ஜனகரின் மாட்சி குறித்து இக்கட்டுரையில் ஆராய்வோம்.
பிள்ளைப்பருவத்துக்கும் (childhood) வளர்ந்தோர் என்ற நிலைக்கும் (
]



யப்பானிய உணவும் அவர்கள் பூங்கா போல் கலாச்சாரத்தின் ஒரு கூறாகும் . ஆரம்பத்திலிருந்தே யப்பானிய வீடுகள் சிறியவை. அவர்கள் விருந்தினர்களை வீட்டில் உபசரிப்பதில்லை. உணவகங்களிற்கே அழைப்பார்கள் . மேலும் அவர்கள் உணவகங்கள் சிறியன. ஆனால், ஏராளமானவை . ஒரு செய்தியில் 160,000 உணவகங்கள் டோக்கியோவில் என நான் அறிந்தேன் (In Tokyo alone, there are an estimated 160,000 restaurants—10 times as many as in New York.) இதை விட முக்கியமானது பத்திரிகையாளர்கள் ஒரு உணவகத்தைத் தேடிச் செல்வார்கள் அதேபோல் தீயணைப்பு படையின் ஒரு உணவகத்தை நோக்கிச் செல்வார்கள். ஒவ்வொரு உணவகமும் ஒவ்வொரு உணவுக்கு விசேடமானது அதாவது நமது பிராமணாள் தோசை கடை, ஆப்டீன் பிரியாணி கடை போல். தொடர்ச்சியாகப் போவதால் வாடிக்கையாளர்களும் உணவகத்தினருக்கிடையே ஒரு அறிமுகம் , அன்னியோன்னியம் உருவாகி உள்ளது.
வேலுப்பிள்ளையின் எழுத்துக்கள் மூன்று கட்டங்களாக பிரிபடலாம். ஒன்று, காந்தியாலும் தாகூராலும் கவரப்பட்ட நிலையில், அவர் இளைஞனாய் இருந்த போது, தோன்றிய மனக்கசிவுகள். மற்றது, நேருவின் ஆசிர்வாதத்துடன், இலங்கை இந்திய காங்கிரசானது ஸ்தாபனமுற்ற நிலையில் வேலுப்பிள்ளை தொழிலாள சாரியுடனும் தொழிற்சங்கத்துடனும் இணைந்த ஒரு காலப்பகுதி. மூன்றாவது, திருமணம் முடிந்து, ஒரு குடும்ப மனிதனாகிவிட்ட ஒரு காலப்பகுதி.




எளிமை, சந்தநயம், அழகியல் சித்தரிப்பு என்ற பின்னணியில் அமைந்த கவிதைகள் கொண்ட தொகுப்பு தொடுவானம். இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் மரபின் தொடர்ச்சி மற்றும் நவின கருத்தியல் என்ற இரு புள்ளிகளை கொண்டமைந்துள்ளதை அறிந்தகொள்ள முடிகின்றது. வசன நடையில் எளிமையான சொற்களைக் கொண்ட கவிதைவரிகளில் உருவத்தில் மரபின் தொடர்ச்சியும் உள்ளடக்கத்தில் நவினத்தின் அதாவது, காலமாற்றதின் தேவை பற்றிய கருத்தியல் முன்னெடுப்புகளும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவை இன்றும் உயிர்புடன் இருக்கின்ற சமூகத்தின் சில புள்ளிகளை அடையாங்காட்டுவனவாக உள்ளன.




பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









