
ஊடகவியலாளரும், கலைஞரும், புகைப்படப்பிடிப்பாளருமான கிருபா கந்தையா அவர்களின் 'தடயத்தார்' 'யு டியூப் சானல்' சத்தமின்றி முக்கியமானதொரு பணியினை ஆற்றி வருகின்றது. 'டொரோண்டோ'வில் நடைபெறும் கலை, இலக்கிய நிகழ்வுகளைக் காணொளிகளாக்கி இந்தத் 'தடயத்தார்' சானலில் பதிவிட்டு வருகின்றார் கிருபா கந்தையா. 'தடயத்தார்' சானல் கலை, இலக்கிய நிகழ்வுகளைப் பதிவு செய்வதன் மூலம் ஆவணப்படுத்தி வருகின்றது. இது அவ்வளவொன்றும் இலகுவான செயலல்ல. கடும் உழைப்பினையும் , அர்ப்பணிப்பையும் வேண்டுமொரு செயல்.
இது போன்ற ஆக்கபூர்வமான முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும். அது அவசியமானதும் கூட. இதுவரை இவரது இந்தச் சானலைப் பார்க்காதவர்கள் சென்று பாருங்கள். பிடித்திருந்தால் அதைப் பாராட்டுங்கள். அதைச் 'சப்ஸ்கிரைப்' ( Subscribe) செய்யுங்கள். எவ்விதப் பணமும் கொடுக்கத்தேவையில்லை. இவ்விதம் செய்வதன் மூலம் கிருபா கந்தையா அவர்களின் உழைப்பை, ஆரோக்கியமான பணியை நீங்களும் அங்கீகரிக்கின்றீர்கள்.
'தடயத்தார்' சானலுக்கான இணையத்தள முகவரி: https://www.youtube.com/@user-thadayathaar
* டிஜிட்டல் ஓவியம்: கூகுள் நனோ பனான வழி வநகி.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









