பாரதியாரும், ஐரோப்பிய பெண்களும், கட்டுப்பாடற்ற காதலும்! - வ.ந.கிரிதரன் -
[சித்திரை மாத 'ஜீவநதி' சஞ்சிகையில் வெளியான எனது கட்டுரை 'பாரதியாரும், ஐரோப்பிய பெண்களும், கட்டுப்பாடற்ற காதலும்! ' . வாசிக்க ஜீவநதி சஞ்சிகையினை வாங்கி வாசியுங்கள். ஜீவநதி சஞ்சிகையுடன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளுங்கள்.]
தான் வாழ்ந்த காலகட்டத்துச் சூழலை மீறிப் பெண் விடுதலையைப்பற்றிப் பாடி, எழுதி அதனைத் தீவிரமாக வலியுறுத்தியவர் பாரதியார். பால்ய விவாகம், விதவைகள் மறுமணம், பெண் கல்வி, பெண் வேலைவாய்ப்பு என்று பெண்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்தவை அவரது எழுத்துகள். பாரதியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகளைப்பற்றிக் குறிப்பிடுகையில் ஆய்வாளர்கள் சிலர் பாரதியார் ஐரோப்பியப் பெண்களை விடுதலை பெற்ற பெண்களாகக் கருதியதாகவும் அதன் மூலம் அவரால் பால் கவர்ச்சியையே விற்பனைப் பண்டமாகப் பயன்படுத்தும் முதலாளித்துவத்தை அறிய முடியவில்லையென்றும் கருதுகின்றார்கள். இது மிகவும் தவறான கூற்று. உண்மையில் பாரதியார் அப்படித்தான் கருதியிருந்தார? அவரது 'மாதர்' தொகுதியிலுள்ள 'நவீன ருஷ்யாவில் விவாக விதிகள்' என்ற கட்டுரை பின்வருமாறு கூறுகின்றது:
"ஆண்,பெண் இருபாலாரும் பரிபூர்ண சமத்துவ நிலைமையுடையோர். இங்ஙனம் இரு பாலாரும் முற்றிலும் சமானம் என்ற கொள்கைக்குப் பங்கம் நேரிடாதபடி விவாகக் கட்டைச் சமைக்க வேண்டுமென்பதே ஐரோப்பிய நாகரீகத்தின் உண்மையான நோக்கம்" என மேற்படி கட்டுரையில் ஓரிடத்தில் ஐரோப்பிய நாகரீகத்தின் சமவுரிமை பற்றிய நோக்கு பற்றிக் குறிப்பிடும் பாரதியார் மேற்படி கட்டுரையில் இன்னுமோரிடத்தில் பின்வருமாறு கூறுகின்றார்.