நினைவு கூர்தல் : பண்டிதர், சைவப்புலவர் ஏகாம்பரநாதன் பரஞ்சோதி ஆசிரியர். - வ.ந.கி -
இன்று நண்பர் தயாநிதி (பொறியியலாளர், யாழ் இந்துக்கல்லூரி முன்னாள் மாணவர், ஓராயம் அமைப்பின் தலைவர்) அவர்களின் தந்தையார் அமரர் பண்டிதர், சைவப்புலவர் ஏகாம்பரநாதன் பரஞ்சோதி அவர்களின் ஒராண்டு நிறைவையொட்டி நடைபெற்ற நினைவு கூர்தல் மற்றும் மதியபோசன நிகழ்வுக்கு நண்பர் பேரா சவுந்தரநாதனுடன் சென்றிருந்தேன். அங்கு என் பால்ய, பதின்மப் பருவத்து நண்பர்களான ஈஸ்வரமூர்த்தி (சிவா முருகுப்பிள்ளை), பிறேமச்சந்திரா, குருபரன் மற்றும் கலை, இலக்கிய ஆளுமைகளான மீரா பாரதி, திவ்வியராஜன், ஶ்ரீரஞ்சனி, அகணி சுரேஷ், யாழ் இந்து பழைய மாணவர்கள் எனப் பலரைக் காணும் வாய்ப்பு ஏற்பட்டது. தயாநிதி அவரது மனைவு முனைவர் மைதிலி, தயாநிதியின் சகோதரி ரஞ்சனி அவரது கணவர் ஶ்ரீகதிர்காமநாதன் ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு சிறப்பாக நடந்து முடிந்தது.