* ஓவியம் AI

கடந்த கால கசப்புகளை மனதிற்குள் விழுங்கியிருந்த சைமனுக்கு கொஞ்ச நாட்களாகத்தான் அவனிடமிருந்து அந்த எண்ணங்களும் நினைவுகளும் மெல்ல மெல்ல மறையத் தொடங்கி இருந்தன. அதற்கு முக்கிய காரணமாக இருந்தது. அவன் கொடியின் மீது கொண்ட அளவற்ற பிரியமே. பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கின்ற சைமனுக்கு ;ஓய்வு நேரம் என்பது மிகக் குறைவாகவே இருந்து வருகிறது. சனி, ஞாயிறு, விடுமுறை நாட்களில் மேசன் வேலைக்கும், தச்சு வேலைக்கும் போய் வருவான். அப்படிப் போய் வருகிற வருமானத்தில் பெரும் பகுதியை அவனுடைய அம்மாவிடம் கொடுப்பான். ஒரு குறிப்பிட்ட தொகையை அவனுடைய கைச் செலவுக்கு வைத்துக் கொள்வான். இவ்வளவு பிரச்சனையும், சிக்கலும் நிறைந்து இருக்கின்ற அவனுடைய வாழ்க்கையில் மலர்க்கொடி மீது தீராக் காதல் எப்படியோ வளர்ந்து உறைந்து கிடக்கிறது. எப்போது அவளைப் பார்க்கின்றானோ அப்போதெல்லாம் தன் உயிரில் அவள் உயிர் உரசியது போல் உணர்வான். அலையற்ற பெண் கடலின் மீது ஒரு சருகொன்று மிதந்து தன் உடல் முழுவதும் ஊர்ந்து செல்வது போல் தோன்றும். அவள் அவனைக் கடந்து செல்லும் போகும் போதெல்லாம் தன்னுள் ஊறும் உயிர் ஒன்று எப்படி தன்னிடம் இருந்து விலகிப் போகும் என்று மனதுக்குள் நினைத்துக் கொள்வான். காலத்தையும் நேரத்தையும் கடந்து செல்ல முடியாமல் அவள் நினைவில் ஊறிக் கிடந்தது அவனுடைய உணர்வும் உடலும் .

அவன் ஒவ்வொரு நாளும் அதிகாலை ஐந்தரை மணிக்கு தொழிலுக்கு எழுந்து விடுவான். அதனால் அவனது. கண்களில் தூக்கக் கலக்கமும் எரிச்சலும் கலந்த உணர்வே எப்போதும் ஏற்படும். உடல் முழுவதும் சோர்வாக உணர்வான். கண்களின் கீழே கரு வளையம் படர்ந்திருந்தது.

புருவங்களின் இடையே இருக்கும் மென்மையான இடத்தில் தோல் தடித்து கண்டல் காயத்துடன் ஒரு வீக்கம் தோன்றியிருந்தது. அந்த வீக்கம் முகத்தில் பரவியதால் அவன் வேறு ஒருவன் போல் காணப்பட்டான். முந்தைய நாளில் காலையில் களங்கட்டி தொழிலுக்குப் போகும் போது வள்ளத்தில் நின்று மரக்கோலை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டு தாங்கும் பொழுது சமநிலை இழந்து விழுந்து, அடிபட்ட காயம் அது. அவனுக்கு இப்படி அடிக்கடி விழுந்து காயப்படுவது அவனுக்கு ஒரு சாதாரண விடயமாகவே மாறிவிட்டது. யாழ்ப்பாணத்துக் கடலோரக் கிராமத்தில் பிறந்து வளர்ந்த சைமனுக்கு, கடல் மீது தீராத பற்று ஏற்படுவது சாதாரண விஷயம்தான். ஆனால் கடலின் அலைகள், அவற்றில் மறைந்திருக்கும் மர்மங்கள், கடல் சுழிகளில் காணாமல் போகும் மனிதர்கள், கடல் சுணை நீர் உடலில் படும் போது ஏற்படும் வலி இவற்றைப் பற்றித் தானாகவே அவன் எண்ணும் போது அவனது மனதில் அவனை அறியாமலே ஒரு பயம் தோன்றி மறையும். ஆயினும் மீன்களின் பாடலும், பறவைகளோடு பேசுவதும் கடலுடன் கூடி வாழ்வதும் அவனுக்கு எப்போதுமே மிகவும் பிடித்தமான மகிழ்ச்சி தரும் விடயங்களாகவே  இருந்தன.

அவன் பெரும்பாலும் நேரத்தோடு தூங்கப் போய்விடுவான். அவனுடைய வீட்டுப் பாடங்களை அவன் பெரும்பாலும் செய்வதில்லை.அவற்றை எல்லாம் ஒவ்வொரு நாளும் அவனுக்காக அவனுடைய வீட்டுப் பாடங்களைத் தங்கச்சி செய்து கொடுப்பாள். மார்கழி மாதம் கடைசி பரீட்சை வேற எழுத வேண்டி இருக்கிறது அவனுக்கு. அவன் இரவில் நேரத்தோடு தூங்கப் போவது சரியா என்று பல தடவை யோசித்தும் இருந்திருக்கிறான். ஆனால் இரவு எட்டு மணியை நெருங்கியவுடன் தூங்கப் போகிற நேரம் என்று உடலிருந்து ஒரு மணி அடிப்பது போல் தூக்கத்துக்கு அழைத்துச் சென்று விடும் அவனை. கொடிக்கு அன்பும், பரிவும் ஆளுமையும். இயல்பில் நிறையவே இருக்கிறது. மனிதர்களுக் கிடையிலான வேற்றுமையை மனதளவில் நிராகரிப்பதோடு நடைமுறையில் அவற்றை அவள் தனக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் எடுத்து வாழ்ந்து வருபவள்.

சைமன் காலையில் ஆறு மணிக்கு எழுந்து அப்பாவோடு ஒவ்வொரு நாளும் அவன் கடல் தொழிலுக்குப் போய் வருவான். காலையில் 8 மணிக்கு முதல் அவனும் அவனுடைய அப்பாவும் கரைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள். அதன் பின்னர் தான் அவன் பள்ளிக் கூடத்துக்குப் போவான். ஊர்ப் பள்ளிக்கூடம் என்பதால் அவ்வப்போது பிந்திப் போனாலும் அவர்கள் எதுவும் கண்டு கொள்ள மாட்டார்கள்.

அவனுடைய அப்பாவும் அம்மாவும் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்கள். பேச்சுத் திருமணம்தான் ஆனாலும் அவர்கள் இருக்கிற குடிசையைத் தவிர எதுவும் சீதனம் என்று தாயாரின் வீட்டார் கொடுக்கவில்லை. கொடுக்கவில்லை என்று சொல்வதிலும் பார்க்க அவர்களிடம் கொடுப்பதற்கு ஏதும் இல்லை என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும் அவனுடைய ஊரிலிருந்து யாழ்ப்பாண நகரப் பகுதிக்குள் இருக்கும் பாடசாலைக்குப் போகின்ற பிள்ளைகளை ஏற்றுவதற்காக ஒவ்வொரு நாளும் காலையிலே எட்டு மணிக்கு இலங்கை போக்குவரத்து பேருந்து வந்து விடும் .அந்தப் பேருந்தில் போவதற்காகக் காத்துக் கொண்டிருக்கின்ற மனிதர்களில் கொடி மலரும் ஒருத்தி. கொடி மலர் ஏற்கனவே அவனுடன் படிக்கிற சக வகுப்பு மாணவியின் நண்பி. அவள் அதிகம் பேசியதில்லை. அவ அவ்போது வீதியில் பார்பபதோடு முடிந்து போகிற அவனுடைய வாழ்கைக்குள் ;அவள் மீதான நினைப்பும், தவிப்பும் எப்போது தொடங்கியது என்று அவனுக்கே புரியவில்லை. அவளை அவன் கண்டால் அவனை அறியாமலேயே மனம் பறக்க முயலும் அவள் கண்களில் ஏதாவது ஒழித்து வைத்து இருப்பது போலவும் அவற்றைக் கண்டடைந்துவிட வேண்டும் என்றும்அவனக்குள் வலி ஒன்று முடிவில்லாமல் அவனை வதைக்கும்.

ஒவ்வொரு நாளும் தொழில் முடிந்து அவன் கடிப்பையும், மரக்கோலையும் தோளில் சுமந்து வரும் பொழுது அவனுடைய ஊரின் இருக்கின்ற சந்தியில் பள்ளிக்கூடத்திற்கு போவதற்காக பஸ்சுக்கு காத்துக் கொண்டிருக் இருக்கின்ற மலர் உட்பட பல பெண்களையும் ஆண்களையும் அடிக்கடி கடந்து தான் அவன் செல்ல வேண்டி இருக்கும். தொழிலுக்குப் போய் வருகிற விடயம் மற்றவர்களுக்குத் தெரிந்து விடப் போக்கிறது என்று வெட்கத்தால் கூனிக் குறுகி சில வேளையில் அவன் அவனுடைய முகத்தைக் கடிப்பால் மறைத்துக் கொண்டே போவான் . ஊரில் பள்ளிக்கூடம் படிக்கிற காலத்தில் தொழிலுக்குப் போய் வருகிற பள்ளிக்கூட மாணவர்களை ஓர் இளக்காரமாக மற்ற மாணவர்களும் மாணவிகளும் பார்ப்பார்கள் என்று சிறுவயதில் இருந்தே அவன் கேள்விப்பட்டும், அறிந்தும் இருக்கின்றான். அதை அவனுடைய வாழ்விலும் அவன் அனுபவித்து வருகின்றான். பள்ளிக்கூடத்திலேயே சில நேரங்களில் அவனைப் பார்த்து ஒரு சில மாணவர்களும் மாணவிகளும் மீன் மணக்கிறது என்று கேலி செய்வதும் உண்டு. அவன் அதைப் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை.

ஏன் அவர்கள் மட்டுமா அவனுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியரே அவனது உடலைப் பார்த்து எவ்வளவு கேவலமாகச் சொல்ல வேண்டுமோ அவ்வளவு அசிங்கமாகச் சொல்லுவார். அது மட்டுமல்ல அந்த ஆசிரியர் வசதி படைத்தவர்களைக் கவனிக்கிற விதமும் அவனைப் போல் அடித் தட்டு நிலையில் இருக்கும் மாணவர்களைப் பார்க்கிற விதமும் வேறு வகையாக அவருக்கு இருக்கும். அவன் அவனுடைய குடும்பத்தின் வறுமையைப் பற்றி பெரிதாக யாருக்கும் சொல்லுவதும் இல்லை. தாங்கள் வறுமையில் வாடுவதைப் பற்றி அவன் அதை ஒரு குறையாகவும் நினைப்பதும் இல்லை. மற்றவர்களைப் புண்படுத்தாமல் வாழ வேண்டும் என்று நினைக்கிறவன். ஆனால் அவனுக்கு சில வேளை ஒரு குறைபாடு என்று அவன் நினைக்கும் பொழுது ஒரு தாழ்வு மனப்பான்மை அவனுக்குள் இருந்து எட்டிப் பார்த்து விட்டுச் செல்லும். அதுவே சில வேளையில் மன வலியைக் கொண்டு வந்து விடும். அதனால் அவன் துவண்டு போய் விடுவான். மலர்க் கொடியின் விடயத்தில் தான் மோசமாக நடந்து கொள்கிறேனோ என்று மனதளவில் சில வேளைகளில் யோசிப்பதுண்டு. அவளைவிரும்புகிறான.

ஆனால் அவளுக்கு அது பற்றித் தெரியுமோ? அல்லது பள்ளித் தோழிகளிடம் தூது விட்டுக் கேட்போமா? என்று நினைப்பதும் உண்டு. ஆனாலும் எந்த முடிவும் எடுக்க முடியாமல் குழப்பத்தில் சிக்கித் தவித்தான். கொடி மலரை எல்லோரும் கொடி என்றுதான் அழைப்பது வழக்கம். கொடி மலருக்கு அவருடைய அப்பாதான் பெயர் வைத்தார். இயக்குநர் ஸ்ரீதரின் படமான கொடிமலர் படத்தைப் பார்த்து விட்டு அந்தப் பெயரை வைத்தாகவும், படத்தில் வருகின்ற விஜயகுமாரி வாய்பேசாத அப்பிராணி. ஆனால் கொடிமலர் சரியா வாயாடி என்றும் அவனுடைய வகுப்பறை தோழியும் கொடிமலரின் நண்பியுமான வசந்தா ஒரு நாள்அவனக்கு சொல்லிய பின் தான் அவளுக்கு அந்தப் பெயர் வைத்ததற்கான காரணம் தெரிய வேண்டி வந்தது. வசந்தா கொடியைப் பற்றிய இந்த வார்த்தையை அவள் சொன்ன போது ஆரம்ப நாட்களில் ஏன் அப்படி அவளை “வாயாடி” என்று சொன்னால் என்று பல தடவை யோசித்து இருந்தான். பின்னர் காலப்போக்கில் அவள் அப்படிஅவனக்கு சொன்னதையே அவன் மறந்து போய் விட்டான். அது கொடியின் மேல் கொண்ட அன்பின் காரணமாகவும் இருக்கலாம்.

வசந்தா எந்நேரமும் கலகலப்பாக இருக்கும் தன்மை உடைய வளாக இருந்தாலும் சைமன் தன் மீது காதல் வருவதற்கான எல்லா வகையான முயற்சிகளையும் அவள் மேற்கொண்டாள் அவள் இயல்பிலே நல்லவள் என்று அவனுக்கும் தெரிந்தே இருந்தது. ஆனால் வசந்தா தன்னை விரும்புவது பற்றி எதுவுமே அவனுக்கு தெரியாது அவளை தன்னுடைய சக மாணவியாக சக மனிதனாகவே அவளை அவன் பார்த்து வந்தான் அத்தோடு கொடிய பற்றிய மேலதிக தகவலை தெரிந்து கொள்வதற்காகவுமே நிறைய நேரம் அவன் கதைப்பதை அவன் பழக்கமாகி கொண்டான். வசந்தா சுந்தரம் என்கிற அவளுடைய சொந்த மச்சானை நீண்ட காலமாக விரும்பி இருவரும் காதலித்து வந்தார்கள் ஆனால் அவன் நீண்ட காலம் காதலித்து இருந்த பொழுதிலும் போராட்ட இயக்கத்தோடு ஏற்பட்ட நெருக்கமான அரசியல் உறவால் அவன் அந்த இயக்கத்தில் சேர்ந்து ரோலர் படகில் இயக்கத்துக்காரரோடு இந்தியாவுக்கு போவதற்காக இரண தீவுக்குப் போய் இரணதீவில் இருந்து ராமேஸ்வரம் போகும் வழியில் அவர்கள் காணாமல் போய்விட்டார்கள்.

இன்று வரையில் அந்த படகில் போனவர்கள் பற்றிய எந்த தகவலும் யாருக்கும் கிடைக்கவில்லை. அதன்பின் கொஞ்ச நாட்களாகவே வசந்தா அழுது கொண்டு அலைந்தாள். படிப்பிலும் அக்கறை இல்லாமல் இருந்தாள் காலப்போக்கில் அவற்றை எல்லாம் மறந்து வாழ பழகிக் கொண்டாள். அந்த நேரத்தில் தான் சைமனோடு கதைக் தொடங்கினாள். கதைக்க தொடங்கிய காலம் தொட்டு அவன் மீது ஒருவிதமான ஈர்ப்பு அவளுக்கு வந்தது அதுவே ஒரு தெய்வீக விருப்பமாக அவளுக்குள் அவனைப் பற்றிய ஆசைகள் எல்லாம் அவளுள் அலைமோது பொழுதெல்லாம் அவன் கண் முன்னே வந்து நிற்பான் அவனுடைய நினைப்பை அவள் தன் நெஞ்சுக்குள் ஒரு ஒளி போல் ட்டிக் கொண்டிருந்தாலும் அது வெளிச்சமற்ற ஒளியாகவே இருந்தது மாறியது. ஆனால் அந்த விருப்பத்தை ஆரம்பத்திலேயே அவனிடம் கேட்டிருந்தால் அவன் தன்னுடைய நிலைப்பாட்டைச் சொல்லி இருப்பான் ஆனால் அவள் தன்னுடைய விருப்பத்தை சொல்லாமலேயே அவளாகவே தன் மனதுக்குள் ஒரு நினைப்பை வளர்த்துக் கொண்டு அவனுடன் கதைப்பாள். எப்படித்தான் இருந்தாலும் அவன் தன்னைத்தான் விரும்புவான் என்று அவள் தனக்குள் தானே நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் சைமன் என்ற மனிதனை வாழ்வென்னும் மாயப் பறவைக்குள்.

கடல் மண்ணுக்குள் இருந்து வெட்டி எடுக்கும் மண்புழுவை தூண்டிலில் போட்டு களவாய் மீனை பிடிக்கிற வாழ்வை வெல்லுகிற தந்திரத்தில் திரிகிறாள் என்று அவன் மனதளவில் நினைத்தது கிடையாது. ஏனென்றால் அவள் ஒரு அப்பாவி ஏற்கனவே உயிராய் நேசித்தவனையும் இழந்தவள். அவளுக்கு அவன் கதைப்பதெல்லாம் தன்னில் இருக்கின்ற தணியாத அளவு கடந்த பிரியத்தினால் தான் என்று தான் அவள் எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தாள்.

கொடி ஊரில் இருக்கின்ற நூலகத்துக்கும், கோயிலுக்கும் போய் விட்டு கோயில் வீதியால் நடந்து வரும் பொழுது முதல் முறையாக சைமன் அவளின் கண்களை நேரடியாக பார்த்தான். அந்த கணமே, அவள் தனது வாழ்க்கையின் முக்கியமான பாத்திரமாக இருப்பதை உணர்ந்தான். அவளுடைய கூரிய கண்களில் காதலும் அன்பும் இருப்பது போல அவளின் மெல்லிய புன்னகை அவன் மனதில் இறுக நிற்கச் செய்தது. அவளுடைய கூந்தல் காற்றில் வீசிக்கொண்டிருந்தது, அது அவனை மயக்கியது. கிணற்றில் விழுந்த நிலவைப் பார்த்து ரசிப்பது போலவே, அவன் அவளை பார்த்துக் கொண்டு நின்றான்.

அவள் அவனின் அருகே வந்தபோது, அவன் அதை உணர்ந்து கொஞ்சம் நாணத்துடன் நின்றான். அவளின் மெலிதான சிரிப்பில் காதல் கனவுகள் கலந்திருந்த்தை நினைத்து, அவன் மெய்மறந்து நின்றான். "நாளைக்கு காலையில் நேரம் இருந்தால்,தொழிலுக்கு போகும்முன் வீட்டுக்கு வந்துவிடு." என்றாள்.அவளது வார்த்தைகள் அவனைப் புரள வைத்து விட்டன. "ஏதாவது விசேசமா?" என்று அவன் கேட்டான். "ஒன்னும் இல்லை, உன்னோடு கொஞ்சம் பேசணும்," என்றாள் அவள். "அப்படியா? கட்டாயம் நாளைக்கு வருகிறன்," என்று சொல்லிவிட்டு, அவன் அவளை மனதிற்குள் நிறுத்திக்கொண்டு வெளியேறினான். அவளின் வார்த்தைகளால் அவனுடைய கண்களில் நீர் கோர்த்தது. அதை அவன் காட்டிக் கொள்ளாமலே நடந்து போனான். அவன் இதையே அவளிடம் இருந்து என் எதிர்பார்த்திருந்தான், ஆனால் இவ்வளவு விரைவாகவும் இலகுவாகவும் இந்த இடத்தை வந்தடைவான் என்று அவன் ஒருபோதும் எண்ணிப் பார்த்ததில்லை.அவள் வெவ்வேறு வடிவில் அவனுடைய மனதில் வந்து; ஆழக் கடலின் முத்து போல் தோன்றினாள்.

சைமன்யோடு கொடி கதைத்து விட்டு அவளுடைய வீட்டை நோக்கி எதிர்த்து திசையில் நடந்து கொண்டிருக்கும் பொழுது வசந்தா எதேச்சையாக வந்து கொண்டிருந்தாள். அவளை கண்டதும் கொடி தனக்குள் நீண்ட காலமாக மறைத்து வந்திருந்த அவன் மீதான காதலை அவளிடம் சொல்ல வேண்டும் என்று உடனே நினைத்துக் கொண்டாள். இவ்வளவு நாளும் உனக்குச் சொல்லாமல் நான் மறைத்து வைத்ததற்கு முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவள் தனக்குள் நினைத்துக் கொண்டாள். மனதுக்குள் இனம் புரியாத சிரிப்பொலி அவளுக்குள் கேட்டுக் கொண்டிருந்தது. அது எதற்காக இந்த நேரத்தில் மனதில் இருந்து எதிரொலிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். “என்னடி லைப்ரரிக்கா போயிட்டு வர” என்று கேட்டுக்கொண்டு வசந்தா அவருடைய தோளில் கையை போட்டாள். “நான் உங்கட வீட்டை போறதுக்கு தான் வந்தன நல்ல வேளையாக நீயும் வீட்டுக்கு போய்க் கொண்டிருஇருக்கிறி” என்றாள். அப்படியா வா வேண்டி வீட்டிற்கு போவோம் என்று கொடி கூப்பிட்டாள். ரெண்டு பேரும் பக்கத்தில் கையைப் பிடித்துக் கொண்டே நடந்து கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள். கொடிக்குப் பிடித்தது வசந்தாவின் நகைச்சுவையான பேச்சுவழக்கும் எதையும் ஒழித்து மறைத்து வைத்திருக்கும் பழக்கமும் அவருக்கு கிடையாது என்பதுமே.

ஆனாலும் ஏன் சைமனின் மீது கொண்ட அளவற்ற பிரியத்தை ஏன் இவ்வளவு காலமும் மறுத்தது வந்தாள்? வசந்தாவின் வீட்டிற்குச் சென்று கொடி பாடம் படிப்பதும் வழக்கம் என்றாலும். சில நேரங்களில், கொடியின் வீட்டிற்கும் வசந்தா படிக்க போய் வருவாள். என்னடி கொடி இன்றைக்கும் இல்லாத மாதிரி இன்னைக்கு ஒரே சிரிப்பு சந்தோஷமா இருக்கு கள்ளுக்கடைக்கு போட்டு வந்து எங்கடா அப்பன் போல இருக்கு என்று கேலியும் கிண்டலுமாக உரிமையோடு வசந்தா கேட்டாள். நான் இல்ல சைமனை விரும்புறேன் உனக்குச் சொல்லலாம் என்று தான் கணநாளை நினைத்து நான் ஆனா சொல்ல இல்ல மன்னிச்சுக்கோ நாளைக்கு வீட்டுக்கு சைமன் வாராண்டி என்னுடைய விருப்பத்தை அவனுக்கு சொல்லப் போறேன் என்று சொன்னவுடன் மெல்ல அவள் தன்னோடு அவளை அணைத்துக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டாள். அந்த முத்தம் அவள் தன் காதலை அவளுக்காக விட்டுக் கொடுக்கும் பண்பை கொண்டு வந்ததா? அல்லது வேறு வழியிற்று தானாக விலகிச் செல்கிறாளா ?

எப்படியோ அவருக்குள் ஒரு பதில் வந்து முட்டி மோதியது. நீ இந்தச் செய்தியை எனக்கு சொன்னதும் நான் எவ்வளவு சந்தோஷப் படுகிறேன் என்று வார்தையாலே சொல்ல முடியேலே என்றாள். மனதிற்குள் நீண்ட நாட்கள் தங்கியிருந்த கனவொன்றை மறைத்து கொண்டு அவள் சொன்னாள். எல்லாமே வசந்தாவிற்கு இழப்புதான். அவள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்கிற பக்குவ நிலைக்கும் வந்து விட்டாள். தன் காதலை அவள் விட்டுக் கொடுக்க முயற்சி செய்கிறாளா? அல்லது அவளுடைய இயல்பான சுபாவம் மற்றவர்களுக்காக எதையும் விட்டுக் கொடுக்கிற தன்மை உடையவளா என்று புரியவில்லை.

“ஒரு நாள் கூட தவறாது வள்ளத்தில் நின்று கொண்டு கொழுத்து மீனுக்குத் தூண்டில் போடும் சிறுவனின் முயற்சி போல அவள் சைமனைச் சுற்றிச் சுற்றி வருவதும் அவனை எப்படியெல்லாம் தனக்கு உரியவளாக மாற்றுவதற்கான எத்தனை விதமான கோமாளித் தனங்கள் எல்லாம் செய்தாள் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும். தன் உயிரின் திசுக்களே அவன் பார்வையால் தான் இழைக்கப் பட்டதை அவள் அறிவாள்?” ஆயினும் ஏன் கொடிக்காக எல்லாவற்றையும் விட்டுக் கொடுக்க வேண்டி அவளுக்கு வந்தநிலையை அவள் தனக்குள் தானே கேட்டுக் கொண்டாள்.

கொடியின் அம்மா, அவளது அப்பாவைத் தவிர வேறு எந்த ஆணிடத்திலும் தேவை இல்லாமல் பேசியதில்லை. அவளுடைய தாய், நண்பிகளுடன் கூட மிகுந்த சிரிப்போடு பேசுவதில்லை; அவள் எப்போதுமே அளவுக்கு மீறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது கிடையாது.வீட்டை விட்டு வெளியே செல்வதும் அரிது. ஆனால், கொடி அவள் அம்மாவைப் போல இல்லாமல், அமைதியான சுவாசம் கொண்டவளாக இருந்தாலும், தன்னுடைய நண்பிகளுடன் இருக்கும் போது கலகலப்பாக இருக்குமளவு வேடிக்கையாக இருப்பாள். எப்போதும் பல நண்பிகளை தன்னுடைய வசப்படுத்தி வைத்திருக்கும் கொடிக்கு, வசந்தா மீது மட்டும்தான் ஒரு விதமான ஈர்ப்பு இருந்தது. அதற்கு முக்கிய காரணம், சிறுவயதில் இருந்தே இருவரும் பழகி வந்த நட்பே. கொடியின் அப்பா, ஊரில் 'சினிமா பைத்தியக்காரன்' என்று எல்லாரும்சொல்லுவார்கள். அவர் சிவாஜி கணேசனின் தீவிர ரசிகர். சிவாஜி படமென்றாலே, முதல் காட்சிக்கு போய் விடுவார். சில சமயங்களில், தனது சேட்டின் பணத்தை முழுமையாக செலவழித்துவிட்டு திரும்பிவிடுவார். அவருக்கு எஸ். எஸ். ஆர். பிடித்திருந்தாலும், எம். ஜி. ஆர். மீது வெறுப்பு. "அவர் நல்ல மனுஷன், ஆனால் நடிக்கத் தெரியாது," என்று அடிக்கடி சொல்வதை அவளே பல தடவைகள் அவதானித்து இருக்கிறாள்.

அதே நேரத்தில், கொடி தனது அப்பாவுக்கு முற்றிலும் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டவள். சினிமாவை மக்களை ஏமாற்றும் தொழிலாகவே கருதுவாள். அதேசமயம், இலக்கியம் மீது அவளுக்கு அளவுகடந்த ஆர்வம். பள்ளிப் படிப்பைத் தவிர, இலக்கிய நூல்களை வாசிக்கும் பழக்கம் அவளிடம் வளர்ந்தது. ஆரம்பத்தில் சன சமூக நிலையத்தில் இருந்து ஆனந்த விகடன், குமுதம் போன்றவற்றை வாசித்தாலும், பின்னர் இலக்கிய நூல்களை அதிகமாக வாசிக்கத் தொடங்கினாள். நூலகத்திற்குப் போய் வருவது அவளுடைய வழக்கமான பொழுதுபோக்காகவே இருந்தது. கொடியின் அப்பா அவள் சிறுவயதாக இருக்கும் பொழுதே இனம் தெரியாத இயக்கத்தவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவளுடைய அப்பா இறக்கும் போது அவளுக்கு வயது 5.

அவனுடைய அண்ணன் இயக்கத்தில் சேர்ந்து இந்தியாவுக்கு பயிற்சி எடுப்பதற்காக போன பொழுது இடையில் கடலில் இலங்கை கடற்படையினால் சுட்டுக் கொல்லப்பட்டான் அவனுடைய அப்பாவை கொல்லுவதற்கான காரணம் வெளிப்படையாக தெரியாவிட்டாலும் பொதுவாக ஊரில் அவர் ஒரு இயக்கத்துக்கு சப்போர்ட்டாக இருந்தவர் என்று சொல்கிறார்கள். அதற்காக அவரை சுட்டுக் கொல்ல வேணுமா என்று பல தடவை அவள் தனக்குள்ளே கேள்வி கேட்டு இருக்கிறாள். அவளுடைய அப்பா; அவளுடைய அம்மாவை மிகவும் அன்பாக நேசித்தார் என்று பல தடவை அவர்கள் நண்பிகள் வட்டத்தில் சொல்லுவதாக அவனுக்கு வசந்தா பல தடவை சொன்னாள்.ஆனால் அவர் கூட நீண்ட காலம் வாழ முடியாமல் போனது இன்னைக்கு அவர்களுடைய குடும்பம் எப்போதும் வருந்துவதாகும் அவள் சொன்னாள். அவளும் அவளுடைய அம்மாவும் இப்போது தனியாக வாழ்கிற போதிலும் அவர்களுக்கு பொருளாதார ரீதியான எந்தவித கஷ்டமும் அவர்களுக்கு ஏற்படவில்லை. அவர்களுக்கு நிறையச் சொத்துக்கள் இருந்தாலும் அவளுடைய அம்மா இன்று வரை மீன் சந்தையில் மீன் வியாபாரம் செய்து தன்னை படிப்பிக்க வைக்கிற வைக்கிற என்ற எண்ணம் அவளுக்கு ஒரு துணிசலை ஏற்படுத்தியது.

தங்களிடம் போதியளவு பணவசதி இருந்தாலும் அம்மா பணத்தின் மீது தீராத மோகம் கொண்டவர் என்று சொல்ல முடியாது. ஆனால் பணம் மனிதனுக்குக் கட்டாயம் தேவை என்று உணர்ந்து நடக்கிறவங்க என்பதை அவள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறாள் .தன்னைப் பற்றிய கனவுகள் அம்மாவுக்கும் நிறையவே உண்டு .அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்றே அவளுடைய அம்மாவிற்கு விருப்பமாயிருக்கும். அவர்கள் அவரகளுடைய அப்பா உயிரோடு இருக்கும் பொழுதே நிறையச் சொத்துக்களைச் சேர்த்து வைத்து விட்டார்கள். அதனால் வழமையான விதவைகள் அனுபவிக்கிற கஷ்டங்களிலிருந்து தாங்கள் தப்பித்துக் விட்டோம் என்று அவர்கள் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறார்கள். அதிகாலை 6:00 மணிக்கு திருந்தாதி மணி அடிக்கவும் அவன் விழிக்கவும் ஒரே நேரமாயிற்று. அப்படியே அவன் படுத்த படுக்கையை விட்டு எழுந்து அவளுடைய வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான். போகும் வழியெல்லாம் ஒரே கனவுகளாக அவனுக்குள் தோன்றி மறைந்து கொண்டிருந்தது.

மாதா கோயிலுக்குள் உள் நுழையப் போகும் ஒரு உண்மையான பக்தனைப் போல அவள் அவனில் கடவுளின் சாயலில் இறங்கிக் கொண்டிருந்தாள். அது அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அவன் அவனுடைய வாழ்வின் மீது பெரும்பற்று கொண்டத. அவ்வப் போது சலிப்பும் அவ நம்பிக்கையும் கொண்டிருப்பான் ஆனால் அவளைச் சந்திக்கப் போவது அவனுடைய வாழ்க்கையில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வரும் என்று அவன் நம்பியதால் தான் அவனுடைய நடையிலும் ஒரு வேகம் இருந்தது. நடையில் நம்பிக்கை இருந்தாலும் இந்த அதிகாலையில் அவசரமாக நடப்பதை மற்றவர்கள் பார்த்து விடுவார்களோ என்ற ஒரு அச்ச உணர்வும் அவனில் படர்ந் திருந்தது. அவன் நடந்து போய்க் கொண்டு இருந்த மண்ணால் ஆன வீதியில் ஈரம் ஊறிக் கிடந்தது. அது இரவு பெய்த கனமழையால் மழையில் வந்த ஈரம். நிலத்திலிருந்து ஒரு வாசனை வீசிக் கொண்டிருந்தது. உவர்நிலத்தில் கருமேகம் வீசிய கண்ணீர்த் துளியில் சூரியன் வந்து குளித்து விட்ட சென்றது போல் அவனுக்குத் தோன்றியது. அந்த வாசனையை அவன் நீண்ட காலத்துக்குப் பிறகு நுகர்ந்தான். அனுபவித்தான் அது அவனுக்கு ஒரு ஆறுதலை மனதில் ஏற்படுத்தியது அவன் சற்றும் எதிர்பாராமல் காலை வைத்த பொழுது ஒரு மண்புழு ஒன்று மிதிப்பட்டுவிட்டது. ஒரு பாதி அறுந்து போய் மறுபாதி சுருண்டு கிடக்க மற்றப் பாதி பாதையில் மெல்ல நகர்ந்து கொண்டு இருந்தது மரணத்தை நோக்கி. அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டு போன போது அவனுக்கு ஒரு குற்ற உணர்வு அவனை அறியாமல் மனதில் வந்து தோன்றியது.

இந்திய ராணுவம் இலங்கையில் நிலை கொண்டிருந்த பொழுது யாழ்ப்பாணத்து வீதிகளில் சாக்கு மூடையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட உயிர்கள் கிடந்தது அவனுக்கு நினைவுக்கு வந்தது ஒரு கடைக்கு முன்னால் இரத்தம் வழிந்தோடிய படி கிடந்த சாக்கு மூட்டையில் அவனுடைய அண்ணனின் நண்பன் வெட்டிக் கொல்லப்பட்டுக் கிடந்தான் அதை யாரோ ஒருவர் மாட்டு வண்டியில் கொண்டு போய் யாழ்ப்பாண மருத்துவ மனையில் ஒப்படைத்தார் அதைக் கேள்விப்பட்டு அவன் போய் மருத்துவமனையில் இருக்கும் பிணவறையில் அந்த உடலைப் பார்த்து வந்தான். அந்த நிகழ்வை எப்போது அவன் நினைத்தாலும் நெஞ்சு வெடித்து விடும் போல் அவனுக்கு இருக்கும். அந்த காலகட்டத்தில் அவனுக்கு எழுந்த பெரும் கோபங்களை அடக்கி வாழ்வதை தவிர வேறு ஒன்றையும் வெளிப்படையாக அவனால் அந்த நேரத்தில் காட்ட முடியாமல் இருந்தது. அது அவனுக்கு மட்டுமல்ல அந்தப் போர் சூழ்நிலையில் பல மனிதர்களின் நிலைமை அப்படித்தான் அந்த நேரத்தில் இருந்தது. அந்த நினைவுகளோடு நடந்து வந்தவனுக்கு அவனுடைய உறவுக்காரனாக மத்தேசு “ என்னடா இந்த வில்லனத்தோடு தொழிலுக்குப் போகாமல் எங்கையட நடந்து போய்க்கொண்டிருக்கிற “ என்று நடந்து கொண்டே கேட்ட பொழுது அவன் நினைவிலிருந்து மீண்டு வந்தான். நான் தொழிலுக்குத் தான் போகப் போகிறேன் அதக்கு முதல் ஒரு அலுவலக போட்டு போய்க் கொண்டு இருக்கிறேன்” என்றான்.

சுடாத சூரியன் கடற்கரையின் அடிப்பாகத்தில் இருந்து மேலெழுந்து வந்து கொண்டு இருந்தது. பல இரவுகளில் அவன் வானத்தில் நிலாவை, தேய்பிறையை, வளர்பிறையை அவன் வெட்ட வெளியில் தனியாக நின்று கொண்டு அவற்றை ரசித்துப் பார்ப்பான். இனிமேல் அவளோடு இணைந்து பார்க்கக்கூடிய சூழல் உருவாகுமா என்று ஒரு முறை அவன் யோசித்தான்.அவனுடைய உறவுக்காரன் ஒருவன் எதிர்த் திசையில் வந்து கடற்கரையை நோக்கி போய்க் கொண்டிருந்தான். காலையில் மீனவப் பெண்ணொருத்தி பைப் படியில் குடத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு இடுப்பில் சுமந்து கொண்டு போய்க் கொண்டு இருந்தாள்.விரைப்பான மீசையோடு விடுவலைத் கொண்டு நடத்துகின்ற மண்டாடி தொழிலுக்கு போவதற்காக ஒவ்வொரு விடுவலைத் தொழிலளாகளின் வீட்டில் பெயர் சொல்லி கூப்பிட்டுக்கொண்டு போய்க்கொண்டிருந்தான் அவருடைய குரலைக் கேட்டு சிலர் வெளியில் வந்தார்கள். சந்தையில் மீன் வியாபாரம் செய்கிற வயசான இரண்டு பெண்கள் தலையில் கடகத்துடன் நடந்து கொண்டு போனார்கள். அவர்கள் நடக்கும் போது செபமாலை சொல்லிக் கொண்டு போனார்கள் எங்கிருந்தோ ஒரு காகம் ஒன்று நாரை மீனை ஒன்றைப் பொக்கிக்கொண்டு வந்து சுவரின் விளிம்பில் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது ஆனைக்கோட்டையில் இருந்து இறால் வலை இழுப்பதற்காக வந்தவர்களில் சிலர் தொழிலை முடித்துக் கொண்டு சைக்கிளில் போய்க் கொண்டிருந்தார்கள். தெருவில் படுத்து இருந்த தெரு நாய் ஒன்று ஊளையிட்டபடி சோம்பல் முறித்துக் கொண்டே நடக்கத் தொடங்கியது .

கொடியின் வீட்டை நெருங்க நெருங்க அவனுக்கு உடலில் ஒரு வித பதற்றமும் சந்தோஷமும் ஏற்பட்டது. வீட்டு வாசலுக்கு வந்தான் இரும்பு கதவு மெல்லத் திறந்து கிடந்ததை அவன் அவதானித்தான் ஏன் கதவு திறந்திருக்கிறது சற்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே அவன் உள் நுழைந்தான். வீட்டின் முன் குதிரை பலகை தான் தயாரிக்கப்பட் கதவும் சிறிதளவு விலகிக் கிடந்தது. அந்த இரண்டு கதவுகளையும் அவன் வருகிற நேரம் என்று நினைத்து அவள் திறந்து விட்டு இருக்கலாம். அதையும் தாண்டி முன் பிராந்தைக்கு நுழைந்தான். மூன்று அறை கொண்டு வீட்டின் இடது பக்கத்தில் இருக்கிற முன் கதவு மெல்லத் திறந்திருந்தது. இடைவெளியின் ஊடாக மெல்லிய வெளிச்சம் பிராந்தி நோக்கிப் பரவிக் கிடந்தது அது ம விளக்கின் வெளிச்சமாக இருக்கலாம் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போக இவன் வருவதை அவள் முதலிலேயே அவதிருப்பாளோ என்னவோ அவள் நாற்காலி விட்டு டக்குனு வாருங்க என்று சொன்னாள் அந்த மௌனக் கடலுக்குள் இருந்து அவளுடைய சொற்கள் மேலெழுந்து வந்தது அவள் எழுந்து நின்ற இடைவெளியின் பின் பக்க ஜன்னல் வழியாக கலீல் ஜிப்ரானின் கவிதை போல மல்லிகை பூக்கள்பூத்திருந்தன. இருங்கோ என்று சொல்லிக் கொண்டே நாற்காலியை நோக்கி கையை காட்ட இருவரும் நாட்காலியில் உட்காந்தர்கள் வெளி விறாந்தையைச் சுற்றி இருக்கும் சுவருக்கு நீலநிற வர்ணமும் அவர்கள் இருக்கும் இந்த அறையின் சுவருக்கு மெல்லிய பட்டர் நிறத்தில் வண்ணமும் ஏன் பூசி இருக்கிறார்கள் என்று ஒரு கணம் அவனை அறியாமலேயே அவன் நினைத்தான்.மேசைக்கு மேல் இருக்கின்ற பலகையினால் தட்டில் வரிசையாக ஒழுங்கு படுத்தி அடுக்கி வைத்திருந்த புத்தங்களைப் பார்த்து அவன் அதிர்ந்து போனான்.

மேசையில் சில புத்தகங்கள் கிடந்தன. அவற்றில் தி.ஜானகிராமனின் மரப்பசு,அம்மா வந்தாள், கே.டானியலின் தண்ணீர், தேவகாந்தனின் நிலாச்சமுத்திரம், டானியல் அன்ரனியின் வலை ஆகியன வாசிப்பதற்காகவோ அல்லது வாசித்து முடித்து விட்டோ மேசையின் ஓரமாகக் கிடந்தன. அவற்றை அவன் பார்த்து விட்டு அவளுக்கு வாசிக்கிற பழக்கம் இருக்கும் போல என்று நினைத்துக் கொண்டான். இந்தக் கதைப் புத்தகங்களில் அவனக்கு டானியல் அன்ரனியின்ர கதைப் புத்தகத்தைத் தவிர வேறு ஒரு கதைப் புத்தகங்கள் பற்றியும் அவனுக்குத் தெரியாது. அப்படி அவனுக்குத் தெரியாது என்று அவன் யாருக்கும் சொல்லும் பொழுதே மனதில் எந்த உறுத்தலும் இல்லாமலே வெளிப்படையாகச் சொல்வான்.அது அவனுடைய இயல்பான குணமும் .அப்படித்தான் எதையும் வெளிப்படையாகக் கதைப்பது அவனுக்குப் பிடித்திருக்கிறது. சுவரில் தந்தை பெரியாரின் படமும், டாக்டர். அம்பேத்கரின் படமும் தொங்க விடப்பட்டிருந்தது.அவனுக்கு அவர்கள் பற்றி எதுவே தெரியாது. மேசையில் இருந்த சுடுதண்ணீர்ப் போத்தலிலிருந்து இரண்டு குவளையில் தேநீர் ஊற்றி தனக்கு ஒன்றை வைத்துவிட்டு மற்றதை வேண்டும் என்றே அவனுடைய கையில் சுடும்படி அவள் அதனைக் கொடுத்த போது வந்த வெப்பத்தினால் அவன் நினைவிலிருந்து விடுபட்டான்

என்ன தொழிலுக்குப் போகிற நினைப்பிலேயா இருக்கிறீங்க..? ஓமோம் அதே நினைப்பில்தான் இருக்கறன். சற்று யோசித்து விட்டு அவன் சொன்னான். ஏன் அதே நினைப்பில் இருக்கக்கூடாதா? இண்டைக்கு நானும் எங்கட அப்பாவும் தொழிலுக்கு போகலை என்டால் எங்கட வீட்டில் உலை எரியாது.. பட்டினியில் தான் எங்கட குடும்பம் கிடக்கும். பட்டினியால் ஒரு நாள் என்றால் பரவாயில்லை. எத்தனை நாட்கள் என்று தான் கிடப்பது. அது என்னை ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி என்னுடைய எதிர் காலத்தையே பாதிக்கும் என்று பயமாக இருக்கிறது அதனால் தான் நான் கவலைப்படுகிறேன்.

“உங்களோட குடும்பச் சூழல் எனக்கு நன்றாகப் புரியும் அது சம்பந்தமாகத் தான் உன் கூட கதைக்கிறதுக்காக வரச்சொன்னன். நான் நீண்ட காலமாக உங்கள விரும்புகிறேன் உங்களுக்கு தெரியாது நீங்க என்ன விரும்புவது எனக்குத் தெரியும் இடையில் என்னுடைய நம்பி தான் எல்லாத்தையும் குழப்பிக் கொண்டு திரியிறால் ஆனால் அவள் உங்களை விரும்புகிறாள் அதுவும் எனக்கு தெரியும். வருகிற மார்கழிக்கு நமக்கு பத்தாம் வகுப்பு சோதனை தொடங்கி விடும் அது நல்லபடியா பாஸ் பண்ணிட்ட திரும்ப பன்னிரண்டாம் ஆண்டு வகுப்பு படித்து அதிலும் பாஸ் பண்ணிட்டு என்றால் பிறகு யூனிவர்சிட்டி போகணும்னு தானே நான் சோதனையில் பெயில் விட்டாலும் என்னுடைய குடும்பத்தில் பொருளாதார ரீதியாக எந்த பிரச்சினையும் இல்லை நீ உன்னுடைய எதிர்காலத்தை பற்றியே அக்கறையாக இருக்க வேண்டும் என்று தான் என்னுடைய விருப்பம் நான் உங்கள திருமணம் செய்வதில் இந்த ஆட்சியபனையும் இல்லை ஆனால் நம்ம படிப்பு முடிந்த பிறகு கட்டாயம் செய்வோம் அதுவரைக்கும் ஓரளவுக்கு மனத்தை கட்டுப்படுத்திக் கொண்டு வாழ தெரிஞ்சுப்போம் அவன் எல்லாற்றையும் ஆம் என்று எற்றுக் கொள்வது போல் தலையை அசைத்தான்.

ஏனோ யோசித்து விட்டு அவள் சொன்னாள் ;

“வானத்துப் பறவைகளைக் கூர்ந்து பாருங்கள். அவை நம்மைப் போல் விதைப்பதும் இல்லை, அறுவடை செய்வதும் இல்லை. ஏன், களஞ்சியங்களில் சேர்த்து வைப்பதும் இல்லை. என்றுதானே நம்ம பைபிளில் சொல்லி இருக்கு. இன்றைக்கு இருந்து நாளைக்கு இல்லாமல் போகும் இந்த வாழ்க்கைக்குத் தானே இவ்வளவு கஷ்டப்படுகிறோம், அலங்கரிக்கிறோம் எல்லாமே எனக்குத் தெரியும் ஆனால் இந்த வாழ்க்கைக்குத் தேவையானவற்றோடு தான் நாம வாழ வேண்டி இருக்கு . அதே சமயம் எல்லாத்திக்கும் மற்றவர்களை நம்பி வாழ்வதும் எனக்குப் பிடிக்காது.என்னப் பொறுத்தமட்டில் தைரியமும் பொருளாதார ரீதியில் யாரையும் சாராமல் சுயமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்”. நாம நல்லா இருக்கோணும் என்று நினைக்கிறவங்க இல்லாமல் இல்லை அதைவிட தங்களை விட நன்றாக இருக்கக் கூடாது என்று நினைக்கிறவங்க தான் அதிகமாக இருக்கிறார்கள் .சக மனிதர்களை நாம் ஒன்றும் செய்யத் தேவையில்லை அவங்களை நோகடிக்காமல் வாழ்ந்தாலே போதும். பணம் தேடுவது குறியாக கொண்டு வாழ கூடாது வாழ்க்கையில நிம்சைமன்மட்டும் தான் நமக்கு தேவை என்று நாம் வாழப்பழகவேண்டும். அதுதான் எனக்கு பிடித்தமானது அதை நீ செய்வீர் என்றும் நான் நினைக்கின்றேன்‘’ என்றாள் .அவள் சொன்ன வார்த்தைகள் அவனுக்குள் இரவு நேரக் கடல் நீர்ப்பரப்பில் மின்னும் வெளிச்சம் போல இறங்கிக் கொண்டிருந்தது ஒரு தொலைதூரக் கனவொன்று . அவன் வாழ்வின் வெளிச்சதின் மீது ஒரு நம்பிக்கையை கொண்டு வருகின்ற ஒளிக் குற்ற அவள்? வேர் கொண்டு நிலத்தில் நின்ற கால்கள் சிறகுகள் முளைத்து பறக்கத் தொடங்கியது போல் அவன் உணர்ந்து கொண்டான் மரக்கிளை ஒன்றில் நின்ற சத்தம் போட்டபடி சாக்குருவி ஒன்று மேல் நோக்கி பறக்கத் தொடங்கியது சாக்குருவி சத்தமிட்டு பறக்கும் வேளையில் அந்தப் பறவையை பார்க்கின்ற ஜனங்கள் ஏதோ சாவரப்போகுது என்று ஊரில் அவர்களுக்கு சொல்லிக் கொள்வார்கள் அப்படி அப்படிச் சொல்வது நீண்ட கால ஒரு பழக்கமாகவே இவ் ஊரில்இருக்கின்றது அதற்கு அவன் எதுவும் பேசாமல் அப்படியே அவள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தான். ஆனாலும் அவள் சொல்வதைத் தனக்கு எந்த விதத்திலும் மனதில் ஒட்டாதது போல் உணர்ந்து இருந்தான். அண்மைக்காலமாக கடலில் தட்டி பெத்த கலங்கண்டி வலையில் இறால் மீன் பாடுகள் பிடிப்படுகிறது அதிகமாக இருப்பதால் அனேகமாக இந்த நிலவு காலம் வருவதற்குள் எப்படியாவது அப்பாவோட சேர்ந்து சம்பாதிச்சு சொந்தமாய் ஒரு தோனி வாங்கணும் என்றும் அவர்களுடைய குடும்பம் முடிவெடுத்து இருந்தது அது சாத்தியப்படக்கூடிய சூழலில் அண்மை காலமாய் அமைந்து வருவது அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியையும் புது தென்பையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தது.அவன் கடலில் அண்மைக்காலமாக இறால் மீன்கள் பிடிபடுவது அதிகமாய் இருந்தது இந்தக் காலத்தில் எப்படியாவது உழைத்து அவனுக்கு ஒரு தோனி வாங்கணும் என்று ஆசையும் இருந்தது அது ஒரு நீண்ட கால கனவு கூட அதை இந்த உழைக்கின்ற காலத்திலேயே சேர்த்து வாங்க வேண்டும் என்ற எண்ணமும் தோன்றவும் அவளுடைய அம்மா குசுதிப் பக்கம் இருந்து வசந்தாவை கூப்பிடவும் சரியாக இருந்தது. குரல் வந்து திசையை நோக்கி கொடி சொன்னாள். அம்மா நம்முடைய சைமன்வாணன்வந்து இருக்கானு அவனை வழி அனுப்பி போட்டு குசிலிக்கு வாரேன் என்றாள். பொய் பேசாத அவளுடைய பிறவிக்கினம் அது. அவள் கடல் தாயின் குழந்தை அல்லவா. ஏதேனும் குடிக்க கொடுத்தியா ஓமம்மா நான் கொடுத்தன கதைச்சு போட்டு அவனை வழி அனுப்பி விட்டு ஒரு கப் பூசணிக்கு வந்துட்டு போ என்றாள்.

“ஏன் இவ்வளவு ஆசையை வைத்துக்கொண்டு இப்படி அலைந்து திரிஞ்சாய் என்று தான் எனக்கு புரியவில்லை?என்று அவன் கேட்டான்

“எல்லாம் உனக்காகத்தான் உன் படிப்பிற்காக தான் உன் வாழ்க்கைக்காகத்தான். காதல் என்ற போதையில் விழுந்து உன் படிப்பை, உன் எதிர்காலத்தை நாசமாக்கி விடுவாய் என்றுதான் நான் பயந்தேன். நீ எனக்கு கிடைக்க வேண்டும் என்று எத்தனை பிரார்த்தனை செய்திருப்பேன் தெரியுமா ? அந்தோணியார் கோயில் செபஸ்தியார் கோயில் என்று எல்லா புனிதர்களிடம் நீ எனக்கு கிடைக்க வேண்டும் என்று கேட்டு வந்திருக்கிறேன் என்று தெரியுமா? என்று பதில் சொன்னாள்.கண்களில் காய்ந்து கிடந்த கனவும் வாழ்வும் மெல்ல கண்ணீர் வடிவில் கசிந்து வழிந்து கொண்டிருந்தது. உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவள் திடீர்னு தன் பெருவிரலை நீட்டி கண்களில் இருந்து வடிந்த கண்ணீரை மெல்லத் துடைத்தாள் . அதை அவள் செய்து கொண்டிருக்கும் பொழுதே அவளை அறியாமல் ஒரு உணர்வு தோன்ற நான் இருக்கிறேன் ஒன்றுக்கும் பயப்படாதே என்றாள். பின்னர் சைமன் தொழிலுக்குப் போவதற்காக வாசல் கதவ நோக்கி வந்தான். கொடியும் அவனுடன் கூடவே நடந்து வாசல் வரை வந்தாய் அவன் வாசலை திறந்து வீதிக்கு வந்து நடக்கத் தொடங்கினான்.

அவன் போகும் திசையை நோக்கி பார்த்துக் கொண்டே வாசல் அடியில் நின்றாள். அவன் போகின்ற வேகத்தில் மனதில் வெவ்வேறு எண்ணங்கள் தோன்றிக் கொண்டு இருந்த பொழுதும் திரும்பி ஒரு தடவை அவளை பார்க்கணும் என்ற எண்ணம் அவனுக்குள் விழுந்தது. அவன் அவளைத் திரும்பிப் பார்த்தான். பார்த்தவுடனேயே அவள் ஒரு புன்சிரிப்பை காட்டிக் கொண்டு கை அசைத்துக் கொண்டு நின்றாள் அவன் திரும்பிப் பார்ப்பான் என்று ஏக்கத்தோடு தான் அவள் நின்று இருப்பாளோ? அவன் போகின்ற திசையில் இருந்து எதிர்பக்க வீதி வழியாக அவன் மறைந்த பொழுது அவள் வீட்டுக்குள்சென்றாள்.

அவன் கடற்கரையை வந்தடையவும் அவனுடைய அப்பா இவன் வருகைக்காக காத்திருக்கவும் சரியா இருந்தது .வள்ளம் கடலில் கட்டப் பட்டிருந்த போதிலும் கடல் காற்றிலும் அலையிலும்மெல்லிய நாட்டியம் நாடகம்; கடல் எனும் மேடையில் ஆடிக் கொண்டிருந்ததை. அவன் அவற்றைப்பார்த்துக் கொண்டே கடலில் ஆழமாக புதைக்கப்பட்ட கம்பில் கட்டி வைத்து இருந்த வள்ளத்தின் கயிறை மெல்ல பிடித்து அவன் கழட்டினான். இருவரும் வள்ளத்துக்குள் ஏறினார்கள். அணியப் பக்கத்தில் ஏறிய சைமன் மரக்கோலால் வள்ளத்தைத் தாங்கத் தொடங்கியபோது கடையால் பக்கத்தில் நின்ற அவனுடைய அப்பாவும் வள்ளத்தைத் தாங்கத் தொடங்கினார். மெல்ல வள்ளம் நகரத் தொடங்கியது

நடுப்பகுதியில் கடையால் பக்கத்தில் வங்குப் பலகைக்குப் பக்கத்தில் கடிப்பும் அத்தாங்கும் கிடந்தது வள்ளம் முழுவதும் நேற்று கடல் அட்டை புறக்குவதற்காக இந்த தோனியத்தான் அவர்கள் கொண்டு போய் வந்தார்கள் அதனால் அந்தக் கடல் அட்டையின் மனம் இன்னும் வீசிக் கொண்டு இருந்தது எப்போதும் போல் அவனுடைய அப்பா காதில் சொருகி வைத்திருந்த ஆர்விஜி பீடி எடுத்து அதைத் தீக்குச்சி கொண்டு அவர் பற்ற வைத்தார். பற்ற வைத்த கையோடு ஒரு முரடு இழுத்து விட்டு ஊதுவதற்குள் எங்கிருந்து வந்தது என்று தெரியாமல் ஒரு துப்பாக்கி வேட்டு சத்தம் கேட்டது அந்த வேட்டு சத்தம் கேட்டு உடன் அவனுடைய அப்பா ஐயோ மாதாவே என்று அப்படியே கடையால் பக்கமாக வள்ளத்திற்குள் அவர் விழுந்தார். விழுந்ததைப் பார்த்ததும் சைமன் தாங்கிக் கொண்டு இருந்த மரக்குளை அப்படியே விட்டுவிட்டு அவன் அவனுடைய தலையில் கையை வைத்து அடித்துக் கொண்டு அப்பாவைத் தேடி ஓடி வந்தான். அப்பாவின் தலையை அவனுடைய இரண்டு கைகளாலும் மில்லத் தூக்கினான் அவன் அவரை தூக்கிக் கொண்டு இருக்கும் பொழுதே அவனுடைய கையிலே அவரது உயிர் பிரிந்தது.

அவன் வல்லத்தின் மேலாக தலையை நிமித்தி கொண்டு வந்த பக்கத்தை பார்த்தான் அந்த வீட்டு சத்தம் யாழ்ப்பாண கோட்டையில் மேற்பகுதியில் சென்றிருந்த ராணுவம் தான் சுட்டது என்பதை அவன் கண்டு கொண்டான் அந்தக் கணமே மீண்டும் வீட்டு சத்தம் சரமாரியாக விழுந்தது அந்த போட்டி சத்தத்தில் பல குண்டுகள் வள்ளத்தை துளைத்துக் கொண்டு போனது சரமாரியாக வந்து குண்டுகளிலும் ஒன்று அவனுடைய கழுத்துப் பக்கமாக விழுந்தது விழுந்த உடனே அம்மா என்று கத்தியபடி அப்படியே வல்லத்துக்குள் விழுந்தார் விழுந்தா அவன் விழுந்த உடன் ஒரு மயக்க நிலைக்கு சென்று கொண்டிருந்தார் அந்த மயக்க நிலையில் அவன் அவன் வளமையா பார்க்கும் வானத்தை அண்ணாந்து பார்த்தான் வானத்திலிருந்து இதோ வருவது போல் அவன் உணர்ந்தான் பின் அவன் அவனுடைய அம்மா வருவதாக நினைத்தால் அதன்பின் அவனுடைய தங்கச்சி வருவதாக நினைத்து கொண்டான் பின்னர் இவற்றையெல்லாம் ஊறிக் கொண்டு ஒரு வானத்து தேவதை போல் ஒரு சம்மனசு அவனை நோக்கி வருவதாக அவன் உணர்ந்து கொண்டான் அந்த சம்மனுக்கு யாராக இருக்கும் என்று அந்த உயிர் பிரிகிற நேரத்திலும் அவன் நினைத்துக் கொண்டிருந்தான்.

அது யாருமல்ல அவனுடைய அவன் நீண்ட காலமாக நேசித்து உயிரின் மீது மேலாக நேசித்த அவனுடைய அன்புக்குரியவள் கொடி தான் வந்து கொண்டு இருந்தாள். குடி எங்கிருந்து வாராய் வானத்தில் இருந்தா அல்லது வையத்தில் இருந்தா அல்லது கடலில் இருந்து கடல் பெறுவதை மாறி வருகிறதா என்று அவனுக்குப் புரியவில்லை அவள் அவனுக்கு அருகில் வந்து கைகளை நீட்டினாள.அது அவளுடைய நீண்ட நாள் கனவின் ஒரு வலியா ? அவன் அந்த கைகளில் மேல் தன் உடலை சரித்தான்.  அவள் வானத்திலிருந்து வந்த தேவதையா அல்லது கடல் தாயின் மடியோ அவனுடய உயிரும் பிரிந்து சென்ற போது அவன் மனதில் இருந்து ஒற்றை வரி தோன்றியது இன்று நான் நாளை நீ என்று நினைத்துக் கொண்டே அவனுடைய உயிரும் பிரிந்தது.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2

விளம்பரம் செய்ய

வ.ந.கிரிதரனின் பாடல்கள்
பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here