காலத்தால் அழியாத கானங்கள்: "தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து மங்கை என்று வந்திருக்கும் மலரோ" - ஊர்க்குருவி -
கவிஞர் முத்துலிங்கத்தின் சிந்தையை வசியம் செய்யும் வரிகள், மெல்லிசை மன்னரின் இசை, கே.ஜே.ஜேசுதாஸ் & வாணி ஜெயராமின் குரல், எம்ஜிஆர் & லதாவின் சிறப்பான நடிப்பு , என்.பாலகிருஷ்ணனின் ஒளிப்பதிவு எல்லாமே நன்கிணைந்து எனைக் கவர்ந்த கானமிது. கவிஞர் முத்துலிங்கத்தின் வரிகளை ஒவ்வொன்றாக இரசித்தவாறே, அவற்றைப் பாடும் பாடகர்களின் குரல்களையும், அபிமான நடிகர்களின் நடிப்பையும் இரசித்துப்பாருங்கள் நிச்சயம் நீங்கள் உங்களையே மறந்து விடுவீர்கள். இப்பாடலின் பொருளை விளங்கி அமைக்கப்பட்டுள்ள இசை, அதையுணர்ந்து அனுபவித்துப் பாடும் பாடகர்களின் குரலினிமை , விளங்கி நடிக்கும் நடிகர்களின் நடிப்பு எல்லாமே என்னை ஈர்த்தனவென்பேன்.
இப்பாடலின் முக்கிய சிறப்புகளிலொன்று பாடலில் வெளிப்பட்டுள்ள லதாவின் நடனத்திறமை. லதா சிறந்த நர்த்தகி. லதாவின் நடனத்திறமையினை வெளிப்படுத்துவதற்காகவே அமைக்கப்பட்டுள்ள பாடலோ என்னும் வகையில் பாடல் முழுவதும் லதாவின் நடனத்தை வெளிப்படுத்தும் வகையில் பாடற் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆரும் நிதானமாக அதனை இரசித்துக்கொண்டிருப்பதன் மூலம், லதாவின் நடனத்துக்கு இடையூறேதும் செய்யாமல் பார்த்துக்கொண்டிருக்கின்றார்.
"வண்ண ரதம் போலவே
தென்றல் நடை காட்டவா
புள்ளி மான் போலவே
துள்ளி நான் ஓடவா"
என்னும் வரிகளுக்கு லதா வெளிப்படுத்தும் நடனத்திறமை என்னை மிகவும் கவர்ந்தது. இப்பாடலில் பின்வரும் வரிகளும் என்னை மிகவும் கவர்ந்தவை: