மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் என்ற ஊரைச் சேர்ந்தவர். சிறுவர் இலக்கியத்துக்கு மிகப்பெரும் இழப்பு. 'சிந்தாமணி'யின் 'சிறுவர் சிந்தாமணி'யில் தொடராக இவர் எழுதிய சிறுவர் நாவல்களைப் பால்ய பருவத்தில் வாசித்துள்ளேன். 'இலங்கையின் வாண்டுமாமா' என்று அப்பொழுது இவரை எண்ணிக்கொள்வேன். சரளமான, உள்ளங்களைக் கொள்ளைகொள்ளும் நடை இவருடைய நடை.
சிந்தாமணியில் பல வருடங்களாக சிறுவர் நாவல்கள் எழுதி வருந்திருக்கின்றார். அவை அனைத்தும் நிச்சயமாகத் தொகுக்கப்பட வேண்டியவை. இவர் எழுதியவற்றில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான நூல்களே வெளியாகியுள்ளன.
இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் சிறுவர் இலக்கியத்துக்கு மிகவும் அதிக அளவில் பங்களிப்புச் செய்தவர்களில் முக்கியமானவர் 'மாஸ்டர்' சிவலிங்கம். இவரது மறைவு இவருடைய எழுத்துகளூடு வளர்ந்தவர்களுக்கு மிகவும் துயர் தருவது. ஆழ்ந்த இரங்கல்.
'சிறுவர் சிந்தாமணி'யில் 'மாஸ்டர் சிவலிங்கம்' எழுதிய சிறுவர் நாவல்களில் சில: