பதினெட்டாம் திருப்பூர் குறும்பட விருது வழங்கும் விழா 11/1/26 - தகவல் - சுப்ரபாரதிமணியன் -
பதினெட்டாம் திருப்பூர் குறும்பட விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை தாராபுரம் சாலை சேவ்அலுவலக அரங்கில் சுசீலா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சமூக ஆய்வாளர் வியாகுல மேரி அவர்கள் விருதுகளை வழங்கினார். அவர் உரையாற்றும் போது இப்படி குறிப்பிட்டார் :
“ இளைஞர்கள் தங்களுடைய சமூகம் சார்ந்த உறவுகளையும் விமர்சனங்களையும் வெவ்வேறு வகையில் படைப்புகளாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள் இலக்கிய படைப்புகள் அதில் முதன்மை வைக்கின்றன. இப்படி குறும்படங்கள் சார்ந்தும் நிறைய இளைஞர்கள் இயங்குகிறார்கள் .இது திரைப்படத்திற்கு ஒரு படிக்கட்டாக இருக்கிறது. சமீபத்தில் திருப்பூரில் நடைபெற்ற கைபேசி மூலம் திரைப்படங்கள் தயாரிக்கும் ஒரு நாள் பயிற்சியில் நிறைய இளைஞர்கள் பங்கு பெற்றார்கள் அவர்களிடமிருந்து நல்ல குறும்படங்களும் திரைப்படங்களும் வெளிவரும் என்ற நம்பிக்கை இருக்கிறது “
திருப்பூர் சந்தோஷ் கிருஷ்ணன் இயக்கிய களிறு ஆவணப்படம் , ஈரோடு பெண் இயக்குனர் வைசியா தமிழ் இயக்கிய கொல்லம்மாள் , குறும்படம் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து எட்டுக் குறும்படங்களை தேர்வு செய்து விருதுகள் தரப்பட்டன.






சாமக்கோடாங்கி ரவி என்ற பெயரில்25 க்கும் மேற்பட்ட சிறுகதைகள்100 க்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியுள்ளார். திருப்பூர் இலக்கிய விருது நிகழ்வு ஒருங்கிணைப்பாளராக பல சாதனைகள் புரிந்தவர்.
16வது ஆண்டில்.. இதுவரை சுமார் 350 படைப்பாளிகளுக்கு எளிமையாக இந்த திருப்பூர் இலக்கிய விருது கடந்த 16 ஆண்டுகளில் வழங்கப்பட்டு இருக்கிறது. அவர் இல்லை இவர் இல்லை என்று சொல்பவர்கள் அவர்களும் இவர்களும் முன்பே இடம்பெற்றிருக்கிறார்கள் என்பதை மனதில் கொள்ளலாம்






"பெண் அடிமைத்தனத்தில் இருந்து மீண்ட வரலாறு உண்டு. ஆனால் முழுமையாக அவள் மீளவில்லை. பெண்கள் வெளித்தோற்றத்தில் உயர்வு பெற்றதாக தெரிகிறது. பதவி உயர்வு பெற்றது, குடும்பத்தில் சில பொறுப்புகளை அடைந்தது, சமூகத்தில் சில நிலைகளை அடைவது வேறு வகையில் தோற்றம் கொள்கின்றன, ஆனால் பெண் அப்படியெல்லாம் பெரிதாக மாறுதலுக்குள் உட்படவில்லை குடும்பமே பெண்ணை மீட்டெடுக்க வேண்டு,ம் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் விஷயங்களுக்கு பதிலடிதான் பெண்கள் எழுத்து பெரியார் ஒவ்வொரு பெண்களும் இருக்கிறார் என்பதைத் தான் பெண்களிம் மறுமலர்ர்சி நடவடிக்கைகள் சொல்கின்றன. எதற்காக எழுத வேண்டும் என்றால் குடும்பத்தின் தளைகளில் இருந்து பெண்ணை விடுவிப்பதற்கும் அதை தீர்வை தன் அனுபவங்களில் மூலம் செல்வதற்கும் பெண்ணே எழுத வேண்டிருக்கிறது" என்று எழுத்தாளர் அகிலா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சக்தி விருது 2023 விழாவில் விருதைப் பெற்றுக் கொண்டு பேசும்போது தெரிவித்தார். விருது பெற்ற பிற எழுத்தாளர்கள் தங்களின் எழுத்து அனுபவங்களை விரிவாக எடுத்துரைத்தனர். 


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









