- நாவல் அனுபவம் சுப்ரபாதிமணியனின் உரை ராசிபுரம் பாவை இலக்கிய விருதுகள் விழாவில். பாவை இலக்கிய விருதுகள் இவ்வாண்டு நாவலுக்காக இமயம் , சுப்ரபாரதிமணியன்., மொழிபெயர்ப்புக்காக குறிஞ்சிவேலன் ஆய்வுக்காக ஸ்டாலின் ராஜாங்கம், கவிதைக்காக இசை, இள்ம் பிறை சிறுவர் இலக்கியத்திற்காக உதய சங்க, ர் முருகேஷ் சிறுகதைக்காக வேணுகோபால் ஆகியோருக்கும் வழங்கப்பட்டது. சிறப்பு விருதுகளை ஆர். பாலகிருஷ்ணன், பவா செல்லத்துரை, திரைப்பட இயக்குனர் நிகிலேஷ் கிருஷ்ணா ஆகியோர் பெற்றனர். -
இலக்கிய விமர்சகர்கள், நண்பர்கள் என் நாவல்களை பற்றி சொல்கிறபோது இரட்டை நகரங்களில் கதை சொல்லி என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இரட்டை நகரங்கள் என்றால் நான் 8 ஆண்டுகள் வசித்த ஹைதராபாத் மற்றும் நான் தற்போது வசித்து வரும் திருப்பூர் ஆகிய நகரங்கள்.
ஹைதராபாத் நகரத்தில் தமிழர்களின் கலாச்சார ரீதியான அந்நியமாதலும் மொழி சிறுபான்மையினர் என்ற வகையில் அவர்களுடைய அனுபவங்களும் மற்றும் மத கலவர சூழல் சாதாரண மக்களின் பலி கொண்டு அரசியல் அதிகாரம் ஆட்சி புரிவதை என் மூன்று ஹைதராபாத் நாவல்கள் மூலம் சொல்லி இருக்கிறேன்.
அதன் பின்னால் நான் திருப்பூரை பற்றி எழுதிய நாவல்களில் பல திருப்பூர் நகரத்தின் விளிம்புநிலை மக்கள் பற்றிய வாழ்க்கை சித்திரங்களாக அமைந்திருக்கின்றன. நமக்கு தேவை ஐம்பதாயிரம் கோடி ரூபாய் அன்னிய செலவாணி தரும் வியாபார வசதியா சுற்றுச்சூழலை காப்பாற்ற வேண்டியது தானா என்பதை பற்றிய கேள்விகளை திருப்பூர் பற்றிய என்னுடைய நாவல்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றன.
அதேபோல சுமார் 15க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கு சென்ற அனுபவத்தை நான் பயண நூல்களாக எழுதிய போது அதே சமயத்தில் இந்தியாவுக்குள் சென்ற அனுபவங்களை நாவல் அனுபவமாகவும் எழுதி இருக்கிறேன். வெவ்வேறு மாநிலங்கள், இடங்கள் அவற்றின் கலாச்சார பண்பாட்டு பின்னணியில் கொஞ்சம் வேறுபாடுகள் இருக்கலாம். உணவு பழக்க வழக்கங்களில் கொஞ்சம் வேறுபாடு இருக்கலாம். ஆனால் இவை தரும் ஆர்வங்களும் அந்த பயணத்தில் நான் கண்டு விழுந்த சில உண்மைகளும் இந்த பயணம் நாவல்களில் பிரதிபலித்திகிருக்கின்றன
இதைத் தாண்டிய பல களங்கள் என்னுடைய நாவல்களில் இடம் பெற்றிருக்கின்றன. நாவல்களுக்கான களம் என் முன்னாள் விரிந்து கிடக்கிறது அதை தொடர்ந்து நான் முயற்சித்து வருகிறேன் அந்த வகையில் 25 நாவல்கள் எழுதி உள்ளேன். இந்த நாவல் அனுபவங்கள் தமிழ் வாசகனுக்கு நிச்சயம் பல திசைகளை காட்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.