சுப்ரபாரதிமணியனின் 900 பக்க புதிய நாவல் ' சிலுவை' வெளியிடு சிக்கண்ணா அரசு கல்லூரியில் நடந்த முப்பெரும் விழாவில் கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் வெளியிட சென்னையைச் சார்ந்த ஆவணப்பட இயக்குனர் ஆர். பி அமுதன் சிலுவை முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.சுப்ரபாரதிமணியனின் 100 வது நூலாகும் சிலுவை நாவல் நூலை அறிமுகப்படுத்தி பேராசிரியர் செங்கமுத்து உரையாற்றினார். ஆவணப்படங்கள் நிஜத்தன்மை கொண்டவை காலத்தின் ஆவணங்களாக விளங்குபவை . மக்களின் மனசாட்சியாக விளங்குபவை என்று கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் பேசுகையில் குறிப்பிட்டார். தலைமை: துறைத்தலைவர் பாலசுப்ரமணியம்.
300 ஆண்டுகளுக்கு மேலான கொங்கு பகுதியின் சரித்திர, கலாச்சார வாழ்வை காட்டும் நாவல் இது. திப்பு சுல்தான் வருகை , கிறிஸ்தவர்களின் குடியேற்றம் தொடங்கி ஒரு கிறிஸ்துவ குடும்பத்தின் நீண்ட வாழ்க்கை இதில் இடம் பெற்றிருக்கிறது. சோமனூர் வாழ் நெசவாளர் வாழ்வியல், மில் தொழிற்சங்க இயக்க செயல்பாடுகள் என்று தொடங்கி நவீனப் பின்னலாடை தொழில்சார்ந்த வாழ்க்கை முறை என்று சமீப காலம் வரை நீள்கிறது. அந்தக் கிறிஸ்தவ குடும்பத்தின் முழு உலகமும் தனித்து ஒரு தீவாய் தள்ளப்பட்டாலும் சமூக மனிதர்களின் தொடர்புடன் அடிவானத்தை நோக்கிப் பயணப்படுகிற கப்பலை போல் ஆழ்கடல் நடுவில் கரை எதுவும் காணாதபடி இருத்தலியல் சிக்கல்களுடன் சென்று கொங்கு பகுதி மக்களின் வாழ்க்கையின் உண்மை தன்மையையும் மதிப்பீடுகளையும் சொல்கிறது இந்த நாவல்..
'சிலுவை ' நாவல் சுப்ரபாரதி மணியனின் இருபத்தைந்தாவது நாவலாகவும், நூறாவது புத்தகமாகவும் இது அமைகிறது. இயக்குனர் ஆர் பி அமுதன் நெறியாள்கையில் ஆவணப்படப்பயிற்சிப்பட்டறை நடைபெற்றது. குறும்படங்கள், ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன பாரதியார் விழாவும் நடைபெற்றது. பாரதி பற்றி ப. விஜயராஜ் பேசினார்.. சதீஷ் குமார் நன்றி கூறினார்.
என் சி பி எச் வெளியீடான ' சிலுவை' நாவல் சுப்ரபாரதி மணியனின் இருபத்தைந்தாவது நாவலாகவும், நூறாவது புத்தகமாகவும் இது அமைகிறது = NCBH Rs 1200
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.