இலக்கியங்களில் மூன்றாம்பாலினத்தவா் பதிவுகள் - முனைவா் பா.பொன்னி, உதவிப்பேராசிரியா் மற்றும் துறைத்தலைவா், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, தி ஸ்டாண்டர்டு ஃபயா் ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி ( தன்னாட்சி ), சிவகாசி. -
இறைவன் எழுதிய மானுடம் என்ற புத்தகத்தில் ஏற்பட்ட சில இலக்கணப் பிழைகள் திருநங்கைகள். ஆண்பால், பெண்பால் என்ற இரண்டு பாலினத்தவரையும் தாண்டி தற்காலத்தில் மூன்றாம்பாலினத்தவா் என்ற குரலை அதிகமாகக் கேட்க இயலுகின்றது. பிறப்பால் ஆணாகவோ பெண்ணாகவோ இருந்து மாற்றுப்பாலினத்தவரின் உணா்வுகளை மிகுதியாகப் பெற்றவா்களை மூன்றாம் பாலினத்தவா் என்று குறிப்பிடுகின்றனா். ஆனால் மானுடவியலாளா் மாறுபட்ட உணர்வுகளைக் கொண்டவா் என்பதனை ஏற்பது இல்லை. ஏனெனில் உணா்வுகள் குறிப்பிட்ட சமுதாயத்தாரால் கட்டமைக்கப்பட்டு அம்மக்கள் அச்சமுதாயத்தால் வார்க்கப்படுகின்றனரே அன்றி பிறப்பால் அமையும் உணா்வுகள் என்பது வேறு என்பது மானுடவியலாளா் கருத்து. இம்மூன்றாம் பாலினத்தவர் குறித்த கருத்துகளை தற்காலத்தில் மட்டும் இல்லாமல் தொல்காப்பியா் காலம் முதற்கொண்டே காணமுடிகிறது. இலக்கியங்கள் இவா்கள் பற்றிய குறிப்புகளை நோ்மறையாகவும் எதிர்மறையாகவும் பதிவு செய்துள்ளன அவற்றை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
திருநங்கைகள்
தம்பால் நிலையில் இருந்து உடல்மற்றும் உளநிலையில் திரிபடைபவர்களே திருநங்கைகள் ஆவர். இவர்களில் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறுபவர்களும் உண்டு. பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறுபவர்களும் உண்டு. திருநங்கை என்றசொல் இவ்விருவருக்கும் வழங்கப்பட்டுள்ள பொதுப்பெயர் ஆகும். இந்தஆய்வுக்கட்டுரையில் திருநங்கைகள் என்ற சொல்லாட்சியே பயன்படுத்தப்பட உள்ளது.
திருநங்கைகள் வேறுபெயர்கள்
எதிர்பாலினத்தவர் உணர்வுகளைப் பெற்று இருப்பவர்களைக் குறிக்க அரவாணிகள், அலிகள், திருநங்கைகள் என்ற பல்வேறு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. “ வேதஇலக்கியங்கள், திருத்தியபிராக்ரிதி, சாண்டா, கலிபா, பாண்டா, காமி என்ற பெயர்களாலும், கிறித்துவமதத்தின் வேதநூலான பைபிள் அண்ணகர் என்ற சொல்லினாலும் திருநங்கையைக் குறிப்பிடுகின்றது. மனுஸ்மிருதி திருநங்கையை நிபூசகம் என்ற பெயரில் குறிப்பிடுகின்றது”1 என்று குறிப்பிடுவா்.






பிறக்கும் வருடம் சிறக்க
பெரும்பாலான எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களை எனது எழுத்துலக பிரவேசத்தின் பின்னர்தான் நேருக்கு நேர் சந்தித்திருக்கின்றேன். இந்த சந்திப்புகளுக்கு தற்போது அரைநூற்றாண்டு காலமாகிறது. மேலதிக தகவல் நான் 1972 இல்தான் எழுத்து துறைக்குள் வந்தேன். அதற்கு முன்னர் இரண்டு தமிழக பிரபல எழுத்தாளர்களை முதல் முதலில் எனது ஐந்து வயதிலும், பத்துவயதிலும்தான் பார்த்திருக்கின்றேன். அவர்கள்தான் இலக்கிய சகோதரர்கள் தொ.மு. பாஸ்கரத் தொண்டமான். தொ.மு. சிதம்பர ரகுநாதன். மூத்தவர் தமிழ்நாடு பாளையங்கோட்டையில் மாவட்ட ஆட்சித் தலைவராகவிருந்த ஐ. ஏ. எஸ். அதிகாரி. கல்கி கிருஷ்ணமூர்த்தி, மற்றும் இரசிகமணி டி. கே. சி. ஆகியோரின் நெருங்கிய நண்பர். இவரது பெயரில் திருநெல்வேலியில் ஒரு வீதியும் இருக்கிறது. இந்த வீதியில் எமது உறவினர்கள் வசிக்கிறார்கள். அத்துடன் ஆனந்தவிகடன், கல்கி முதலான இதழ்களில் இந்திய திருத்தலங்கள் பற்றிய தொடர்களை எழுதியவர்.
மனித சமுதாயத்திற்குத் தொண்டுசெய்யும் குணசீலர்கள் அந்த லட்சியத்துடனேயே வாழ்ந்து விடுகின்றார்கள். அவர்கள் காலத்தால் அழிந்து போவதில்லை. காலத்தின் கோரத்தால் ஏலம் போகாது என்றென்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அந்த வகையில் வைத்தியர் சமுல்.பி. கிறீன் அவர்கள் மக்கள் மனதில் இன்றும் வாழ்ந்துகொண்டிருப்பவர் ஆவார்.

சுற்றாடல் சூழ்நிலையின் பாதிப்பு என்னெவென்று மனித இனத்தையே அழித்தொழிக்கும் என்பதைத் தற்போது நடந்துகொண்டிருக்கும் கோவிட்-19 கொடுமையின் தாக்கம் சொல்கிறது. மனிதன் இயற்கையின் ஒரு படைப்பே அவன் தன்னைச் சுற்றியிருக்கும்~'சூழலையழித்தால்' என்ன பேராழிவுகள் வரும் என்பதை இன்று எங்கள் கண்களுக்கு முன்னால் தொடரும், பேரழிவுகளிகளான,பெருவெள்ளம், சூறாவளி. பூமியதிர்ச்சி, நிலச்சரிவு, கொரணா கொடிய வியாதி என்று பல அழிவுகளைப் புரிதலால் தெளிவாக உணரலாம். இயற்கைசார்ந்து வாழ்ந்த தமிழர்கள்,இந்தியாவின் நாகரீக வளர்ச்சியில் முன்னணியிலிருந்தவர்கள். இயற்கையின் மாபெரு சக்திகளையுணர்ந்து இயற்கையுடன் வாழப் பழகியவர்கள். தங்கள் வணக்க முறை தொடங்கி, வாழ்வியலின் அங்கங்களான கலை. தொழில்,பொருளாதாரம் அத்தனையையும் இயற்கையுடன் பிணைத்தவர்கள். தாங்கள் வாழ்ந்த பூமியை ஐந்திணையாகப் பிரித்து அதனுள் மனித அகத்தையும் புறத்தையும் கண்டவர்கள். குறிஞ்சி (மலைப்பகுதி,பாதுகாப்பு,), முல்லை(காடு,தேடல், மிருகங்களுடான உறவுகள்), மருதம் (ஆற்றுப் படுக்கைகள், வயல்வெளி, குடியிருப்பு, மொழி, கலை வளர்ச்சி, நாகரிக வளர்ச்சி) நெய்தல் (கடற்கரை சார்ந்த வாழ்வு நிலை, கடல் கடந்த வணிகம்), பாலை (மக்களற்ற வரண்ட பிரதேசம்) எனப் பிரித்து இந்த அகண்ட உலகத்தின் பல பரிமாணங்களைக் காட்டியவர்கள்.
அதிகாலை கொஞ்சம் புகாரும் குளிரும் இருந்தது. சூரியகுமார் அவசர அவசரமாக ஆடைகளை அணிந்துகொண்டான். பிக்கறிங்ஸ் வீதியை நோக்கி விரைந்த அவன், இடது புறம் திரும்பிக் கொண்டான். தூரத்தே சாப்பாட்டுக் கடைக்கு முன்னால் நாலைந்துபேர்கள் நிற்பது தெரிகின்றது. ஏழைகளுக்கான பெட்டிக்கடை தான். பெட்டிக்கடைக்குள் ஒரு நீட்டு மேசையும், தோதாக அதன் இருபுறங்களிலும் வாங்குகளும் இருக்கின்றன. ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டான். வழமையான தேங்காய்ப்பூ போட்ட வட்ட வடிவ ரொட்டி. விரலளவு தடிப்பத்தில் உள்ளங்கையால் மூடக்கூடிய அளவு. தொட்டுக்க ஆவி பறக்கும் கடலைக்கறி.
அண்மையில் மறைந்த சமூக, அரசியல் செயற்பாட்டாளரும் , நண்பருமான எழுத்தாளர் மகாதேவன் ஜெயக்குமரனுடன் (ஜெயன் தேவா) ஆகஸ்ட் இறுதியிலும், செப்டெம்பர் ஆரம்பத்திலும் முகநூல் மெசஞ்சர் மூலம் உரையாடினேன். அதிலவர் தெரிவித்திருந்த கருத்துகள் தற்போதுள்ள சூழலில் முக்கியமானவையாகப் படுவதால் அவற்றை இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். எனக்குக் கிடைத்த தகவல்களின்படி மறைவதற்குப் பத்து நாட்கள் வரையில் சிறுநீரகச் சுத்திரிப்புக்குச் செல்லவில்லையென்றும், அவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதால் மரண விசாரணைகள் முடிவடைந்த நிலையில் உடல் உறவினர்களிடம் கையளிக்கப்படுமென்றும் அறிகின்றேன். அதன்பின்பே அவரது இறுதிச் சடங்குகள் பற்றிய விபரங்கள் அறிவிக்கப்படுமென்று தெரிய வருகிறது.


நாட்டுப்புற மருத்துவமானது பாட்டி வைத்தியம் வீட்டு வைத்தியம், கை வைத்தியம், நாட்டு மருத்துவம், பரம்பரை வைத்தியம், பச்சிலை வைத்தியம், மூலிகை வைத்தியம், இராஜ வைத்தியம், இரகசிய மருந்து வைத்தியம் என மக்களால் பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்டு வருகிறது. இப்பெயர்கள் மருத்துவப் பொருள்களின் அடிப்படையில் மாறுபடுகின்றன.


தனது எல்லையிலிருந்து, கிட்டத்தட்ட 500கி.மீ தொலைவிலுள்ள, ரஷ்ய விமான தளமான, ஏங்கெல்ஸ்-2ஐ, உக்ரைன் 04.12.2022 இல், தனது ட்ரோன்கள் மூலம் தாக்கியதற்கூடாக, ரஷ்ய-உக்ரைன் போரை இன்னுமொரு புதிய தளத்திற்கு, உக்ரைன் கொண்டுசென்று சேர்த்தது என கூறலாம். அதாவது கிரைமியாவின் பால-தாக்குதல், பின் ரஷ்யாவின் கடலுக்கடியிலான, எரிவாயு குழாய் தாக்குதல், இவற்றுக்கு பின்னதாக நடைபெற்றுள்ள ரஷ்யாவின் இவ்விரு விமான தளங்களின் மீதான தாக்குதல்கள் உலக அவதானிப்பை பரந்த அளவில் பெற்றுள்ளது. ரைசன் விமானதள தாக்குதலை விட ஏங்கெல்ஸ் விமான தள தாக்குதல் நிர்ணயகரமானதாக கருதப்படுகின்றது. காரணம், இவ்விரு தளங்களிலும், இத்தளமே, ரஷ்யாவின் அணு ஆயுதங்களை உள்ளடக்கியதாய் இருந்தது. இத்தாக்குதல் தொடர்பில், இதுவரை, இரண்டு பொருட்கோடல்கள் செய்யப்பட்டுள்ளன. ஒன்று, கார்டியன் போன்ற மேற்குலக ஊடகங்களின் கூற்று. மற்றது, மெக்ரோகர் போன்ற யுத்த வல்லுனர்களின் கூற்று. 

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









