- பதிவுகளுக்குப் படைப்புகளை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் முகவரிக்கு ஒருங்குறியில் அனுப்புங்கள். - பதிவுகள்.காம் -
தொடுவானமாய் தொடரும் பயணம்.
தொலை தூரமாய் தொடர்ந்து நடக்கும் வாழ்க்கைப் பயணம்.
இளமையில் தனிமை மட்டும் துணை நிற்க
ஈன்ற மக்கள் சுமைகளை
சுகங்களாகச் சுமந்து பயணிக்கும் பயணம்.
சுகமான தேடல் கொண்ட வாழ்க்கைப் பயணம்.
வாழ்விலே மழலைப் பருவம் தொட்டு,
அந்தி சாயும் பொழுதை எட்டும் வயது வரை
ஆயிரமாயிரம் போராட்டங்கள்
திட்டட்டங்கள் கண்டு,
மனதில் வேட்கை கொண்டு,
வைரம் போல், பூட்கை போல்
வாழ்வில் வரும் சவால்களை
சருகுகளாக மனத் திண்மம் கொண்டு,
பல தடைகளை உடைத்து
பயணத்தின் அடிகளை
ஏணி படிகளாக மாற்றி,
வாழ்க்கையில் இலட்சிய வெறி கொண்டு,
வீறு கொண்டு எழுந்து
வீர நடை கொண்டு,
சாதனை படைக்கும் சரித்திர நாயகியாக,
காவியம் கூறும் காரிகை இவளெனும்
காவியத் தலைவியாக,
புவி ஆளும் புரட்சிப் பெண்ணாக,
பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக,
வாழ்க்கை என்ற போர்களத்தில் வீர தாயாக,
பார் போற்றும் சிங்கப் பெண்ணாக,
இவள் வாழ்வில் பல துன்பக் களங்களை கண்டு
சற்றும் துவண்டு போய் விடாது
தூரத்தில் தெரியும்
நம்பிக்கை என்ற வைகறை விடியலை நோக்கி
இவள் பயணம் தொடர்கிறது.
கடல் அலைகள் ஓயாது கரையோடு முட்டி மோதி
மீண்டும் மீண்டும் முயற்சி செய்வது போல்
இவள் வாழ்வில் இருக்கும் வரை
தொடரும் வாழ்க்கை போராட்டம்.
இவள் வாழ்வில் பயணங்கள் முடிவதில்லை!