கண்ணாடிக்காரனின் கவிதை! -ம.ஆச்சின்.
கண் கண்ணாடி இயற்கையை வர்ணிக்கிறது,
பின்னாடி கூடு விட்டுக் கூடு பாய்கிறது!
பார்வையில் பல இயற்கை வண்ணங்கள்,
கண்டு மகிழ்கிறது கன்னங்கள்!
சிந்தனையில் பல எண்ணங்கள்
உணர வைக்கிறது பல கோணங்கள்,
இயற்கையைக் கண்டேன்.
கண் கண்ணாடி இயற்கையை வர்ணிக்கிறது,
பின்னாடி கூடு விட்டுக் கூடு பாய்கிறது!
பார்வையில் பல இயற்கை வண்ணங்கள்,
கண்டு மகிழ்கிறது கன்னங்கள்!
சிந்தனையில் பல எண்ணங்கள்
உணர வைக்கிறது பல கோணங்கள்,
இயற்கையைக் கண்டேன்.
போரின் தணல்மேவி,
சாம்பல் தகிக்கும் நிலத்தில்,
வரண்டு இழுபடும் ரப்பர் ரொட்டியும்
பிழிகையில் துளியும் சிந்தாத
தேங்காய்த் துருவலும்
அண்ணாந்திருக்கும்
வெற்றுப் பாத்திரங்களும்
இருந்துமில்லாத
எனது சமையலறையில்
வேறு என்னதான் இருக்கும்...?
இலக்கியப்பணியை ஆர்வத்தோடும் அர்ப்பணிப்போடும் செய்த கலாநிதி தம்பிஐயா கலாமணியின் வாழ்வும் பணியும் காலங்காலமாக போற்றப்பட வேண்டும். கடந்த வாரம் மார்ச் 11இல் ஆசான் கலாமணியின் முதலாவது மாத நினைவாக அல்வாயில் உருவச்சிலையும், மூன்று நினைவு நூல்களும் வெளியாகின.
தமிழ் உலகிற்கு அவர் ஆற்றிய இலக்கிய, நாடகப் பணி வரலாற்றில் முக்கியமானது. தலைமுறை தலைமுறையாக செய்யவேண்டிய நாடக வழி முறைகளையும், அதனால் கிடைக்கிற பிரதிபலன்கள் அனைத்து மக்களிடம் கிடைக்க வேண்டுமென்கிற ஆர்வம்தான் கலாநிதி தம்பிஐயா கலாமணியின் வாழ்நாள் சாதனையாக மிளிர்கிறது.
எழுத்தாளர் அகரமுதல்வன் தன் வலைப்பதிவில் 'போதமும் காணாத போதம்'என்னுமொரு தொடர் எழுதியிருக்கின்றார். அத்தொடரில் வெளியான கதைகள் தற்போது நூலாகவும் வெளியாகியுள்ளன. அத்தொடரில் ஏழாவதாகவுள்ள கதைச் போதமும் காணாத போதம் 07, என் கவனத்தை ஈர்த்தது. அதில் சங்கிலி என்னும் மாற்று இயக்கத்தவனைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவன் கொன்று விடுகின்றான். கொன்றவன் இயக்கத்தில் பெரிய நிலைக்கு வருகின்றான். பெயர் சரித்திரன். கொல்லப்பட்டவனின் மகன் சந்தனன் இயக்கத்தில் சேர்ந்து சரித்திரனைக் கொல்வதற்காகக் காத்து நிற்கின்றான். அப்போது நடக்கும் உரையாடலைக்கவனிப்போம். அது பின்வருமாறு செல்கின்றது.
- மண்ணின் குரல் தொகுப்பு. குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாகத் தமிழகத்தில் வெளியானது (1998) -
'மண்ணின் குரல்' என் ஆரம்ப கால நாவல்களின் தொகுப்பு. குமர்ன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வெளியானது. இதிலுள்ள நாவல்கள் பெரு நாவல்கள் அல்ல. சிறு நாவல்கள். இவற்றில் 'மண்ணின் குரல்' மொன்ரியாலிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியானது. இறுதி அத்தியாயம் வெளி வராமல் , முழுமைபெறாமல் நின்று போனதற்குக் காரணம் சஞ்சிகை நின்றுபோனதுதான். பின்னர் முழுமையாக்கப்பட்டு , 'புரட்சிப்பாதை'யில் வெளியான கட்டுரைகள், கவிதைகளுடன் ஜனவரி 1987இல் மங்கை பதிப்பக வெளியீடாக நூலுருப் பெற்றது. இதனால் கனடாவில் நூலுருவில் வெளியான முதலாவது தமிழ் நாவல் மண்ணின் குரலென்று கூறலாம்.
மண்ணின் குரல் நாவல் இலங்கைத் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் வெடித்தெழுந்தபோது , எவ்விதம் இளைஞர்கள், யுவதிகள் போராட்டத்தில் இணைகின்றார்கள் என்பதை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறு நாவல்.
இன்று இயற்பியல் அறிஞர் ஆல்பேர்ட் ஐன்ஸ்டைனின் பிறந்த தினம் மார்ச் 14. வெளி, நேரம் பற்றிய இவரது கோட்பாடுகள் அவை பற்றி அரிஸ்டாட்டில் காலத்திலிருந்து நிலவி வந்த கோட்பாடுகள் அனைத்தையும் தகர்த்தன. வெளி, நேரம் (காலம்) ஆகியவை இதுவரை காலமும் அறியப்பட்டிருந்தது போல் சுயாதீனமானவை அல்ல. அவையும் சார்பானவைதாம் என்பதை வெளிப்படுத்திய இவரது சிறப்புச் சார்பியற் கோட்பாடு.
இது போல் புவியீர்ப்பு பற்றிய இவரது பொதுச் சார்பியற் கோட்பாடு அது ஒரு விசையேயல்ல. வெளிநேரப் பிரபஞ்சத்தில் , பொருளொன்றின் பொருண்மையானது ஏற்படுத்தும் தாக்கத்தினால் ஏற்படும் வடிவ மாற்றமே என்பதை வெளிப்படுத்தியது. உதாரணத்துக்குச் சூரியன் அதன் பொருண்மை காரணமாக அதனைச் சுற்றியுள்ள வெளியை வளைத்து விடுகின்றது. அந்த வளைவே பூமியை அவ்வளைவு வழியே பயணிக்க வைக்கின்றது என்பதை வெளிப்படுத்தியது.
கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் அண்மையில் உடல் நிலை காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு,சத்திர சிகிச்சையின் பின்னர் வழமைக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றார். இதனை அவர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். கவிஞர் மிக விரைவில் பூரண நலத்துடன் மீண்டு வருவார் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. அந்த மனோதிடமும், நம்பிக்கையும் உள்ள ஆளுமை அவர்.
அவர் பூரண நலத்துடன் மீளட்டும். இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபடட்டும்.
'
வாழ்க நீ எம்மான்! இந்த
வையத்து நாட்டிலெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி
விடுதலை தவறிக் கெட்டு
பாழ்பட்டு நின்ற'வர்க்கு
துருவத்துச் சுடரென நின்றாய்.
சுடர்ந்தாய். வாழ்க! வாழ்க!
-
மே 14 கார்ல் மார்க்ஸ் அமரரான தினம். -
பயனுள்ள இணைப்பு - https://www.history.com/topics/european-history/karl-marx
தமிழ்மொழியில் தோன்றிய படைப்புகளில் ஆசிரியர்கள் மக்களின் சமுதாயப் பிரச்சினைகளையும், வாழ்வியல் நிலைகளையும் நேரில் கண்டும், தன் வாழ்வியல் நிகழ்ந்த நிகழ்வுகளையும் தம் சிறுகதைகளின் மூலம் வெளிப்படுத்துகின்றனர். அத்திறன் மிக்கவர்களில் திருப்பூர் கிருஷ்ணன் இலக்கியத் துறைகள் அனைத்திலும் ஈடுபாடு கொண்டு ஐநூறுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரின் சிறுகதைகளில் குடும்ப வாழ்வியல், சமுதாய வாழ்வியலை மையமாகக் கொண்டும், பெரும்பாலான சிறுகதைகளில் பெண் கதைமாந்தரை முதன்மைப்படுத்தி எழுதியுள்ளார். ‘சிவப்பாய்ச் சில மல்லிகைகள்’, ‘பட்டொளி வீசி’ ஆகியன இவரின் சிறுகதைத் தொகுப்புகளாகும். 1981 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘சிவப்பாய்ச் சில மல்லிகைகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பை ஆராய்வதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.
சிறுகதை
அளவிற் சிறிதாக இருப்பது சிறுகதை, ஏறத்தாழ ஒரு மணி நேரத்திற்குள் படித்து முடிக்கக் கூடியதாகவும், ஒரே மூச்சில் படித்து முடிக்கக் கூடியதாகவும் இருப்பனவெல்லாம் இதிலடங்கும் என்பர். ஆனால் கால எல்லை மட்டும் அதன் முழு இலக்கணம் அன்று. சிறுகதை என்பது வாழ்க்கையில் நிகழும் ஒரு நிகழ்ச்சியை அல்லது ஓர் உணர்ச்சியைக் கருவாகக் கொண்டு பின்னப்படுவதாகும். ஒரு பாத்திரம், ஒரு மனவுணர்ச்சி, ஒரு நிகழ்ச்சி என ஏதேனும் ஒன்றை மட்டுமே நிலைக்களனாக வைத்துக் கொண்டு படைப்பது சிறுகதையாகும்.
சிறுகதை என்பது வாசிப்பவனின் மனதில் சோர்வு இல்லாமலும், அக்கதை படித்து முடிக்கும் வரை, அவன் மனதில் பல்வேறு சமுதாயக் கருத்துகளை எடுத்துக் கூறும் இலக்கிய வகை எனலாம்.
ஓர் இனக்குழு வேலூர் பகுதிக்கு இடம்பெயர்ந்து வருகிறது. அவர்கள் தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்தவர்கள் என்பதால் அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். அவர்கள் சாதி சார்ந்த அவர்களின் வேலை நிர்ணயிக்கப்படுகிறது. சமூகத்தால் தாங்கள் அடிமையாக இருந்து கொண்டும் சாதி ரீதியாக கொடுமைப்படுத்திய படுவதைக் கண்டு அந்த சமூகம் காலங்காலமாக மவுனமாக இருந்து கொண்டிருக்கிறது. அப்போதுதான் கல்வி என்பதற்கு பெரிய விடுதலையாக ஆயுதமாக இருக்கிறது என்பதும் தெரிகிறது.
அந்த அனுபவத்தை சிந்து சீனு அவர்கள் இந்த நாவலில் எழுதி இருக்கிறார் அந்த மக்களில் சிலர் கல்வி அறிவு பெற்று உயர்ந்த பதிவுகள் வருவது, மகிழ்ச்சி சந்தோஷம் துக்கம் என்ற பல வகைகளில் வாழ்க்கை அவர்களுக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது அவர்கள் வாழ்ந்த பகுதியை அம்பேத்கர் நகர் என்று பெயரிடுவதற்கு போராட வேண்டி இருக்கிறது. அவர்களின் உரிமைகள் எப்படி மீட்கப்பட்டன. அந்த ஊருக்கு எப்படி அந்த பெயர் வந்தது என்பதை ஒரு சரித்திரமாக செய்தியாக இந்த நாவலில் சொல்லி இருக்கிறார்
இந்த நாவல் பல்வேறு விதமான தலித் மக்கள் பற்றிய சரித்திர ரீதியான அடக்குமுறைகள், சாதியக் கொடுமைகள் பதிவுகள் உள்ளன. வேலூர் நகரம் விரிவடையும்போது அதில் பல்வேறு சாதியினுடைய பங்களிப்பு, கிறிஸ்துவர்களின் கல்விப் பணி மற்றும் மருத்துவத் துறை பங்களிப்பு என்று இந்த நாவல் நீள்கிறது எல்லா பகுதிகளிலும் கோவில் இருக்கிறது. நம் நம் பகுதிகளில் கோவில் இல்லை என்று அவர்கள் ஒரு கோவிலை கட்டுகிறார்கள் அதுதான் மாதம்மா கோயில் அதுவே பின்னால் மாரியம்மன் கோயில் என்று மாறிவிடுகிறது. இந்த வரலாறு ஒரு முக்கிய இடத்தை இந்த நாவலில் வைத்திருக்கிறது.
எங்கள் கந்தவனத்தை இறைவன் அழைத்திட்டான்
தங்கமகன் கந்தவனம் தமிழ்க்கவிதை கேட்பதற்கு
நிறைவாழ்வு வாழ்ந்திட்டார் நீள்துயில் கொண்டிட்டார்
அவரிடத்தை நிரப்புதற்கு ஆர்வருவார் அவனியிலே
அன்புநெறி அணைத்தார் அதற்குத் துணையானார்
விசுவலிங்கம் நட்பை விருப்புடனே அவரேற்றார்
சைவத்தை மனமிருத்தி சன்மார்க்க வழிநடந்தார்
தமிழ்க்கவிதை வாகனத்தில் தரணியெங்கும் வலம்வந்தார்
ஆசானாய்ப் பணிசெய்த ஆளுமையே கந்தவனம்
ஆங்கிலமும் செந்தமிழும் அறிந்தவரே கந்தவனம்
ஆன்மீகம் அவரகத்தில் ஆழமாய் பதிந்ததனால்
அன்புநெறி பயணித்து ஆண்டவன் அடிசேர்ந்தார்
- கவிஞரின் இறுதிச் சடங்கு பற்றிய தகவலை அனுப்பியவர் எழுத்தாளர் இளவாலை ஜெகதீசன் -
கவிஞர் வி. கந்தவனம் அவர்கள் எம்மைவிட்டுப் பிரிந்தது எமக்கு, குறிப்பாகக் கனடிய மக்களுக்குப் பேரிழப்பாகும். காங்கேசந்துறையில் நடக்கும் இலக்கிய விழாக்களில், மாணவப்பருவத்தில் குறிப்பாகப் பட்டிமன்றம், கவியரங்கம் போன்றவற்றில் கவிஞரைச் சந்தித்திருக்கின்றேன். ஆனால் இங்கே கனடாவில் அதிபர் பொ. கனகசபாபதி வீட்டில்தான் இவரை முதலில் சந்தித்தேன். உதயன் சிறுகதைப் போட்டியில் தங்கப்பதக்கம் கிடைத்தபோது என்னை அழைத்து வாழ்த்தியிருந்தார். அதன்பின் எழுத்தாளர் இணையத்தின் செயலாளராக எனக்கு ஒரு பதவியையும் பெற்றுத் தந்தார். அதன் பின்தான் வரவேற்புரையோ அல்லது நன்றியுரையோ மேடையில் ஏறிச் சொல்ல எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.
சாவகச்சேரி நுணாவில் மேற்கில் விநாயகர் - சின்னம்மா தம்பதிகளுக்கு மகனாக 28.10.1933 ல் பிறந்த கவிஞர் கந்தவனம் அவர்கள் கனடாவில் தனது பவழவிழாவைக் கொண்டாடியிருந்தார். திருமண பந்தத்தின் காரணமாக குரும்பசிட்டியைப் புகுந்த வீடாக்கிக் கொண்டார். இலங்கையில் ஆசிரியராகவும், அருனோதயாகல்லூரியில் அதிபராகவும் கடமையாற்றியவர். உயர் கல்வியை தமிழ்நாட்டில் பெற்ற இவர், இலங்கையில் நாடக கல்வி சார்ந்த டிப்புளோமா பட்டமும் பெற்றிருந்தார். 1988 ஆம் ஆண்டு முதல் கனடாவில் வாழ்ந்து வரும் இவர் நாடகம், கவிதை, சிறுகதை, சமயம் நிகழ்ச்சிகள் என்று எமது இனத்தின் வளர்ச்சிக்காகத் தன்னை அர்பணித்தவர்.
இவருக்கு கவிமணி, மதுரகவி, இலக்கியவித்தகர், திருவருட்கவி, சைவதுரந்தரர், சிவநெறிப்பாவலர் போன்ற பல பட்டங்களைச் சமூக நிறுவனங்கள் கொடுத்திருக்கின்றன. இன்று பல நிகழ்ச்சிகளில் தமிழில் இசைக்கப்படும் கனேடிய தேசிய கீதத்தை தமிழில் மொழி பெயர்த்தவர் இவர்தான் என்பது குறிப்பிடதக்கது.
https://noolaham.net/project/755/75434/75434.pdf
கவிஞர் கந்தவனம் அவர்கள் மறைந்த தகவலினை முகநூலில் 'தாய்வீடு' திலிப்குமாரின் பதிவு மூலம் அறிந்தேன். துயருற்றேன். ஆழ்ந்த இரங்கல்.
என் எழுத்துலக அனுபவத்தில் என் வாசிப்பனுபவத்துடன் பின்னிப்பிணைந்த இலங்கை எழுத்தாளர்களில் ஒருவர் கவிஞர் கந்தவனம். வெற்றிமணி சிறுவர் சஞ்சிகையில் நான் எழுதத்தொடங்கிய என் பால்ய பருவத்தில் அச்சஞ்சிகை மூலம் அறிமுகமானவர். பின்னர் எப்பொழுதும் இவரது படைப்பையோ அல்லது இவர் பற்றிய செய்தியையோ ஏதாவதொரு பத்திரிகையிலோ அல்லது சஞ்சிகையிலோ பார்த்திருக்கின்றேன். வாசித்துமிருக்கின்றேன்.
யாழ் நகரைச் சேர்ந்த சாண் சுந்தரம் (செல்வேந்திரா) , Shan Sundaram, பேராதனைப் பொறியியற் துறைப்பட்டதாரி. மனித உரிமைச் செயற்பாட்டாளர். சிறந்த ஓவியர். உலகப் பயண ஆர்வலர். இலவசமாகக் கற்பிப்பவர். தற்போது நியூ யோர்க்கில் வசிக்கும் இவர் மரதன் ஓட்ட வீரர்.
இவர் தன் பதிவுகளில் பதிவேற்றும் இவரது ஓவியங்கள் என்னைக் கவர்ந்தவை. 'ஆயில் பெயிண்டிங்' , 'வாட்டர் கலர் பெயிண்டிங்', 'அக்ரிலிக் பெயிண்டிங்' எனப் பலவகை ஓவியங்களையும் சிறப்பாக வரைபவர். ஓவியக் கண்காட்சிகளையும் நடத்தியிருப்பவர்.
இவரது ஓவியங்கள் சிலவற்றை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். Shan Sundaram என்னும் இவரது முகநூற் பக்கத்தில் மேலும் பல ஓவியங்களை நீங்கள் கண்டு களிக்கலாம்.
* தமிழ் விக்கிமூலத்தில் தொல்காப்பியத் தரவு மேம்பாடு - முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி, தமிழ் உதவிப்பேராசிரியர் & விக்கிமீடியர், ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் , முனைவர் இரா. நித்யா, கௌரவ விரிவுரையாளர் & விக்கிமீடியர், ஆங்கிலத்துறை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அவினாசி, & தகவலுழவன், விக்கிமீடியர், சேலம் -
ஆய்வுச்சுருக்கம்
இந்தக் காலம் தொழில்நுட்ப வளர்ச்சி மிகுந்த காலம். காலத்திற்கு ஏற்ற வளர்ச்சியில் ஒரு மொழி பங்கு கொள்ளும் பொழுதுதான் அம்மொழி வளரும் என்று ஆய்வறிஞர்கள் கருதுகின்றனர். தமிழ் மொழி அவ்வாறே காலத்தைக் கடந்தும் வளர்ந்து வரும் மொழியாக அமைந்துள்ளது. தமிழ் மொழி வளர்ச்சியின் காலப் பரிமாணங்களில் பானையோடு, கல்வெட்டு, ஓலைச்சுவடி, செப்புப் பட்டயம், காகிதச் சுவடி, அச்சாக்கம், மின்னாக்கம், இணையம் ஆகியன அமைந்துள்ளன. அந்த வகையில் இணைய தளத்தில் தமிழ் மொழியின் தரவுகளைப் பதிவேற்றம் செய்வது காலத்தின் கட்டாயம் ஆகும். கல்விசார் வளங்களைப் பல்வேறு இணைய வளங்களில் பல்வேறு மொழிகள் பாதுகாத்து வருகின்றன. அவ்வாறு பாதுகாத்தல் வேண்டும் என்பதைக் கட்டற்ற தன்னார்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அப்படிப்பட்ட ஒரு கல்விசார் வளமாக விக்கிமூலம் அமைந்திருக்கின்றது. இத்திட்டத்தின் வழியாக மொழித்தரவுகளை மேம்படுத்தும் தன்னார்வலர்களுக்கு நிதியுதவி அளித்தும் போட்டிகள் நடத்தியும் ஊக்கப்படுத்தி வருகின்றார்கள் விக்கிமீடியா அறக்கட்டளையினர். இத்திட்டம் கட்டற்ற உரிமத்துடன் கல்விசார் ஆவணங்களைப் பாதுகாக்கும் திட்டமாக விளங்கி வருகின்றது. இது விக்கிமீடியா அறக்கட்டளையின் விக்கித் திட்டங்களுள் ஒன்று. இத்திட்டம் பற்றிய தகவல் இன்னும் பலரைச் சென்றடையவில்லை. விக்கிப்பீடியா சென்றளவில் கூட இத்திட்டம் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னுரை
கல்வி என்பது உடல் மற்றும் மன வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்ற ஒரு சமூக அமைப்பாகும். சமுதாயத்தில் நன்னடத்தையுடன் கூடிய திறன் சார்ந்த மானுடத்தை உருவாக்குவதில் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. இக்கல்வியை முறையாகப் பயில பாடத்திட்டக் கட்டமைப்பு முறையானது முதன்மையானதாகத் திகழ்கிறது. கால மாற்றத்திற்கு ஏற்பப் பாடத்திட்ட வடிவமைப்பு என்பது தன்னகத்தே பற்பல மாற்றங்களைப் பெற்று வந்துள்ளது.
கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் துறைச் சார்ந்த முதன்மைச் செயல்பாடாகப் பாடத்திட்ட வடிவமைப்பு திகழ்கிறது. இப்பாடத்திட்ட வடிவமைப்பானது, தமிழ்ப் பட்டப் படிப்பிற்குக் கட்டமைக்கப்படும் திறன் குறித்து ஆராய்வதை நோக்கமாகக் கொண்டு ‘தமிழ்ப் பட்டப்படிப்பிற்கான பாடதிட்டக் கட்டமைப்பு முறைகள் – சில முன் வரைவுகள்’ எனும் தலைப்பில் இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது.
இலக்கிய இலக்கணத் தொடர்புடையது
தமிழின் தொன்மையான இலக்கணங்களைத் பாடத்திட்டத்தில் இடம்பெறச் செய்வதால் மொழியின் தனித்தன்மைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் அறிய ஏதுவானதாக அமைகிறது. மேலும், இலக்கியங்களின் வாயிலாகத் தமிழ் மொழியின் தொன்மை, சமூக அறநெறிகள், வாழ்வியல் முறைகள், பண்பாட்டு நெறிகள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள முடிகிறது. தொன்மையான இலக்கிய இலக்கணங்களை கற்கும் மாணவர்களால் சமுதாயத்தில் நன்மதிப்புகளை உருவாக்கும் இயலும் என்பது திண்ணம்.
ஜோதிடக்காரனுக்கு
நல்ல காலம் பிறக்கட்டும்
கைரேகை பாருங்கள்
பெண் பார்க்கும் படலம்
குனிந்த தலை நிமிரவில்லை
பெண்ணின் பாட்டி
மேசையில் பிடித்த உணவு
குதுகலமாய்த் துவங்குகிறது
பிரார்த்தனை நேரம்
தலைவர் சிலைகள்
பேதம் பார்ப்பதில்லை
காக்கைகள்
சாலை யோரத்தில்
குபேரன் படம் வரைந்தவன்
தட்டை எடுத்து வைத்தான்
முற்றும் துறந்த துறவி
நடிகையுடன் சிக்கிய தருணம்...
முற்றும் துறந்தே இருந்தார்
எனக்குப் பொதுவாக அதிகம் வாசிப்பவர்களை, அதிகமாக எழுதுபவர்களை. அதிகமாகத் தம் தர்க்கரீதியிலான சிந்தனைகளைத் தெளிவாக வெளிப்படுத்துபவர்களைப் பிடிக்கும், அவர்கள்தம் கருத்துகள் முரண்பட்டவைகளாக இருந்தால் கூட அவர்கள் தமக்குச் சரியென்று பட்டதைத் தாம் பெற்ற இன்பத்தை மற்றவர்களும் பெற வேண்டுமென்பதற்காக இயங்குபவர்கள் என்பதால் நான் அவர்களை மதிப்பவன். எழுத்தாளர் அகணி சுரேஷ் (சி.அ.சுரேஷ்) அத்தகையவர்களில் ஒருவராக நான் அடையாளம் காண்பவன்.
பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பட்டதாரியான இவர் ஐக்கிய இராச்சியத்தில் கணனித் துறையில் முதுமானிப்பட்டம் பெற்றவர். தற்போது கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தலைவராகவும் இருந்து வருபவர். இவரது எழுத்துலகப் பங்களிப்பு கவிதை (மரப்புக்கவிதையுட்பட), சிறுகதை, நாவல், கட்டுரை (அறிவியல், ஆன்மிகம், இலக்கியம்) , இசைப்பாடல் எனப் பன்முகப்பட்டது. சிறந்த பேச்சாளர். இவரது கரகரத்த குரல் கேட்பதற்கு இனிமையானது. தமிழகத்துத் திமுகப் பேச்சாளர்களை நினைவூட்டுவது.
நான் ஆப்பிரிக்காவில் 17 ஆண்டுகள் வேலை செய்திருக்கிறேன். அதில் 16 ஆண்டுகள் போட்ஸ்வானாவில். எனது வாழ்க்கையின் வசந்த காலம் அது. எனது இளமைக்காலமாக அமைந்தது மட்டுமல்லாது குறிப்பிடத்தக்க சேமிப்பு, நல்ல ஓய்வு நேரம், உயர்ந்த வாழ்க்கைத்தரம், நட்புறவான மக்கள், சட்டம் ஒழுங்கோடு கூடிய அரசியல் ஸ்திரத்தன்மை, மோசமில்லாத காலநிலை என்று நாம் வாழ்ந்த சூழலும் அதற்கு பெரும் பங்கு வகிக்கிறது. எமக்கே இந்த நிலைமை என்றால், ஐரோப்பியர் பற்றி சொல்லத் தேவையில்லை. அங்கு அவர்கள் முதல்தர குடிமக்கள் என்பதோடு வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கத் தெரிந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு போட்ஸ்வானா ஒரு சொர்க்கபூமி. அவர்களைப் பற்றி உள்ளூர் வாசிகள் சுவாரசியமாக ஒன்று சொல்வார்கள். குறிப்பிட்ட காலம் வேலை செய்த பின் "ஊருக்கு போகப்போகிறேன், இனியும் உங்களோடு இருந்து மாரடிக்க என்னால் முடியாது" என்று கூறி விட்டு செல்லும் அவர்கள், இரண்டு மாதத்தில் பெட்டி படுக்கையுடன் திரும்ப வந்து நிற்பார்கள் . ஏன் எனக் கேட்டால், "இங்கு வாழ்ந்த எம்மால் அங்கே போய் வாழ முடியாது" என்பார்களாம்.
போட்ஸ்வானாவின் நிலப்பகுதி, ஒண்டாரியோவிற்கு சமனானது. ஆயினும் சனத்தொகை 2.5 மில்லியன் மட்டுமே. கடல் மட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட 1000 m உயரத்தில் உள்ள சமவெளி பூமியான அதன் சராசரி மழை வீழ்ச்சி 500-700 mm. இங்கு சாரீரப்பதன் மிகவும் குறைவு என்பதால் மிகவும் வறண்ட பூமியாக காட்சி தரும். அரசியல் பொருளாதார நிலை பற்றிக் கூறுவதானால் இதனை ஆப்பிரிக்காவின் சிங்கப்பூர் எனலாம். சிங்கப்பூருக்கு மனித வளம் போல், போட்ஸ்வானாவிற்கு Diamond, Nickel, Copper போன்ற கனிம வளங்கள் உதவுகின்றன. 1966 இல் சுதந்திரம் பெறும்போது தனிநபர் வருமானத்தில் உலகத்தின் கடை நிலையில் இருந்த போட்ஸ்வானா, இப்போது ஆப்பிரிக்காவின் உச்சியில் உள்ளது.
Join Zoom Meeting | Meeting ID: 847 7725 7162 | Passcode: 554268
- நீலகிரிப் படகர் -
வரலாற்றைவிட வழக்காறுகள் இன்றியமையானவை. ஒரு சமூகத்தின் நெடிய மரபும் பண்பாடும் வழக்காறுகளில் வாழ்கின்றன. மானுட சமூகத்தில் நடப்பிலுள்ள வழக்காறுகளில் உட்செறிந்துள்ள மரபறிவினைத் தேடிச்செல்வதும், உற்றுநோக்குவதும் இன்றைய தேவைகளுள் ஒன்று என்பதனைவிட காலத்தின் கட்டாயம் எனலாம். நிலவும் உடலியல், உளவியல் பிணிகட்கும், வாழ்வியல் பிணக்குகளுக்குமான தீர்விற்கு முன்னோக்கி ஆய்வதைவிடவும் பின்னோக்கி ஆய்வதே ஏற்புடையது என்பதில் மாற்றமில்லை. அவ்வகையில் நீலகிரியில் வாழ்கின்ற, யுனெஸ்கோவால் உலகப் பூர்வகுடிகளாக சான்றளிக்கப்பட்ட ‘படகர்’ இனமக்களிடையே வழக்கிலுள்ள ‘காயிகல்லு’ என்ற மருத்துவத் தன்மைமிக்க பொருளொன்றின் பன்முகப் பயனிலையையும் அதன் தொன்மையினையும் இக்கட்டுரை ஆராய்கின்றது.
நீலகிரியும் படகர்களும் -
ஆண்டில் ஒன்பது மாதங்கள் மழைபொழியும் இயல்புடையது நீலகிரி மலை. உலகின் மிக முக்கியமான பல்லுயிர்ச் சூழல் மண்டலமான இம்மலையின் முகடுகளிலும் அதற்கு சற்றுக்கீழும் படகர்கள் வசிக்கின்றனர். இவர்கள் பேசும் மொழி படுகு. இவர்களின் வாழ்வியல் ‘பண்டா – பதுக்கு’ என்ற இருநிலைகளில் அடங்கும். இவர்களின் மொழியில் ‘பண்டா’ என்றால் எருமை மந்தை என்றும், ‘பதுக்கு’ என்றால் வாழ்க்கை என்றும் பொருள். எருமை மந்தை பேணலையே ஆதி வாழ்வாகக் கொண்டிருந்த இம்மக்களின் பெயர்க்காரணம்கூட இதை அடியொற்றியதே. ‘பண்டுக’ (எருமை மந்தைகளை உடையவன்) என்ற சொல்லே ‘படுகா’ என்று மருவியதாகக் கருதலாம். சங்க இலக்கியத்தில் இடம்பெறும் ஆயர்களான பொதுவர்களுக்கும் படகர்களுக்கும்கூட எண்ணற்ற ஒப்புமையுண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.
1
போகும்போது, லைட்டையும் அணைத்துவிட்டு, காதுவரை போர்த்தி படுத்திருந்தார். போர்த்தியவாறே என்னை ஏறிட்டு பார்த்துவிட்டு… காய்ச்சல்… குளிர்காய்ச்சல்… என்று நடுநடுங்கிய குரலில் முனங்கினார். பதறி… என்ன இது என்று நினைத்து தலைக்கடியில் மடித்து வைத்திருந்த, போர்வையினூடு வெளியே நீட்டியப்படி, இருந்த முழங்கையின் பின்புறத்தை தொட்டு, சுடுகின்றதா என்று பார்த்தேன். அப்போதுதான் குளித்துவிட்டு வந்திருக்க வேண்டும்… சில் என்று இருந்தது.
"பல்ல புடுங்கினன்… ஒன்று கிடந்து ஆடிக்கொண்டிருந்தது… ஒன்றும் சாப்பிட முடியாமல்… புடுங்கி போட்டன்… காய்ச்சலப்பா"…
நாற்காலியை இழுத்து அமரும் போது குமரனும் வந்து சேர்ந்தான்… எழுந்து உட்கார்ந்து கொண்டார்… சற்று நேரத்தில் காய்ச்சலின் அறிகுறியே இல்லை… பாரதி – புதுமைபித்தன் குறித்து அளவிலாவினோம்… "அவர்கள் இருவரும் தான்… இரு அசுர பிரமாக்கள்… பிரமாண்டங்கள்… இருபதாம் நூற்றாண்டில் தமிழிலக்கியத்தில்… புதுமைபித்தன்… ஓ… தமிழின் நெகிழ்வுதன்மையை… இலாஸ்ட்டி சிட்டியை அவன்தானே முதன்முதலாய் கொணர்ந்து சேர்த்தவன்… நல்லஅறிவு… ஆனால் ஏழையாய் தானே செத்தான்…”
இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவகமும்இ இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து, இலங்கை மற்றும் புலம்பெயர்ந்த படைப்பாளிகளைக் கௌரவித்து ஊக்குவிக்கும் பொருட்டுக் கடந்த பல வருடங்களாக 'இரா. உதயணன் இலக்கிய விருதுகளை" வழங்கிவருகின்றனர். கொரோனாப் பரவல் காரணமாக 2020, 2021இ 2022 ஆண்டுகளுக்குரிய விருது வழங்கல் அறிவிக்கப்படாமலிருந்தது. தற்போது அந்த ஆண்டுகளுக்குரிய விருதுகள் யாவும் அறிவிக்கப்பட்டுள்ளன. 2020 -ம் ஆண்டுக்குரிய 'வாழ்நாள் சாதனையாளர் விருது"க்கு மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.