வடக்கு, தெற்கு அரசியல் மற்றும் ரஷ்ய-உக்ரைன் போர் பற்றியோர் அலசல்! - ஜோதிகுமார் -
வடக்கின் அரசியல்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், இரு வேலைத்திட்டங்கள், தமிழ் அரசியலின், தீவிர கட்சிகளால் முன்வைக்கப்பட்டுள்ளன:
ஓன்று பகிஷ்கரிப்பு.
இரண்டாவது, பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது.
‘பகிஷ்கரிப்பு–பொதுவேட்பாளர்’ என்ற இரண்டு கோட்பாடுகளுமே மொத்தத்தில் ஒன்றுதான் என்பதும், இவை பொதுவில் புலம்பெயர் அரசியலின் தீவிரமுகத்தால், வலுவாக ஊக்குவிக்கப்பட்டு வருவன என்பதும் வெளிப்படை.
மறுபுறம், இவை இரண்டுமே வட-கிழக்கு மக்களால் நிராகரிக்கப்படவதாகவே இருக்கும் என்பதும், இது அண்மையில் இடம்பெற்ற விமானப்படை கண்காட்சி அல்லது ஹரகரனின் இசைநிகழ்ச்சி என்பனவும் எதிரொலிக்கும் விடயங்களாகும், என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.
இருந்தும இவ் அரசியல் முரண்களின் தாக்கம் ஏதோ ஒரு வகையில் தமிழரசு கட்சிக்குள்ளும் ஊடுருவத் தவறவில்லை எனக் கூறலாம்.