நாவில்லா உபதேசிகள்: காலனிய யாழ்ப்பாணத்தில் சிறுபுத்தகக் கலாசாரமும் சமயக் கருத்தாடலும்! (பகுதி இரண்டு) - கலாநிதி செல்லத்துரை சுதர்சன் -
- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தரும் தமிழ்ப் பேராசிரியருமான சு. வித்தியானந்தன் அவர்களின் நினைவாக 17.11.2022 அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கைலாசபதி கலையரங்கில் நிகழ்த்திய நினைவுப் பேருரையின் எழுத்துவடிவமே இக்கட்டுரை. இக்கட்டுரையாசிரியர் முனைவர் செல்லத்துரை சுதர்சன் - சிரேஷ்ட விரிவுரையாளர், தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம். - * நாவில்லா உபதேசிகள்: காலனிய யாழ்ப்பாணத்தில் சிறுபுத்தகக் கலாசாரமும் சமயக் கருத்தாடலும்! (பகுதி ஒன்று)
யாழ்ப்பாணத்தில் சமயக் காலனியம்
ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்னரேயே போர்துக்கீசரும், ஒல்லாந்தரும் தங்களது ஆட்சியை நிலைநிறுத்தவும் கிறிஸ்தவத்தினைப் பரப்பவும் சைவாலயங்களை அழிப்பதிலும் சைவ வழிபாடுகளை மறுப்பதிலும் ஈடுபட்டனர். ஆலயத்தை அழித்தல் என்பது, அதை மையமாகக்கொண்டியங்கிய உள்@ர் நிலப்பிரபுத்துவ அதிகாரத்தை அகற்றும் தன்மையையும் கொண்டிருந்தது. யாழ்ப்பாணம் வந்த ஐரோப்பிய மிஷனரிகள் தாம் எழுதிய குறிப்புக்களில், தம் வருகைக்கு முன்னரான சைவாலய அழிவுகளைப் பதிவுசெய்தனர். மிஷனரிமார்களில் ஒருவரான ஹரியற் எல். வின்சிலோ (Harriet L. Winslow) என்பார் தமது நாட்குறிப்பில் பதிவுசெய்யும் பின்வரும் பகுதியை நோக்கலாம்.
“போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்திலே தமது வர்த்தக மையங்களை நிறுவியவேளை, றோமன் கத்தோலிக்க மதத்தை நிறுவினார்கள். கடவுள் நம்பிக்கையற்ற மக்களின் கோயில்களை அழித்தனர். தமது வழிபாட்டி டங்களையும் ஆலயங்களையும் கட்டினார்கள். உள்@ர்வாசிகளிற் பலரைத் திருமுழுக்கு எடுக்கும்படி வற்புறுத்தினர். ஆனால், 1656ஆம் ஆண்டு, ஒல்லாந்தர் இலங்கையைக் கைப்பற்றிய பின்னர் தமது ஆட்சி பலத்தையும் அதனூடான செல்வாக்கையும் பயன்படுத்தி, போர்த்துக்கேயரைப் போலவே புரட்டஸ்தாந்து மதத்தின் விசுவாசத்தை வெளிப்படுத்தினர். அவர்கள், கடவுள் நம்பிக்கையற்றோரின் இடிக்கப்பட்ட ஆலயங்க ளைப் புனர்நிர்மாணம் செய்யவும் சமய வழிபாடுகளைப் பகிரங்கமாக நிகழ்த்தவும் இடமளிக்கவில்லை” (ஹரியட் வின்சிலோ., 1835:182- 183)
மேற்குறித்த பதிவிலிருந்து சைவர்களின் ஆலயங்கள் அழிக்கப்பட்டமையும் சைவ வழிபாடுகள் மறுக்கப்பட்டமையும் மத மாற்றத்துக்கு வற்புறுத்தப்பட்டமையும் புலனாகின்றது. ‘கடவுள் நம்பிக்கையற்ற மக்களின் கோயில்களை அழித்தனர்’ என்னும் குறிப்பு, சுதேசிகளின் சமயத்தினை அவர்கள் சமயமாகக் கருதவில்லை என்பதையே புலப்படுத்துகிறது.

நான் முதன் முதலில் எழுத்தாளர் மாஸ்டர் சிவலிங்கத்தை அறிந்து கொண்டது எழுபதுகளில் அவர் சிந்தாமணியின் வாரவெளியீட்டில் வெளியான சிறுவர் சிந்தாமணியில் எழுதிய சிறுவர் புனைகதைகள் மூலம்தான். அழகான ஓவியங்களுடன் பிரசுரமான் அக்கதைகள் மூலம் என்னை மிகவும் கவர்ந்து விட்டார் மாஸ்டர் சிவலிங்கம். அவரது எழுத்து நடையும், உலகின் பல பாகங்களிலிருந்தும் பெற்ற கதைகளை அவர் சிறுவர்களுக்காக எழுதிய பாங்கும் எனக்கு அவரைத் தமிழகத்தின் சிறுவர் இலக்கியத்துக்கு மிகப்பெரும் பங்களிப்பு செய்தவரான வாண்டுமாமாவுடன் ஒப்பிட வைத்தன். உண்மையில் அவர் என்னைப்பொறுத்தவரையில் ஈழத்து வாண்டுமாமாதான்.
அ.ந.கந்தசாமியின் 'நாயினும் கடையர்', 'காளிமுத்து வந்த கதை' ஆகிய கதைகளைத் தேடிக்கொண்டிருக்கின்றேன். கிடைக்கவில்லை. 'நாயினும் கடையர்' வீரகேசரியிலும், 'காளிமுத்து வந்த கதை' தேசாபிமானியிலும் வெளிவந்ததாக அறிகின்றேன். உங்களுக்கு அவை பற்றிய தகவல்கள் தெரிந்தால் அறியத்தாருங்கள். இவற்றை வைத்திருப்பவர்கள் பகிர்ந்துகொள்ளுங்கள்.


கனடாவிலே ரொறன்ரோவை மையப்படுத்திய வாழ்க்கைச் சூழலிலே எனக்கும் எனது துணைவியார் கௌசல்யாவுக்கும் கிடைத்த கெழுதகை நண்பர்கள் சிலரில் மிக முக்கியமான ஒருவர் பேராசிரியர் சுப்பராயன் பசுபதி அவர்கள். அறிவியல் துறைசார் கல்வியாளரான அவர் தமிழ் மொழி, இலக்கியம், கலைகள் முதலான பண்பாட்டுத் துறைகளிலும் ஆழ்ந்த புலமை கொண்டவராவார். அவ்வாறான பண்பாட்டுத் துறைகள்சார் புலமை அம்சங்களை ஆய்வரங்குகள் ஊடாகவும் வலைப்பூக்கள் வழியாகவும் சமகால அறிவுலகுக்கு அவர் வாரிவழங்கி வருகிறார்.
வரலாற்றில் நிஜப் பாத்திரங்கள் :



“வாழ்க்கை சவால்களால் நிறைந்துள்ளது. வாழ்க்கை கற்றுத்தரும் பாடங்கள், சில நேரங்களில் வலி நிரம்பியவையாக உள்ளன. சிலநேரம் அப்பாடங்கள் நாம் வளர வாய்ப்பளிக்கின்றன. அவை சவால்கள் போலத் தோன்றினாலும்கூட, அவை சாதனையாக மாற வல்லவை என்பதை மறுப்பதற்கில்லை. வாய்ப்புகள் எப்போதும் வருவதில்லை. என்னால் செய்யமுடியும் என்று முன்வராமல், யாராவது நம்மைத் தேர்ந்தெடுத்து வாய்ப்பைத் தட்டில் வைத்து தருவார்கள் என எதிர்பார்ப்பதும் வாய்ப்புகள் வரும்போது, நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்வதும் முட்டாள்தனம்“ மேற்சொன்ன வரிகளுடன் தொடங்குகிறது, முனைவர் சந்திரிக்கா சுப்பிரமணியன் எழுதியிருக்கும் பெண் நூறு என்ற நூல். ஒரு பெண்ணாக, பெண்களுக்கென்றே சந்திரிக்கா இதனை எழுதியிருப்பதாகத் தெரியவில்லை. இக்கருத்து ஆண்களுக்கும் பொருந்தும்.
அத்தியாயம் இருபத்தியிரண்டு: ஐன்ஸ்டைனும் நானும் (ஒரு பிதற்றல்)!
அளவில்லாத ‘எம்மெ’ அவரையின் இளங்கொழுந்துகளை உண்டிருந்த அந்த எருமைக்கு நிற்காமல் கழிந்துகொண்டிருந்தது. அது எவ்வளவோ அடக்க முயன்றது போலும். பயனில்லை. அதன் கட்டுப்பாட்டையும்மீறி விரிந்த குதம் இடைவிடாது கக்கிக்கொண்டிருந்தது.



"மாத்தளை எங்கள் மலையகத்தின் தலைவாயில் தமிழகக் கரையிலிருந்து பயங்கரப்படகுகள் மூலம் கடலைக்கடந்து, கொடிய கானகங்களுக்கிடையே கால்நடையாய் உயிர்தப்பி வந்ததற்காக நன்றி கூறும் முதல் தெய்வம் எங்கள் மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன். மலையக மக்களின் வரலாறு மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வரலாற்றுடன் ஆரம்பமாகிறது” என்கிறார் மலையகத்தின் கல்விமான் அமரர் இர.சிவலிங்கம். 

சூரியகுமாருக்கு நாளை காலை பத்திற்கும் பன்னிரண்டுக்கும் இடைப்பட்ட சுப வேளையில் திருமண எழுத்து நடைபெற இருந்தது.
வெளியே பனி கொட்டிக் கொண்டிருந்தது. பனிப்புகாரில் பாதை தெளிவாகத் தெரியவில்லை. பனிமூட்டத்தில் போகிறபாதை தெளிவாகத் தெரியாவிட்டாலும் செல்லவேண்டிய இடத்தை அடைவதில் சுகி குறியாக இருந்தாள்.


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









