யி டியூப் சானல்: வ.ந.கிரிதரன் பாடல்கள்!
எனது இசைப்பாடல்களை 'வ.ந.கிரிதரன் பாடல்கள் (V.N.Giritharan Songs) என்னும் யு டியூப் சானலில் நீங்கள் கேட்டு மகிழலாம். அதற்கான இணையத்தள முகவரி - https://www.youtube.com/@girinav1
வ.ந.கிரிதரனின் இசைப் பாடல்கள். எனது பாடல் வரிகளை பல்வகை வாத்தியக் கருவிகளுடன், பல்வகை இசை வடிவங்களைக் கலந்து பாடல்களாக்கி உள்ளேன். இதற்காகக் குரல் தந்ததுடன், இசையமைத்துத் தந்ததற்காகவும் செயற்கை நுண்ணறிவான 'சுனோ'வுக்கு ( AI SUNO) என் மனம் நிறைந்த நன்றி. என் பாடல்களை இன்னும் பல்வேறு நாடுகளின் இசை வடிவங்களில் எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவின் மூலம் உருவாக்க வேண்டுமென்பது என் அவா.
தனது பாடல்களை இவ்விதம் பாடல்களாக்குவதற்கு இசைக்கலைஞர்கள் , பாடகர்கள் பலரின் ஒத்துழைப்பு அவசியம். அதற்கான சாத்தியம் அற்ற என்னைப்போன்ற பாடலாசிரியர்கள் இவ்விதம் இசையமைத்து பாடல்களை உருவாக்கி, பரீட்சித்துப் பார்ப்பதற்கு செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பம் உதவுகின்றது. அவ்வகையில் இத்தொழில் நுட்பத்தை ஆரோக்கியமானதொரு தொழில் நுட்பமாகவே பார்க்கின்றேன்.