சிறுகதை: ஓடை! - வி.குணராஜா -
இதில் நிச்சயமாக மீன்கள் இருக்கும். மூன்று அல்லது நான்கடி அகலம். இன்னும் சில இடங்களில் சற்று அதிகமாக கூட இருக்கலாம். மொத்தத்தில் இது ஒரு ஓடை போன்று தோற்றமளிக்காது தேங்கிய ஒரு நீர் குட்டையைப்போல் காட்சித்தந்தது. உற்றுப்பார்த்தால் மெதுவான ஓர் ஓட்டம் - இவ்வளவுதான் இந்த ஓடை. ஆனால் ரம்மியமானது. அந்த பரந்த பெரிய வயல்வெளியின் ஓரமாய் - இடையிடையே ஊதா நிறத்து மலர்களுடன்…
“மீன் இருக்குமா” போகிறப்போக்கில் கேட்டுவைத்தேன்.
“இருக்கும். ஆனால்ச் குறவர் கூட்டம்… அவர்கள் மட்டுமே இங்கே மீன் பிடிக்கலாம். அவர்களுக்கு தெரியும் - முதலைகளைப்பற்றி...”