தொடர்நாவல்: வன்னிமண் (10-13)

'தாயகம்' (கனடா) சஞ்சிகையில் வெளியான என் ஆரம்ப காலத்து நாவல்கள்: 'கணங்களும், குணங்களும்', 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்'. 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. இந்நான்கு நாவல்களும் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்தது. ஒரு பதிவுக்காக அந்நாவல்கள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப் பிரசுரமாகும்.
என் பால்ய காலம் வன்னி மண்ணில் கழிந்தது. என் மனதைக்கொள்ளை கொண்ட மண். நான் முதன் முதலில் எழுதத்தொடங்கியபோது அதன் காரணமாகவே என் பெயரின் முன்னால் வ என்னும் எழுத்தைச் சேர்த்து வ.ந.கிரிதரன் என்ற பெயரில் எழுத ஆரம்பித்தேன். 'வன்னி மண்' நாவல் என் சொந்த அனுபவத்தையும், கற்பனையையும் கலந்து பின்னப்பட்டதொரு நாவல். கற்பனைப்பெயர்களை நீக்கி விட்டால் ஒரு வகையில் என் பால்ய காலத்துச் சுயசரிதை என்றும் கூடக்கூறலாம். அவ்வளவுக்கு இந்நாவல் என் சொந்த அனுபவங்களின் விளைவு என்பேன்.ஒரு சில திருத்தங்களுடன் மீள்பிரசுரமாகின்றது.
அத்தியாயம் பத்து: வன்னி மண் - மேலும் சில நினைவுகள்.
இச்சமயத்தில் வவுனியா நகர பொலிஸ் நிலையத்தைச் சுற்றி "சேகுவேரா இளைஞர்களிடமிருந்து தங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக மண்மூடைகள் ஆங்காங்கே போடப் பட்டிருந்தன. ஒருமுறை இம்மண்மூடைகளை வேடிக்கை பார்த்தபடி வந்துகொண்டிருந்தபோது, வவுனியா நகரசபை மைதானத்தில் மூன்று ஹெலிகொப்டர்கள் வந்திறங்கின. 'சப்மெஷின்கன்களுடன் சிங்களச் சிப்பாய்கள் நகரசபை மைதானத்தைச் சுற்றியிருந்த கழிவுநீர் செல்வதற்காக வெட்டப்பட்டிருந்த கால்வாய் பகுதிக்குள் மறைந்து நின்று பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்திக் கொண்டிருந்தார்கள். முதன்முதலாக என் வாழ்வில் 'சப்மெஷின் கன்களைப் பார்த்தது அப்பொழுதுதான். அன்றிலிருந்து புரட்சி அடக்கப்பட்ட காலம் வரை அடிக்கடி புகையிரத நிலையங்களில், வீதிகளில், சிங்களச் சிப்பாய்கள் 'சப்மெஷின்கன்'களுடன் திரிவதைப் பார்ப்பது பழக்கமாகிவிட்டது. ஒரு சில சமயங்களில் மெஷின்கன் பொருத்தப்பட்ட திறந்த ஜிப்புகளில் சிங்களச்சிப்பாய்கள் செல்வார்கள். அவர்களை அவ்விதம் பார்ப்பது எங்களிற்கொரு வேடிக்கையான அனுபவம். எந்தவிதப் பயமும் எங்களிற்கேற்பட்டதில்லை. அவர்களும் தமிழர்களுடன் அன்பாக, இயல்பாக நடந்துகொண்டார்கள். சிங்கள இளைஞர்கள் விடயத்தில் மட்டும் எச்சரிக்கையாக, சந்தேகத்துடன் நடந்துகொண்டார்கள். இந்த சப்மெஷின்கன்'களைப்பற்றி நெடுநாள் எனக்கொரு சந்தேகமிருந்தது. இதன் குழலைப்பற்றி துளைகள் பல கொண்டதொரு பகுதியிருக்கும். குளிர்தன்மையைத் தருவதற்காக ஆனால் அந்தக் காலக்கட்டத்தில் முதன்முறையாக அதனைக் கண்டபோது பலவிதமான கதைகள் எங்களை ஈர்த்தன. அவற்றிலொன்று சமயத்தில் அந்தத் துளைகள் வரியாக ஐநூறு குண்டுகளைச் சுடலாமென்பதுதான். சிங்களப் போலிசாரைப் பொறுத்த வரையில் அவர்களை நான் 'சப்மெஷின்கன்” களுடன் கண்டதில்லை. வழக்கம்போல் நீண்ட 'ரைபிள்' தான் அவர்களது ஆயுதம்,இது அன்று. ஆனால் இன்றோ. .ஒரே மண். ஆனால் எத்தனைவிதமான நிகழ்வுகள். எல்லாவற்றிற்கும் சாட்சியாக அமைதியிலாழ்ந்து கிடக்கும் என் பிரியமான வன்னிமண்.

படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தது தான் மிச்சம். நித்திரையோ வரவே மாட்டேன் என்கிறது. இரவோ நள்ளிரவையும் தாண்டி விட்டது. அப்பா கூடத்தில் குறட்டை விட்டுத் தூங்குவது இலேசாகக் கேட்கிறது. என் நெஞ்சிலோ அமைதியில்லை. அமைதி எப்படி வரும்? நத்து ஒன்று விட்டு விட்டுக் கத்துவது இரவின் நிசப்தத்தை கிழித்துக் கொண்டு காதில் கேட்கிறது. மீண்டுமொரு முறை புரண்டு படுக்கிறேன். பல்வேறு வகைப்பட்ட எண்ணங்கள். எண்ணங்கள். மனது அன்று மாலை குளக்கரையில் நடந்த சம்பவத்தையே அசை போட்டபடி. கருணாகரனின் உருவம் நெஞ்சில் வந்து சிரிக்கின்றது. உயர்ந்து திடகாத்திரமான அந்த உருவம். இதயத்தையே துளைத்து விடும் அந்தக் கண்கள். சதா சிந்தனையிலேயே மூழ்கிவிடும் அந்த அழகு வதனம். என்னால் நம்பவே முடியவில்லை. நம்பாமலிருக்கவும் முடியவில்லை. கருணாகரன் சிறைத்தண்டனை பெற்ற குற்றவாளி என்பது முன்பே தெரிந்து தானிருந்தது. ஆனால் அவன் செய்த குற்றம் இத்தகைய கொடுமையானதாயிருக்குமென்று நான் கனவில் கூட எண்ணியிருக்கவில்லை. தன் குழந்தையைப் போல அவனை வளர்த்து வந்த சுப்பிரமணிய வாத்தியாரிற்கு அவன் செய்த கைம்மாறு. காயத்ரீக்கு அவன் செய்த மன்னிக்கவே முடியாத அந்தக் கொடுமை. எப்படி அவனால் அவ்விதம் செய்ய முடிந்தது. கருணாகரன். எழுத்தாளன் நீலவண்ணனின் மறுபக்கம் இத்தனை கொடுமையானதாயிருக்க வேண்டும். என்னால் நம்பவே முடியவில்லையே. அவன் முகத்தில் விழிப்பதே பாவம் போலவிருக்கின்றது. பெண்களின் உணர்வுகளைச் சிறிதும் மதிக்காத ஆண்கள் வாழும் உலகின் ஒரு பிரதிநிதிதானே அவனும். செய்த தவறிற்காக அவன் மனம் வருந்துவது உண்மையாக இருக்கலாம்.இல்லாமலும் இருக்கலாம். ஆனால் சிதைந்துவிட்ட காயத்ரீயின் வாழ்வு. நடைப்பிணமாகவே மாறிவிட்ட சுப்பிரமணிய மாஸ்டரின் நிலைமை. கருணாகரன் மேல் வெறுப்பு வெறுப்பாக வந்தது. செய்த பாவங்களிற்குப் பரிகாரமாகத்தான் சமூகவேலை. அது இதென்று அலைகின்றானோ. இருக்கலாம். சிந்தித்து சிந்தித்து புரண்டு புரண்டு படுத்தது தான் மிச்சம். தெளிவுபெறுவதற்குப் பதில் மேலும் மேலும் குழம்பிப்போனதுதான் மிச்சம். எங்கோ ஒரு சேவல் கூவியது. அதனைத் தொடர்ந்து இரண்டு மூன்று சேவல்களின் கூவல்கள்.தொடர்ந்து இரவின் நிசப்தம்.இப்படித்தான் சிலவேளைகளில் சில சேவல்கள் நேரம் மாறிக் கூவிவிடுகின்றன. சிந்திக்கச் சிந்திக்க ஆரம்பத்தில் கருணாகரன் மேல் இருந்த வெறுப்பு சிறிதுசிறிதாக குறைவதுபோல் பட்டது. மனிதர்கள் அடிக்கடி தவறு செய்துவிடுகிறார்கள். சிலவேளைகளில் செய்யும் தவறுகள் சிறிதாக இருந்துவிடுகின்றன. இன்னும் சிலவேளைகளிலோ பெரிதாக இருந்துவிடுகின்றன. ஆனால் செய்ததென்னவோ தவறு தவறு தானே. மனிதனின் மனதில் நல்ல உணர்வுகளும் கெட்ட உணர்வுகளும் உறைந்து கிடக்கின்றன. சில கணங்களில் சில கெட்ட குணங்கள்,உணர்வுகள் ஆட்சி செலுத்தி விடுகின்றன. அந்தக் கணங்களில் மனிதன் தன் மனிதத்துவத்தை இழந்து மிருகமாகி விடுகிறான். பின்னால் கிடந்து வேதனையினால் வெந்து துடித்துப் போகின்றான். கருணாகரனின் கதையும் இதுதானே.
அத்தியாயம் நான்கு!
மற்றவர்கள்,கட்டிடக்கூலிவேலைகள் தொட்டு...எந்த வேலைகளும் செய்ய பஞ்சி படாதவர்கள். வீட்டிலேயும், கெளரவம் பார்க்கிறது, தடுக்கிறது... எல்லாம் இருக்கவில்லை. வாப்பா பிரயாசைப்பட்டு ரேடியோ திருத்துறதை பழகிவிட முயல்கிறான். கற்றுக்குட்டிதான்.ஆனால் பாடாத ரேடியோவை, ஒரு கிழமை அல்லது நீள எடுத்து எப்படியும் பிழையைக் கண்டு பிடித்து திருத்தி விடுவான்.அதை விட லயன்ஸ் கிளப்பில் வகுப்புகள் எடுத்து வீடுகளிற்கு வயரிங், பிளமிங்... செய்கிறதுக்கு தெரிந்து வைத்திருக்கிறான். குஞ்சனின் அண்ணர் குகன் வீட்டுப்பெயின்றர். குஞ்சனும் மேசன் வேலையோடு,வீட்டுக்கு பெயின்ற் அடிக்கிறதைச் செய்கிறவன். நண்பர்கள்,அவனோடு இழுபட்டதால்... ஆதரவாளர்கள். அவனுடைய தாமரை இயக்கமும் கடைசியாக கழுகால் தடை செய்யப்பட... அவனும் அநாதரவாக நிற்கிற மாஜி தோழனாகி விட்டான் “சிந்திக்கிறதை எவரால் தடை செய்து விட முடியும்?” வீம்பு மட்டும் அவர்களிற்கு குறையவில்லை.
அன்றய இரவுப்பொழுது விடியும்போது, என் வாழ்விலும் விடியல் மகிழ்ச்சி தெரிந்த்து. பகல்பொழுது திருமண வைபவத்தோடு கழிந்தது. நண்பன் வீட்டுத் திருமணம் அல்லவா…! ஓடியோடி வேலைபார்த்துப் போதும் போதும் என்று ஆகிவிட்டது. செமையாக உழுக்கு எடுத்துவிட்டார்கள். வேலைகளை முடித்து, குளித்துச் சாப்பிட்டுவிட்டு, லாட்ஜில் எனக்கென்று ஒதுக்கிய ரூமுக்கு சென்று, கட்டிலில் விழும்போது பத்துமணி ஆகிவிட்டது. மாலாவின் எண்ணுக்குப் போன் எடுத்தேன். மறுமுனையில் கலாவின் அப்பா. “கலாவிடம் கொடுங்கள்….” எனச் சொல்லவும் முடியவில்லை. அதேவேளை, என்மீது அவர்கள் மனதில் தப்பான எண்ணங்கள் இருக்கும் பட்சத்தில், அதனை நீக்கும் முகமாக நான் பேசவேண்டிய முதல் நபரே அவர்தான்.
- எழுத்தாளரும், விமர்சகருமான மைக்கல் எழுதிய 'ஏழாவது சொர்க்கம்' நாவ்ல் பத்து அத்தியாயங்களை உள்ளடக்கியது. 'பதிவுகள் இணைய இதழில் ஆகஸ்ட் 2001 (இதழ் 10) தொடக்கம் ஏப்ரல் 2002 ( இதழ் 28 ) வரை தொடராக வெளிவந்தது. கனடியத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்ந்த, சேர்க்கின்ற படைப்பாளிகளில் மைக்கலும் ஒருவர். இந்நாவல் ஒரு பதிவுக்காக தற்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரமாகின்றது. - பதிவுகள் -
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, நண்பர்கள் இருவருடன் ராமேஸ்வரம் சென்றிருந்தேன்.மூவரும் கடலில் குளிக்கச் சென்றோம். அவர்கள் அளவுக்கு நீச்சலில் அனுபவம் எனக்கில்லை. கரையிலே நின்று குளித்துக்கொண்டிருந்த என்னை ஆழமான இடம்வரை இழுத்துச் சென்ற அவர்கள், நீச்சலடிக்கும்படி கட்டாயப் படுத்தியபோதுதான் கவனித்தேன், அவர்களது வாயிலிருந்து மதுவின் நெடி வீசியது. ஒரு கணம் அதிர்ந்தே போனேன்.
- மங்கை பதிப்பகம் (கனடா), ஸ்நேகா பதிப்பகம் (தமிழ்நாடு) இணைந்து வெளியிட்ட அமெரிக்கா தொகுதியானது 'அமெரிக்கா' என்னும் நாவலையும் (அளவில் சிறியதானாலும் இது நாவல்தான்) , சில சிறுகதைகளையும் உள்ளடக்கிய தொகுதியாகும். இவை அனைத்துமே 'பொந்துப்பறவைகள்' மற்றும் 'மான் ஹோல்' தவிர , கனடாவிலிருந்து வெளியான 'தாயகம்' பத்திரிகை, சஞ்சிகையில் பிரசுரமானவை (தாயகம் ஆரம்பத்தில் பத்திரிகையாகவும் , பின்னர் சஞ்சிகையாகவும் வெளியானது). முதற் பதிப்பின்போது ஒழுங்காக சரி, பிழை பார்க்காமல் போனதால் பல எழுத்துப்பிழைகள் ஏற்பட்டு விட்டன; சில வசனங்கள் விடுபட்டுப்போயின, மேலும் இந்நாவல் ஈழத்துத்தமிழ் அகதிகள் சிலரின் நியூயார்க்கிலுள்ள சட்ட விரோதக் குடிகளுக்கான தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்குமொரு நாவல். இந்நிலையில் மீண்டும் அத்தொகுப்பில் வெளியான ஆக்கங்களை சரி, பிழை பார்த்துப் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரித்தாலென்ன என்ற எண்ணம் தோன்றியது. அதன் விளைவுதான் 'அமெரிக்கா' என்னும் இந்நாவலின் மீள்பிரசுரிப்பு. இவ்விதம் பிரசுரிப்பதன் மூலம், அவற்றைச்சரி, பிழை பார்த்து, மீள எழுதுவதன் மூலம் அடுத்த பதிப்புக்குத்தயார் படுத்தலாம் என்றெண்ணுகின்றேன். அத்துடன் பதிவுகள் வாசகர்களும் அவற்றை இணையத்தின் மூலம் வாசிக்க வழி வகுக்கும் என்றுமெண்ணுகின்றேன். இறுதி அத்தியாயம் மீளவும் திருத்தி எழுதப்பட்டுள்ளது- வ.ந.கிரிதரன் - 


வாழ்க்கை என்பது ஒரே மாதிரி இருக்க வேண்டியது இல்லைத்தானே. ஏற்ற இறக்கங்கள் நன்மை தீமைகள் சுகங்கள் துக்கங்கள் என மாறிமாறி வருவது இயற்கை. அதற்கேற்க ஷரனது வாழ்க்கையில் விரும்பத்தக்க ஒரு மாற்றம் வந்ததது. அவளது குடும்பம் சார்ந்த சகலருக்கும் மகிழ்ச்சியை அளிக்கக்கூடியதாக அது இருந்தது. பல காலமாக தாய் வீட்டில் கணவன் கிறிஸ்ரியனை பிரிந்து இருந்த போதும் அவள் தனது விவாகரத்தை கோட்டுக்குப் எடுத்து போகவில்லை. கோட்டுக்குச் சென்று வழக்குப் பேசி தனக்குச் சொந்தமாக வரக்கூடிய பல மில்லியன் டாலர்களை இழப்பதற்கு தயாரில்லை. அவசரத்திலும், ஆத்திரத்திலும் சாதாரண பெண்களைப்போல் உணர்வு வயப்பட்டாலும் சிறிது நேரத்தில் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த அவளது மூளையின் சிந்திக்கும் மூளையின் முன் பகுதிகள் இரத்த ஓட்டத்தை அதிகரித்து அவளை அமைதியாக்கும். ‘கமோன் ஷரன், நீ மற்றவர்கள்போல் அல்ல. இதற்காகவா உனது இளமைக் காலத்தை வயதான ஒருவனோடு வீணடித்தாய். ஆத்திரத்தில் எடுக்கும் முடிவுகள் உன்னை கீழே தள்ளி வீழ்த்திவிடும். கணவனைப் பிரிந்த மற்றய பெண்களைப்போல் அரசாங்கத்தின் பிச்சைப் பணத்திலும் மற்றவர்களின் அனுதாபத்திலும் வாழ்நாளை கடத்துவதற்கு பிறந்தவள் அல்ல. உனது அழகும், அறிவும் உன்னை ஒரு மகாராணி போல் வாழ்வதற்கு வழிகாட்டும்’ எனச் சொல்லி அவளிடம் சிந்தனையை தூண்டிவிடும். தன்னில் உள்ள நம்பிக்கை உசுப்பி விடப்படுவதால் விவாகரத்து என்ற விடயத்தை முற்றாக தள்ளிப் போட்டிருந்தாள்
ஹெலென் லாகொனெல் நல்ல வளர்த்தி, ஆனால் அவள் ஓர் அசடு. அவளுடைய சரீரம் ஒரு சில பழங்களின் மேற்தோல்போல அத்தனை மென்மையானது. சட்டென்று அதன் இருப்பை உணரமுடியாது. மிகைப்படுத்தி சொல்வதுபோல இருக்கிறதா? உண்மையும் அதுதான். பொறாமையில் அவளை எவரேனும் கொன்றாலும் ஆச்சரியமில்லை. அவளுடையக் கைகளைக் கொண்டே அவளுடைய கழுத்தை நெறிக்கலாம் என்பதைப்போன்ற வித்தியாசமான கனவுகளில் நம்மை ஆழ்த்தக்கூடியவள். தனது பலத்தை அறிந்திராத, தனது அருமை பெருமைகளை உணர்ந்திடாத- நினைத்துபார்க்காத, பிசையுங்களென்று கைகளையும், உண்ணென்று வாயையும் அழைக்கும், மிக மென்மையான கோதுமை மா அவள். கடவுளைக்குறித்து மிக ஆழமாக அறிந்துணர்வதற்காக ஒவ்வொருநாளும் சீனர்கள் நகரத்திலிருந்த அறையொன்றிர்க்குச் செல்வதும், அங்கே எனது மார்பிரண்டும் ஒருவனால் உண்ணப்பட்டதில்லையா, அதுபோலவே எனக்கும் ஹெலேன் லாகொனெல், மார்பகங்களை உண்ண விருப்பம். சன்னமான கோதுமைமாவினாலான அவளுடைய மார்பகங்கள் உண்ணப்படவேண்டியவை.
இவர்கள் இவ்வளவு சுயநலமா இருப்பாங்கனு நான் கனவுலக்கூட நினைச்சுப் பார்க்கலிங்க!” மனைவி கடுங்கோபங் கொள்கிறார். வெளிப் பகட்டுக்காகப் பல்லித்துப் பேசி, நயவஞ்சகத்தோடுப்பழகும் வேடதாரிகள் நமக்கு இனியும் வேண்டாம் என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்து விட்டனர் கணவனும் மனைவியும். பெற்றோர் பேசிக் கொண்டிருந்ததை, பார்த்திபன் கேட்டதும் பெரும் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைகிறான்! தான் செய்த தவற்றினால் குடும்ப மானம் காற்றில் பறந்துவிட்டதே என்று தன்னையே நொந்து கொள்கிறான். பெற்றெடுத்த தாய்க்கும், பல சிரமங்கள்பட்டு வளர்த்த அப்பாவிற்கும் எவ்வளவு பெரிய அவமானத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டேன்! யாரிடமும் தலைவணங்காத பெற்றோருக்குத் தலைகுனிவை ஏற்படுத்திவிட்டேனே என்று மிகுந்த கவலை கொள்கிறான்! தனது செயலுக்காகக் கூனிக் குறுகிப்போகிறான்! நான் முந்தி நீ முந்தி என்று போட்டிப் போட்டுக் கொண்டு தனக்குப் பெண் கொடுக்க வந்த உறவினர்கள், இப்போது கண்டும் காணாததுபோல் நடந்து கொண்டது குடும்பத்தார் எதிர்ப்பார்க்காத ஒன்று! இதுநாள் வரை மலைபோல் நம்பிக் கொண்டிருந்தவர்கள் தங்களை நட்டாற்றில் தவிக்கவிட்டு வேடிக்கைப் பார்க்கிறார்களே என்று எண்ணிப்பார்த்த போது அவனுக்கு உறவினர்கள் மீது கோபம் கோபமாக வந்தது! 

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









