தொடர் நாவல்: அசோகனின் வைத்தியசாலை 18

நிர்வாகக் குழு காலோசின் ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கொடுத்திருந்த இரு கிழமைகள் வைத்தியசாலையில் தற்காலிகமாகவேனும் ஒரு தலைமை வைத்தியர் நியமிக்கப்படவில்லை. தலைமை வைத்தியர் இல்லாமல் சகல வேலையும் வழமைபோல் நடந்து கொண்டிருந்தது. கப்டன் இல்லாத போதும் எந்தத் தங்கு தடையின்றிச் செல்லும் கப்பலைப் போல வைத்தியசாலை சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. ஒவ்வொருவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளைச் செய்வதால் அறுபது வருடமாக இந்த வைத்தியசாலை அவுஸ்திரேலியாவில் முன்மாதிரியாக நடந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும் வரும் நூற்றுக்கு மேற்பட்ட செல்லப்பிராணிகளைக் கொண்டு வருபவர்களைக் கவனித்து, அவற்றின் பிணி தீர்க்கும் உன்னதமான கடமையாற்றுவது என்பதாலும் மற்றும் இலாப நோக்கமற்று நியாயமான பணத்தில் இந்தச் சேவை நடப்பதாலும் மெல்பேனில் வாழும் பலருக்கு இந்த வைத்தியசாலையில் மரியாதையும் பற்றும் உள்ளது. சில செல்வந்தர்கள் தங்களது செல்லப்பிராணிகளைக் கொண்டு வந்து மணிக்கணக்காக காத்திருப்பார்கள். தங்கள் செல்லப்பிராணிணிகளில் அதிக அன்பு செலுத்தியவர்கள் தங்களது சொத்துக்களை இறக்கும் போது வைத்தியசாலைக்கு எழுதி வைத்துள்ளார்கள். பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் காயமுற்ற செல்லப்பிராணிகள் இங்கு வைத்தியம் பெறுவது அடிக்கடி தகவல்களாக வெளிப்படுத்துவதால் பலரது கவனத்தைப் பெறும் இடமாகிறது. இந்த அளவு முக்கியத்துவம் பெற்ற இடத்தை தலைமை வைத்தியர் இல்லாமல் இரண்டு கிழமை நடத்தியது நிர்வாக குழு, காலோஸ் சேரத்தின் மேல் வைத்த மரியாதையை காட்டுகிறது என சுந்தரம்பிள்ளையால் புரிந்து கொள்ள முடிந்தது.

நொந்து போயிருக்கும் மனைவிக்கு ஆறுதலாக இருக்கட்டுமே,என்பதற்காக ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை வீட்டுக்கருகில் இருக்கும் முருகன் ஆலயத்திற்கு மனைவியைத் தவறாமல் அழைத்துச் செல்வதை,வழக்கப் படுத்திக் கொள்கிறார் தினகரன். கணவன் மனைவி இருவரும் இறைவன் சந்நிதியில் மகனின் விடுதலைக்காக நெஞ்சுருகிப் பிராத்தனைச் செய்வர். மகன் நல்லபடியாக விடுதலை அடைந்து நலமுடன் வீடு திரும்பிவிட்டால்,பத்துமலைத் திருமுருகனுக்குக் குடும்பத்துடன் பால்குடம் எடுப்பதாகத் தினகரன் வேண்டிக் கொள்வார். வழிபாடு நடத்தப்படும் நாள் அன்று,அம்பிகை மனம் சாந்தி அடைந்தவராகக் காணப்படுவார்.மகனைப் பற்றிய சஞ்சலம் ஏதுமின்றி அமைதியுடன் இரவில் தூங்குவார். தினகரனுக்கும் மனைவியின் அமைதியான உறக்கம் கண்டு சற்று ஆறுதல் கொள்வார். முருகா....! மனைவிக்கு நீதான் அமைதியைக் கொடுக்க வேண்டும்.உன்னைவிட்டால் எங்களுக்கு வேறு கதியேது....? மனமுருகி மனதில் வேண்டிக் கொள்வார்! வழக்கம்போல் கணவன் மனைவி இருவரும் தத்தம் பணிகளுக்குக் காலையில் சென்று மாலையில் வீடு திரும்பினாலும் பழைய சுறுசுறுப்பும் உற்சாகமும் இல்லாமல் மனம் சோர்ந்து காணப்படுவர்! பார்த்திபன் சிறைவாசம் அனுபவிக்கும் காலத்தில் கடந்த ஒன்றரை ஆண்டில் இரண்டு முறைகள் அவனைச் சென்று கண்டு வந்தார்கள்.அவனைக் கண்டு வந்த பிறகு அம்பிகை மேலும் கவலை அடைந்தார்.இதனால் அவனைச் சென்று காண்பதை தினகரன் தவிர்த்து வந்தார்.
மரி கிளாட் கார்பெண்ட்டர்(Marie-Claude Carpenter) அமெரிக்க பெண்மணி. எனது நினைவுத்திறனை நம்புவதால் அவள் பாஸ்ட்டனைச்( Boston) சேர்ந்தவள் என்பது உறுதி. மிகவும் நிர்மலமான கண்கள். வெளிர்நீலம். 1943. இளமஞ்சள்நிறம். வயதுக்கான தளர்ச்சியில்லை, தவிர அழகானவளென்றும் ஞாபகம். முகத்திற் சட்டென்று மின்னலாய் தோன்றி மறையும், கணநேரப் புன்னகை. நன்றாக நினைவிருக்கிறது, தாழ்ந்த குரல், உரத்துபேசுவதைத் தவிர்க்கும் ரகம். நடுத்தர வயதைக் கடந்திருந்தாள், நாற்பத்தைந்துவயது. பாரீஸின் பதினாறாவது வட்டத்தில், அல்மா(Alma)வுக்கு அருகில் வசித்துவந்தாள். அவளுடையது கடைசி மாடி, மிகப்பெரியது, எட்டிப்பார்த்து சேன்(Seine)நதியை வியக்கலாம். குளிர்காலத்தின் இரவு உணவுக்கும், கோடையில் மதிய உணவுக்கும் அங்கு சென்றதுண்டு. அவற்றைப் பாரீஸ் நகரத்திலிருந்த உயர்ரக உணவு விநியோக விடுதிகளிலிருந்து தருவிப்போம். பெரும்பாலும் அவை தரமானவை என்பது உறுதி, ஆனால் வயிறு நிறைந்ததில்லை.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









