பவளவிழா நாயகன் மாவை நித்தியானந்தன் கலை இலக்கியத்தில் மாவை நித்தியானந்தனின் வகிபாகம்! - முருகபூபதி -

- மாவை நித்தியானந்தன் -
- கலைஞரும் மெல்பன் பாரதி பள்ளியின் நிறுவனரும், சமூகச்செயற்பாட்டாளரும் தன்னார்வத் தொண்டருமான மாவை நித்தியானந்தனின் பவளவிழா நேற்றைய தினம் 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மெல்பன் ஸ்பிரிங்வேல் மாநகர மண்டபத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவை மெல்பன் பாரதி பள்ளி பெற்றோர் – ஆசிரியர்கள் இணைந்து கொண்டாடினர். மாவை நித்தியின் வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் ஆவணப்படத் தொகுப்பு காட்சியும் காண்பிக்கப்பட்டது. அத்துடன் மாவை நித்தியின் சிறப்பியல்புகளை கூறும் நித்தியம் சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது. இம்மலரில் இடம்பெற்ற எழுத்தாளர் முருகபூபதியின் ஆக்கம். -
மனிதர்களின் கலை, இலக்கிய ஆர்வம் இயல்பிலேயே ஊற்றெடுப்பது. அந்த ஊற்றை நேர்த்தியாக சமூகத்திற்கு பயன்படும் விதத்தில் நதியாக்குவதில்தான் அவர்களின் ஆளுமைப்பண்பு வெளிப்படுகிறது. அத்தகைய வற்றாத ஓடும் நதிதான் எங்கள் மாவை நித்தியானந்தன். தனது ஆரம்ப பாடசாலைக் காலத்திலிருந்தும் யாழ். தெல்லிப்பழை யூனியன் கல்லூரி வாழ்க்கை முதல், கொழும்பு கட்டுப்பெத்தை பல்கலைக்கழக வளாகத்தின் தொழில் சார் பயிற்சிக் காலத்திலும் தன்னிடம் சுரந்துகொண்டிருந்த கலை, இலக்கிய தாகத்தை சமூகத்தை நோக்கி பயன்படுத்தியவர்தான் எழுத்தாளரும் நாடகக் கலைஞரும், சமூகச் செயற்பாட்டாளருமான மாவை நித்தியானந்தன். இவரை கடந்த ஐம்பது வருடகாலமாக அவதானித்து வருகின்றேன். 1970 காலப்பகுதியில் மாவை நித்தி, மேற்சொன்ன கட்டுப்பெத்தை பல்கலைக் கழகத்தில் மேற்கல்வியை தொடர்ந்து கொண்டிருந்தவேளையில் அங்கு நீண்ட காலம் இயங்கி வந்த தமிழ்ச்சங்கம் வருடாந்தம் நடத்தி வந்த கலைவிழாவில்தான் முதல் முதலில் சந்தித்தேன். அந்தச்சங்கம் நுட்பம் என்ற சிறந்த கலை, இலக்கிய, விஞ்ஞான ஆய்வு மலரையும் வெளியிட்டு வந்தது. அதிலும் மாவை நித்தியின் ஆக்கங்கள் வெளிவந்தன.
நித்தி, தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றிய ஈழத்தின் மூத்த கவிஞர் அம்பி என பரவலாக அறியப்பட்ட அம்பிகைபாகரின் மாணாக்கர். பாட நேரங்களையடுத்து வரும் இடைவேளையின்போது, தான் எழுதிய கவிதைகளை அம்பி மாஸ்டருக்கு காண்பித்து, அவரது செம்மைப்படுத்தலின் பின்னர் இதழ்களுக்கு அனுப்பினார். அதனால், அம்பி மாஸ்டரின் அபிமானத்திற்குரிய மாணவராகவும் பின்னாளில் நல்ல நண்பராகவும் திகழ்ந்தார்.


கிராமத்தின் மிக முதிர்ந்த வயதுடைய பெரியவர்களைக் காணும்போதெல்லாம் அவர்களுடைய அன்றைய உணவுப் பழக்கவழக்கங்களும் உளவடுவற்ற வாழ்வியல் அம்சங்களும் ஆரோக்கியமான வாழ்க்கையைக் கொடுத்திருக்கின்றன என்று எண்ணத்தோன்றுகிறது. அது உண்மைதான் போலும். ஒரு தலைமுறை, ஓடித் திரிந்து வளர்கின்ற பருவத்தில் யுத்தமும் சேர்ந்து வளர்ந்ததால் ஆரோக்கியக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. இச்சந்தர்ப்பங்களில் தவிர்க்க முடியாமல் குந்தவையின் கதைகள் நினைவுக்கு வருகின்றன. 
காலையில் குளித்து விட்டு , நேற்றைய , மிஞ்சிய கோழிக்கறி இருந்தது . அதை அவனுக்கு பாணுடன் சாப்பிடக் கொடுத்து விட்டு , முட்டையையைப் பொரித்து சன்விச் செய்து சாப்பிடுகிறார்கள் . பூமலருக்கு சுமி பிறந்ததிலிருந்து நீரழிவு ஏற்பட்டிருக்கிறது . மாத்திரைகளை எடுப்பவள் . " கிழமையிலொரு தடவை இன்சுலின் வேறு ஏற்றிக் கொள்கிறேன் " என்கிறாள் . குட்டித் தங்கச்சியாக இருந்தவளை காலம் எப்படி மாற்றி விட்டிருக்கிறது . உதயனுக்கும் ( அண்ணர் ) , பானுவுக்கும் ( அக்கா ) ..கூட .. நீரழிவு இருக்கிறது . அவனுக்கும் , குணவதிக்கு... இன்னம் தொந்தரவு கொடுக்கவில்லை . வழக்கம் போல கராஜிலிருந்து காரை சிரமப்பட்டு எடுக்க . இட பக்கக் கண்ணாடியை மடக்கி விடுகிறான் . சுலபமாக வெளியே வர பூமலர் வீட்டைப் பூட்டி விட்டு வருகிறாள் . ஒரு தடவை, வீதியில் குறுகலான லேன் என்ற உணர்வில் கரைக்கு இறக்கி விட . தடபுடல் என ...சத்தம் , அவனையும் குலுக்க . ஏன் ஓரங்களை ... சீர்படுத்தாது விடுகிறார்கள் " என ஒரேயடியாய் பற்றிக் கொண்டு வருகிறது . பார்த்து ஓடு " என்கிறாள் பூமலர் . ரொரொன்ரோவில் இந்த குலுக்கல் இராது . ' வரி குறைப்பு ' .... என்றால் அதற்கேற்ப கஸ்டமும் கொடுக்கிறது . போக்குவரத்து அமைச்சராக ஒரு தேடல் உள்ள பொறியிலாளர் ...தெரிவாக வேண்டும் . இல்லாதது சீரழிவாகவே கிடக்கிறது . 
பழம் பெருமைகளைச் சொல்லி மார்தட்டிக் கொள்வதில் யாழ்ப்பாணத்தவராகிய நாம் வல்லுனர்கள். லெமூரியாக் கண்டத்தில் தொடங்கி, சிந்துவெளியூடாக உலகின் நாகரிகம் வளர்ந்த இடங்களை அலசி எல்லாமே எங்களுடையதுதான் என்று பெருமை பேசிக்கொள்ளும் பலர் நம் மத்தியில் உள்ளனர். பேச்சுப் பல்லக்கு தம்பி கால்நடை என்ற பழமொழிதான் ஞாபகத்துக்கு வருகின்றது. உள்ளூரில் எங்களுடைய வரலாறு, நம் முன்னோருடைய வாழ்வியல், பண்பாடு போன்றவற்றை வெளிப்படுத்தும் சின்னங்களைப் பார்க்கவேண்டும் என்று நமது பிள்ளைகள் கேட்டால், அவர்களுக்குக் காட்டுவதற்கு யாழ்ப்பாணத்தில் நாம் எவற்றை விட்டுவைக்கப் போகிறோம் என்று முதலில் சிந்திக்க வேண்டும். 




எழுத்தாளர் , கல்விமான், மார்க்சியவாதி என அறியப்பட்ட லெனின் மதிவானம் மலையகத்தின் முக்கிய ஆளுமைகளில் ஒருவர். அவரின் மறைவுச் செய்தி அதிர்ச்சி தருமொன்று. 2013, 2014 ஆண்டுகளில் பதிவுளில் இவரது கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகள் பற்றிய தகவல்களைப் பதிவுகளின் நிகழ்வுகள் பகுதிக்கு அனுப்பிக்கொண்டிருந்தார். அதன் பின்னர் அவரைப் பெரிதும் பொதுவெளியில் காணவில்லை. ஏன் ஒதுங்கிப்போனார் என்பதை இப்பொழுதுதான் அறிய முடிகின்றது. உடல் நிலை சீரற்றுப் போன காரணத்தினாலேயே அவர் ஒதுங்கி விட்டார் என்பதை வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது இழப்பால் பெருந்துயரில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தவர், உறவினர்கள், நண்பர்கள் , கலை, இலக்கிய ஆர்வலர்கள் அனைவர்தம் துயரில் பதிவுகளும் இணைந்து கொள்கின்றது. 
இலக்கியமும். இலக்கணமும் இங்கிதமாய் கொண்டமொழி எங்கள் இன்தமிழ் மொழி.அந்த மொழி இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழைப் பெற்று நிற்கின்ற மொழி.வரலாறு படைத்த மொழி.பேச்சு மொழியா யும் எழுத்து மொழியாயும் ஏற்றமுற்று இருக்கும் மொழி.சங்கம் வளர்த்த மொழி. சன்மார்க்கம் சொன்ன மொழி.அறத்தை உரைத்த மொழி அன்பைப் பொழிந்த மொழி.என்றுமே இளமையாய் இருக்கும் மொழி. அதுதான் தீந்தமிழ் மொழி. சிறப்பான மொழி. மண்ணில் நல்லவண்ணம் வாழவைக்கும் மொழி.அந்த மொழி பட்டி தொட்டியெங்கும் பரவிட வைப்பதற்கு வாய்த்த ஒரு ஊடகம்தான் வெள்ளித்திரை, வெள்ளி த்திரையில் எங்கள் தமிழ் எழிலுடன் கொஞ்சி உலாவந்த பாங்கினை பார்ப்பது பரவசமாய் அமையும் அல்லவா ? பார்ப்போமா ! நீங்கள் ஆயத்தமா ? வாருங்கள் பார்ப்போம் ! திரையில் மலர்ந்த தீந்தமிழை !



இன்றைய ஈழத்து இலக்கியப் பரப்பில் ஒரு நடமாடும் வரலாற்று ஆவணமாகத் திகழ்பவர் எழுத்தாளர் முருகபூபதி. சொல்லப் போனால் கிட்டத்தட்ட ஐம்பது வருட கால ஈழத்து இலக்கிய மரபின் ஒரே சாட்சியமாக முருகபூபதி விளங்குகின்றார் என்றால் மிகையில்லை. வாராந்தம் அவர் பகிரும் இலக்கிய மடல்கள், சக எழுத்தாளர்கள், அரசியல் கொண்டோர் குறித்து அவரின் பகிர்வுகள் எல்லாமே முன் சொன்னதை நியாயப்படுத்தும். முருகபூபதியின் படைப்புகளும் ஒரு குறுகிய வட்டத்தோடு நின்று விடவில்லை. அதனால்தான் அவை கட்டுரை, நாவல், பயண இலக்கியம், சிறுவர் இலக்கியம், புனைவு சாரா இலக்கியம் என்பவற்றோடு, சிறுகதைகளாகவும் பன்முகப்பட்டு நிற்கின்றன. தமிழக, ஈழத்து இலக்கியவாதிகளின் நட்பையும், பரந்துபட்ட வாசகர் வட்டத்தையும் சம்பாதித்து வைத்திருக்கும் முருகபூபதி, இரண்டு தடவைகள் இலங்கையின் தேசிய சாகித்திய விருது பெற்ற பெருமையையும் தனதாக்கிக் கொண்டவர்.
சென்ற ஞாயிற்றுக்கிழமை 6-11-2022 அன்று ரொறன்ரோவில் உள்ள சீனா கலாச்சார மண்டபத்தில் கனடா தமிழ் மிரர் பத்திரிகையின் விருது விழா அரங்கம் நிறைந்த விழாவாகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்நாட்டில் இருந்து வந்த சிறந்த பேச்சாளரான திரு. கலாநிதி கலியமூர்த்தி அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். கோவிட் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாகப் பிற்போடப் பட்டிருந்த இந்தவிழா இம்முறை மிகச் சிறப்பாக நடந்தேறியது.
வவுனியா மகாவித்தியாலயத்தில் என் பால்ய பருவம் கழிந்தபோது ,ஏழாம் வகுப்பில் என்னுடன் படித்த மாணவர்களில் என்னுடன் நன்கு பழகியவர்களை முகநூல் மீண்டும் என்னுடன் இணைத்துள்ளது. விக்கி (எழுத்தாளர் ஶ்ரீராம் விக்னேஸ்) , திருநாவுக்கரசன் (Thirunavukkarasan Sittampalam) , சண்முகராஜா இவர்களெல்லாரும் இன்று என்னுடன் முகநூலிலுள்ளார்கள். இந்நிலையில் நேற்று திருநாவுக்கரசன் பதிந்திருந்த அஞ்சலிச் செய்தியொன்று என் கவனத்தைக் கவர்ந்தது. அது ஏழாம் வகுப்பில் எம்முடன் வவுனியா மகா வித்தியாலயத்தில் படித்த நண்பர் மெளலியின் மறைவைப் பற்றியது. மெளலீஸ்வரன் என்பது முழுப்பெயராக இருக்க வேண்டுமென்று நினைக்கின்றேன். ஶ்ரீமுருகன் திரையரங்குக்கு அருகிலிருந்த வீதியில் இவரது இல்லமிருந்தது நினைவுக்கு வருகின்றது. சில சமயங்களில் இவருடன் ஶ்ரீ மூருகன் திரையரங்கில் பின் பகுதியில் எரிந்த நிலையில் எறியப்பட்டிருக்கும் திரைப்பட ஃபிலிம் சுருளின் துண்டுகளைத் தேடித்திரிந்ததும் நினைவுக்கு வருகின்றது.
‘காற்று மரங்களை அசைக்கின்றது’ பிரதி 17 நாவல் பிரதிகளை தன் விமர்சனப் சுழற்சிக்குள் அசைத்துக்காட்டியிருக்கிறது. தேவகாந்தன் பத்து நாவல்களை வெளிக்கொணர்ந்திருப்பவர். 'யுத்தத்தின் முதலாம் அதிகாரம்', 'கனவுச்சிறை', 'கலிங்கு' முதலான நாவல்கள் அவரது நாவல் ஆக்கும் ஆற்றலை பறைசாற்றுகின்றன. அவரது தேடல் அவரது புனைவுத்திறனை ஆழ அகலப்படுத்தியிருக்கிறது. எனவே தான் அவரே நேர்காணலொன்றில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “பேச்செல்லாம் நச்சுப் பாவை தொடர் துப்பறியும் நவீனமாக இருந்த நிலையில் மு.வரதராசன், நா.பார்த்தசாரதி, கல்கி, அகிலன் போன்றோரது வாசிப்புடன் எழுத வந்தவன் நான். எனது எழுத்தும் போக்கும், நோக்கமும் அப்போது அப்படித்தான் இருந்திருக்கும். இருந்திருக்க முடியும். ஆனால் நான் மாறினேன். நீண்டதும் தீவிர மானதுமான வாசிப்புகளின் மூலம் மாறினேன். புதுமைப்பித்தனும், ஜெயகாந்தனும், கு.அழகிரிசாமியும், ஜானகிராமனும் அறிமுகமாகிறபோது அந்த மாற்றம் தன்னை என்னில் ஊன்றத் தொடங்குகிறது. இதன் அர்த்தம் வாசிப்பை என் தேர்விலிருந்தல்ல, எனக்குள்ள வாய்ப்பிலிருந்தே நான் அடைந்து கொண்டிருந்தேன் என்பதே. பின்னர்தான் தெரிந்தது வாசக உலகம் பல தளங்களை தனித்தனிக் கோளங்களாய்க் கொண்டிருக்கிறதென்பது. அப்போது என் குறி வெகுஜன வாசகப் பரப்பிலிருந்து தீவிர வாசகப் பரப்பாக மாறுகிறது. அதுவே எனது படைப்புகளின் இலக்காகவும் பின்னர் பரிமாணம் பெறுகிறது. அப்போதும் விமர்சன உலக அக்கறை என்னில் இருக்கவே செய்தது. ஏனெனில் அந்த விமர்சனங்களிலிருந்துதான் நான் மாறவேண்டுமென்ற அவசியத்தை உணர்ந்தேன். என் வளர்ச்சியின் படிகள் இவை. இவையே எப்படைப்பாளியின் படிகளாகவும் இருக்கமுடியும். இல்லை, எனக்கு 'தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதிசூடி' என்பதுபோல் எடுத்த எடுப்பிலேயே தீவிரமாய் எழுத வந்ததென யாராவது கூறின் அவரை நாம் புரிந்துகொள்ளலாம்”.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









