வாரிசு! - டீன் கபூர் -

மாலையின் காற்று தழுவியதுபோல மனதில் ஏதோ ஆழமான வெறுமை. கிராமத்தின் எல்லைக்கே நெருங்கிய அவனது வீட்டின் ஓரத்தில் காற்று ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் அந்த காற்று அவன் மனதை எட்டவில்லை. ஒவ்வொரு நாளும் ஏதோவொரு வழியில் வாழ்வின் சுவை குறைந்தது போலவே தோன்றியது. வளவின் மதிலோரத்து மரங்கள் கூட இப்போது பசுமையற்றவையாகத் தோன்றின.
வயதில் அறுபது தாண்டிய தென்றலுக்கு வாரிசு இல்லை. பிறந்ததிலிருந்தே தனிமையான வாழ்க்கை வாழ்ந்து வந்தவன். எப்போதும் வாழ்வின் பாதையைப் பற்றி பெரிதாக யோசிக்காதவன். இப்பொழுது தான் காலம் நெருங்கும்போது, அவனுக்கு ஒரு உணர்வை மட்டும் அடித்துக் கொண்டது: இங்கே அவன் இல்லாதிருந்தால், ஏதாவது மாறுமா?
தோட்டத்தில் இருந்த வெள்ளைத்தாமரைப் பூவுகளை பார்த்து தென்றல் ஓரளவு சாந்தமாக இருந்தான். அவனை யாரும் வழிமொழிந்ததாக இல்லை. அவன் தந்தை, தாயின் நினைவுகள் எல்லாம் மங்கியதாய் ஆகிவிட்டன. "நான் என் வீட்டின் வாரிசு அல்ல, நானாகவே இங்கே இருக்கிறேன்," என்று அவன் சும்மா சிந்தித்தான்.
குழலிசையின் ஒலியை போலவே, தென்றலின் நினைவுகளில் பழைய வார்த்தைகள் சிதறியவையாக இருந்தன. அவருடைய வாழ்க்கை முழுவதும் கடந்து வந்த பாதைத் திசைமை இல்லாததாயிருந்தது. ஒரே நம்பிக்கை இருந்தது: காற்று நம்மை அடைவதற்குள் எதுவும் அப்படியே இருக்கும்.

இமயம் தொட்டாலும்
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குமுளமுனை என்பது அண்ணாவியார் நாகலிங்கம் நெல்லிநாதன் பிறந்து வளர்ந்து வாழ்ந்துவரும் ஊராகும். இக்கிராமம் வன்னியின் குறுநில மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்ட கிராமமாகும். சோழராட்சிக்காலத்தில் திருகோணமலையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த வளந்தொட்டுக் குளம் பெருக்கிய மன்னான குளக்கோட்ட மன்னனின் ஆட்சிக்கும் இக்கிராமம் உட்பட்டிருந்தது. தண்ணிமுறிப்புக் குளம் இவன் காலத்தில் கட்டப்பட்டது என்பது வரலாற்றாய்வாளர்களின் துணிபு. இக்கிராமத்தில் ‘வன்னியன் வளவு’ ‘வன்னியன் கிணறு’ ‘யானை கட்டிய புளி’ என்னபன வன்னியர் இக்கிராமத்தில் குடியேறி வாழ்ந்து வந்துள்ளனர் என்பதற்கான சான்றுகளாகக் காணப்படுகின்றன. பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்துவரும் இக்கிராமத்தவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தை கோலாட்டம், கும்மி, கூத்துப் போன்ற கலைகளில் செலவு செய்துள்ளனர். வெளியிடங்களிலிருந்து அண்ணாவிமாரை அழைத்துவந்து கூத்துக்களைப் பழகி மேடையேற்றி ஆடி வருவது வழமையாக இருந்துவந்துள்ளது.

மிஸஸ் மல்லார்டுக்கு (Malard ) இதய சிக்கலால் பாதிப்புள்ளது என்பதைப் பார்த்து, அவரது கணவரின் இறப்பின் செய்தியை மிக மெதுவாகச் சொல்ல மிகுந்த கவனம் செலுத்தப்பட்டது.






சுயமாக நடமாடக்கூடியதாக இருக்கும்வரை, வருடத்துக்கொரு தடவை எங்காவது ஒரு பயணம் செல்லவேண்டும் என்பது என் முதுமைக்கால இலக்குகளில் ஒன்றாகும். பயணங்களுக்கான ஆயத்தங்களையும், பயணங்களில் இருக்கும்போது நாளாந்தம் செய்யக்கூடியவற்றுக்கான பட்டியல்களையும் பிள்ளைகள் செய்துதந்தாலும்கூட, அவர்களில் ஒருவருடன் பயணிக்கும்போதே பயணங்கள் சிறப்புப் பெறுகின்றன. அதற்கு ஒத்த ரசனையுள்ளவர்கள் பயணிக்கும்போது மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது என்பதும், பயணத்தின்போது வரும் பிரச்சினைகளை பிள்ளைகள் தீர்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையும் காரணங்கள் எனலாம். அவ்வகையில், இவ்வருடப் பயணத்தைப் பற்றிச் சிந்தித்தபோது, சின்ன மகளின் அடுத்த இரண்டு வருடக் கற்கையின்போது, சுற்றுலாவுக்கான நேரம் அவவுக்கு கிடைக்காது என்பதால், அவவுடன்தான் இம்முறை பயணிக்கவேண்டுமென நான் விரும்பினேன். அந்த விருப்பத்தைச் சாத்தியமாக்குவதானால் பயணம் ஒரு கிழமைக்குட்பட்ட செப்ரெம்பர் மாதப் பயணமாக இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. அதற்கு San Francisco பொருத்தமாக ஓரிடமாக இருக்குமென மூத்த மகள் ஆலோசனை கூறினா.

தமிழின் முக்கியமான கதைசொல்லிகளில் ஒருவரான தேவகாந்தன் தனித்துவமான மொழியாலும், தேர்வுசெய்யும் வித்தியாசமான களங்களாலும், தனது புனைவுகளூடாக சம்பவங்களையும் கருத்தியலையும் ஊடுநூலும் பாவுநூலுமாய்க் கலந்துபின்னும் ஆற்றலாலும் அறியப்பட்டவர். காவியங்கள் மீதான அவரது தாடனத்தையும் அவற்றை ஈடுபாட்டோடு கற்றுத் தெளிவதற்கான அவரது முனைப்புகளையும் அவருடனான உரையாடல்களின் வழியே அறிந்திருக்கின்றேன். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக எழுதிவரும் தேவகாந்தன், மிகுந்த தேடலுடன் தொடர்ச்சியாக தத்துவங்களையும், கோட்பாடுகளையும், அபுனைவு நூல்களையும் தொடர்ந்து தேடித்தேடி வாசித்தும் வருபவர். 



அண்மையில் ரொறன்ரோவில் மார்க்கம் விளையாட்டரங்கில் கண்காட்சி ஒன்று இடம் பெற்றிருந்தது. கனடாவில் கோடைகாலம் முடிந்து இலையுதிர் காலம் ஆரம்பமாகி இருக்கின்றது. அத்துடன் குளிரும் வந்துவிட்டது. மரங்கள் எல்லாம் நிறம் மாறி இலைகளை உதிர்க்கத் தொடங்கி விட்டன. இலை உதிர்க்குமுன் பச்சை, மஞ்சள், சிகப்பு, ஒரேன்ச் என்று பலவிதமாக மரங்களின் இலைகள் மாறி இருப்பதைப் பார்ப்பது மிக அழகாக இருக்கும். இயற்கையை ரசிப்பவர்களுக்கு இது ஒரு மாறுபட்ட காட்சியாகத் தெரியும். இங்கே உள்ள ஊசியிலை மரங்கள் பனிக்காலத்தில் இலை உதிர்ப்பதில்லை, அவை மாற்றமின்றி அப்படியே இருக்கும்.



இலண்டனின் இலக்கிய மேடைகளில் ஆழ்ந்த தமிழ்ப் புலமையோடும் ஆற்றொழுக்கான நடையோடும் பேசவல்லவராக வழக்கறிஞர் செல்லத்தம்பி சிறீக்கந்தராசா அவர்களை நான் பார்த்திருக்கிறேன். ‘ஆங்கிலம் பிறந்த கதையும் வளர்ந்த கதையும்’ என்ற நூல் அவரது ஆழ்ந்த வாசிப்பையும் பரந்த தேடலையும் கொண்ட நூலாகும். ‘ஆற்றல் மிகுந்த மூளையின் தூண்டுதலாலும் வேகமான வாசிப்பாலும்தான் இவரது பேச்சுகள் இத்துணை நுட்பமாக அமைகின்றனவோ?‘ என்று எனக்கு வியப்புண்டு.




பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









