கனவுகள்
யாவும்
மெய்ப்படப் போகிறதென்ற
மீய்ந்த
கொஞ்சம்
நம்பிக்கைகள்
கொடுத்திருப்பது தான்
இவ் வாய்ப்பு.
குழுமிக் கலைந்தோம்
கொள்கை இல்லையென்றென
வஞ்சித்த கூட்டத்தின் முகத்தில்
பூசிய
கரியெனக் கொள்ளலாம்
மனிதம்
துளிர்த்ததை.
மலையக துயரங்கள்
மாறுமென்று
இணுக்கிக்கொண்டே
இருக்கிறது
இலைகளை
எஞ்சிய வாழ்க்கையில்
ஏதாவது
நடக்குமென்று.
புலம் பெயர்ந்த
அவலம்
தாயகக்
கதைகளைக்
கதைத்தே
வளர்க்கிறது
ஏதாவதொரு
தலைமுறையிலாவது
விட்ட
உறவைத் தொட்டு
தொடரலாமென்று.
காடும் மலையும்
காணும்
செடி கொடி
யாவும்
பூத்துக் காய்த்து
புதியவைகளை
வளர்க்கிறது
உலக மக்களை
உற்சாகமாக்கும்
நாளுக்கு
இயல்பெனத் தவித்து.
எரிந்து
இல்லாமல் போன
நூலகத்தின்
தப்பிய
மூலதனம்
பளுப்பேறிப் போனதென
பலர்
நினைத்தாலும்
இளைஞர்களுக்கு
இனித்திருக்கிறது
யாவரும்
வியக்க.
துயரங்களுக்குள்
துளிர்விட்ட
செம்மலர்
பேதமற்ற வாசனையில்
பெரு மாற்றம்
நிகழ்த்துமென்று
பேராசையில்
இருக்கிறது
உயிர் இருப்பதால்
வாழுகிறோமென்ற
இனக் கூட்டம்.
நேச நாடுகள்
கரம் பிடித்துதான்
நீந்த வேண்டியதாக
உள்ளது.
தத்தளிக்கும்
இவ்வேளையில்
கரையேறிவிடும்
இமாலயக் கனவில்
இலங்கை
மாற்றுப்பாதையில்
யாவரும்
மகிழ்வாக வாழ்ந்திட.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.