சிற்றிதழ் விருது : கனவு என்ற சிற்றிதழ் - சுப்ரபாரதிமணியன் -
இரா மோகன் அவர்கள் நினைவில் வழங்கப்படுகிற இந்த விருது கனவு என்ற சிற்றிதழ் 39 ஆண்டுகளாக வெளிவருவதை அங்கீகரித்து தரப்படுகிறது. இந்த ஆண்டில் இதே போல் இந்த விருது நால்வர் இதழ் மூலமாக பெறப்பட்டது. கி ராஜநாராயணன் அவர்களின் கரிசல் விருது போன்ற விருதுகள் கனவு இதழுக்குக் கிடைத்திருப்பது அதன் செயல்பாட்டை அங்கீகரிப்பது போல என்று நினைக்கிறேன். அந்த வழியில் மதுரை அமரன் மோகன் அவர்களுடைய துணைவியார் நிர்மலாமோகன் அவர்கள் தொடர்ந்து அமரர் மோகன் பெயரில் விருதுகள் தருவது எழுத்தாளர்களுக்கு கௌரவம் தரக்கூடிய விஷயமாக இருக்கிறது
சிறு பத்திரிகைகள் என்றால் குறைந்த எண்ணிக்கையில் அச்சிடப்படுவது என்று பொது புத்தியில் ஒரு கருத்து இருக்கிறது இன்றைக்கு நிலைமை அப்படித்தான். ஆனால் எப்போதும் அந்த நிலைமை இருந்ததில்லை. சுதேசமித்திரன் 1800 பிரதிகள் தினசரி விற்ற காலத்தில் பாரதியாரின் இந்தியா 2000 பிரதிகள் பிரதிகளுக்கு மேல் விற்றதாக தெரிகிறது. பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியா பத்திரிகையின் பிரதிகளை ஒரு முறை கைப்பற்றிய போது 2000 பிரதிகள் கைப்பற்றியதாக தகவல் சொல்கின்றனர் ஆகவே சிர்றிதழ் என்பது அச்சிடப்படும் பிரதிகளின் எண்ணிக்கையிலானது என்று சொல்ல முடியாதபடி கைப்பற்றப்பட்ட இந்தியா இதழ் பத்திரிக்கையில் எண்ணிக்கை இருந்திருக்கிறது என்பது எண்ணிக்கையில் அல்லாமல் வேறு காரணங்களும் உள்ளன .
அந்தந்த காலகட்டத்தின் பிரதிபலிப்பாக, தேவையாக சிறு பத்திரிகைகள் இருந்து வருகின்றன .சிறிய பொந்தியில் வைக்கப்படும் தீப்பொறி பெரிய தீயாக மாறுவதைப் போல எண்ணிகையில் குறைவாக அச்சிடப்பட்டாலும் அது தரும் பண்பாட்டு உரிமை, தாக்கம் பெரிதாக தான் இருக்கிறது. தமிழில் மணிக்கொடி எழுத்து கசட்தபற, தாமரை, சாந்தி போன்ற இதழ்கள் மாதிரிகளாக நமக்கு உடனே தென்படுகின்றன. இந்த சிற்றிதழல்கள் சிறுபத்திரிக்கைகள் என்ற வார்த்தை பிரயோகம் பிரெஞ்ச் தாக்கத்தின் மூலமாக வந்தது .புதிய இலக்கியம் நாடகம் ஆகியவற்றின் முன்னோடியாக பிரெஞ்சு மொழி இருந்தது அப்படித்தான் லிட்டில் தியேட்டர்ஸ் இன்று வழங்கப்பட்ட முகம் லிட்டில் மேகசின்ஸ் வெளிவர காரணமாக இருக்கின்றது என்கிறார்கள்.