சமூக, அரசியற் செயற்பாட்டாளர் சாந்தி சச்சிதானந்தம் நினைவாக.... - வ.ந.கிரிதரன் -
சமூக,அரசியல், மனித உரிமை மற்றும் பெண்ணியச் செயற்பாட்டாளரான சாந்தி சச்சிதானந்தம் அவர்களின் நினைவு தினம் ஆகஸ்ட் 27. அவரது பிறந்த தினமும் ஆகஸ்ட் 14. மொறட்டுவைப் பல்கலைககழகத்தில் கட்டடக்கலைத் துறை பட்டதாரி. விழுது என்னும் அரச சார்பற்ற நிறுவனத்தின் ஸ்தாபகர். 'இருக்கிறம்' என்னும் மாதச்சஞ்சிகையை அந்நிறுவன்ம் மூலம் வெளியிட்டவர். ஆங்கிலம் , தமிழ் மொழிகளில் இவரது சமூக, அரசியல் மற்றும் பெண்ணியம் சார்ந்த கட்டுரைகள் பல வெளியாகியுள்ளன.
'பெண்களின் சுவடுகளில்' (தமிழியல் வெளியீடு) , 'வறுமையின் பிரபுக்கள்' (மன்று வெளியீடு) , 'தடைகளைத் தாண்டி' (விழுது வெளியீடு) மற்றும் 'சரிநிகர் சமானமாக' (விழுது வெளியீடு) என்னும் நூல்களை எழுதியவர். இவரது தந்தையாரான வல்லிபுரம் சச்சிதானந்தம் வழக்கறிஞர். லங்கா சமசமாஜக் கட்சி சார்பில் 1970 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் நல்லூரில் போட்டியிட்டவர். இவரது கணவரான அமரர் மனோரஞ்சன் ராஜசிங்கம் அவர்களும் ஒரு சமூக, அரசியற் செயற்பாட்டாளராக இயங்கியவரே.