(ரஷ்ய இலக்கிய சிருஷ்டி, பெருங்கவி அலெக்சாண்டர் புஷ்கின் பிறந்த ஜூன் 06, 1799 இந்நாளையே “ரஷ்ய மொழி தினம்" என ஒவ்வொரு ஆண்டும் கிழக்கு ஐரோப்பாவிலும் ரஷ்யாவிலும் கொண்டாடப்படுகிறது)
ஆங்கில இலக்கிய மேதை ஷேக்ஸ்பியருக்கு ஒப்பானவராக கருதப்படுவரே ரஷ்ய இலக்கிய சிருஷ்டி அலெக்சாண்டர் புஷ்கின். வையகம் புகழ் ரஷ்ய இலக்கிய சிருஷ்டி கர்த்தா அலெக்சாண்டர் புஷ்கின் பிறந்த ஜூன் 06, 1799 இந்நாளையே “ரஷ்ய மொழி தினம்" என ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 06 ஆம் திகதி கிழக்கு ஐரோப்பாவிலும், ரஷ்யாவிலும் கொண்டாடப்படுகிறது.
ரஷ்யக் கவிஞரும், காதல் கவிதைகள் யுகத்தின் சிறந்த படைப்பாளியுமான அலெக்ஸாண்டர் செர்ஜியேவிச் புஷ்கின் (Alexander Sergeyevich Pushkin) ரஷ்ய மொழியில் : Алекса́ндр Серге́евич Пу́шкин பிறந்த தினம் ஜீன் 6 ஆகும். ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் 1799 இல் பிறந்தவர். இளம் வயதிலேயே தனது நகர நூலகத்தில் பல புத்தகங்களைப் படித்தார். இந்த சூழல் இலக்கிய தாகத்தை ஊற்றெடுக்க வைத்தது.
பின்னர் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் உள்ள பள்ளியில் பயின்றார். படிக்கும்போதே 15 வயதில் தனது முதல் கவிதையை எழுதி வெளியிட்டார்.
ஜூன் 06 - ரஷ்ய மொழி தினம் :
விரைவிலேயே இலக்கிய உலகில் அங்கீகாரம் பெற்றார். ரஷ்ய முன்னணி கவிஞரும், இலக்கிய சிருஷ்டியுமான அலெக்சாண்டர் புஷ்கின் பிறந்த ஜீன் ஆறாம் நாளை ரஷ்ய மொழி தினமாக ஒவ்வொரு வருடமும் அனுசரிக்கப்படுகிறது.
வையகம் புகழ் ரஷ்ய இலக்கிய சிருஷ்டி கர்த்தா அலெக்சாண்டர் புஷ்கின் ஜூன் 06, 1799 இல் பிறந்த இந்நாளையே “ரஷ்ய மொழி தினம்" என ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 06 ஆம் திகதி கிழக்கு ஐரோப்பாவிலும், ரஷ்யாவிலும் கொண்டாடப்படுகிறது.
அலெக்சாண்டர் புஷ்கின் தனது கவிதைகளிலும் நாடகங்களிலும் உரைநடையைக் கையாள்வதில் முன்னோடியாகவிருந்தார். அத்துடன் நவீன ரஷ்ய இலக்கியத்தில் ஒரு தனித்துவமான கதைசொல்லும் பாங்கையும் உருவாக்கியிருந்தார். இவை முன்னெப்போதுமில்லாத அளவில் பிற்கால ரஷ்ய எழுத்தாளர்களிடம் மிகுந்த தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தன.
சர்வதேச இலக்கிய முன்னோடி :
சர்வதேச இலக்கிய வானில் இவரது செல்வாக்கு என்றும் மேலோங்கி பறந்தது. கவிதை, நாடகங்கள், உரைநடைகளைக் கையாள்வதில் முன்னோடியாகவும் கதைசொல்லும் பாணியில் புஷ்கின் தனித்துவம் வாய்ந்தவராகவும் திகழ்ந்தார்.
அத்துடன் ரஷ்ய இசை அமைப்பாளர்களுக்கு இவரது கவிதைகள் உந்து சக்தியாக அமைந்தன. இவரது தி ஸ்டோன் கெஸ்ட், மொஸார்ட் அண்ட் ஸலியெரி ஆகிய நாடகங்கள் புகழ்பெற்றவை. இவரது எழுத்தில் நிகோலாய் கராம்சின், பைரன் பிரபு ஆகியோரது தாக்கங்கள் காணப்பட்டன. கொண்டோர் ஃபியோடார் டாஸ்டோவ்ஸ்கி, விளாடிமிர் நபோகோவ், ஹென்றி ஜேம்ஸ் உள்ளிட்டோர் இவரது தாக்கத்தைப் பிரதிபலித்த பிரபல படைப்பாளிகள்.
புஷ்கின் எழுதிய நாவலான ‘யூஜின் ஆனிஜின்’, ரஷ்ய வாழ்க்கையின் கலைக்களஞ்சியம் எனப்படுகிறது. நெஞ்சுரம் கொண்ட புஷ்கின் ‘போரிஸ் குட்னவ்’ என்ற தனது மிகவும் பிரபலமான நாடகத்தை எழுதினார். 1820-ல் ரஸ்லன் அண்ட் லுட்மிலா என்ற தனது முதல் நீண்ட கவிதையை வெளியிட்டார். குறுகிய காலமே வாழ்ந்த இவர், உரைநடை கவிதை, கவிதை, நாவல், சிறுகதை, நாடகம், விமர்சனக் கட்டுரைகள், கடிதங்கள் என இலக்கியத்தின் அனைத்து களங்களிலும் முத்திரை பதித்தார்.
புஷ்கின் சமூக சீர்திருத்தங்களில் இவரது கவனம் எனரறும் இருந்தது. தீவிர இலக்கியவாதிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். ஜார்அரசின் கோபத்துக்கு ஆளானதால், தலைநகரைவிட்டு வெளியேறினார். காகசஸ், கிரிமியா ஆகிய இடங்களுக்குச் சென்றார். 1823-ல் பல காதல் காவியங்களைப் படைத்தார். இவரது படைப்புகள் பிற்கால ரஷ்ய எழுத்தாளர்களிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தின என்பது உண்மையே.
சர்வதேச இலக்கிய வரலாற்றில் அலெக்சாண்டர் செர்ஜியேவிச் புஷ்கின் நிச்சயமாக மிகவும் பிரபலமான, மிகவும் போற்றப்பட்ட ரஷ்ய கவிஞரும், இலக்கிய சிருஷ்டியும் ஆவார். அத்துடன் அவர் ஒரு நாவலாசிரியர் மற்றும் நாடக ஆசிரியராகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
நவீன ரஷ்ய இலக்கிய தந்தை ;
இதனாலேயே நவீன ரஷ்ய இலக்கியத்தின் தந்தையாக புஷ்கின் கருதப்படுகிறார். புஷ்கின் எந்த சூழலிலும் சுயமரி யாதையை விடமால் உழைக்கும் மக்களுக்காக குரல் கொடுத்தார். இதனால் அன்றைய ரஷ்யா முழுவதும் ஜார் மன்னரின் உளவாளிகள் தீவிரமாக புஷ்கினை கண்காணித்து வந்ததால் படைப்புகளை வெளியிட முடியாத நிலை இருந்தது.
தலைசிறந்த கவிஞரும் உலகம்புகழ் நாடகாசிரியருமான கருதப்படும் அலெக்சாண்டர் செர்ஜியேவிச் புஷ்கின் நவீன ரஷ்ய இலக்கியத்தின் பிதாமகனாகவே என்றும் தென்படுகின்றார்.
அத்துடன் புஷ்கினின் மிகச்சிறந்த படைப்புக்களான இயூஜின் ஒனேகின், காப்டனின் மகள், போரிசு கோதுனோவ், ருசுலானும் லுத்மீலாவும் ஆகிய நூல்கள் வரலாற்றுப் புகழ்வாய்ந்தவை.
புஷ்கினின் படைப்புகள் ஆங்கிலத்தில் மட்டுமன்றி, பல்வேறு மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு பல நாடுகளில் வெளிவந்தன. நவீன ரஷ்ய இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்பட்ட புஷ்கின் 38 வயதில் (1837) மறைந்தார். இன்றும் ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் கடைசியாக புஷ்கின் வாழ்ந்த வீடு தற்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.