வினாக்கள் ?
உனது குற்றங்களை மன்னித்து
உன்னை ஏற்றுக் கொண்டவரை
குற்றம் சுமத்தி
தண்டிப்பது என்ன நியாயம் ?
யேசுகள் என்றும்
தண்டிக்கபடுவது ஏனோ ?
சிவன் பன்றிக்குட்டிகளுக்கு
தாய்பன்றியாகி பால் கொடுத்தது ,
இராவணன் தவவேடம் தாங்கி
சீதையை சிறை வைத்தது ,
அன்னை தெரேசா கருவுற்று
தாயாகாமல் இருக்கலாம்
கருணையுற்று அனைவருக்கும் அன்னை ஆனார் .
யேசுநாதர் மக்களுக்காக சிலுவை சுமந்தார் .
உறவுகள் ....துர்பிரயோகம் !
கருணை ?
அன்பு ?
சுயநலம் . துரோகம் ...ஏன் , ஏன் ...?
மழழை
கல்லறையில் எழுத வாசகம்
தேடிக் கொண்டிருந்தவனுக்கு
கருவறையிலிருந்து வந்த
குழதையின் அழுகுரல் சொன்னது
அன்பு செய்ய ஆன்மாக்கள்
ஆயிரம் உண்டு என்று
ஆனந்தம் அங்காங்கே உண்டு என்று !
உலகத்தின் விடிவும்
உனது சிரிப்பும்
என் கண்களை நிறைத்திட
புதிய ஆண்டு மலரட்டும் !
பொங்கல்
போகிப் பொங்கலில் புதிய
எண்ணங்களை விதைத்து ,
சூரியப் பொங்கலில் நன்றி
உணர்வினைப் படைத்து ,
மாட்டுப் பொங்கலில்
ஜீவகாருணியம் உணர்ந்து ,
காணும் பொங்கலில் உறவுகள்
கண்டு மகிழ்ந்து தனித்துவங்களை
அங்கீகரித்து
சமத்துவங்களைப்
பேணி மகிழ்வோம் .
பொங்கட்டும் உள்ளம்
புரிந்து உணர்ந்து கொண்டு
புத்துணர்வு கொண்டு ...!
வாழ்த்து
காதல் சொல்லி வரும் காற்றே
வருக !
கண்களிலிருந்து
காதல் மழை பொழிக
பூக்களைப் பெற்ற மரம் போல
பூமகள் மனம் நிறைக
புன்னகை சிந்திய பொழுதே தருக
பாக்களில் சொல்லாத
பாசம் பொழிக
பாரினில் என் நாளும் .
நினைக்க வேண்டியதை மறந்து
மறக்க வேண்டியதை
நினைத்து
நீயும் நானும்
இருப்பதேனோ?
வாழ்வின் நிலையை
இழப்பதேனோ ?
சில முற்றுப்புள்ளிகள் , அடுத்த
அதையும் ஏற்க வேண்டியது தானே
நடப்பதை அமைதிப் படுத்தும் எனில் .
மை பூசாத உன் கண்கள் ,
ஒரு மகிழ்ச்சிக் கடலை
ஒன்றுகூட்டி
மனதில் அலை அடிக்க வைத்தது .
இது உனக்கு கிடைத்த மரக்கட்டை
இதை வைத்து கரை ஏறுவதும்
கப்பல் செய்து கடலை ஆள்வதும் உன்
திறமையைப் பொறுத்தது .
இஸ்ரேல் போர்
கடலின் அலைகள் தொட்டுப் பார்க்க
மறுக்கவில்லை
கால்கள் கறுப்பாக இருப்பதால்
நீ இன்னும் பூ நூல்களோடு
புதிர் போடுகின்றாய்
இரவு விடியாது என்று ?
இருள் சூழ்ந்த தேசத்திலும்
இசைக்கத் துடிக்கும்
குழந்தைகளின் இதயத் துடிப்பை
நிறுத்தி விட்டு
சாதனைப் பட்டியலை
எத்தனை காலம் தான்
எழுதப் போகிறீர்கள் ?
பெளர்ணமி நிலவு
இருந்து என்ன ?, உள்ளே
அவன் வாழ்வு இருள்
சூழ்ந்து கொண்டே இருந்தது !
சிததிரா பெளர்ணமி நாள்
நிலவு முழுமையடையும்
ஒரு பெளர்ணமி இரவு வரலாம்
இன்று இல்லாத எத்தனையோ
மனிதர்கள்
நினைவுகளில் நீ மிதக்கலாம்
வெளிச்சம் உன் மீது படும் போது
உனக்கு வெளிச்சம்
கொடுத்த கண்களை
நீ தேடலாம்
காலம் மாறியதால் நீ
கண்ணீருடன்
நிலை மாறலாம்
கண்களின் வலியை
மேலும் கூட்டி
விட்டுச் செல்லலாம் எனினும் என்ன
இவை தானே வாழ்க்கை
இதையும் கடந்து போவது தானே
மானுட வாழ்க்கை .
அழும் அன்னையர்
காயப்படுத்தியவரிடமே
சரணாகதி அடைந்து எப்படி ஒரு கண
வாழ்வில் ஒளி ஏற்ற முடியும் ?
கலைந்து கலைந்து கூடும்
மேகங்கள்
கனிந்து , கனிந்து மணக்கும்
கனிகள்
விழுந்து , விழுந்து நகரும்
நாட்கள்
விரிந்து , விரிந்து பறக்கும்
கன்வுகள்
விதைத்து , விதைத்து விளையும்
விண்மீன்கள்
இசைத்து , இசைத்து இனிமைத்தரும்
இன்னிசைகள்
இருக்க ஏன் நீ மட்டும்
தனிமையில் தவிக்கிறாய்
எத்தனை மனிதர்களை இழந்தாலும்
எம் மெளனத்தை மட்டும் இழக்கவில்லை ,
( நாம் எவ்வளவு தைரியமானவர்கள்
என்பது இப்போ புரிகிறதா? )