கனடா தொல்காப்பிய மன்ற ஆண்டுவிழா – 2023 - குரு அரவிந்தன் -

சென்ற சனிக்கிழமை 23-9-2023 அன்று கனடா, ரொறன்ரோவில் உள்ள தொல்காப்பிய மன்றத்தினர் நடத்திய 8வது தொல்காப்பிய ஆண்டுவிழா – 2023 தமிழிசைக் கலாமன்றத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
மங்கள விளக்கேற்றல், கனடிய தேசியப்பண், தமிழ்த்தாய் வாழ்த்து, தொல்காப்பிய மன்றப்பாடல் ஆகியவற்றைத் தொடர்ந்து அகவணக்கம் இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து கனடா பழங்குடி மக்களின் அங்கீகாரம் வாசிக்கப்பட்டது. அடுத்து தொல்காப்பிய மன்றத் தலைவர் முனைவர் திருமதி செல்வநாயகி ஸ்ரீதாஸ் அவர்களின் தலைமை உரை இடம் பெற்றது.
தலைமை உரையைத் தொடர்ந்து நடன ஆசிரியை திருமதி சியாமளா தயாளனின் மாணவிகளின் நடன நிகழ்ச்சி இடம் பெற்றது. அதைத் தெடர்ந்து பேச்சுப் போட்டிகளில் பங்கு பற்றி முதற்பரிசு பெற்ற ஆறு பிரிவுகளைச் சேர்ந்த மணவர்களின் உரைகள் ஒவ்வொன்றாக இடம் பெற்றன.













இனிய நண்பர் நந்தீஸ்வரர் அவர்கள் 27- 6 -2022 ஆண்டு கனடாவில் எம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார். பிறப்பு என்று ஒன்றிருந்தால் இறப்பு என்பதும் நிச்சயமே என்பதற்கிணங்க அவரது பிரிவையிட்டு அவரது குடும்பத்துடன் துயர் பகிர்ந்து கொள்வோம்.
பெரும் புலவர் முகமட் ஹன்ஸீர் அவர்கள் மே மாதம் 5 ஆம் திகதி 2022 ஆம் ஆண்டு கனடாவில் இறையடி சேர்ந்தார். கனடா தமிழ் இலக்கிய உலகிற்கு இவரது மறைவு பெரும் இழப்பாகும். சிறந்த கல்வியாளரான இவர் மதங்களைக் கடந்து கனடாவில் தமிழ் மொழி வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர். கனடாவில் இருந்து வெளிவந்த முரசொலி பத்திரிகை ஆசிரியராகக் கடமையாற்றிய போது, மரபுக் கவிதையை வளர்ப்பதற்காக அந்தப் பத்திரிகையில் அதற்காக ஒரு பக்கத்தை ஒதுக்கியிருந்தார். புலம்பெயர்ந்து கனடா வந்த இவர், கவிதை எழுதுவதில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார்.
பிள்ளையினார் நடராஜன் அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்குப் பேரிழப்பாகும். 1939 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் திகதி பிறந்த இவர், 2022 மே மாதம் 12 ஆம் திகதி எம்மைவிட்டுப் பிரிந்தார். இவர் யாழ்ப்பாணத்தில் கீரிமலைக்கு அருகே உள்ள மயிலங்கூடல் என்ற இடத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் பிள்ளையினார் தெய்வானைப்பிள்ளை ஆகியோரின் அன்பு மகனாவார். திருமணமானபின் நாயன்மார்காட்டில் வசித்து வந்தார். ஆரம்ப கல்வியை மெய்கண்டான் மகாவித்தியாலயத்தில் பெற்றார். மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவனாகவும், அதன்பின் விஞ்ஞான ஆசிரியராகப் பணிபுரிந்தாலும், இவர் எல்லோராலும் அறியப்பட்ட சிறந்த இலக்கிய ஆளுமை கொண்டவராக இருந்தார். காங்கேசன் என்ற புனைப் பெயரில் பல ஆக்கங்களை வெளியிட்டிருக்கின்றார். நான் தமிழ் மன்றச் செயலாளராக இருந்த போது மகாஜனன் இதழின் தொகுப்பாசிரியராக இவர் இருந்தார். கல்லூரியில் சின்னப்பா இல்லத்தின் பொறுப்பாசிரியராகவும் கடமையாற்றினார். அதன்பின் யாழ். இந்துக் கல்லூரிக்கு மாற்றலாகிச் சென்றிருந்தார்.










பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









