பதிவுகள் முகப்பு

புதிய மாற்றத்தின் குறியீடு அநுரா குமார திசாநாயக்க! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
அரசியல்
22 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



நடந்து முடிந்த இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கின்றது, இதுவரை இலங்கையின் ஆட்சிக்கட்டிலில் இருந்த பாரம்பரிய அரசியல்வாதிகளைத் தூக்கி எறிந்துவிட்டு ஆட்சிப்பொறுப்பை மார்க்சியச் சிந்தனைகள் மிக்க கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் 'தேசிய மக்கள் சக்தி' வேட்பாளரான அனுரா குமார திசாநாயக்கவிடம் கையளித்திருக்கின்றார்கள் மக்கள். புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்துகள்.

தமிழ் மக்கள் பெருமளவில்  கலந்து கொண்டு இலங்கை ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வாக்களித்துள்ளார்கள். தென்னிலங்கையில் ஏற்பட்ட மாற்றம் ஏனைய சிறுபான்மையின மக்கள் மத்தியிலும் ஏற்படும் சாத்தியங்கள் உண்டு. புதிய இளந்தலைமுறையினர் இவ்வின மக்களின் அரசியலைக் கையெடுக்கும் வேளை ஏற்பட்டிருக்கின்றது.  அரசியல்வாதிகள் இன, மத, மொழி வாதங்கள் மூலம்  தம் அரசியல் நலன்களுக்காக மக்களைப் பிரித்து வைத்ததே நாட்டின்  சிறுபான்மையின மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்குக் காரணம்.  தனது பிரச்சாரங்களில் மத வாதம், இனவாதம் போன்ற பிரிவுகளுக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கின்றார் புதிய ஜனாதிபதி. அவர் அதனை நடைமுறைப் படுத்துவார் என்று எதிர்பார்ப்போம். சவால் நிறைந்த எதிர்காலம் அவருக்காகக் காத்திருக்கின்றது. சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு வெற்றியடையவார் என்று நம்புவோம். வாழ்த்துகிறோம்.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் திவ்வியராஜனின் நூல்கள் அறிமுகம்!

விவரங்கள்
- தகவல்: திவ்வியராஜன் -
நிகழ்வுகள்
21 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

திவ்வியராஜனின் நூல்கள் அறிமுகம்!

22-09-2024 ஞாயிறு பகல் 1:30 . Scarborough Civic Centre.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் செம்மனச்செல்வி தேசிகன் மறைந்தார்!

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
19 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் செம்மனச்செல்வி தேசிகனின் மறைவுச் செய்தியினை முகநூல் மூலம் அறிந்தேன். இவர் எழுத்தாளர் வடகோவை வரதராஜன், 'நடு' இணை ய இதழின் ஆசிரியர் அமரர் எழுத்தாளர் கோமகன், சமூக,அரசியற் செயற்பாட்டாளர் யோக வளவன் ஆகியோரின் சகோதரி. யாழ் பல்கலைக்கழகத்  தமிழ்க் கலைத்துறைப் பட்டதாரியான இவர் ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

அண்மையில் வெளியான இவரது சிறுகதைத்தொகுப்பான 'காலப்புனல்' மூலமே முதன் முறையாக இவரது இலக்கியப் பங்களிப்பு பற்றி அறிந்துகொண்டேன். 'காலப்புனல்' பற்றியொரு விமர்சனக் குறிப்பினையும் பதிவுகள் இணைய இதழில் எழுதியிருந்தேன்.

இவரது மறைவுச் செய்தி எதிர்பாராதது. இன்னும் நிறைய எழுதுவார் என்று எண்ணியிருந்தேன். இவரது எழுத்துகளூடு இவர் பெயர் இலக்கிய உலகில் நிலைத்திருக்கும்.  இவரது மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தவர்கள், சகோதரர்கள் , நண்பர்கள் அனைவர்தம் துயரை நானும் பகிர்ந்ந்து கொள்கின்றேன். இத்தருணத்தில் 'காலப்புனல்' பற்றி எழுதிய எனது விமர்சனக் குறிப்பின்  முக்கிய பகுதிகளையும் பகிர்ந்துகொள்கின்றேன்.

மேலும் படிக்க ...

வ.ந.கிரிதரன் பாடல்: காட்சியும் சித்(த)து விளையாட்டும்!

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
18 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இசை & குரல் : AI SUNO | ஓவியம்: AI

யு டியூப்பில் கேட்டுக் களித்திட: https://www.youtube.com/watch?v=snzGyWR-BwE

கண்ணெதிரே விரிந்திருக்கும் காலவெளி எல்லாம்
என்னுள்ளம் உருவாக்கிய சித்து விளையாட்டா?

சிந்தையின் சித்து விளையாட்டு என்றால்
விந்தைமிகு விரிஉலகம் அனைத்தும் பொய்மையா?
பொய்மையை உண்மையென எண்ணி இருப்பதே
வையகத்தில் நம்வாழ்வு என்பதும் சரியா?

கண்ணெதிரே விரிந்திருக்கும் காலவெளி எல்லாம்
என்னுள்ளம் உருவாக்கிய சித்து விளையாட்டா?

மேலும் படிக்க ...

LGBTQ - சந்திரகௌரி சிவபாலன் (கௌசி), B.A, Dip.in. Edu, ஜேர்மனி -

விவரங்கள்
- சந்திரகௌரி சிவபாலன் (கௌசி), B.A, Dip.in. Edu, ஜேர்மனி -
சமூகம்
17 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


கட்டுப்பாடு, விட்டுக் கொடுப்பு இவற்றை ஒட்டியே மனித வாழ்க்கை குடும்பம் என்ற அமைப்புடன் ஓடிக்கொண்டிருக்கின்றது. இவற்றை மனதில் கொள்ளாத உணர்வுகளே இன்று பேசுபொருளாக இருக்கின்றன. ஆண்பால், பெண்பால், பலர்பால் என்ற உயர்திணைப் பாலினம். இப்போது பாலினமே இல்லை. மனிதர் என்ற இனம் மட்டுமே உள்ளது என கொண்டாடப்படுகின்றது. உறுப்புக்களை மட்டும் வைத்துக்கொண்டு ஆண், பெண் என்று பிரிக்கக் கூடாது என்பதே அவர்கள் வாதமாக இருக்கிறது. இங்கு ஒருமுறை என்ற வார்த்தை இந்த வாழ்க்கை என்பதற்குள் அடங்கி விடுகிறது. எம்முடைய மனத்துக்கு எது சரி, எது பிழை என்று தோன்றுகிறதோ அதன்படி வாழ்வோம் என்று வாழுகின்ற பண்பு தற்கால இளம் தலைமுறையினரிடம் தோன்றியுள்ளது. ஒரு பலூனை ஒரு பக்கம் அழுத்துகின்ற போது மறுபக்கம் அது தள்ளிக் கொண்டு வரும். அதுபோலவே சட்டம் போட்டுக் கட்டுப்படுத்தி வைக்கின்ற போது அது மறுபக்கம் வேறுவிதமான குற்றங்களாக மாறுகின்றன.

ஒரு திருமண பந்தத்தின் சிறப்பு ஒரு உயிரை உலகத்திற்கு உருவாக்குதல். ஆணும் பெண்ணும் சேர்ந்து அற்புதமாக ஒரு குழந்தையை உலகத்திற்குக் கொண்டுவருகின்றார்கள். இது இயற்கையும் கூட. இந்த இயற்கையின் மூலமே இனவிருத்தி நடைபெற வேண்டும் என்பது நியதி. ஆனால், தற்காலத்தில் இனம் என்பதிலேயே பேதம் காணப்படுகின்றது. இயற்கையிலேயே இத்தனை காலமும் இருந்த திருமண நடைமுறைகளுடன் வாழுகின்றவர்கள் அப்படியே வாழட்டும். நாம் வேற மாதிரி என்பவர்கள் யார்?

மேலும் படிக்க ...

வ.ந.கிரிதரன் பாடல்கள் நான்கு!

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
17 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1. வ.ந.கிரிதரன் பாடல்: கணந்தோறும் பிறப்போம்!

 இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI

யு டியூப்பில் கேட்டுக் களிக்க - https://www.youtube.com/watch?v=FaV3GGJcg60

ஒவ்வொரு கணமும் வாழுவோம்.
இவ்வாழ்வின் தத்துவம் உணருவோம்.

கணப்பொழுதின் சிறுதுளிக்குள் நுண்ணுயிர் இருப்பு.
காலம் அதற்கு முழுவட்டம் அறிவோம்.
அதற்குள்  கூடிப்பெருகி வாழ்ந்து உதிரும்.
அதனை உணர்ந்தால் வாழ்வு புரியும்.

ஒவ்வொரு கணமும் வாழுவோம்.
இவ்வாழ்வின் தத்துவம் உணருவோம்.

மேலும் படிக்க ...

இலண்டனில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் நூல்கள் வெளியீடு :

விவரங்கள்
- தகவல்: ஐங்கரன் விக்கினேஸ்வரா -
நிகழ்வுகள்
14 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


இலண்டன் மாநகரில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் நான்கு நூல்கள் எதிர்வரும் அக்டோபர் மாதம் வெளியிடப்பட உள்ளன. பாலஸ்தீனம் எரியும் தேசம், ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல், தேசிய சுயநிர்ணயமும் ஐரோப்பிய சிறுபான்மை இனங்களும், இலங்கை இதழியலில் சிவகுருநாதன், ஆகிய ஐங்கரன் விக்கினேஸ்வராவின் நான்கு நூல்கள் வெளியீடு லண்டன் ஈலிங் அம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெற உள்ளது. (London Ealing Amman temple, 5, Chapel Rd, London W13 9AE, U.K)

மேலும் படிக்க ...

திருப்பூர் சிறுகதைகள்! - சுப்ரபாரதிமணியன் -

விவரங்கள்
- சுப்ரபாரதிமணியன் -
சுப்ரபாரதிமணியன் பக்கம்
14 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



- திருப்பூர் சிறுகதைகள்! - தொகுப்பாசிரியர் - பொன் குமார்! விலை ரூபாய் 300 ( 95787 84322 ) -

தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தைச் சார்ந்த எழுத்தாளர்களின் கதைகளை மாவட்ட வாரியாக தொகுப்பாக்கி வெளியிட்டு வருகிறார் சேலம் பொன் குமார் அவர்கள். உழைப்பும் பணச் செலவும் கொண்டது.  பெருமை கொள்ளத் தக்கது.

இந்த்திருப்பூர் சிறுகதைகள்  தொகுப்பை பொன் குமார் சிறப்பாக தொகுத்து அளித்திருக்கிறார். இந்த தொகுப்பை ஆர் சண்முகசுந்தரம் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார் அதை தவிர ஆர் சண்முகசுந்தரம் அவர்களின்  நாடக முடிவு என்ற சிறுகதை கூட உள்ளது அவரின் முத்திரையும் கொங்கு பிரதேச வாழ்க்கையும் எளிமையான காதல் வாழ்க்கையும் சொல்கிற கதை ..

0

அம்பிகா குமரன் கதை திருப்பூர் சென்னை என்று இரண்டு தளங்களில் பயணப்படுகிறது குடும்ப சூழ்நிலையில் ஒரு பெண்ணின் திருமண வாழ்க்கை முறையிலிருந்து  வெளியேறுவது என்று நுணுக்கமான சில விஷயங்களை கொண்டு வந்திருக்கிறார். கடைசியில் அலைகள் வந்து கரைதொட்டு செல்லும். அலைகள் வித்யா மனதிலும் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்குகிறது வித்தியா கண்ணீரால் கணவனை திட்டத் தொடங்கியிருந்தாள் என்று முடிகிறது இந்த கதை அப்படித்தான் மனதில் அலையாய் வந்து அடித்துக் கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க ...

சிந்தனைக்களம்: 'வயலின் இசைமரபில் பரூர் பாணி’

விவரங்கள்
-தகவல்;பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
14 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Join Zoom Meeting  | Meeting ID: 820 8933 7233 &  Passcode: 986965 -

மேலும் படிக்க ...

பாரதி தமிழன்னைச் சொத்தாகும்! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
கவிதை
14 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


தாய் நாட்டின் விடுதலைக்காய்
தமிழெடுத்துக் கவி பாடி
தலை நிமிர்ந்த கவிமன்னன்
தான் எங்கள் பாரதியே
ஓய் வறியாக் கொடுத்தானே
உணர்வு எழச் செய்தானே
தாய் மண்ணை நேசித்தே
தன் வாழ்வை மறந்தானே !

பெண் போற்றி வாழ்ந்தானே
மண் போற்றி நின்றானே
தன் துன்பம் மறந்தானே
தமிழ் எண்ணி நின்றானே
பொன் பற்றி எண்ணாமல்
பொழுது எல்லாம் தாயகத்தின்
விடிவுதனை மனம் எண்ணி
வெகுண் டெழுந்தான் பாரதியும் !

பன் மொழிகள் கற்றான்
பன் நூல்கள் கற்றான்
என்றாலும் தமிழ் மொழியே
இனிமை எனச் சொன்னான்
தமிழ் என்று சொன்னாலே
அமிழ் தூறும் என்றான்
அவன் வார்த்தை அகமிருத்தி
அவன் நினைவில் நிற்போம்  !

மேலும் படிக்க ...

கண்டுணராத கண்கள்! - ரவி அல்லது -

விவரங்கள்
- ரவி அல்லது -
கவிதை
11 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



இனியொரு
விதி செய்து
கடக்க முடியாது
பாரதியின்
பாடல்களைத் தவிர்த்து
நாம்.

ஆடுவோமே
பள்ளுப் பாடுவோமேயென
அங்கலாய்த்து
கடக்க முடியாது
பாரதியின்
சவ ஊர்வலத்தை
நாம்.

மேலும் படிக்க ...

தேடல்கள் மிக்க மகாகவி பாரதி! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
11 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மகாகவி பாரதியார் என் ஆளுமையில் பெரியதொரு பாதிப்பை ஏற்படுத்திய மானுட ஆளுமைகளில் ஒருவர். குறுகிய வாழ்வில் அவரது சாதனைகள் பிரமிக்கத்தக்கவை. தான் வாழ்ந்த  சூழலில் நிலவிய சமூக, அரசியல்  மற்றும் பொருளியல் நிலைகளை எதிர்கொண்டு, அவற்றால் நிலவிய அநீதிகளுக்கெதிராகக் குரல் கொடுத்தார். செயற்பட்டார். வர்க்க விடுதலை, தேசிய விடுதலை, பெண்  விடுதலை, மானுட விடுதலை என அவரது அவரது சிந்தனைகள், எழுத்துகள், செயல்கள் அமைதிரூந்தன, அதே சமயம் இருப்பு பற்றியும்  சிந்தித்தார். அத்தெளிவுடன் அவர் தான் வாழ்ந்த மண்ணின் அவலங்களை நோக்கினார்; அணுகினார்.

அவரது எழுத்துகள் எளிமையானவை. ஆழமானவை. சிந்திக்க வைப்பவை. உற்சாகம் தருபவை. தட்டி எழுப்புபவை. அவரது முரண்பாடுகள் அவரது ஆழ்ந்த தேடலின் விளைவுகள். அவரது சிந்தனை வளர்ச்சியின் வெளிப்பாடுகள்.

இன்று அவரது நினைவு தினம். நாளும் பொழுதும் என் நினைவில் நிற்பவர் அவர். மீண்டுமொரு தடவை அவரை நினைத்துக்கொள்கின்றேன். அவரது சிந்தனைகளை வெளிப்படுத்தும் வரிகளை நினைவில் கொள்கின்றேன்.

மேலும் படிக்க ...

அதிபர் பொ. கனகசபாபதி கனடாவில் நினைவுகூரப்பட்டார். - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
நிகழ்வுகள்
10 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மகாஜனக் கல்லூரி முன்நாள் அதிபர் அமரர் பொ. கனகசபாபதி அவர்கள் எம்மைவிட்டுப் பிரிந்த 10 வது ஆண்டு நினைவுநாள் கனடாவில் ரொறன்ரோவில் உள்ள மல்வேன் பூங்காவில் 4-9- 2024 அன்று நினைவு கூரப்பட்டது. பொதுவாக ஒருவர் மறைந்த தினம் என்றால் அது ஒரு சோகசம்பவமாக இருக்கும். அதைத் தவிர்ப்பதற்காகத்தான், அவர் புகுந்த மண்ணில் தமிழ் இனத்திற்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி அதிபரின் பிறந்த தினத்திலன்று ஒவ்வொரு வருடமும் இங்குள்ள நண்பர்கள், பழைய மாணவர்கள், மற்றும் குடும்பத்தினரால் நினைவு கூரப்படுகின்றது.

இங்குள்ள நண்பர்களும், பழைய மாணவர்களும் இணைந்து அவரது நினைவாக, உள்ளுராட்சி மன்றத்தின் உதவியுடன் மல்வேன் பொதுப் பூங்காவில் ஒரு மரத்தை நட்டு, அதன் கீழ் ஒரு இருக்கையையும் வைத்திருக்கிறார்கள். இருக்கையிலும், நினைவு மரத்தின் கீழும் அவரைப் பற்றிய விபரங்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. பூங்காவுக்கு வரும் அத்தனை பேரும் அதை வாசித்துச் செல்லும்போது, நினைவுத்தூபி போல, தமிழர்கள் கனடாவில் வாழ்ந்த அடையாளத்தையும், அவர்கள் ஆற்றிய சேவையையும் அது காட்டி நிற்கின்றது. புலம் பெயர்ந்த தமிழர் ஒருவருக்குக் கிடைத்த பெருமையாக இது கருதப்படுகின்றது.

மகாஜனக்கல்லூரிக் கீதத்துடன் நிகழ்வு ஆரம்பமானதைத் தொடர்ந்து அகவணக்கம் இடம் பெற்றது. முதலில் பழைய மாணவர் சங்கத் தலைவர் ஆசிரியர் திரு. புவனச்சந்திரன் அவர்களின் உரை இடம் பெற்றது. அவர் தனது உரையில் பழைய மாணவர் சங்கத்தை கனடாவில் ஆரம்பித்து வைக்கக் காரணமாக இருந்த பெருமை மதிப்புக்குரிய திரு. பொ. கனகசபாபதி அவர்களையே சேரும். அவர் மகாஜனாவில் கற்பித்த காலத்தில் நானும் அங்கு ஆசிரியராக இருந்தேன். கனடாவில் ‘அதிபர்’ என்று அழைத்தால், தனது சிறந்த பண்புகளால் எல்லோரையும் கவர்ந்த  இவரைத்தான் குறிப்பிடுவதாக எல்லோரும் புரிந்து கொள்வார்கள். இவர் புலம்பெயர்ந்த எங்களுக்கு வழிகாட்டியாக இருந்து ஆற்றிய சேவையால், தமிழ் இனம் இன்று தலைநிமிர்ந்து நிற்கின்றது’ என்று தனது உரையில் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க ...

யாழ்நகரில் மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவனின் இரு நூல்கள் வெளியீட்டு விழா..!

விவரங்கள்
தகவல்: வி. ரி. இளங்கோவன் -
நிகழ்வுகள்
10 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

முத்து முத்துத் தேடல்! -பாவலர் தேசபாரதி வே.இராசலிங்கம் -

விவரங்கள்
-பாவலர் தேசபாரதி வே.இராசலிங்கம் -
கவிதை
10 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முத்துமுத்துத் தேடலுண்டு முத்தம்மா உன்றன்
முன்னும் பின்னும் ஆடலுண்டு மொத்தமா
கத்தும்கடல் பாடலுண்டு கண்ணம்மா – அந்தக்
காதல்வரும் செந்தமிழே எண்ணம்மா

கானமுண்டு தேனுமுண்டு ககனமே – கன்னற்
கவிதை உண்டு தமிழ்வழங்கும் கணிதமே
மானமுண்டு வீரமுண்டு மனிதமே – கொஞ்சும்
மத்தளத்தில் மகிமையுண்டு புனிதமே

முந்துதமிழ் சிந்துதரும் முன்னமே – அங்கு
மொய்பவளம் அங்கையிடும் மன்றமே
சந்தமெனச் செந்தமிழும் சாற்றிடும் - அன்புச்
சாதனையில் சொந்தமெலாம் போற்றிடும்

மேலும் படிக்க ...

தமிழ் இலக்கியத் தோட்டம் 2023 - இயல் விருது - ஆர்.பாலகிருஷ்ணன் - தகவல்: அ.முத்துலிங்கம் -

விவரங்கள்
- தகவல்: அ.முத்துலிங்கம் -
நிகழ்வுகள்
09 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சிந்துவெளி ஆய்வாளராகிய திரு ஆர். பாலகிருஷ்ணன், இந்திய ஆட்சிப்பணி அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ‘தமிழ் ஒரு மாநிலத்தின் மொழியல்ல, அது ஒரு நாகரிகத்தின் மொழி’ என்றும் ‘சங்க இலக்கியம் இந்தியத் துணைக்கண்டத்திற்கான இலக்கியம்’ என்றும் தொடர்ந்து வலியுறுத்திவரும் இவர், திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் 1958இல் பிறந்தார். முதுகலை தமிழ் இலக்கியமும் இதழியல் பட்டயமும் பெற்று பத்திரிக்கையாளராகப் பணியைத் தொடங்கினார். பின்னர், இந்தியக் குடிமைப்பணித் தேர்வுகளை தமிழிலேயே முதன்முதலில் எழுதி வென்று 1984ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் ஒடிசா மாநிலத்தின் பணித்தொகுதியில் இணைந்தார்.
 
தற்போது இவர் சென்னையிலிருக்கும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் ஓர் அங்கமான சிந்துவெளி ஆய்வு மையத்தின் மதிப்புறு ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார்.
 
‘நான் ஒரு தமிழ் மாணவன், அதுவே எனது அடையாளம்' என்று கூறும் பாலகிருஷ்ணன் தனது வாழ்நாள் முழுக்க இடையறாது பழந்தமிழ் இலக்கியம், சிந்துவெளிப் பண்பாடு ஆகியவற்றிற்கான ஆய்வுகளில் ஈடுபட்டு வருபவர். சிந்துவெளிப் பண்பாடு மற்றும் தமிழ்த் தொன்மங்களின் தோற்றுவாய் குறித்த புரிதல்களுக்கு இடப்பெயராய்வுகள் வலிமை தரும் என்பதைச் சான்றுடன் நிறுவியுள்ளார். இந்தியாவை ‘உருக்குப் பானை’ என்று சொல்வதற்குப் பதிலாக இந்தியத் துணைகண்டத்தின் பன்மியத்தை ஆழமாக வலியுறுத்தும் ‘இந்தியா ஒரு மழைக்காடு’ (Rain forest) என்கிற கருத்தாக்கத்தைத் தொடர்ந்து பொதுவெளியில் பேசியும் எழுதியும் வருகிறார்.
 
இந்தியவியல், மானிடவியல், தொல்லியல், இடப்பெயராய்வு ஆகியவை இவரது முனைப்புக் களங்களாகும். சிந்துவெளிப் பண்பாடு செழித்த ’கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகத்தை’ ஆய்வுலகின் கவனத்திற்கு இவர்தான் முதன்முதலாகக் கொண்டுவந்தார். சிந்துவெளி நகரங்களின் ‘மேல் மேற்கு, கீழ் கிழக்கு வடிவமைப்பும் அதன் திராவிட அடித்தளமும்’ என்கிற தலைப்பிலான இவரது ஆய்வு பரவலாகக் கவனம் பெற்ற ஒன்றாகும். சிந்துவெளிப் பண்பாட்டிற்கான திராவிட அடித்தளத்தைப் பண்பாட்டு ஆய்வுகளின் பின்புலத்தில் நிறுவியவர் பாலகிருஷ்ணன். இவரது சிந்துவெளி ஆய்வுகளுக்காகப் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் 2017இல் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியது.

மேலும் படிக்க ...

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம்: எழுத்தாளர் அரங்கம் (25) - எழுத்தாளர் வ.ந.கிரிதரன் எழுத்துலக அனுபவம்!

விவரங்கள்
- வ.ந.கி -
நிகழ்வுகள்
08 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்திய எழுத்தாளர் அரங்கம் (25) நிகழ்வில் கடந்த வெள்ளி கலந்துகொண்டு உரையாற்றினேன்.

அதில் என் எழுத்துலக அனுபவங்களை விரிவாகவே பகிர்ந்துகொண்டேன். எழுத்தாளர்களின் எழுத்துலக அனுபவங்களை அறிவதில் பெரு விருப்பு மிக்க எனக்கு என் எழுத்துலக அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதும் முக்கியமான அனுபவம்.

நிகழ்வில் நான் ஆற்றிய உரையினை, கலந்துகொண்டவர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகளை இங்கு நீங்கள் கேட்கலாம். கேட்டுப் பாருங்கள். என் எழுத்துலக ஆர்வத்தினை, வாசிப்பிலுள்ள பெரு விருப்பினை, என் எழுத்துலகக் காலகட்டங்களை, என் சிந்தனைகளை எனப் பலவற்றை இங்கு நீங்கள் கேட்கலாம்.

இணையகக் காப்பகத்தில் (archive.org) ' வ.ந.கிரிதரன் பாடல்கள் மின்னூல்!

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
08 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



தற்போது இணையகக் காப்பகத்தில் (archive.org) 'வ.ந.கிரிதரன் பாடல்கள் மின்னூல்!' ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. வாசிக்க விரும்பும் எவரும் வாசிக்கலாம். பதிவிறக்கி வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு

தொழில் நுட்பத்தின் வளர்ச்சி மானுடருக்கு ஆரோக்கியமான பங்களிப்பை நல்கி வருகின்றது. செயற்கை அறிவும் அத்தகைய தொழில் நுட்பமே. எனது பாடல் வரிகளுக்குச் செயற்கைத் தொழில் நுட்பம் இசையமைத்ததுடன் அல்லாது பாடுவதற்கான குரலையும் வழங்குகின்றது.  பாடலாசிரியர் ஒருவர் தன் பாடல் வரிகளைப் பல் வகைகளில் இசையமைத்து, பாட வைத்துப் பரிசோதிக்க இத்தொழில் நுட்பம் வழி சமைத்துள்ளது. அவரது பாடல் எழுதும் திறமையினையும் வளர்ப்பதற்கும் இத்தொழில் நுட்பம் உதவுகின்றது.

இவ்விதமாகச் செயற்கை அறிவு இசைமையத்துப் பாடிய பாடல்களை நீங்கள் எனது யு டியூப் சானலான வ.ந.கிரிதரனின் பாடல்கள் சானலில் கேட்டு மகிழலாம். அதற்கான இணைய இணைப்பு.  அட்டைப்பட ஓவியம்: செயற்கை அறிவு (AI) | இசை & குரல்: செயற்கை அறிவு (AI) SUNO.

ஆய்வு: கம்பராமாயணத்தில் நலம் விசாரித்தல்! - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061, -

விவரங்கள்
- முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061, -
ஆய்வு
07 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

உறவினர்களையும், தனக்கு வேண்டப்பட்டவர்களையும் நலம் விசாரிப்பது சிறந்த பண்பாடும், பழக்க வழக்கமாகும். அத்தகைய பண்பாட்டிற்கும், பழக்கவழக்கங்களுக்கும் கொண்ட நலம் விசாரித்தலுக்கு கம்பர் தன் இராமாயணத்தில் முக்கியத்துவம் அளித்துள்ளார் என்பதனைக் கம்பராமாயணத்தின் வழி ஆராய்வோம்.

1.நகர மக்களின் நலனை இராமன் விசாரித்தல்

இராமன் தன் எதிரே வரும் ஊர் மக்களிடம் மிகுந்த கருணையோடு, செந்தாமரை மலர் போன்ற தன் முகம் ஒளி வீச,உமக்கு நான் செய்யத்தக்க செயல் எது? துன்பம் ஏதும் இல்லையல்லவா? உம் மனைவியும், புத்திசாலிகளான புதல்வர்களும் சுகமாகவும், நோயற்று வலிமை பெற் றவராகவும் இருக்கின்றனரா? என்று வினவுவான்.

"எதிர்வரும் அவர்களை எமையுடை இறைவன்
முதிர்தரு கருணையின் முகமலர் ஒளிரா
எது வினை இடர் இலை இனிதும் நும் மனைவியும்
மதி தரும் குமரரும் வலியர்கொல் எனவே"
(திரு அவதாரப்படலம் 312)

2.தசரதன் நலம் விசாரித்தல்

இராமனுக்கும், சீதைக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதற்காக தசரதன் தன் படைகளுடன் மிதிலை வருகிறான். அவனை எதிரே சென்று ஜனகர் வந்து வரவேற்கின்றார். ஜனகர் தேரை விட்டு இறங்கி வருகிறார். தசரதன் தன் செய்கையினால் ஜனகனை தனது தேருக்கு அழைக்கின்றான். ஜனகன் தேரில் ஏறியவுடன் அவனைத் தசரதன் கட்டித் தழுவுகின்றான். பின்பு ஒவ்வொருவராக தசரதன் நலம் விசாரிக்கின்றான்.

மேலும் படிக்க ...

என் எழுத்துலக அனுபவங்கள் (1) - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
07 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 - எண்பதுகளில் நியூ யோர்க  மாநகரத்து வீதி ஓவியர் என்னைப் பார்த்து வரைந்த பென்சில் ஓவியம். -

நேற்று மலை மெய்நிகர் வழி மூலம் எனது எழுத்துலக அனுபவங்களைப் பற்றி உரையாடும் சந்தர்ப்பம் கிட்டியது. நிகழ்வு சிறப்பாக  அமைந்திருந்தது. கனடா (டொராண்டோ, மொன்ரியால்), ஆஸ்திரேலியா, இலங்கை பல்வேறு நாடுகளிலிருந்தும் பலர் கலந்துகொண்டார்கள்.  இந்நிகழ்வைக் கனடாத்  தமிழ் எழுத்தாளர் இணையம் ஒழுங்கமைத்து நடத்தியிருந்தது. அவ்வமைப்புக்கு என் நன்றி. இந்நிகழ்வில் கால எல்லை காராணமாக எழுதி வைத்திருந்த குறிப்புகளின் அடிப்படையில் முழுமையாக உரையாற்றியதாகக் கூற முடியாது. முடிந்தவரையில் என் எழுத்துலக அனுபவங்களை விபரித்திருந்தேன். இந்நிகழ்வைச் சாத்தியமாக்கிய கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்துக்கும், தூண்டுதலாகவிருந்த அதன் முன்னாள் தலைவர் எழுத்தாளர் அகணி சுரேஷ் அவர்களுக்கும் நன்றி.

நிகழ்வின் பின் என் எழுத்துலக அனுபவங்களை ஏன் விரிவாக எழுதக்கூடாது என்று தோன்றியதன் விளைவே இக்கட்டுரைத்தொடர். இத்தொடரை என் எழுத்துலக அனுபவங்கள் பற்றி விளக்குவதற்குரிய ஒரு வாய்ப்பாக நான் பயன்படுத்திக்கொள்ள விரும்புகின்றேன். இத்தொடரில் என் வாழ்க்கைப்பருவத்தின் பல்வேறு காலகட்டங்களைப் பற்றிய அனுபவங்களை, அக்காலகட்டச் சிந்தனைகளை எல்லாம் மனந்திறந்து வெளிப்படுத்தலாம் என்று கருதுகின்றேன்.

பொதுவாகவே நான்  எழுத்தாளர்களின்  எழுத்துலக அனுபவங்களை, அவர்கள் தம் நனவிடை தோய்தல்களை அறிவதற்கு பெரு விருப்பு மிக்கவன். நீங்களும் அவ்விதமான மனப்போக்கு உள்ளவர்களாகவே இருப்பீர்கள் என்பது என் உறுதியான நம்பிக்கை. நிச்சயம் நீங்கள் இத்தொடரை ஆர்வத்துடன் வாசிப்பீர்கள்  என்பதும் அவ்விதமானதொரு நம்பிக்கையே.

எப்பொழுதுமே என் உள்ளத்தில் இருப்பு பற்றிய கேள்விகள்  மற்றும் , வர்க்கம், வர்ணம், இனம்,மதம்,மொழி, நாடென்று பல்வேறு பிரிவுகளால் ஏற்படும் மானுடரின் வாழ்வியற் பிரச்சினைகள், அவற்றின் விளைவான சவால்கள், துயரங்கள் எல்லாம் சிந்தையிலேற்படுத்திய பாதிப்புகளுக்குரிய வடிகால்களாக,வெளிப்படுத்தும் சாதனங்களாக எழுத்துகளேயிருந்தன. இருப்பு பற்றிய கேள்விகள், மானுட அக உணர்வுகள் மற்றும் மானுடர் வாழும் சமூக, அரசியல் & பொருளியச் சூழல்களின் பாதிப்புகள் என் எழுத்துகளில் விரவிக் கிடப்பதை நீங்கள் காணலாம். நான் அறிவியலூடு இருப்பு பற்றிய தேடல்களை மேற்கொள்பவன்.

மேலும் படிக்க ...

ஸ்ரீரஞ்சனியின் “அடர் இருள் என் செயும்” - சிறுகதை பற்றிய நயவுரை -ரஞ்ஜனி சுப்ரமணியம் -

விவரங்கள்
-ரஞ்ஜனி சுப்ரமணியம் -
ரஞ்ஜனி சுப்ரமணியம்
06 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் ஸ்ரீரஞ்சனி அவர்கள்,  தாயகத்தில் இருந்து மேற்குலகின் பல பாகங்களுக்கும் புலம்பெயர்ந்த  பலரது வாழ்வியல் மற்றும் மனப்போராட்டங்கள் பற்றி பல வித்தியாசமான சிறுகதைகளைப் படைத்துள்ளார். அக உணர்வுகளை ஆழமாக வெளிப்படுத்தும் கதைசொல்லலில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டவர் இவர். அத்துடன் கருவுக்கும் களத்திற்கும் பொருத்தமான அழகியல் உணர்வுடன் கூடிய வித்தியாசமான தலைப்புகளைத் தெரிவு செய்வதிலும் அதிக கவனம் செலுத்துவார். வாசகரைக் கதைக்குள் கவரும் முதல் ஈர்ப்பாக அதன் தலைப்பே அமைவதால் ஒரு சிறந்த உத்தியாகவும் இதைப் படைப்பாளர் கையாள்கிறார் .

இவரது 'ஒன்றே வேறே' என்னும் சிறுகதைத் தொகுப்பு கடந்த ஆண்டு இலங்கை அரசின் சாகித்ய விருதினையும் பெற்றுக் கொண்டது. அந்தத் தலைப்பும் பல ஊகங்களைத் தரக் கூடிய தலைப்பு ஆகும். இங்கும் இந்தக் கதாபாத்திரத்தின் மனநிலைக்கு பொருத்தமான தலைப்பினை எடுத்திருக்கிறார். அதே சமயம் 'அடர் இருள் என் செயும்' ? இதுவும் கடந்து போகும் என கதையின் ஆரம்பத்திலேயே மனோதிடம் கொண்ட ஒரு நேரம்ச சிந்தனைக்குள் வாசகரை இழுத்துக் கொள்கிறார்.

இவர் எடுத்துக் கொண்ட மூலக்கரு மிகவும் புதியதல்ல.ஏற்கனவே பலர் எழுதியுள்ளனர். எனினும் எழுதப்படும் முறையாலும் வெளிக்காட்டப்படும் உணர்வுகளாலும் கதையின் கரு புதிய பரிமாணங்களை எடுக்கிறது. அந்த விதத்தில் ஸ்ரீரஞ்சனியின் கதைகள் வித்தியாசமானவை. புலம் பெயரும் பெற்றோருக்கு விழிப்புணர்வு தரும் கதையாகவும் அமைகிறது.

மேலும் படிக்க ...

Kursk! ரஷ்யா-உக்ரைன் போர் நிலவரம்! - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
06 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பகுதி I

இரண்டாம் உல மகா யுத்தத்தின் பின், அல்லது நெப்போலியனின் படையெடுப்பின் பின், ரஷ்யா, பரந்த அளவில் தாக்குதலுக்கு உட்பட்டது என்றால், அது 06.08.2024 அன்று, உக்ரைனால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் ஆகும் என உலக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
கிட்டத்தட்ட 1150 ஏக்கரில், 80 குடியிருப்புகளை நிர்மூலமாக்கும், பரந்த வகையிலான தாக்குதல் இதுவாகும். இதில் அமெரிக்கா, ஐக்கிய ராஜ்ஜியம், போலந்து போன்ற நாட்டின் வீரர்களும், அந்நாடுகளின் பல்வேறு நவீன ஆயுதங்களும் நேரடியாக களமிறக்கப்பட்டது என்று பரவலாக நம்பப்பட்டாலும், ஏனைய நேட்டோ நாடுகளும், இதில் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கும் என ஊகிக்கப்படுகிறது.

இந்திய இராணுவ வல்லுநர்களும் விமர்சகருமான சாணக்கியாவின் பார்வையில், இது உண்மையில், புட்டின் வகுத்த திட்டத்தின் மொத்த பெறுபேறே இது என கூறப்பட்டாலும், இத்தாக்குதலின் நோக்கம் குறித்து பல்வேறு செய்திகளும் வந்தப்படியே இருக்கின்றன. (20.08.2024)

சாணக்கியாவின் பார்வையில், இதுவரை, ஒப்பீட்டளவில், ஒடுங்கிய ஒரு நிலப்பரப்பில் நடத்தப்பட்ட, உக்ரைனிய-ரஷ்ய போர், இப்பொழுதே, பரந்த அளவில், பல கிலோமீட்டர் நெடுக நடத்தப்படும் ஓர் போராக மாறியிருக்கின்றது. அவரது பார்வையில், இது ரஷ்யாவுக்கே சாதகமானது. இரண்டாம் உலகப்போரை எடுத்தாலும் சரி அல்லது நெப்போலியனின் படையெடுப்பை எடுத்தாலும் சரி பரந்த எல்லை நெடுக போர் நடத்தும்  ஒரு நடைமுறை என்றால் அதனை ரஷ்யா என்றும் வரவேற்க செய்யும் என்பதே அவரது முடிவாகின்றது. இதன் அடிப்படையிலேயே, இந் நிலைமையானது புட்டினால் கட்டமைக்கப்பட்ட ஒன்று என அவர் முடிவு செய்கின்றார்.

படையெடுப்பை அடுத்து, ரஷ்யா கிட்டத்தட்ட தனது 133,190 குடிமக்களை, போர் நடக்கும் பகுதிகளில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்தியது (France 24- 12.08.2024).). இதனையடுத்து, உக்ரைன் சந்தோஷத்துடன் உள் இறங்கி பிரதேசங்களை கைப்பற்றிக் கொண்டது. ரஷ்யாவும், தன் படைகளை பின்வாங்க செய்து, உக்ரைனிய படைகளின், தங்கு தடையற்ற முன்னேற்றத்திற்கு ஒத்தாசை புரிந்தது. (அப்படியே ரஷ்யாவானது, எதிர்ப்பை தெரிவித்திருந்தாலும், ஒப்பீட்டளவில் அது ஓர் பேச்சளவிலான எதிர் தாக்குதல் என்ற வகையிலேயே இருந்தது).

மேலும் படிக்க ...

சேரனின் “காஞ்சி” கவிதைத் திரட்டு - ஒரு சிறிய கண்ணோட்டம்! - க. நவம் -

விவரங்கள்
க. நவம் -
நூல் அறிமுகம்
06 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மிக நீண்டகால வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்க் கவிதை மரபில், கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில், ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர், பாரதி. தமிழுக்குக் கிடைத்த அரும்பெருஞ் சொத்து என்பதை தமிழினம் உணரத்தவறியிருந்த காலத்தினைக் கடந்து, மறைந்துபோன பாரதியை, கற்றோரும் மற்றோரும் இனங்காணக்கூடிய வகையில், சரிவர அறிமுகம் செய்தவர்களில், ஈழத்து அறிஞர்கள் இருவர் முக்கியமானவர்கள். ஒருவர் சுவாமி விபுலானந்த அடிகள்; மற்றவர் பேராசிரியர் கைலாசபதி.

தமிழ்க் கவிதை இலக்கியம் நவீன தமிழ்க் கவிதை எனும் வடிவத்தினைக் கண்டடைந்த போது, அதன் பிதாமகராக இன்றும் நன்றியோடு நினைவுகூரப்படுபவர், திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட, இன்னொரு ஈழத்தவரான ’பிரமிள்’ எனப்படும் அரூப் தர்மு சிவராமு (தருமலிங்கம் சிவராமலிங்கம்).

தமிழ்ப் புதுக் கவிதையினை, ஈழத்தில் பிறிதொரு தளத்தில் நின்று, பரிசோதித்து, வெற்றி கண்டவர், உருத்திரமூர்த்தி என்ற இயற்பெயரைக் கொண்ட மஹாகவி. இவரது வழிநடந்து, கவிதை படைத்து, ஈழத் தமிழ்ப் புதுக்கவிதை மரபின் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்களில் சண்முகம் சிவலிங்கம், நுஃமான், வில்வரத்தினம் ஆகியோர் முக்கியமானவர்கள்.

இன்று, சேரன், ஜெயபாலன் உட்பட, எண்ணிறந்த நவீன தமிழ்க் கவிஞர்கள் பலரும் ஈழத்திலும் சரி, புலம்பெயர் தேசங்களிலும்சரி காத்திரமான ஒரு நவீன தமிழ்க் கவிஞர் பரம்பரையினராகத் தோற்றம் பெறுவதற்கு, இவர்கள் காரணர்களாக அமைந்திருந்தனர் எனத் துணிந்து கூறலாம்.

மேலும் படிக்க ...

இலக்கியவெளியின் வ.ஐ.ச.ஜெயபாலன் சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு! - தகவல்: இலக்கியவெளி -

விவரங்கள்
- தகவல்: இலக்கியவெளி -
நிகழ்வுகள்
04 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலக்கியவெளியின் வ.ஐ.ச.ஜெயபாலன் சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு

நாள்: 14-09-2024 (சனிக்கிழமை)
நேரம்: மாலை 3.30

இடம்:
எங்கட புத்தகங்கள்  இல்லம்
18/2, திருவடி நிழல்
அம்மன் வீதி, நல்லூர்,
யாழ்ப்பாணம்

மேலும் படிக்க ...

அஞ்சலி: எழுத்தாளர் த.இராஜகோபாலன் (இராஜகோபாலன் மாஸ்டர்) மறைந்தார்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
04 செப்டம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் த. இராஜகோபாலன் (மல்லிகை ஆசிரியர் எழுத்தாளர் டொமினிக் ஜீவாவால் இராஜகோபாலன் மாஸ்டர் என்று அழைக்கப்பட்டவர்) வயது தொண்ணூறுகளைக் கடந்த நிலையில் மறைந்த செய்தியினை அவரது உறவினர் எழுத்தாளர் வதிரி சி ரவீந்திரன் அறியத்தந்தார். இவர் யாழ் இந்துக்கல்லூரி முன்னாள் மாணவர் ராஜா மதியழகன் அவர்களின் தந்தையாரும் கூட.

இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் இவரது படைப்புகள் அதிகமாக வெளிவந்ததா என்பது பற்றி நான் அறியவில்லை. ஆனால் இவரது சிறுகதைகள் சில சுதந்திரனில் ஐம்பதுகளில், அறுபதுகளில் வெளியாகியிருந்தன. 3.3.1967  வெளியான சுதந்திரனில் இவரது 'எங்கே போவேன்' சிறுகதை வெளியாகியுள்ளது. எழுத்தாளர் அ.ந.கந்தசாமி  பற்றிய முக்கிய ஆவணச்சிறப்பு மிக்க தகவல்களை உள்ளடக்கிய இவரது கட்டுரையொன்று மல்லிகையின் செப்டம்பர் 1972 இதழில் 'இலக்கிய நினைவு - அமரர் அ.ந.கந்தசாமி' என்னும் தலைப்பில் வெளியாகியுள்ளது. அ.ந.க பற்றி எங்குமே குறிப்பிடப்பட்டிருக்காத தகவல்களை உள்ளடக்கிய ஆவணச்சிறப்பு மிக்க கட்டுரை.

த.இராஜகோபாலன் குடத்திலிட்ட விளக்காக வாழ்ந்து மறைந்தவர். ஒரு காலத்தில் இவர் சமசமாஜக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்த விபரத்தை இவரை அட்டைப்பட நாயகனாக்கி ஏப்ரல் 2009 வெளிவந்த மல்லிகை சஞ்சிகையில் இவர் பற்றிய எழுத்தாளர் டொமினிக் ஜீவாவின் கட்டுரை மூலம் அறிய முடிகின்றது.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. வ.ந.கிரிதரனின் புதிய பாடல்கள் 'வ.ந.கிரிதரன் பாடல்கள்' யு டியூப் சானலில்!
  2. தோண்டத் தோண்டத் துலங்கும் உண்மைகள்! - சந்திரகௌரி சிவபாலன் (கௌசி), B.A, Dip.in. Edu, ஜேர்மனி -
  3. சிறுகதை: அடர் இருள் என்செயும் - ஶ்ரீரஞ்சனி -
  4. சிறுகதை: இலக்கியப் போட்டி - எஸ். அகஸ்தியர் -
  5. நூல் அறிமுகம்: எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் ஹைதராபாத் நாவல்கள்! -பெரம்பலூர் காப்பியன் -
  6. எழுத்தாளர் நடராசா சுசீந்திரனின் ‘சொற்கள் வனையும் உலகம்’ , ‘தடங்களில் அலைதல்’ - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
  7. வ.ந.கிரிதரன் பாடல்: இயற்கையைப் பேணுவோம்.
  8. சிறுகதை: இலங்கையின் தாய்மார்கள்! - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -
  9. வ.ந.கிரிதரன் பாடல் - தர்க்கம் செய்வோம். ஞானம் பெறுவோம்.
  10. இருபத்து நான்காம் வயதில் பாரதி : பகுதி III - ஜோதிகுமார் -
  11. வ.ந.கிரிதரன் பாடல் - ஒட்டகங்கள்!
  12. சிறுகதை: புற்றுப் பாம்புகள்! - அ.கந்தசாமி -
  13. வ.ந.கிரிதரன் பாடல்: படைப்பும், விடை தேடும் நெஞ்சும்.
  14. இந்த பிரபஞ்சத்தில் நாம் எங்கே இருக்கின்றோம்! - சந்திரகௌரி சிவபாலன் (கௌசி), B.A, Dip.in. Edu, ஜேர்மனி -
பக்கம் 20 / 107
  • முதல்
  • முந்தைய
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • அடுத்த
  • கடைசி